Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 32

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 32

மான்ஸ்டரும் மான்விழியும்

ஆம் கோமகள் கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணி அவருக்கு தனது கணவனின் போக்கு சில நாட்களாக பிடிக்கவில்லை ..அதுவும் தன் கணவன் யாருடனோ கதம்ப ராஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருப்பதை தன் செவி வழியாக கேட்டது முதல் கோமகள் அதிர்ந்து விட்டார்...தான் கேட்டது சரி தானா என்பது போல அவர் கூர்ந்து கேட்க ,பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல நான் நேர்மையானவன் என தன் மனைவியை ஏமாற்றி கொண்டிருந்த களங்கண்டான் அவரே தன் வாயால் மாற்றி கொண்டார்..

தன்னிடம் நல்லவன் வேடத்தில் இருந்த கணவன் கயவனாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் அவருக்கு துளிர் விட துவங்கிய சமயம்..தன் கணவன் என்ன தான் காதல் மொழிகள் பல தன் மேல் பிதற்றினாலும் எங்கோ ஒரு சில இடத்தில் தன் கணவன் தன்னிடம் எதையோ மறைக்கிறாரோ என்ற எண்ணம் அவருக்கு எழ துவங்கியது...

எதிலும் நேராக பேசும் சுபாவம் உடைய கோமகள் தன் கணவனிடம் நேரிடையாகவே சென்று, " நீங்க யார்கிட்டயோ கதம்ப ராஜாவை கொலை பண்ண போறத பத்தி பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க"... என்று தன் மேடிட்ட வயிறு தூக்கிப் பிடித்தபடி தன் கணவனிடம் கேட்க,

அவரோ ஒரு நொடி அதிர்ந்து பின் தன்னை சமன்ப்படுத்தி, " உனக்கு எப்படி தெரியும் அதெல்லாம் பொய் யார் சொன்னா???"... என்று மலுப்ப துவங்கினார் ..

அதை கேட்ட கோமகளோ, " என்கிட்ட நடிக்காதீங்க உங்க வாயிலிருந்து அந்த வார்த்தை வந்தது நான் கேட்டுட்டேன் அதுவும் நீங்க யார்கிட்டயோ பேசி ஏதோ பிளான் போட்டீங்க அதுவும் நான் கேட்டுவிட்டேன்..அதை மட்டும் நான் காரணமா சொல்லல இப்போ கொஞ்ச நாளா இப்போது வேற குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கீங்களே அந்த சமயம் நீங்களே தான் போல உங்க வாயால சிலதை உளறினீங்க இதை எல்லாம் வெச்சு தான் நான் சொல்றேன் இப்ப சொல்லுங்க உண்மைதானா??"... என்று திட்டவட்டமாகக் கேட்க,

அவரால் தப்பிக்க இயலாத நிலையில் களங்கண்டான் உண்மையை ஒப்புக்கொண்டார், " ஆமா நான் தான் இந்த கொலைகள் எல்லாம் செஞ்சேன்.. கதம்ப ராஜாவோட தம்பியை கொன்றது நான் தான் அதுக்கு என்னை என்ன பண்ண போற??? அந்த கொலைகள் மட்டும் இல்ல அதுக்கு முன்னாடி நடந்த எல்லா கொலைகளுக்கும் எங்க குடும்பம் தான் காரணம் அது அந்த அரச குடும்பத்துக்கும் தெரியும்... ஆனால் இதுக்கெல்லாம் சாட்சி கிடையாது எங்க குடும்பத்துக்கு அவங்க செஞ்ச துரோகத்துக்கு அவங்க இந்த தண்டனையை அனுபவித்து தான் ஆகணும் அதுக்கு அவங்க அருகதைப்பட்டவங்க தான் "... என்று சூடாக களங்கண்டான் கூற,

அதைக்கேட்ட கோமகளோ, " அவங்க தப்பே பண்ணி இருக்கட்டுமே அதுக்கு நீங்க கொலை செய்வீங்களா?? கொலை செய்யும் அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது ??ஒரு உயிரை எப்படி நீங்க பறிப்பீங்க?? அதை வேற நீங்க ரொம்ப பெருமையா சொல்லிட்டு இருக்கீங்க?? அப்போ அன்னைக்கு இலா சொன்னதெல்லாம் உண்மைதானா ??? "...என்று கோமகள் கேட்க ,

அதைக்கேட்ட களங்கண்டானோ, " அவன் சொன்னது உண்மைதான் ஆனால் அந்த அண்டி பிழைக்கும் நாய் என் குடும்பத்தை பத்தி தப்பா பேசினது எல்லாம் பொய் "... என்று கூறினார் களங்கண்டான்..

