Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 27

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 27

அவளோ , "அந்த சட்டங்களே நீங்க தானே நீங்க எல்லோரும் சேர்ந்து உருவாக்கியது தானே உங்களால மாற்ற முடியாதா?? அப்போ நான் நினைச்ச மாதிரி பதவி ஆசைக்கு நீயே உன் அண்ணனை கொன்னு இருக்க அப்படியே உன் அண்ணன் பொண்டாட்டி என்னை உன் ஆசைக்காக வரவழைச்சு என்னை நாசம் பண்ணி இருக்க..இதோ உன்னால இரண்டு புள்ளையும் சுமந்திட்டு நிக்கிறேன் அப்போ இதுவும் உங்க ரூல்ஸ் ஆஹ் அண்ணன் பொண்டாட்டியை கட்டி குழந்தை பெத்துக்கணும்னு "..என்று அவள் பாட்டுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேச

அவனோ அவளது இந்த கேள்விகளில் எப்போதோ பொறுமையிழந்து இருக்க அவள் பேச்சை இனியும் கேட்க அவனுக்கு துளியும் பொறுமை இல்லாதவன் சட்டென்று திரும்பி அவளது கழுத்தை உயிர் போகும் அளவுக்கு நெறித்தவனுக்கு அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது கூட நினைவு இல்லை...

கழுத்தை பிடித்து இறுக்கியவன், " இனி ஒரு வார்த்தை பேசின உன் உடம்புல உயிர் இருக்காது ...மோதிரம் மாத்தினா அது கல்யாணம் ஆகிடுமா?? ஆமாம் டி நான் உன்னை கடத்தி வந்து தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் போதுமா நீயா வரல ஓகே...நானா தான் உனக்கு தாலி கட்டினேன் போதுமா..இப்போ சொல்லு டி அப்போ நான் யாரு டி உனக்கு??..இவ்வளவு நாளா என் புருஷன் இல்லைன்னு மட்டும் சொல்லி பொங்கிட்டு இருக்கியே கட்டின தாலியை அவித்து வெச்சிட்டு போய் இருக்க வேண்டியது தானே?? ஏன் டி செய்யல?? என்ன சொல்லுவ உன் வயித்துல இருக்கிறது பாவ மூட்டைன்னு தானே அப்புறம் ஏன் சுமந்திட்டு இருக்க?? உயிரை விடுவேன்னு சொன்னியே இரண்டு குழந்தைகளையும் சேர்த்து கொன்னுட்டு போய் சேர்ந்து இருக்க வேண்டியது தானே..

இதில் இருந்து தெரியலையா உன் மனசில இருக்கிறது யார்ன்னு?? என்ன பதவி வெறியா எனக்கா இனி ஒரு தடவை இது மாதிரி பேசின உனக்கு என்ன டி வேணும்??? என்னை விட்டு போகனும் அது தானே என் குழந்தைங்களை பெத்து கொடுத்திட்டு மூடிட்டு கிளம்புற வழியை பார்..

என் குழந்தைகளை நான் என்னமோ செய்யறேன் உனக்கு ஏன் டி துடிக்குது..அவங்க தான் பாவ மூட்டைங்களாச்சே அப்புறம் என்ன???...என்ன அறிவிப்பு நாங்க கொடுத்தா உனக்கு என்ன?? உன் வேலை எனக்கு என்னோட குழந்தைங்கள பெத்து கொடுக்கிறது மட்டும் தான்..அதை செஞ்சிட்டு கண்காணாத இடத்துக்கு போ உங்க அப்பன் செத்துட்டான்னு சேதி வரும் வந்து வாய்க்கு அரிசி போட்டுட்டு போடி ..என் முன்னாடி வந்திடாத எவனை காதலிச்சோம்னு தெரியல அதுக்குள்ள பேச வந்திட்டா..".. என கூறியவன்..

அவளோ, " என்ன சொல்ற என்று கேட்க??"...

