Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 31

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 31

ஆனால் இவர்கள் இருவருக்கும் (பெரிய எழில் மற்றும் மீயாழ்) அரண்மனை வாசத்திலேயே இருப்பதில் இவர்களுக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை.. அதில் சின்ன எழிலுக்கு மட்டும் தான் வருத்தம் அவனுக்கு உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் உலகத்தில் என்ன நடக்கிறது என தெரிய வேண்டும் என பல ஆசைகள் மற்றவர்களுக்கு தேவைக்கு அதிகமான எல்லாமும் அரண்மனையிலேயே கிடைத்து விடுவதால் அவர்கள் ஒரு உல்லாச வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருந்தனர் சின்ன எழிலுக்கு மட்டும் தான் மூச்சு முட்டுவது போல இருந்தது ...

அதை தந்தையிடமே வெளிப்படையாக கூறிவிட்டான்.." அப்பா நிஜமா எனக்கு இங்கு என்னால் இருக்க முடியல... நீங்க ரூல்ஸ் போட்டு சாகடிக்கிறீங்க...நின்னா குத்தம் நடந்தா குத்தம் யார் கூடயாவது பேசினா குத்தம் விளையாடினா குத்தம்... இந்த ரூல்ஸ் அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் தான் எனக்கு தோணுது பேசாம ஒரு சாதாராண குடிமகனோட வீட்டில் மகனாக பிறந்திருக்கலாம்ன்னு தோணுது எனக்கு இங்கே சுதந்திரம் இல்லை... என்னால இந்த நாலு பக்கமும் பார்த்துட்டே வாழ்க்கையை ஓட்ட முடியல இந்தப் பக்கம் போக கூடாதுன்னு சொல்றீங்க அந்தப் பக்கம் போக கூடாதுன்னு சொல்றீங்க ஒரு மிஷின் வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்கேன் அது உங்களுக்கு புரியுதா"... என்று தந்தையிடமே கேட்க ,

கதம்ப ராஜாவை மகனது வருத்தத்தை உணர்ந்து, " கண்ணப்பா உங்க அப்பா உங்க நல்லதுக்காகத்தான் உங்கள இப்படி அடைச்சு வைக்கிறேன் உனக்கு எங்க போனும் சொல்லு அப்பா கூட்டிட்டு போறேன்"... என்று கூற,

"எனக்கு வயசு பத்து தான் பா ஆனால் நான் இப்படி பேசுற அளவுக்கு நான் இங்கே தவிக்கிறேன்".....என்று அவன் கூற,

அதை கேட்ட கதம்ப ராஜாவுக்கு சிறு துளி கோபம் எட்டி பார்த்து, " நான் உங்களுக்கு அந்த வருத்தம் வர கூடாதுன்னு தான் இவ்வளவு கஷ்டப்படுறேன்...இங்கே உனக்கு என்ன கஷ்டம் அதை சொல்லு..." என்று அவர் கூற,

அதை கேட்ட கடம்பெழிலனோ , "அப்பா நீங்க தான் இந்த நாட்டோட மன்னர் உங்களுக்கு இந்த நாட்டில் செய்ய முடியாதது எதுவுமே இல்லை ..அப்படி இருந்தும் நீங்க வெளில உங்களுக்கு ஒரு மகன்னு தான் சொல்லிட்டு இருக்கீங்க அது கூட ஏதோ உங்களுக்கு ஒரு பயம் அதுக்கான பாதுகாப்புன்னு நான் எடுத்துக்கறேன் ..ஆனால் உங்களால்
நம்ம குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஏதாவது ஒரு இடத்துக்கு போக முடியுமா டூர் மாதிரி போக முடியுமா??"...என்ற கேள்வியை அவர் முன் வைத்தான்..

அவரால் இதை நினைத்து கூட பார்க்க முடியாமல், " சத்தியமாக என்னால் முடியாது..உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் இங்கே கொண்டு வருகிறேன் "...என்று கூற,

அதை கேட்ட மகனோ, " அப்போ எனக்கு இதில் சந்தோஷம் வராது பா விடுங்க "...என்று கடம்பெழிலன் நகர்ந்து கொள்ள, தன் மகனின் வருத்தத்தை எண்ணி வருந்தினார் கதம்ப ராஜா...

இதற்கிடையே தான் ஒரு இலந்தரையன் ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டார்... அவர் வேறு யாரும் அல்ல கோமகள் அந்த நாட்டு பிரஜை உண்மையில் அவர் அரச வம்சத்தை சேர்ந்தவர் அல்ல ..

