மான்ஸ்டர் 28
அத்தியாயம் : 28
மான்ஸ்டரும் மான்விழியும்
முப்பது வருடங்களுக்கு முன்பு...
கடம்பஞ்சோலை
அரண்மனையின் நுழைவாயிலில் நடை பழகி கொண்டிருந்தார் தற்போதைய கடம்பஞ்சோலை மன்னர் கதம்ப ராஜா.. அவருடைய முகத்திலோ அப்பட்டமாக பதட்டம் காணப்பட்டது..
அவருடைய மனைவி தாமரை விழியாளோ பிரசவத்திற்காக பிரசவ அறையில் வலியில் கதறி கொண்டிருக்க அவருடைய மனம் முழுவதும் தன் மனைவி மக்கள் நல்ல முறையில் என் கைகளில் வந்து சேர வேண்டும் என்ற பிராத்தனை அப்பட்டமாக அவர் முகத்தில் காணப்பட்டது..
தாமரை விழியாளோ பிரசவ வலியால் துடித்து கொண்டு இருக்க அந்த சத்தம் அவரது நெஞ்சில் யாரோ கத்தியை வைத்து அழுத்துவது போல அவருக்கு இருந்தது..தன் மனைவிக்கு முதல் பிரசவம் வேறு தன்னுடைய மனையாள் படும் துன்பத்தை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை..அவரோ கண்களை மூடி இறைவனை பிராதித்து கொண்டிருக்க அப்பொழுது ஒரு குழந்தையின் அழுகுரல் கதம்ப ராஜாவுக்கு கேட்டது..
தன் மனைவி துடிக்கும் துடிப்பை கண்டு வந்தவருக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க அடுத்த நொடியே மீண்டும் மனைவி கதற, " இது என்ன மீண்டும் அழுகிறாள்??"... என்று வெளியே இலந்தரையிடம் கேட்க,
இலந்தரையரோ, " தெரியலையே ராஜா பொறுத்திருந்து பார்ப்போம்"... என்று அவரும் அவரது தங்கைக்கு என்ன ஆயிற்றோ என்று பதட்டமடைய அதற்குள் இன்னொரு செவிலி பிரசவ அறையில் இருந்து எதையோ எடுக்க வேகமாக ஓடி வந்தார்..
அவரிடம் கதம்ப ராஜா, "என்ன ஆச்சு குழந்தை பிறந்தும் அவள் ஏன் வலியால் துடிக்கிறாள்??"..என்று ராஜா கேட்க
அந்த செவிலியோ, "ராஜா உங்க மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாங்க...".. என்று கூறிவிட்டு செல்ல,
அதை கேட்டதும் அதிர்ந்து, " அப்போ இரட்டை குழந்தையா???".. என்று அவர் கேட்கவும் ,
"ஆமா ராஜா ".. என்று கூறிவிட்டு அந்த செவிலி சென்றார் ..அந்த செவிலி பிரசவ அறைக்குள் செல்லவும் அதற்குள் தாமரை வீறிட்டு கத்த அடுத்த குழந்தையும் பிறந்தது...அந்த சத்தத்தை கேட்ட ராஜாவுக்கு இந்த முறை மகிழ்ச்சி எழவில்லை மாறாக அவர்கள் அவருள் ஒரு கலக்கமாக இருந்தது...
"என்னது மறுபடியும் இரட்டை குழந்தைகள் ஆஹ் ?? இது என்ன கடம்பஞ்சோலைக்கு வந்த சாபக்கேடு"
.. என அவருக்கு வருத்தமே சூழ்ந்தது..