அவனோ ஒரு நொடி தாம் என்ன உளறினோம் என நெனைத்தவன், "ஒன்னுமில்ல.. இனி ஒரு நிமிஷம் இங்கே நீ இருக்க கூடாது உன்னை அரண்மனைக்கு சொந்தமான ஹாஸ்பிட்டல்ல விட போறேன்..என் குழந்தைங்க இந்த பூமிக்கு வந்த அடுத்த நிமிஷம் நீ கிளம்பிடனும்..".. என்று கூற,

அவன் இவ்வளவு பேசும் போது அவளுக்கு சூடேறி , " நீ என்ன சொல்றது எனக்கு உன் குழந்தைங்க வேணாம் அந்த பாவத்தை நான் சுமக்க விரும்பல எனக்கு உன் முகத்தையே பார்க்க விருப்பம் இல்லை இதில் இந்த குழந்தைங்கள் முகம் நோ வே ".. என்று கூறியவளை பார்த்து , " என்ன டி சொன்ன?? என் முகத்தில் முழிக்காத கிளம்பு டி "...என்று நொடி பொழுதில் கையை ஓங்கியவனை அவள் அதிர்ந்து விழிக்கும் போதே அவள் எதுவோ பேச வருவதற்கும் கூட தடை போட்டவன் அவளை அவர்களுக்கு என்று இருக்கும் அரண்மனைக்குள்ளேயே இருக்கும் மருத்துவமனையில் விட்டவன் அதன் பிறகு எங்கு சென்றான் என தெரியவில்லை..அதன் பிறகு இருவரும் சந்தித்து கொள்ளவில்லை அவனது செய்கையை ஏன் செய்தாய் என்று அந்த வீட்டில் கேள்வி கேட்க யாருக்கும் தைரியமும் இல்லை..அதனால் அவர்களும் அமைதியாக இருந்து விட்டனர்..

ஆனால் அவளுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய குறிப்பு மட்டும் அவனுக்கு சென்று கொண்டிருந்தது..

அவளோ அவன் பேசிய பேச்சில் கோபம் கொண்டு குழந்தை பிறந்ததும் இங்கு இருந்து செல்ல வேண்டும் என நினைத்தவளுக்கு துளியும் தன் குழந்தைங்கள் என்ற அக்கறை இல்லை..

கரு உருவானது முதலே அக்குழந்தைங்கள் மீதும் பாசம் இல்லை ஆனால் ஒரு உயிர் என்ற நிலையில் சுமந்து கொண்டிருந்தவளுக்கு அவன் மீது உள்ள வெறுப்பு அதிகப்படியாக இருக்க குழந்தைங்கள் மீது பாசத்தை வைக்க தவறி விட்டாளோ??

அவனும் அமைதியாக இருக்க மருத்துவர்கள் அவளை நல்ல படியாக கவனிக்க ஒரு நாள் அவனுக்கு அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது..

"சார் உங்க மனைவிக்கு வலி வந்து விட்டது "...என்று கூற,

அவனோ, " ஒரு நொடி பதட்டப்பட்டவன் நான் வரேன் "..என்று கூறினான்

அதற்குள் வீட்டில் உள்ளவர்களுக்கும் தகவல் அளித்தவனுக்கு மீண்டும் அழைப்பு வந்தது..

"சார் அவங்களுக்கு நார்மல் டெலிவரி ஆகாது அவங்களுக்கு அழுத்தம் அதிகமா இருக்கு சோ நாம சி செக்ஷன் தான் போகனும்".. என்க

"ஓகே ப்ரோஸீட் "..என்று கூற அதற்குள் அவளுக்கு முதுகு தண்டு வடத்தில் மயக்க ஊசி போடப்பட்டது..

அவளோ தன் விழிகளாலேயே யாரையோ தேட அங்கு யாரும் இல்லை..ஒரு வேளை நம்மை வாடகை தாயாக நினைத்து விட்டானோ என நெனைத்தவளுக்கு கண்ணில் ஓரம் ஈரம் கசிய அதற்குள் அவள் அவளுடைய நினைவுகளை இழந்தாள்... பிறகு என்ன நடந்தது என அவளுக்கு தெரியவில்லை...

அவள் கண்விழித்து பார்க்கும் போது அவள் வேறு எங்கோ இருக்கிறாள்...கண்ணை திறந்து பார்க்க அது அவளுடைய அறையாக இருந்தது கனவா என்று கண்ணை கசக்கி பார்க்க அவள் அவளது அறையே தான் ...ஆம் அவள் இரவோடு இரவாக பிறந்த குழந்தைகளை கூட பார்க்காமல் அவள் இந்தியா கொண்டு வரப்பட்டு இருக்கிறாள் ஒரு வேளை அவளது வேலை முடிந்து விட்டதோ??

