Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 29

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 29

கதம்ப ராஜாவோ நேர்மையின் திரு உரு அவரால் இவர்கள் தான் இந்த தொடர் கொலைகளை செய்கிறார்கள் என்று நிரூபிக்க சாட்சிகள் அவரிடம் இல்லை.. அவருக்கு சந்தேகம் மட்டும் தான் இவர்களை கையும் களவுமாக பிடிக்க அவர் காத்திருந்தார்..

ஏனெனில் ஒரு முறை இவர்கள் மீது சந்தேகப்பட்டு அவர் நேரிடையாக களங்கண்டானை காண சென்ற போது, " நான் என்ன கொலைக்காரனா?? எங்கள் குடும்பம் என்ன கொலை குடும்பமா எங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை நீங்கள் பறித்து எங்கள் மீது வீண் பழி போடுகிறீர்களா???" என கேட்டவர் இந்த பிரச்சனையை மக்கள் வரை கொண்டு சென்றார்..அதிலும் களங்கண்டான் அரண்மனையின் பல ரகசியங்களை வெளியே விட்டும் பேசி கொண்டிருந்தார்...அதனால் கதம்ப ராஜாவுக்கு சிறு துப்பும் கிடைக்காமல் அமைதியாக அவர் அன்று வந்தாலும் அவருடைய சந்தேகம் மட்டும் அவரை விட்டு சென்ற பாடில்லை...

கதம்ப ராஜாவும் தன் குடும்பத்தாரிடம் பல முறை எச்சரிக்கை செய்து இருந்தார்.. பல பாதுகாப்புகளும் செய்து இருந்தார் ஆனால் பாவம் அது எதுவும் களங்கண்டானிடம் வேலைக்கு ஆகவில்லை..

கதம்ப ராஜாவின் தம்பியையும் அப்படி தான் அவர் காட்டுக்குள் வேட்டைக்கு செல்லும் போது கொன்றான்..

தம்பி இறந்ததை ஏதோ விலங்கு அவரை கடித்து கொன்றது போல மாற்றி விட்டார் அந்த களங்கண்டான்.. ஆம் களங்கண்டான் தான் விலங்குகளின் நகம் போன்ற ஒரு கத்தியால் கீறியே அவரின் தம்பியை கொன்றான்...மிக கொடூரமான முறையில் தான் அவருடைய மரணம் நிகழ,

அதை கண்ட அனைவருக்கும் அதிர்ச்சியே , "மன்னர் எப்படி வேட்டைக்கு செல்லும் போது மரணிக்க முடியும் அதுவும் தொடர் கொலைகள் கடம்ப ராஜாவுக்கு(தாத்தா) பின் ஆட்சி வந்த அவரது பரம்பரையினர் அனைவரும் இப்படி மரணிக்கின்றனரே"... என அனைத்து மக்களும் அதிர்ந்து இருக்க, கதம்ப ராஜாவும் அதிர்ந்து தான் போயிருந்தார்..ஆனால் களங்கண்டானின் சில கைகூலிகள் கதம்ப ராஜாவின் மீது அவதூறு பரப்பினர்...ராஜா தான் சொத்தின் மோகத்தில் தன் தம்பியை கொலை செய்து விட்டார் ..அவர்களுக்கு சொத்தின் மீது மோகம் அதிகம் என்று பல அடுக்கு பொய்க்ள் அங்கு பரப்பபட்டன..அது மக்கள் இடையேயும் நன்றாக வேலை செய்தது..

அது மட்டுமின்றி அவர்களது குடும்பத்தில் எந்த இரட்டையர்கள் பிறந்தாலும் மரணத்தை தழுவுகின்றனர் ஒரு வேளை ராஜாவே கொன்றிருப்பாரோ?? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழ துவங்கி இருந்தது..இதெல்லாம் செவி வழியாக ராஜாவையும் வந்தடைய இதை கேட்ட இலந்தரையரோ, " ராஜா நீங்க செய்யறது சுத்தமா சரியில்லை உங்க கிட்ட எல்லா பவரும் இருக்கு அந்த குடும்பத்துக்கு மேலே தான் சந்தேகம்னு சொல்றீங்க ஆனால் ஏன் அவங்களை தண்டிக்க மாட்டேங்கறீங்க ??"... என்று அவர் கேள்வி கேட்க,

அதற்கு அவரோ, " இலா உன்னால அவங்க தான் கொன்னாங்கன்னு ஒரு சிறு கராணம் சொல்ல முடியுமா ?? " என்று கேட்க,