அரச குடும்பத்தில் வேலை செய்த ஒரு கணக்கரின் மகள் தான் கோமகள்... கோமகள் தனது தந்தையைப் போல அவரும் கணக்கியலில் பெரிய ஆள் ஆக வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தார்...

ஆனால் பாவம் காதல் என்ற வலையில் அவரும் விழுந்து விட்டார் அவர் காதலித்தது வேறு யாரையும் அல்ல களங்கண்டானை... எத்தனையோ முறை அவரிடம் இலந்தரையர் தன் காதலை கூற கோமகள் மறுத்துவிட்டார்..

மீண்டும் மீண்டும் இலந்தரையர் தொல்லை செய்ய கடைசி ஆயுதமாக அவர் ஒரு குண்டை இலந்தரையர் தலையில் இறக்கினார் கோமகள்.. ஆம்...இலந்தரையரை பார்த்து, "எனது வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது அதற்கு அப்பா உங்க அரச குடும்பத்தின் விரோதி என உங்களால் சூட்டப்பட்ட களங்ககண்டான் என்னும் நல்லவர் " என்று தன் காதலனை பெருமையாக கூற ,

அதைக் கேட்ட இலந்தரையரோ அடுத்த நொடியே வாழ்க்கையே வெறுத்த சூழ்நிலைக்கு ஆளாகி விட்டார் அவரது முகத்தில் இனியும் கோமகள் கூறிய அதிர்ச்சி மாறவில்லை..

இத்தனை நாட்கள் தங்கை ,தங்கை குடும்பம் என வாழ்ந்து வந்த இலந்தரையரோ தன் மனதில் நுழைந்த பெண்ணாண கோமகளை பார்த்ததும் தான் அவருக்கு காதல் மலர்ந்தது..

ஆனால் கோமகளை இன்னாரை காதலிக்கிறார் என கூற அவர் அதிர்ந்துவிட்டார்... இருந்தும் தான் காதலித்த பெண் ஆயிற்றே அவள் என்ன ஆனாலும் காதல் என்ற பெயரில் பாழாகி இருந்தாலும் அவளது உயிராவது எஞ்சட்டுமே என நினைத்த இலந்தரையர் கோமகளிடம், " அவன் நீ நினைக்கிற மாதிரி நல்லவன் கிடையாது அவன் ஒரு கொலைகாரன் அரச குடும்பத்தில் நடக்கும் இத்தனை கொலைகளும் செஞ்சது அவன் தான் இதெல்லாம் செஞ்சான்னு நான் வெளியில் சொல்லக்கூடாது ஆனாலும் உனக்காக சொல்றேன்...நீ நல்லா இருக்கணும்னு சொல்றேன்.. அவன் உனக்கு ஏத்த ஜோடி கிடையாது".. என்று கூற,

அதைக் கேட்ட கோமகளோ, " ஓ சபாஷ்.. நீங்க உங்க குடும்பம் தானே இப்படி சொல்லுவீங்கன்னு அவர் முன்னாடியே சொல்லி இருந்தார் அதுக்கு தகுந்த மாதிரி தான் உங்க குடும்பமும் சொல்லுது ...நீங்களும் சொல்றீங்க...எங்க அப்பா நேர்மையா உங்க குடும்பத்தில் வேலை செஞ்சுட்டு இருந்தார் அவரை வேலையை விட்டு நீக்கீட்டிங்க... அரச குடும்பம்ன்னு பெயரில் நீங்க அராஜகத்தை தான் நீங்க செஞ்சிட்டு வந்துட்டு இருக்கீங்க "...என்று கோமகள் கோபத்தில் கூற,

இலந்தரையரோ வெகுண்டு, " எதை அராஜகம்ன்னு சொல்ற??? நாட்டு மக்களுக்கு நல்லது செய்றதா ..உன் அப்பாவை வேலை விட்டு நீக்கினோம் தான் ஏன் நீக்கினோம்னு அவர் கிட்டயே பதில் இருக்கு..இங்கே இருந்துட்டு அவனுக்கு உதவி செஞ்சிட்டி இருக்கார் அவரை எப்படி இனியும் அரண்மனையில் தங்க வைக்கிறது...அரச குடும்பத்தில் இருக்கிறவங்க அரச குடும்பத்தில் பிறக்காதவங்களை திருமணம் செய்தா அரண்மனையில் இருக்க முடியாதுன்னு நல்லா தெரியும் தெரிஞ்சும் உன்னை நேர்மையா தான் நான் உன்னை விரும்பினேன்..என்னை வேணாம்னு சொல்ல உனக்கு உரிமை இருக்கு ஆனால் அரசரையோ இல்லை அரச குடும்பத்தையோ ஏதாவது பேசின இதுக்கான தண்டனை உனக்கு கிடைத்து இருக்கும் "...என்று அவர் எச்சரிக்கை செய்ய,

