மான்ஸ்டர் 26
அத்தியாயம் : 26
தன் காதலனுக்கு விதவிதமான உடை உடுத்தி போட்டோ எடுத்து அனுப்பி கொண்டிருந்தாள்..அவள் விதவிதமான உடைகள் அணிந்த படங்கள் இட்டாலோ அவனோ விதவிதமான உணவு போட்டோக்களை போட்டு அவளிடம் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தான்..
அப்படி ஒரு நாள், " பேபி ஒரு பிசா கூட சாப்பிடலை தெரியுமா ??..என் நாக்கு செத்து போச்சு ..நான் பேசாமல் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உன் அண்ணன் கிட்ட சொல்லிடவா?? ".. என்று கேட்க,
அதை கேட்ட அவளோ , " ஏன் டா சோத்து மூட்டை ஒரு பிசாக்காக நீ என்னை வேணாம்னு சொல்லுவியா டா ?? ஏன் டா அவனவன் என்னை மாதிரி பொண்ணு கிடைக்க காத்து இருப்பாங்க நீ வேணாம்னு சொல்ற அதுவும் தின்கிறதுக்காக ??? அந்த அளவுக்கு நான் உனக்கு இளக்காரமா போயிட்டேனா ".. என்று அவள் கேட்க,
அப்படி இல்லை பேபி நாம இந்த உலகத்தில் உயிர் வாழறது எதுக்காக ?? எல்லோரும் வாழ்க்கை , லவ், குழந்தை, அவங்க ஆம்பிஷன் எல்லாம் சொன்னாலும் முக்கியமா நம்ம வாழ்க்கையில் இருக்கிறது என்னவோ சாப்பாடு தான் ...அது இல்லாமல் யார்னாலயும் உயிர் வாழ முடியாது..அதை நான் வெளில ஒபன்னா சொன்னா என் பேரு தின்னி பண்டாரம் ஆஹ் இப்படி சொல்ற நீ தான் ஒரு நாள் முழுசா சாப்பிடாமல் இருந்து தான் பாரேன் " என்று அவன் அவனுடைய வாதத்தை நீட்டி முழக்க,
அதை கேட்ட மியாவோ, " போதும் டா சாமி தெரியாமல் கேட்டுட்டேன்...".. என்று கூற
அவனோ, " சரி இப்போ சொல்லு நான் என்ன சொல்லட்டும்".. என்க,
அவளோ, " உன் இஷ்டம் இதுக்கு எல்லாம் உன் பின்னாடி என்னால வந்துட்டு காதல் பிச்சை போடுன்னு கெஞ்சிட்டு இருக்க முடியாது ".. என்க,
அவனோ, " உன்னை பத்தி தெரிஞ்சும் இந்த கேள்வி கேட்டேன் பார் என்னை சொல்லணும் "...என்று கூறியவன் அவளது புகைப்படத்தை பார்க்க,
"ஹ்ம்ம் ..இன்னிக்கு இந்த போட்டோவை நான் பிசாவா நெனைச்சுக்கறேன் ".. என்று கூற, " போடா "..என்று கூறினாள் மியா..
ஆனால் அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் தான் போனில் மீண்டும் காதலித்து கொண்டிருக்கிறோம் என்று மகிழ அவள் அண்ணன் அவனது நெற்றி கண் மூலம் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறான் என்பது அவர்கள் இந்நேரம் அறிய வாய்ப்பு இல்லை..
சீமந்த நாளும் வந்தது தழைய தழைய பட்டு புடவை கட்டி கொண்டு தன் மேடிட்ட வயிறை மெல்ல சுமந்த படி தேர் போல தன் மனைவி வருவதை கண்ட கடம்பனின் கண்களில் தாபம் பொங்கி வழிந்தது..அந்த தாபத்தில் காதல் உண்டா என்றால் விடை அவனிடம் இல்லை..
சீமந்தம் அவனது அரண்மனையில் மட்டுமே நிகழ்ந்தது...அதுவும் மிக முக்கியமான நெருங்கிய உறவுகள் மட்டுமே கலந்து கொண்டனர்..முக்கியமான உறவுகள் என்றால் அவனது குடும்பம் மட்டுமே அங்கு கூடியிருக்க, இதற்காக தான் இவ்வளவு அலப்பறையா என ஆரபிக்கு தோன்றியது...அவள் ஏதோ பெரிய விழா என்று நினைக்க பார்த்தால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் இங்கே வசிப்பவர்கள் மட்டுமே...