அதற்கு கோமகளோ, " என்னவோ ஆகட்டும் நீங்க இப்போ செய்ய நினைப்பதை நிறுத்துங்கள் இதுக்கு மேல நீங்க இந்த தப்ப நீங்க செய்யக்கூடாது... இது நமக்கு பிறக்க போற குழந்தை மேல சத்தியம் "..என்று கூற ,

களங்கண்டானோ அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை அதைப்பற்றி கோமகளுக்கு வருத்தமும் இல்லை, " நீங்க செய்ய மாட்டீங்கன்னு நம்பறேன் இந்த பாவம் நம்மல சும்மா விடாது அதையும் நியாபகம் வெச்சுக்கோங்க "...என்று தன் கணவரின் முகத்தை பார்த்து கூற ,

அந்த முகத்தில் ஏதோ ஒரு தீவிரத்தை உணர்ந்தார் களங்கண்டான்...ஆனால் அதைவிட தீவிரமாக அவர் மனதில் குழுமியிருந்த விஷம் நன்றாக வேலை செய்ய அவரால் தன் மனைவி கூறிய வாக்கை காப்பாற்ற முடியவில்லை..அவர் செத்தாலும் காப்பாற்ற மாட்டார் அது வேறு விஷயம்..

நெடுநாளாக அவர் தீட்டி வைத்திருந்த திட்டம் அது கைகூடி வரும் நேரத்தில் தன் மனைவியின் பேச்சை அவரது காதில் விழவில்லை

அதிலும் களங்கண்டான் கடந்த பத்து வருடங்களாக கதம்ப ராஜாவை கொல்ல பல சதித் திட்டங்கள் தீட்டி இருக்க அதையெல்லாம் முறியடித்து கொண்டே கதம்ப ராஜா இதுவரை எப்படி தப்பித்து வந்தார் என களங்கண்டானுக்கு தெரியவில்லை..

தொடர் 10 வருட முயற்சிகள் எல்லாம் வீணாக போக கதம்ப ராஜாவோ வெளியூர் பயணம் என எங்கேயும் செல்லவில்லை...மேலும் அந்த அரசரும் அவரது குடும்பமும் அரண்மனையே கதி என்று கிடக்க களங்கண்டானால் ஒன்று செய்ய முடியவில்லை... அவரைப்பற்றிய ஒரு தகவலும் கிடைக்காமல் தவித்து வந்த களங்கண்டானுக்கு ,

கதம்ப ராஜா ஏதோ ஒரு வெளிநாட்டு பயணம் அவர் மேற்கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்தது அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணினார் களங்கண்டான்...ஆனால் அவரது மனைவி கோமகள் நோட்டம் விட்டு கொண்டே இருக்க

தன் மனைவியை சமாதானம் செய்த அவர் "தான் எந்த தவறும் செய்ய மாட்டேன் உன் மீது சத்தியம் "..என வாக்கு கொடுத்தவர் மெல்ல கதம்ப ராஜா வெளியூர் பயணம் மேற்கொள்வதற்காக காத்திருந்தார்..

அந்த நாளும் வந்தது தன் மனைவி மக்களிடம் எல்லாம் தான் வருகிறேன் என யாத்திரை கூறிய ராஜா தன் இரட்டை மகன்களிடம் மட்டும் பல அறிவுரைகளைக் கூறினார் ஏனோ அவருக்கு மனம் பதைபதைத்து கொண்டிருந்தது ஏன் என்று தெரியவில்லை..

இரட்டை சகோதரர்களிடம் பலமுறை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவித்துக் கொண்டு அவர் ஒரு வெளியூர்ப் பயணம் மேற்கொண்டார் ..

தனி விமானத்தில் தான் அவர் பயணம் செய்தார் விமானம் பகுதி வழி வரை பயணம் அமைதியாக கழிய திடீரென ஏதோ தடுமாறிய விமானம் நிலை தடுமாறி விமானம் பற்றி எரிய துவங்கியது ..

அதில் சம்பவ இடத்திலேயே விமானம் வெடித்து சிதறி விமானத்தில் உள்ள அனைவரும் மரணிக்க அதில் கதம்ப ராஜாவும் மரணம் அடைந்தார்...

விஷயத்தைக் கேட்ட தாமரை விழியாளோ பேயறைந்தது போல அதிர்ச்சியில் உறைந்து நிற்க இலந்தரையர் தான் அழுது இறுகிப்போய் இருந்த தன் தங்கையை தோளில் தாங்கி கொண்டு அவளின் கணவரின் இறுதி சடங்குகளை செய்தார்..

அந்தத் தருணத்தில் கூட மூத்த எழிலை மட்டும் முதலில் சடங்கு நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர் ஒரு மகன் தான் தனக்கு இருக்கிறார் என கதம்ப ராஜா கூறியிருந்ததாலும் அதன்படியே ஒரு மகனை தான் அழைத்து செல்ல,

இங்கே நான்கு சுவற்றுக்குள் நடைபழகி இறுகி போயிருந்த சின்ன எழிலோ இந்த சூழ்நிலையிலும் இவர்களது இந்த செயல் ஆத்திரத்தையே கொடுக்க தன் தந்தையை எண்ணி மிகவும் வருத்தம் அடைந்தான்...

அவனுள் ஒரு வெறி கிளம்பியது என்ன வாழ்க்கை இது என அவனே கேள்வி கேட்டுக் கொண்டான்..

மூத்த எழில் தன் தந்தையின் உடலை பார்த்து விட்டு வந்ததும் இளைய மகன் செல்ல அதற்குள் கதம்ப ராஜாவின் உடலை புதைக்க கல்லறைக்குள் கொண்டு சென்று புதைத்தனர்... இது எல்லாமே மிக மிக ரகசியமாகவே வைக்கப்பட்டது..சாவில் கூட என்ன ரகசியம் என்று தம்பி கடம்பெழிலன் துடித்து போனான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top