அதை கேட்ட கோமகளோ, " இதோ பாருங்க மிஸ்டர் இலா உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல.. எனக்கு களங்கண்டானை தான் பிடிச்சிருக்கு... உங்களுடைய அரசியல் வாழ்க்கைக்குள் நான் வரல எனக்கு அது தேவையும் இல்லை... எனக்கு களங்கண்டான் மட்டும் போதும்...உங்களுக்கு இடையில் ஆயிரம் இருக்கலாம் அவரை நீங்க குத்தம் சொல்லாம் உங்களை அவர் குத்தம் சொல்லலாம் ஆனால் எனக்கு அவர் உயிர் அவருக்கு நான் எங்களின் காதலின் சாட்சி இதோ என் வயிற்றில் வளருது".. என்று கூற,

அதை கேட்ட இலந்தரையரோ இதற்கு மேல் அவளிடம் பேசி பிரயோஜனம் இல்லை எனக்கருதியவர் , "உன் இஷ்டம் "...என்று கூறி சென்று விட்டார்...

ஆனால் இவர்களின் பேச்சை அந்த சாலையில் சென்று கொண்டிருந்த பலர் கண்டு கொண்டிருந்தாலும் அதில் களங்கண்டானும் ஒருவராய் போக ,

அதுவரை தன் காதலியை கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கோமகளை கை கழுவி விட வேண்டும் என எண்ணி இருந்த அவர் அன்று இரவே கோமகளை வீடு புகுந்து தூக்கி சென்று விட்டார்..அதற்கு கோமகளின் வீட்டிலும் எதிர்ப்பு எழவில்லை ஏனெனில் உண்மையில் கோமகளின் அப்பா களங்கண்டானின் கூட்டாளியாகி இருக்க அவருக்கு மிக சந்தோஷமே...

தனது காதலியான கோமகளை இரவோடு இரவாக திருமணம் செய்த களங்கண்டான் படுக்கையில் அவரை கிடத்தி மஞ்சத்தில் உருண்டு கொண்டிருந்த களங்கண்டானின் மார்பில் புதைந்து போயிருந்த கோமகள், " உண்மையாகவே நீங்க தான் இந்த கொலைகள் எல்லாம் செஞ்சதா "...என்று கோமகள் கேட்க,

அதைக் கேட்ட களங்கண்டானோ, "நீ அவன் சொல்றதெல்லாம் நம்பிட்டு இருக்கியா?? உனக்கு என்ன பாத்தா கொலைகாரன் மாதிரி தெரியுதா??? அவங்க கொன்னு எனக்கு என்ன கிடைக்கப் போகுது??? நாங்க போட்ட பிச்சை தான் அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க!!! எனக்கு அவங்களோட எதுவும் தேவை இல்லை "...என்று கூற

அதைக் கேட்ட கோமகளோ மகிழ்ந்து அவரின் காதல் கொண்ட மனமோ களங்கண்டான் அவர் சொன்னது எல்லாம் உண்மை என நம்ப கோமகளின் காதல் அவரது கண்ணை மறைத்தது...மேலும் அவர் எந்த அளவுக்கு அழுத்தமான ஒரு நபரோ அந்த அளவுக்கு களங்கண்டான் மீது காதலை பொழிந்தார் என்றே கூற வேண்டும் அதற்கு தகுதியான நபர் களங்கண்டான் இல்லை என அவர் இப்போது அறியவில்லை...

மேலும் மனைவி கேட்ட இந்த விஷயம் களங்கண்டானுக்கு ஆத்திரத்தையே கொடுத்தது...

உண்மையில் களங்கண்டானுக்கு கதம்ப ராஜாவை எப்படி அழிக்கலாம் என்று தான் மனிதர் அனு தினமும் அவர் யோசித்துக் கொண்டிருந்தார்..அதற்கு வடிகால் இட்டது போல மனைவி கேட்கவும் எனக்கு எதிராக என் மனைவியை தூண்டி விடுகிறாயா என நினைத்த அவர் கதம்ப ராஜாவுக்கு செக் வைக்க முடிவு செய்தார்..

அவரது கணக்குப்படி அவர் வைத்த வெகு சீக்கிரத்தில் நிகழ்ந்தது....

மான்ஸ்டர் வருவான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top