மான்ஸ்டர் 35
அத்தியாயம் : 35
ஒருவேளை அவர்கள் காதலர்களாக இருப்பார்களோ என கூட யோசித்தான் அப்படி யோசிக்க கூட அவனால் முடியவில்லை.. "என்னவோ போகட்டும் நல்ல ஃபிகர் "...என்று நினைத்துக்கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தான் எழில் என்ன இருந்தாலும் அவளது முகமும் அவள் குவித்த உதடும் அவனை வா வா என்று அழைத்துக் கொண்டே இருந்தது அவளது நினைப்பில் இருந்து வெளியே வர மனமேயின்றி வெளியே வந்தவன் எங்கு செல்லலாம் என யோசித்த கொண்டே கால் போன திசையில் நடக்க துவங்கினான் எழில் என்கிற கடம்பெழிலன் ...
கடம்பெழிலன் அவளது நினைப்பிலேயே கால் போன போக்கில் நடந்தான்... அவனுக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தது தெருவில் நடக்கும் மனிதர்கள் முதல் காரில் செல்லும் மனிதர்கள் வரை எல்லாமே வித்தியசமாக இருந்தது... இதுநாள் வரை அவன் இது போல ரோட்டில் நடந்து எங்கேயும் சென்றதில்லை... அதனால் அவனுக்கு புதிதாக இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை..
அவனும் கால் போன போக்கில் நடந்து கொண்டே இருக்க அவன் இறுதியில் அடைந்த இலக்கு என்னவோ ஒரு கடற்கரையாக இருக்க அந்த ஆழ் கடல் அவனை அழகாக இந்த மண்ணிற்கு வரவேற்றது ..
அவன் அந்த கடலை சுற்றி பார்க்க அவன் அங்கே பலதரப்பட்ட மக்களை கண்டான் அவர்களின் வாழ்க்கை முறை, மகிழ்ச்சி, ஆரவாரம் என அனைத்தையும் கண்டவனுக்கு தூரத்தில் அங்கே ஒரு சில குழந்தைகள் சுண்டல் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர் ..அவர்கள் அவனது கவனத்தை வெகுவாக ஈர்த்து கொண்டனர்...
அவனுக்கு அவர்களை கண்டதும் புரிந்து போனது படிக்க வைக்க ஆள் இல்லாமல் தான் அவர்கள் எப்படி நடக்கிறார்கள் என புரிந்து கொண்டவன் நேராக அவர்களிடம் சென்றான்...
" எனக்கு ஏதாவது வேலை தர முடியுமா??"... என்று அவர்களை பார்த்து கேட்க ,
அவனை மேலும் கீழும் பார்த்த அந்த சிறுவர்கள் , "நீங்க என்ன ஊருக்கு புதுசா??? இங்கே வந்து வேலை கேக்கறீங்க?? பார்க்க ஆள் வாட்ட சாட்டமா நல்லாதான இருக்கீங்க?? ஏதாவது வேலை தேடலாம்ல எங்களுக்கே இங்கே ஒன்னும் கிடைக்காது இன்னிக்கு பாருங்க போனியே ஆகலை இதுல நீங்க வேறயா"... என்று கூற ,
அதைக்கேட்ட எழிலோ, "வேற எங்கே வேலை கிடைக்கும்??".. என்று கேட்டான்..
"இப்படியே நடந்து போங்க ஏதாவது சின்ன சின்ன வேலை கிடைக்கும் அதை செய்யுங்க நீங்க எல்லாம் வேலை இல்லைன்னு சொல்றது தான் கஷ்டமா இருக்கு போய் தேடுங்க பாஸ் நாங்களே ஒரு வேலை செய்யறோம் உங்களுக்கு கிடைக்காதா என்ன?? "..என்று கூறி விட்டு அந்த சிறுவர்கள் செல்ல,
அவனும் அந்த சிறுவர்களின் பேச்சில் தன்னைத் தொலைத்தவன் அப்படியே மணலில் அமர்ந்து கடலை வெறித்து கொண்டிருந்தான் ..அப்போது சற்று முன் அவனிடம் பேசிய சிறுவன் கத்தும் சத்தம் கேட்டது..