வீட்டில் உள்ள குடும்பத்தார் அனைவரும் அவளை மனையில் அமர வைத்து நலங்கு வைத்தனர்.. பின் அவளுக்கு கைகளில் வளையல் எல்லாம் அணிவித்து கொடுக்க அவளும் மிக சந்தோஷமாகவே அவர்கள் முன் நடித்தாள்...
தாமரைக்கு மட்டும் தான் அங்கே சந்தோஷ மிகுதியில் காணப்பட்டார்..மீதம் உள்ளவர்கள் அனைவரும் போட்ட கதாபாத்திரத்தை அழகாக நடித்து கொண்டிருந்தனர்..
முதலில் தாமரை நலங்கு வைக்க வந்தவர் அவளிடம், " ரொம்ப அழகா இருக்க...அதுவும் இரட்டை குழந்தைகள் ..ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ".. என்று கூற,
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த கடம்பனோ, " அதுவும் பசங்க அதையும் சேர்த்து சொல்லுங்க " என்று கடம்பன் கூற அதை கேட்ட தாயும் மனைவியும் விழி விரிக்க,
அவனோ , "ஆமாம் இந்த கடம்பஞ்சோலையின் அடுத்த வாரிசும் இரட்டைகள் தான் அதுவும் ஆண் குழந்தைங்க தான் ".. என்று உறுதியாக அவன் கூற, அதை கேட்ட தாமரை விழியாள் மகிழ ,மியா யாருக்கு வைத்த விருந்தோ என போனை நோண்டி கொண்டிருக்க, ஆரபியோ ,மனதுக்குள் இவன் என்ன ஜோசியனா அன்னிக்கும் இரட்டைன்னு சரியா சொன்னான் இப்போ ஆம்பிளை பசங்க ன்னு சொல்றான் அதையும் பார்ப்போம் என்று நினைக்க அவனோ அவளது முகத்தை பார்த்து அவள் என்ன நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் அவனது மீசையை முறுக்கி விட்டு கொண்டான்..
இலந்தரையரோ, " அப்போ எப்போவும் போல தானே "..என்று அவர்களை பார்த்து பொதுவாக வினவ,
"ஆமாம் அதில் என்ன சந்தேகம் அண்ணா..அது தானே முறை".. என்று தாமரை கூற ஆரபியோ என்ன சொல்கிறார்கள் என்று புரியாமல் விழிக்க,
கடம்பனோ அதை கேட்டு அமைதியாக இருந்தான் ..அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை..
அதற்குள் வெளி உலகத்துக்கு என்று ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது.. அதை சபையில் இலந்தரையரால் வாசிக்கப்பட்டது..
" இன்னும் ஒரு சில மாதங்களில் நம் அரண்மனைக்கு குட்டி இளவரசன் வர போகிறார் ..இந்த செய்தியை கடம்பஞ்சோலை அரண்மனை அதிகார பூர்வமாக அறிவிக்கிறது " என்று எழுதி இருக்க அதற்கு கீழ் கடம்பன் கையொப்பமிட்டான்..நாளை அது தலைப்பு செய்தியாக வர போகிறது..அவர் வாசித்ததை கேட்டதும் ஆரபிக்கு தூக்கி வாரி போட்டது..
"ஒரு குழந்தையா இரண்டு பேர் ஆச்சே "...என்று அவள் வாய் விட்டே தாமரை விழியாளிடம் கேட்க,
அவரோ, " இது இந்த அரண்மனையோட விதிகளில் ஒன்னு தான்..வெளி உலகத்துக்கு ஒரு குழந்தைன்னு சொல்லுவோம்".. என்று சர்வ சாதாரணமாக கூற அதை கேட்ட அவளது விழிகளோ அதிர்ந்து நேருக்கு நேராக தன் கணவனை பார்க்க அவனும் அந்த நேரம் அவளை ஒரு நொடி பார்த்தவன் அவள் கேள்வி பார்வையை எதிர் கொள்ள அவள் பார்வையின் பொருள் உணர்ந்தவன் அவ்விடம் நகர,
ஆரபிக்கு இந்த சூழலே வித்தியாசமாக இருக்க என்ன சொல்கிறார்கள் அப்போ இன்னொரு குழந்தை என்று அவள் முழிக்க விழா இனிதே நிறைவுற்று அனைவரும் பிரிய அவனுக்காக அவள் காத்து கொண்டிருந்தாள்..