அவரோ முழித்தார் , "அதான் இலா எந்த காரணமும் இல்லாமல் ஒருத்தரை வதைக்கிறது தப்பு.. ஒரு வேளை அவங்க அந்த தப்பை செய்து இருக்கலனா நாம அவங்களை தண்டிச்சு அந்த பாவம் நம்மை சும்மா விடுமா?? இந்த பதவியில் நாம இருக்கிறதே மக்களுக்கு உழைக்க தான் நம்ம அதிகாரத்தை வெச்சு அவங்களை நோகடிக்க கூடாது ".. என்று கூற,

அதை கேட்ட இலந்தரையரோ, " மச்சான் நீங்க இப்படி ரொம்ப நல்லவரா இருக்க கூடாது அப்படி இருந்தா அரசாணையில் இருக்கும் போது பல இடத்தில் இருந்து யோசிக்கணும் ".. என்று கூற,

"இலா நான் இப்படி தான்...என்னால யாரையும் நோகடிக்க முடியாது"... என்று கூறிவிட்டு சென்று விட்டார் கதம்ப ராஜா...அதை கேட்ட இலந்தரையரோ இவருடைய மடத்தனத்தை எண்ணி தன் தங்கையிடம் முறையிட அவரோ தன் கணவன் சொல்லே வேதம் என்பது போல இருந்தார்..அதை கண்ட இலந்தரையருக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து கொண்டார்..

இப்படி மூன்று தலை முறை ஆட்களையும் சூறையாடி கொண்டிருந்தனர் களங்கண்டான் குடும்பம்...தன் தம்பி இறந்த பிறகு தான் கதம்ப ராஜா அரண்மனையின் பாதுகாப்பை பலப்படுத்தினார்... மேலும் பல புதிய சட்டங்களை கொண்டு வந்தார்..மேலும் தனக்கும் ஒற்றை வாரிசு இருந்தால் போதும் அவனை நான் நல்ல முறையில் பாதுகாப்பேன் ஒரு வேளை இரட்டை குழந்தைகள் பிறந்து இந்த அரண்மனையின் சாபக்கேட்டால் என்னுடைய குழந்தையை பறி கொடுக்க நேர்ந்தாலோ என நினைக்கும் அளவுக்கு அவர் சென்றுவிட்டார்..அதனால் எனக்கு இரட்டை குழந்தைகள் வேண்டாம் என்ற நிலைக்கு எட்டி விட்டார்...

ஆனால் அவரது குடும்ப பாரம்பரியத்தை போல கதம்ப ராஜாவுக்கும் இரட்டை குழந்தைகளே பிறக்க முதலில் அவர் அதிர்ந்து வருந்தினாலும் ஒரு தந்தையாய் தன் மக்களை எப்படி காப்பாற்றுவது என்ன செய்வது என்று அவரது மூளை யோசித்தது...அந்த சமயம் அவருக்கு ஒரு எண்ணம் உதித்தது.. அதை செயல் ஆற்றும் முனைப்பில் இறங்கினார் கதம்ப ராஜா...

ஆம் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பது என்பது இவரது குடும்பத்தாருக்கும் அவரது அரண்மனையில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மட்டுமே இந்த விஷயம் தெரியும் என்பதால் அவர்களை வாழ்நாள் முழுவதும் அரண்மனையிலேயே தங்க வைக்க முடிவு செய்தார்..

அவர்களுக்கு தேவையான எல்லா சுக சௌகரியங்கள் அனைத்தும் அங்கே கிடைக்கும் ஆனால் அவர்கள் அந்த அரண்மனையை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது... என்று திட்டவட்டமாக அவர் ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்...மேலும் இதை பற்றி அவர்களிடம் கூற முதலில் மறுத்த அவர்கள் பின் அதற்கு ஒப்பு கொண்டனர்..அரசை பகைக்க அவர்கள் யாருக்கும் அங்கே தைரியம் இல்லை...அதனால் அவர்கள் சுக சௌகரியங்களுடன் கூடிய சிறையில் வாழ்ந்து வந்தனர்...

மேலும் கதம்ப ராஜா இந்த விஷயத்தை அவர்கள் மனைவி மற்றும் மனைவியின் சகோதரனிடம் இந்த விஷயத்தைக் கூறினார் அதைக்கேட்ட தாமரை விழியாள் அதிர்ந்தார்...