திரும்பி எழில் பார்க்க ஒருவன் அந்த சிறுவர்களின் கையில் இருந்த சுண்டலை எல்லாம் கீழே கொட்டி விட்டு அந்த சிறுவனிடம் , "இப்ப காசு தர முடியாது போடா "...என்று கத்திக் கொண்டிருக்க,
அந்த சிறுவர் கூட்டமோ அழுது கொண்டிருந்தனர் அவர்களின் ஒரு நாள் முழுவதும் விற்பதற்கான சுண்டல் தான் அது ..அவை எல்லாம் நாசம் ஆகி விட்டதே என அவர்கள் அழ அதை கண்ட எழிலோ வேகமாக ஓடி சென்று , "என்ன பிரச்சனை".. என்று கேட்க,
"சுண்டல் வாங்கி சாப்பிட்டு காசு தர மாட்டேங்கறாங்க கேட்டதுக்கு இப்படி எல்லாத்தையும் கொட்டிட்டாங்க எங்களை அடிக்கிறாங்க இப்போ எங்களுக்கு காசு வேணும் ".. என்று கூற ,
அந்த சுண்டல் கொட்டியவனோ திமிராக நின்று கொண்டு இருக்க அதை எழில் புரிந்து கொண்டு சற்றும் யோசிக்கவில்லை ஓங்கி ஒரு அறை அவனை அறைய அடுத்த நொடி அவன் வேகமாக பணத்தை கொடுத்து விட்டு ஓடி விட்டான்..
அதை சிறுவர்களிடம் கொடுக்க சிறுவர்களோ அந்த பணத்தை வாங்கி கொண்டு அனைவரும் அவனை பார்த்து கொண்டே ஏதோ ஒரு கூடாலோசனை செய்தனர்..அவனும் அவர்களை பார்த்து சிரிக்க ,
அதை கண்ட சிறுவர்கள் வேகமாக தங்களது கையையும் அழுத முகத்தையும் துடைத்துக் கொண்டு அவன் அருகே வந்து, " பேசாம நீங்க எங்க கூடவே இருக்கீங்களா??".. என்று கேட்க,
அவனோ, " எதுக்கு".. என்று கேட்க, அவர்களோ, " எங்களுக்கு யாரும் இல்ல நாங்க அனாதை பசங்க தான் இருந்து நாங்க உழைத்து சம்பாதிச்சிட்டு இருக்கோம் இருந்தும் இந்த மாதிரி தினமும் யாராவது ஒருத்தர் வந்து எங்களை தொல்லை பண்றாங்க நீ ஆள் பாக்க வாட்ட சாட்டமா இருக்க நீ எங்க கூட இருந்தா அவங்கல அடிப்ப இல்ல அதனால தான் "...என்று அந்த சிறுவர்கள் கூற அதைக்கேட்ட சிரித்து அவனும் சரி என்றான்...
"உனக்கு எங்கனால சம்பளம் எல்லாம் தர முடியாது தினமும் பத்து ரூபாய் சாப்பாடு தருவோம் போதுமா??" என்று கூற அதைக் கேட்டு சிரித்த கடம்பெழிலன் சரி என்றான்..
அவனுக்கு அடித்தட்டு மக்களிடம் இருந்து அவர்களின் வாழ்க்கையை உணர வேண்டும் என்று அவன் அந்த வேலைகளை செய்யத் துவங்கினான்...
அந்த கடற்கரை சிறுவர்களின் வாசமோ அங்கே இருக்கும் பொட்டல் படகில் படுத்துக் கொள்ள இன்றிலிருந்து அவனும் அவர்களுடன் கூடி கொண்டான்...
அந்த குழந்தைகளோ நேற்று வியாபாரத்தில் கிடைத்த காசில் சுண்டல் வாங்கி அவர்களே அருகில் இருக்கும் ஒரு ஆயாவிடம் கொடுத்து சுண்டல் தயார் செய்து வாங்கிக் கொள்வர் பின் அதை கடற்கரையில் விற்று காசாக்கி அந்த நாளை ஓட்டுவார்கள் இதுதான் அவர்களின் வாழ்க்கை ஒரு நாள் சுண்டல் விற்பனை ஆகவில்லை என்றால் அந்த எஞ்சிய சுண்டலை உண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளுவார்கள் இதுதான் அவர்களின் வாழ்க்கை... இப்பொழுது புதிதாக அவனும் கூடிவிட்டதால் அவன் கையிலும் ஒரு ஷேர் ஆக ஒரு பாத்திரம் சுண்டல் கொடுக்கப்பட அவனும் கடற்கரையோரங்களில் விற்கத் துவங்கினான், " சுண்டல் சுண்டல் சுண்டல்"... என்று கத்த அவனுக்கு அந்த வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது...
கிட்டத்தட்ட இவர்களுடன் சேர்ந்து பத்து நாட்களாக இருந்ததால் முகத்தில் சவரம் மலிக்காமல் கசங்கிய அழுக்கு படிந்த ஆடையுடன் முகம் பார்ப்பதற்கு வேறு ரூபத்தில் இருந்தது அவனை என்று யாருக்கும் அடையாளம் தெரியாது..அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான் சின்ன எழில்...
இதில் அண்ணன் எழிலோ என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் இன்னமும் சுற்றிக் கொண்டிருந்தான் வேலை கிடைக்காமல் வேலை தேடிக்கொண்டிருந்தான் கையில் இருக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது ...
