மான்ஸ்டர் 30
அத்தியாயம் : 30
மான்ஸ்டரும் மான்விழியும்
ஆம் கடம்பெழிலோன் மற்றும் கடம்பெழிலன் இரண்டும் பேரும் ஒரே அச்சில் வார்த்தது போல இருவரும் ஒரே போல இருந்தனர்..அவர்கள் இருவரும் அரண்மனையில் ஒன்றாகவே வளர்ந்தனர்.. அவர்கள் வளரும் பகுதியில் வேலைக்காரர்கள் கூட தேவையின்றி செல்ல கூடாது..யாரும் அவர்களை காணவும் கூடாது...அதற்காகவே அரண்மனைக்குள்ளே தனிப்பட்ட குட்டி மாளிகையை உருவாக்கி இருந்தார் கதம்ப ராஜா அவ்விடத்தில் குடும்பத்தினர் அல்லாமல் வேறு யாருக்கும் அனுமதி இல்லை...
அதிலும் கதம்ப ராஜா தன் மக்களிடம் மிகவும் சிரத்தையாக இருந்ததால் அவர்கள் அருகில் யாரும் அவ்வளவு எளிதாக நெருங்க முடியவில்லை...அவருக்கு சந்தேகம் என தோன்றும் நபர்களை எல்லாம் பாரபட்சம் பார்க்காமல் வேலையை விட்டு தூக்கி இருந்தார்...என்ன தான் தந்தையின் நேரடி பார்வையின் கீழ் அவர்கள் வளர்ந்தாலும் இரட்டை சகோதரர்களுக்கும் கிட்டத்தட்ட ஜெயில் வாழ்க்கை போலத்தான் அவர்கள் வளர்ந்து கொண்டிருந்தனர் ...
அவர்களில் ஒருவரை ராஜா வெளியே கொண்டு சென்றால் மற்றவர் அடுத்த முறை கதம்ப ராஜாவுடன் செல்வார்....அப்படி ஒரு அட்டவணைப்படி அவர்களை வெளியே அழைத்து செல்வார் கதம்ப ராஜா..
இருவரும் இரட்டைகள் அதுவும் அவர்கள் இருவரில் சிறு துளி வித்தியாசம் கூட கண்டறிய முடியாது பெற்ற தாய்க்கே பலமுறை குழப்பம் வரும் அது போன்ற அசாத்திய உருவ ஒற்றுமையில் இருவரும் திகழ்ந்தனர்..அதனால் அவர்கள் இருவரில் யாரை வெளியே கொண்டு சென்றாலும் யாருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது..
என்ன தான் உருவ ஒற்றுமை இருந்தாலும் குணத்தில் இருவேறு திசைகளாக இருந்தனர் கடம்பன் சகோதரர்கள் ஆம் மூத்தவன் வடக்கே என்றால் இளையவன் தெற்கே இந்த நிலையில் தான் அவர்களின் வளர்ச்சி இருந்தது... கடம்பெழிலோன் அண்ணன் அமைதியின் திருவுரு என்றால் தம்பி கடம்பெழிலன் சேட்டையின் திருவுரு தம்பி எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பான்...பெரியவன் தான் பல தருணத்திலும் விட்டு கொடுப்பான்..
அதிலும் கதம்ப ராஜா இருவரையும் எழில் என்றே அழைப்பார்..பெயரில் கூட மனிதர் தன் பிள்ளைகளுக்கு ஏற்ற தாழ்வை கொடுக்க நினைக்கவில்லை..
கதம்ப ராஜா தன் பிள்ளைகளை எழில் என்று அழைத்தால் போதும் மூத்தவன் அந்த அழைப்பை கேட்டதும் ஓடோடி வர ஆனால் சின்ன எழிலுக்கோ ஏனோ அந்தப் பெயர் அவனுக்கு விருப்பமில்லை...
தான் கடம்பன் என்ற பெயரிலேயே வலம் வர வேண்டும் என அவன் விரும்பினான்...மேலும் அவனுக்கு தன் தந்தை செய்வதில் சிறு துளி விருப்பமும் இல்லை..
இருவருக்கும் பாடங்கள் எல்லாம் அரண்மனைக்கு வந்து ஆசிரியர்களையே பயிற்றுவித்து சென்றனர்..
ஆம் அதிலும் இவர்களுக்கு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆசிரியர் வர அந்த ஆசிரியர்களிடம் மாணவனாய் ஒரு மாணவரே அமர்ந்திருப்பார்.... ஒன்று மூத்தவன் கடம்பெழிலோன் அல்லது கடம்பெழிலன் இவர்களில் யாரோ ஒருவர் தான் பாடத்தை கவனிக்க வருவர்...ஆசிரியர் முன் வந்து அந்த நாளுக்குரிய பாடத்தை படிப்பர் அடுத்த நாள் வேறொருவர் என கால அட்டவணை அதிலும் பிரிக்கப்பட்டிருந்தது இதனால் குழந்தைகள் சிறு வயதிலேயே பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தனர்...
ஆம் பெரியவன் பல விதத்தில் ஒத்துப் போனாலும் சிறியவன் எதிலும் ஒத்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தான்...
" அது ஏன் மட்டும் இப்படி தனித்தனியாக படிக்க வேண்டும்"... என தந்தையிடம் கேட்டே விட்டான்...