இரவு நெடு நேரம் ஆகியும் அவன் வராமல் இருக்க அவன் வந்து இதை தெளிவு படுத்தாமல் விட போவதில்லை என்று நினைத்தவளுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது ..
கூடவே அந்த சுரங்க கல்லறையும் நியாபகத்துக்கு வர அதில் உள்ள இரட்டையர்கள் போட்டோக்கள் எல்லாம் நியாபகத்துக்கு வர அதில் பிறந்த முதல் குழந்தைக்கு தான் அரச பதவியும் வழங்கப்பட்டு இருக்க பிறகு எதற்கு ஒரு குழந்தையின் அறிவிப்பை மட்டும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு தோன்ற,
அதே போல எழிலின் கல்லறையை பார்க்கும் போது அவன் அண்ணனா தம்பியா ஒரு வேளை என் தந்தை கொன்னார்ன்னு சொல்லி இவனே சொந்த அண்ணனை கொன்னு இருப்பானோ பதவி வெறியில் அவன் அவ்வாறு செய்து இருப்பானோ என்று அவள் யோசிக்க,
"இவன் செய்ய கூடியவன் தான் அண்ணன் மனைவியை அல்லவா திருமணம் செய்து இருக்கான் இவன் இதுவும் செய்வான் இதுக்கும் மேலையும் செய்வான்..கொலைகார பாவி ".. என அவன் மீதுள்ள வெறுப்பில் கண்டதையும் அவள் குழப்பி கொள்ள அவனோ வெகு நேரம் கழித்து அவன் வந்தான்..
அறைக்குள் வந்தவன் பார்வை அவள் இன்னும் உறங்காமல் சீறும் புலி போல அங்கே இங்கே நடந்து கொண்டிருக்கும் அவளை பார்த்தவனுக்கு அவளது காத்திருப்பு எதற்காக என்று புரிந்தாலும் அவன் கண்டு கொள்ளாமல் உள்ளே வந்து தான் அணிந்து இருந்த சட்டையை அவிழ்த்து கொண்டிருக்க,
அதற்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை , "எதுக்கு இன்னிக்கு காலையில் உன் மாமா ஒரு குழந்தையோட அறிவிப்பை மட்டும் தான் வெளியுலகத்துக்கு சொல்லனும்ன்னு சொன்னார் அப்போ இன்னொரு குழந்தை??".. என்று அவள் கேள்வியாக வினவ ,
அவனோ அவளை பார்த்து, " அது தான் அம்மா சொன்னாங்களே இந்த அரண்மனையோட ரூல்ஸ்ன்னு "..என்று கூற,
"என்ன ரூல்ஸ் எனக்கு புரியல ஏன் இந்த குழந்தைங்களுக்கு மட்டும் அப்படி ??"...என்க
"இவங்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் இது தான் ரூல் "...என்று குரலில் வெளிப்பட்ட கரகரப்பை அரும்பாடு பட்டு மறைத்து அவன் கூற
"எதுக்காக இந்த ரூல் அப்போ இன்னொரு குழந்தையை வெளில காட்ட மாட்டிங்களா??".. என்க
அவனோ, " இல்லை "...என்று கூறினான்..
" இது அநியாயம்...அப்போ உனக்கும் எழிலுக்கும் இது தான் நடந்ததா??"... என்று அவள் வினவ,
"ஆமாம் ".. என்று கூறியவன் மீண்டும் அவன் அணிந்து இருந்த சட்டையை அவிழ்க்க முனைய அப்போது அவளது மூளை வேகமாக கடம்பனை தவறாக எண்ணி , "அப்போ நீ தான் எழிலை கொன்னு இருக்க??"... என்று கூற
அவனோ அவள் கூறியதை கேட்டு, " என்ன உளறல் இது இந்த அரண்மனைக்கு சில சட்டங்கள் இருக்கு அதன் படி தான் எல்லாம் நடக்கும்"... என்று கூறினான்..