ஏனெனில் அவர் இப்பொழுது தான் தனது இரட்டை சகோதரனான தனது தம்பியை ஒரு கோர விபத்தில் பறி கொடுத்திருந்தார்.. அதிலிருந்து அவர் இனியும் மீண்டு இருக்கவில்லை..அதற்குள் இவருக்கும் இரட்டை குழந்தைகள் என தெரியும் போது அவருக்கு மிக வருத்தமாக இருந்தது.. ஆம் அது என்ன சாபக்கேடு என்று தெரியவில்லை.. அந்த அரச குடும்பத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் அதில் ஒருவர் தான் உயிரோடு இருப்பர் மற்றவர்கள் மரணித்து இருப்பர்..அந்த பழியும் உயிரோடு இருப்பவர் மீது விழும் அது வேறு விஷயம்...உயிரோடு இருக்கும் ஒருவரும் ஆட்சியில் இருக்கும் போதே ஏதாவது ஒரு காரணத்தால் மரணத்தை தழுவியும் விடுவர்..இது என்னவோ அவர்களின் தாத்தாவின் மரணத்துக்கு பின் இப்படி தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது....
அப்படி இருக்க என்ன தான் அவரது வம்சாவழி மூத்த தலைவர்கள் இந்த கடம்பஞ்சோலை தீவை உருவாக்கி இருந்தாலும் அதில் பல மக்கள் நன்மை பெற்றிருந்தாலும் சுகமாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களில் சிலரும் அரசுக்கு எதிரான வேலையை செய்து கொண்டு தான் இருந்தனர்..
அப்படி அவர்களில் ஒருவர் தான் களங்கண்டானின் தாத்தா அறநெறியன் ... ஆம் அவர் வேறு யாருமில்லை கதம்ப ராஜாவின் தாத்தாவின் சொந்த தம்பி தான்..இருவரும் சகோதர்கள்... ஆனால் தன் அண்ணன் நாட்டை ஆள்வதை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை..
அவருக்கு பதவி கொடுக்கவில்லை என்று அரசை பற்றி அவதூறு பேசி அரண்மனையை விட்டு வெளியே சென்றவர் தான் இன்று வரை அரண்மனை வாயிலை அவர் மிதிக்கவில்லை..
அவரும் இரட்டையர் தான் ..."ஒரு நொடி எனக்கு முன்பு பிறந்தால் நீ அரசலளாம் நான் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க வேண்டுமா??".. என கேட்டு அரண்மனையை விட்டு குடும்பத்துடன் பக்கத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான தீவில் சென்றவர் அங்கேயே ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முயன்றார்..ஆனால் அதில் தோற்று போனார் என்றே கூற வேண்டும்..
ஆம் கதம்ப ராஜாவின் தாத்தா தன் தம்பி அறநெறியனுக்கு சேர வேண்டிய சொத்துக்கள் அனைத்தையும் பிரித்து கொடுக்க அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவருக்கு தன் அண்ணனை போல எவ்வளவு முயன்றும் அவர் உயரத்துக்கு அவரால் வரவில்லை..ஆம் பணத்தாலோ, மதிப்பாலோ எதிலும் அவரால் தன் அண்ணனின் உயரத்தை தொட முடியவில்லை..
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தன் மனதில் தன் உடன் பிறந்த சகோதரன் மீது வன்மத்தை வளர்த்து கொண்டார்..
அந்த ஆத்திரம் தன் அண்ணனை கொலை செய்யும் அளவுக்கு அவரை கொண்டு தள்ளியது..ஆம் அண்ணனை யாரும் காணா வண்ணம் அவர் உண்ணும் உணவில் விஷம் வைத்து கொன்றனர்..ஆம் அத்தீவின் கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்கப்பட எளிமை விழும்பியான அவரும் மக்களோடு மக்களாக உணவை உண்ண ஆனால் அவர் உண்ட உணவில் மட்டும் எப்படி விஷம் வந்தது என யாருக்கும் விளங்கவில்லை...