ஆம் அவர் ஒரு அறிவிப்பு போல ஒரு கடிதத்தை தன் கைப்பட எழுதியிருந்தார்...அது ஒரு வகையில் அரச குடும்பத்துக்கான சட்டமும் கூட... அதன்படி அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அவர் இந்த பூமியில் உள்ள எவருக்கும் அறிமுகப்படுத்தப்படுத்த போவதில்லை என்ற விதியை அவர் உருவாக்கினார்...

ஆம் அதன்படி அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் வெளி உலகுக்கு தெரியாமல் மறைத்த கதம்ப ராஜா தனக்கு ஒரு ஆண் சிங்கம் பிறந்து இருப்பதாக அந்த அறிவிப்பில் அவர் அறிவித்து இருக்க அதை கண்ட தாமரை விழியாளோ அதிர்ந்தார்..

அவரோ தன் மனைவியிடம், " தாமரை நமக்கு ஒரு மகன் போனாலும் ஒரு மகன் நமது ஆட்சியில் இருப்பான் அதற்காகத்தான் இந்த முடிவு நமது பரம்பரையை பொருத்தவரை அண்ணன் மட்டுமே ஆள வேண்டும் தம்பி ஆட்சியை ஆளக் கூடாது அதற்காகத்தான் இந்த முடிவை நான் எடுத்தேன்...அது மட்டுமின்றி எனக்கு எனது இரண்டு மகன்களும் உயிரோடு வேண்டும்...அந்த இக்கட்டில் தான் நான் இருக்கிறேன்..நமது அரண்மனையில் நிகழும் தொடர் கொலைகளை நான் அவங்க செய்தாங்க இவங்க செய்தாங்கன்னு சந்தேகப்பட்டுட்டு இருக்கிறதை விட ஒரு வேளை நம்ம குடும்ப சாபமா கூட இருக்கலாம் இல்லையா ???... என்னால என்னோட நேர்மையை விட்டு தேவையில்லாமல் ஒருத்தரை சந்தேகிக்க முடியாது..அந்த சந்தேகத்தின் பேரில் ஒரு குடும்பத்தை கொல்லவும் முடியாது...மேலும் ஒரு வகையில் அவங்க கோபமும் நியாயமே ..நாம மட்டும் தான் ஆட்சியில் இருக்கோம் அவங்களும் ஒரு வகையில் அரச குடும்பத்தை சேர்ந்தவங்க தானே அதுனால தான் ஒரு தந்தையா எனக்கு என்னோட இரண்டு மகன்களின் உயிரும் வேணும்..."... என்று தன் மனைவியிடம் உண்மையை கூற,

அதை கேட்ட தாமரையும் தன் குழந்தைகளின் உயிருக்காக சம்மதம் தெரிவித்தார்..அதன் பிறகு தான் கதம்ப ராஜா தன் மகனை பற்றிய அறிவிப்பை வெளி உலத்துக்கு தெரியாமல் அவர் மறைக்க முடிவு செய்தார்..

அதற்கு முதலில் உடன்பட மறுத்த இலந்தரையும் பிறகு அரசின் நலமும் அவர்களது குடும்பத்தின் நன்மைக்கும் அவர் சம்மதிக்க அதன் படி, " ஊரார்க்கும் நாட்டு மக்களிடமும் கடஞ்சோலைக்கு புதிய இளவரசர் பிறந்து விட்டார்... அவருக்கு பெயர் கடம்பன் என எனது தாத்தாவின் பெயரை சூட்டுவதில் பெருமை கொள்கிறேன்"... என கதம்ப ராஜா அறிவிப்பு ஒன்றில் வாயிலாக மக்களுக்கு விஷயத்தை கூற கடம்பஞ்சோலையே மிகவும் சந்தோஷத்தில் மிதந்தது..

அதன் படி பிறந்த இரு குழந்தைகளுக்கும் பெயர் கூட ஒரே பெயரை தான் வைத்தார் கதம்ப ராஜா..

ஆம் மூத்தவன் பெயர் கடம்பெழிலோன் என்றும் இரண்டாமவனுக்கு கடம்பெழிலன் என்று சிறிய மாற்றத்தில் பெயர் வைத்தார் கதம்ப ராஜா.... ஆனால் வெளியுலகிற்கு கடம்பன் என்ற பெயரை தான் அவர் அறிவித்து இருந்தார்...

மான்ஸ்டர் வருவான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top