இவ்வளவு நாள் அவளுக்கு துணையாக இருந்த மேடிட்ட வயிறு இப்போது அவளுக்கு இல்லை..அவளோ தட்டுத்தடுமாறி எழுந்து அமர அதற்குள் ஒரு ஆயா வந்து, " அதற்குள்ள எழுந்துட்டியா மா??"... என கேட்டு ஒரு வயதான பாட்டி வர ,

அவளோ அவர் யார் என புரியாமல் முழித்து , "யார் நீங்க??".. என்று கேட்க,

"உன்னை பார்த்துக்க வந்து இருக்கேன் மா"....என்க,

அவளோ," எனக்கா யார் வேலைக்கு வெச்சாங்க ??"..என்க

"தெரியல மா ..யாரோ ஒரு மவராசன் வேலை தந்தார்...ஒரு வருஷத்துக்கு உன் கூட இருந்து பார்த்துக்கணுமாம் சம்பளம் எல்லாம் முன்னாடியே வாங்கிட்டேன்".. என்று சந்தோசமாக கூறியவர்,

" மெல்ல எழுந்து நட மா புள்ள பெத்த உடம்பு இப்படியே இருக்க கூடாது"... என்று அவர் கூற

அதற்குள் குழந்தை என்றதும் அவள் கண்ணில் ஈரம் கசிந்து பெற்ற பாசம் துடித்து அவள் வயிற்றை தொட்டு பார்க்க அதை கண்ட பாட்டியோ," வருத்தப்படாத மா உன் குழந்தைங்க தான் செத்து போச்சாமே உன்னை கொண்டு வந்து விட்டவரு சொன்னார் கூடவே உனக்கு புள்ள பெத்ததுக்கு பத்தியமா இருந்து பார்த்துக்கனும்னு சொல்லி இருக்கார் "...என்று கூற,

இதை எல்லாம் கேட்ட அவளுக்கு அப்போது தான் அவளது குழந்தைங்கள் எண்ணம் வாட்ட அவளோ வெடித்து கதறினாள்..எவ்வளவோ முறை அவள் குழந்தைகள் பாவங்கள் என்று எல்லாம் கூறி இருந்தாலும் இப்போது அவளின் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளது குழந்தைகளை காண துடித்தது...மேலும், " குழந்தைகளை கண்ணில கூட காட்டாமல் என்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்டியே அப்படி என்ன டா பாவம் பண்ணினேன் உனக்கு"... என்று அவள் மனம் ஊமையாக அழுதது..

அதே நேரம் அவனோ அவனது இரு கைகளிலும் அவனது இரு ஆண் சிங்கங்களையும் தூக்கி பிடித்து கொண்டு எழிலின் புகைப்படத்துக்கு முன்னால் நின்று கொண்டு , "டேய் கடம்பா.. மை ப்ரோ.. மை எழில்.. குழந்தைங்களை பார்த்தீயா??".. என்று கூறி அவனது படத்துக்கு குழந்தைகளை காட்ட,

குழந்தைகள் அந்த படத்தை பார்த்து அழுதது அந்த நேரம் பார்த்து ஆரபியின் மார்பில் இருந்து பால் சுரந்தது...

அதற்குள் குழந்தைகளை பார்த்து கொள்ளவென இரண்டு செவிலியர்களை அழைத்த கடம்பன் குழந்தைகளை அவர்களிடம் கொடுத்தவன் எழிலின் படத்திற்கு முன்னால் நின்றவனுக்கு அன்று ஆரபி கேட்ட கேள்விகள் இப்போது அவன் செவிகளில் கேட்க,

அன்று அவளுக்கு பதில் அளிக்காதவன் இன்று அவனின் அண்ணனின் புகைப்படத்துக்கு முன்னால் நின்று, " நான் கொலைக்காரனா டா இதோ இந்த பதவிக்கு ஆசைப்பட்டவனா சொல்லு டா டாமிட் சொல்லு ??"...என்று வெடித்தான் அந்த கல் நெஞ்சுக்காரன் மான்ஸ்டர்...

மான்ஸ்டர் வருவான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top