Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 34

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 34

மான்ஸ்டரும் மான்விழியும்

கடம்பெழிலன் மற்றும் அண்ணன் கடம்பெழிலோன் இருவரும் இந்தியா தான் வந்திறங்கி இருந்தனர்..

ஆம் உண்மையில் அவர்கள் இருவருக்கும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என கூறப்படவில்லை அவர்கள் தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் மொபைல்கள் பறிக்கப்பட்டு வேறொரு தொடர்பு எண்ணை கொடுத்தார் இலந்தரையர்...தேவைக்கு அன்றி அந்த எண்ணில் இருந்து தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் கூறி இருந்தார்..களங்கண்டானை பற்றி பயம் கொள்ள வேண்டாம் அவன் உங்களை இது நாள் வரை கண்டது இல்லை அதனால் உங்களுக்கு அவனிடமிருந்து வராது என்றும் கூறியிருந்தார்..

மேலும் இருவரும் ஒரே நாட்டிற்கு தான் செல்கிறார்கள் என இருவருக்கும் கூறவில்லை..

ஆம் அரசாள போகும் எந்த இளவரசருக்கும் கடம்பஞ்சோலையில் இது போன்ற பயிற்சி கொடுக்கப்படும்..சாதாரண மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் அவர்களின் நிலை என்ற அடிப்படையில் இந்த இளவரசர்களும் தங்களின் உடல் மற்றும் முகத்தை எல்லாம் மாற்றி இளவரசர் என்ற அடையாளத்தில் இருந்து விலகி ஒரு சாதாரண குடிமகனாக குறிப்பிட்ட காலம் வாழ்க்கை வாழ வேண்டும்..

அதில் அவர்கள் சாதாரண மக்களுக்கு என்ன தேவை ஏது தேவை என உணர்ந்து அதன் படி அரசாள்வர்...

பண்டைய காலத்தில் அரசர்கள் நகர்வலம் செல்வார்களே அது போன்ற ஒரு விஷயம் தான் இதுவும் இளவரசர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் நிலையெல்லாம் அறிந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை சாதாரண குடிமகனாக வாழ்க்கையை மேற்கொண்டு பின் சாதாரண குடிமகனின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு அதன்படி நாட்டை ஆளவேண்டும் என்று இப்படி கதம்ப ராஜா ஒரு விஷயத்தை கொணர்ந்தார்...

இந்த பயிற்சியை அவர்கள் நாட்டிலேயே செய்தால் இரட்டையர்கள் முறைகேடுகள் செய்யக்கூடும் என நினைத்து தான் அயல்நாட்டில் இந்த முறையை பின்பற்ற சொல்லியிருந்தார் ஏகதேசமாக இந்தியாவும் கடம்பஞ்சோலை தீவும் ஒரே அமைப்பைக் கொண்டிருப்பதால் அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் தீவில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் ஒரு போலத்தான் இருந்தது அதனால் எந்தவித வித்தியாசமும் அவர்கள் உணரத் தேவையில்லை அதற்காகத்தான் இந்த யுக்தியைக் கையாண்டார்..

அதில் கூட இருவருக்கும் பிரிவினை வரக்கூடாது என நினைத்த கதம்ப ராஜா ஒரே இடத்தில் இருவரையும் இருவருக்கும் தெரியாமலே ஒரே இடத்தில் அனுப்பினார்..

இருவரும் இந்தியாதான் செல்கிறார்கள் என இருவருக்கும் தெரிவிக்கப்படவில்லை அவர்கள் இருவரும் தயாராகி வந்ததும் இலந்தரையர் அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டை கையில் கொடுக்க முதலில் மூத்த எழிலை கிட்டத்தட்ட மாறுவேஷத்தில் அனுப்பினார்...

பிறகு சின்ன எழிலை அதே போல மாறுவேஷத்தில் அனுப்பினார் இருவருக்கும் வேறு வேறு பிலைட் வேறு வேறு சமயங்கள் அதனால் அவர்களுக்கு அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் தான் இருக்கப் போகிறார்கள் என்று அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...

இப்படி முதலில் இந்தியாவை வந்தடைந்த அண்ணன் எழில் வந்திறங்கியதும் தன் கையில் உள்ள பணத்தை வைத்து ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கிவிட்டான்...