முதலில் யார் கொலை செய்தார்கள் என கதம்ப ராஜாவின் தந்தையால் கூட கண்டு பிடிக்க முடியாமல் போக அறநெறியனுக்கு மனதில், " தானே இந்த உலகத்தில் முடி சூடா மன்னன் என்றாவது ஒரு நாள் உங்களின் வர்க்கம் முழுவதையும் அழித்து நான் இந்த கடம்பஞ்சோலைக்கு மன்னர் ஆவேன் "...என அவர் உறுதி பூண்டு அதையே அவருடைய குடும்பத்துக்கும் போதித்து வந்தார்... அவருடைய போதனைகள் அவருடைய குடும்பத்தில் உள்ள நண்டு சிண்டு முதல் நன்றாக களங்கண்டான் வரை வேலை செய்தது..
இதில் கதம்ப ராஜாவின் அப்பாவும் இதே போல ஒரு கோர விபத்தில் மரணித்து போக அவருடைய தம்பியும் அவருடைய திருமணத்துக்கு முன்பே மரணத்தை தழுவி இருந்தார்..
ஆம் அந்த அரச குடும்பத்தில் ஒரு வினோதம் உண்டு அந்த குடும்பத்தின் ஆண் வாரிசுகளின் மூலம் பிறக்கும் குழந்தைகள் இரட்டைகளாக இருப்பர் அதுவே பெண் வாரிசு என்றாலோ சாதாரணமாக ஒரு குழந்தை அதுவும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒன்று தான் பிறக்கும்... ஆம் கதம்ப ராஜாவின் தாத்தாவிற்கு ஆண் மகன் இதோ கதம்ப ராஜா வரை அனைவரும் ஆண் பிள்ளைகளே அதனால் பிறந்த அனைவரும் இரட்டைகளே அதுவே தம்பி அறநெறியனுக்கோ பிறந்தது பெண் குழந்தை அதனால் அவருடைய வம்சத்தில் எல்லாம் ஒற்றை ஆண் குழந்தை அல்லது ஒரு பெண் குழந்தை என களங்கண்டானும் பெண் வாரிசின் பிள்ளையே...ஒரு வகையில் பார்த்தால் கதம்ப ராஜாவின் அப்பாவின் தங்கை மகன் தான் களங்கண்டான்... எந்த உறவாக இருந்தாலும் குடும்பத்தில் ஆண் பெண் என்ற பேதம் கருவிலோ உருவானதோ என தெரியவில்லை..அவர்களின் குடும்பத்தில் இன்று வரை அந்த விநோதம் நிகழ்கிறது அதை களங்கண்டான் வளர்ந்த பிறகு அதை முறியடித்து வருகிறார்...
இதில் அரண்மனையில் எஞ்சி இருந்ததோ கதம்ப ராஜாவும் மற்றும் அவருடைய தம்பியும் தான்..கதம்ப ராஜாவுக்கு ஆரம்பித்தில் இருந்தே களங்கண்டான் குடும்பத்தின் மீது சந்தேகம் வலுக்க அதுவும் களங்கண்டான் இவர்களை நேரிடையாக எதிர்க்க துவங்கிய பின் நிலைமை இன்னும் மோசமாகியது..அதிலும் களங்கண்டான் எல்லோரை விடவும் மிகவும் ஆக்ரோஷமாக மாறி இருந்தார்..
அவருக்கு சரி எது தவறு எது என்றெல்லாம் கவலை இல்லை அவருடைய ஒரே இலக்கு அரண்மனையை தகர்த்து எறிவது தான்... , "என்னுடைய குடும்பத்தை எப்படி வீதியில் இறக்கி விட்டீர்களோ அதே போல உங்கள் அனைவரையும் நான் கொன்றிருப்பேன் ஆனால் உங்கள் அனைவரின் மரணமும் அனாதையாக கிட்டத்தட்ட யாருமில்லாமல் தான் நீங்கள் மரணிப்பீர்கள்"... என்று ஒரு உறுதி மொழியே எடுத்து வைத்திருந்தார் களங்கண்டான்...