அதற்கு கதம்ப ராஜாவோ , "எழில் உங்களுக்குள்ள எந்த வேற்றுமையும் வரக்கூடாதுன்னு சொல்லித்தான் ரெண்டு பேரையும் நான் இப்படி வளர்க்கிறேன்.. நம்ம குடும்பம் ரொம்ப பெருசு எவ்வளவு தூரம் நாம இப்படி ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்குமோ அதே அளவுக்கு ஆபத்து நிறைந்த வாழ்க்கைதான் வாழ்ந்துட்டு இருக்கோம்... எந்த சமயம் என்ன வேணாலும் நமக்கு நடக்கலாம்... அதனால எனக்கு என்னோட ரெண்டு மக்களையும் காப்பாத்தணும் அதுக்காக தான் இப்படி பன்றேன்...பலரை இழந்துட்டு நிற்கிறேன் அது போல உங்களையும் இழக்க அப்பாவுக்கு சக்தி இல்லை"... என்று தந்தை கூற ,
அதைக் கேட்ட கடம்பெழிலனோ," ஏன் நீங்க எங்க ரெண்டு பேரையும் உங்களுக்கு ஒட்டுக்கா இந்த உலகத்துல கூட்டிட்டு போனா ஏதாவது பிரச்சினை ஆயிருமா?? .. என்று கேட்க,
கதம்ப ராஜாவோ, " ஆமாம் செல்லம் உங்களுக்கு தெரியாதா?? அதனால் தான் அப்பா இது போல பாதுகாப்பு செய்யறேன் "... என்று கூற
அதை கேட்ட கடம்பெழிலனோ, " நமக்கு எதிரிகள் இருந்தாங்கன்னா அவங்கள விரட்ட உங்ககிட்ட தான் நிறைய பாதுகாப்பு வீரர்கள் இருக்காங்களே அவங்கள வெச்சு கொல்ல வேண்டியது தானே எதுக்காக இந்த நாடகம் ..நீங்க செய்யறது சுத்தமா எனக்கு பிடிக்கல பா...எங்களுக்குன்னு ஒரு நண்பர்கள் இல்லை எங்களுக்குன்னு யாருமில்லை ஏதோ ஒரு சிறையில் இருக்கிற மாதிரி தான் எனக்கு பீல் ஆகுது "...என கடம்பன் கூறி முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,
அதை கேட்ட அவரோ மகனது ஏக்கத்தையும் புரிந்து கொண்டவருக்கு மகனது இந்த ஏக்கத்தை எப்படி பூர்த்தி செய்வது என்று தெரியவில்லை என்றாலும் தன் புத்தி கூர்மையான மகனை அடக்கும் வழி தெரியாமல், " கண்ணா அப்படி எல்லாம் நம்ம கிட்ட இருக்குற சட்டத்தை நாம நமக்கு சாதகமாக பயன்படுத்த முடியாது நம்ம குடும்ப பகைக்கு அந்த சட்டங்களை உபயோகபடுத்தி நாம அதில் குளிர்காய கூடாது ".. என்று கதம்ப ராஜா கூற,
அவனுக்கு அப்போது விளங்கவில்லை ஆனால் அண்ணன் எழிலோ , "அப்பா எனக்கு புரியுது அப்பா உங்க இஷ்டம் படி நாங்க ரெண்டு பேருமே இப்படியே இருப்போம்..இப்படியே வளர்வோம் அப்பா நீங்க வருத்தப்படாதீங்க"... என்று தந்தைக்கு ஆறுதலாக கூற,
அதை கேட்டு நெகிழ்ந்த கதம்ப ராஜாவும் , "இந்த நாட்டை ஆள போற எல்லா தகுதியும் உன்கிட்ட இருக்கு எழில் உன்கிட்ட ஒரு பக்குவம் அதுவும் இந்த சிறு வயதிலேயே உனக்கு பக்குவம் என்னை பல சமயத்தில் வியக்க வைக்கிறது.. நீ நேர்மையாக இந்த நாட்டை வழி நடத்துவ அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு "...என்று அவர் கூற ,
அதைக் கேட்ட சின்ன எழிலோ கிளர்த்து எழுந்த சிறு கோபத்துடன், " அப்போ எனக்கு இல்லைன்னு சொல்ல வரீங்களா?? அப்புறம் எதுக்கு நான் இவன் கூட இருக்கணும்..அவனை மட்டும் தலையில் தூக்கி வைக்க நான் இங்கே இருக்கணும் என்னை எங்கேயாவது போர்டிங்ல விட்டுடுங்க ..கொஞ்சம் நானாவது ஜாலியா இருப்பேன்"... என்று சின்ன எழில் கூற
அதை கேட்ட கதம்ப ராஜாவோ சிரித்து, " உனக்கு உன் அண்ணனை விட எல்லா விதத்திலும் நீ உயர்ந்தவன் தான் ஆனா இந்த கோபம் அப்படிங்கிற ஒரு இடத்தில் மட்டுமே நீ சறுக்கிட்டு இருக்க டா கண்ணா அதுல உன் அண்ணன் ஜெய்ச்சுட்டான் "..என்று கூறவும் அதற்கும் சின்ன எழில் கோபப்பட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்...
அப்படி அவர்களின் வாழ்க்கையில் சென்றுக் கொண்டிருக்க இருவரும் பத்து வயதை எப்படி அடைந்தார்கள் என இருவருக்குமே தெரியவில்லை...அவர்கள் இருவரை வளர்த்திய பெற்றோர்களுக்கும் தெரியவில்லை அதற்குள் அவர்களுக்கு ஒரு செல்ல தங்கை கூட பிறந்திருந்தாள் அவளுக்கு மூன்று வயது ஆகியிருந்தது... அண்ணன்களின் உலகமே தங்கை தான் என்ற அளவுக்கு மீயாழும் அவர்களுடன் கூடிக்கொண்டாள்..இரட்டையர்களுக்கும் அவர்கள் முகத்தையே பார்த்து வளர்வதற்கு கொண்டிருந்ததற்கு வேறு ஒரு புதிய முகமாக தங்கள் தங்கை பிறந்ததில் அவர்களுக்கும் மகிழ்ச்சியே..