அடுத்து ஒரு சில மணி நேரங்கள் கழித்து வந்திறங்கிய சின்ன எழிலோ அவன் வாழ்க்கையில் நிம்மதியான ஆழ்ந்த சுவாசத்தை இப்பொழுது தான் சுவாசிக்கிறான் போலும்..முதலில் ஆழ்ந்து சுவாசித்தான்... ஒவ்வொரு அணுவையும் ரசித்தான்... வீட்டிலேயே சிறைப்பட்டிருந்தவனக்கு வெளி உலகத்தை அதுவும் தன்னந்தனியாக பார்க்க மிகவும் அருமையாக இருந்தது அவனுக்கு இதை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது ..

"பேசாமல் மூன்று மாதங்கள் கழித்து செல்லாமல் இங்கேயே இருந்துவிடலாம் "...என்று கூட அவன் நினைத்து விட்டான், " யாருக்கு வேணும் இந்த ராஜ பதவியும் இந்த மணி மகுடமும் எனக்கு தேவையில்லை எனக்கு நிம்மதியா இருந்தா போதும்"... என்று நினைத்தவன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வர அவன் முதலில் கண்டது ஒரு பச்சைவண்ண சுடிதார் அணிந்த பெண்ணை...

பச்சை வண்ண சுடிதாருக்கு மேட்ச்சாக வானவில் நிற ஷாலை அணிந்திருந்தாள் அவளது முடி காற்றில் அலை பாய அவளது மான்விழி அவனை சுண்டி இழுத்தது..இந்திய நாட்டு பெண்கள் இவ்வளவு அழகாக இருப்பார்களா என தன் மனதில் கேட்டு கொண்ட சின்ன எழில் ,

பெண்களையே முதன் முறையாக பார்ப்பது போல வாயை பிளந்து பார்த்தான்.. அவளோ தன் கைகளில் ஒரு கேக்கை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்து வா என்று அழைப்பது போல சைகை செய்தாள்.. மேலும் தன் உதட்டை குவித்து முத்தம் ஒன்றை வைத்து வேறு அவனை அழைத்தாள்...

இவனுக்கு அவள் கொடுத்த முத்தம் அப்படியே அவனது இதயத்தில் பாய்ந்தது போல சின்ன எழிலுக்கு தோன்ற அதில் மயக்கமே வந்து விட்டது போலிருந்தது அந்த அளவுக்கு அவளது மான்விழி அவனை ஈர்த்தது..எழிலுக்கே அவளது எழில் மீது மோகம் வந்தது ...

அவளோ மீண்டும் மீண்டும் கையைக்காட்டி வா என்றழைக்க தன்னைத்தான் அழைக்கிறாளோ என சுற்றி சுற்றி பார்க்க அங்கே யாரும் இல்லை..

அவளோ , " உன்னை தான் இங்க வா"... என்று அழைக்க எழில் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் அவனைத் தாண்டி ஒரு ஆள் சென்றான்..அதை கண்டவன் முகமோ நொடி பொழுதில் சுணங்கி போனது அப்போ நான் இல்லையா என நினைத்து மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டான்...

மேலும் அவனது கண்கள் அவள் மீதே நிலைத்து நிற்க, "ஹாப்பி பர்த்டே ரிஷி "...என்று ஓடிவந்து அவனை கட்டி அணைத்து கொண்டாள் ஆரபி கூடவே லாவண்யாவும் அவனை அணைத்துக் கொள்ள அவனோ இருவரது தோள் மீதும் கையிட்டு நடந்துகொண்டே, " எனக்கு இன்னும் பத்து நிமிஷத்துல ஃபிளைட் நீங்க என்ன செய்றீங்க??"... என்று சிரிக்க அவளோ, " நாங்க கேக் கட் பண்ண போறோம் இன்னைக்கு ரிஷி பாப்பாக்கு பர்த்டே "..என்று கூச்சலிட்டாள் ஆரபி...

அது எல்லாம் அவனது காதில் விழுந்து கொண்டே இருந்து சின்ன எழிலுக்கு அவள் தன்னை அழைத்து இருக்கக் கூடாதா என்ற ஏக்கமும் இருந்தது அதோ அந்த ரிஷி மீது கோபமும் வந்தது ஏன் என்று தெரியாத சிறு கோபம் எட்டி பார்த்து..

ஆரபியை கடம்பெழிலனுக்கு பார்த்த நொடியே பிடித்து விட்டது அதன் பிரதிபலிப்பு தான் ரிஷி மீது எழும் கோபம் என்று அவனுக்கு தெரிந்தாலும் அவனது சிறு மனது ஏக்கத்தையும் அதே நேரத்தில் வெளிப்படுத்தியது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top