Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 25

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 25

மான்ஸ்டரும் மான்விழியும்

ஒவ்வொரு விஷயத்திலும் அவனுக்கு நேர் பதமாக செய்து கொண்டிருப்பவளை பார்த்து அவனால் என்ன செய்வதென்று தெரியவில்லை..

அவள் மூலம் அவன் குடும்பத்திற்கு குழந்தை வரும் வேளையில் அவளுக்கும் சரி அவளுடைய அப்பனுக்கும் சரி ...மிக கொடுமையாக ரண வேதனையை கொடுக்கும் என்றே அவன் நினைக்க, ஆனால் அவளோ அழுத்தமாக அவனிடமே எதிர்த்து உன்னால் முடிந்தால் என்ன செய்ய முடியும் என்னை கொல்ல முடியும் கொன்று விடு..நான் சுமப்பது உன் பாவங்கள் தான் என்று கூறி நிற்பவளை என்ன தான் செய்ய என யோசித்தவனுக்கு மருத்துவர்கள் வேறு அவளை கூடுதலாக அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேணாம் என்று கூறி இருக்க அதை கேட்ட அவனும் அதற்கு பின் அவளிடம் தேவையில்லாமல் வைத்து கொள்வதில்லை..

அப்படி அவன் அவளிடம் எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருப்பவனிடத்தில் சில நாட்களாக அப்படி அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.. இப்போதும் அவனுள்ளே பழி வெறிக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை ஆனால் அது எல்லாம் அவளிடம் வேலை செய்யவில்லையோ??

எதற்காக அவளுக்கு அடங்கி போகிறான் என அவனே அவனுள் பல முறை கேள்வி எழுப்பி இருக்கிறான்..அவனுக்கு விடை கிடைக்கவில்லை..ஒரு ஆண் கட்டிய மனைவியிடமும், தன்னை பெற்ற அன்னையிடமும் தான் பெற்ற குழந்தையிடம் மட்டுமே அடங்கி போவான் அப்படி இருக்க அகம்பாவத்தின் முழு உருவம் இவன் எதற்காக அடங்கி செல்கிறான் என விடை தெரிந்தும் அதை ஏற்று கொள்ள அவனுக்கு பக்குவமின்றி அவன் இருக்கிறான்..

அப்படி இருக்க அவனோ, " இரண்டு நாள் கழித்து உனக்கு சீமந்தம்".. என்க,

அவளோ அவனை பார்த்து, " என்ன எனக்கு சீமந்தமா?? மரணம் தழுவும் குற்றவாளிக்கு கடைசி ஆசை என்ன அப்படின்னு கேட்பாங்களே அந்த மாதிரி யாரை மகிழ்விக்க இந்த விசேஷம் நடத்தறீங்க???..பேசாமல் கருப்பு தினம் நடத்த வேண்டியது தானே??".. அவள் நாக்கில் கொடுக்கை வைத்திருப்பாள் போல, அவனை பார்த்து நக்கல் புன்னகையோடு அவள் கேட்க,

இவ்வளவு நாளாக அவள் மனதில் உழன்று கொண்டதை எல்லாம் அவள் வாய் வழியே கக்க அதுவும் அவன் கூறிய வார்த்தைகள் ..வார்தைகளின் வீரியத்தை அவன் உணறுகிறானோ???அவள் கூறியதை கேட்டு பொறுமை இழந்தவன் ,

அவள் அருகே வந்து அவளது உடலோடு உடல் உரசும் அளவுக்கு வந்து நிற்க அவனது குழந்தைகள் தாய்க்கும் தந்தைக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கி கொடுக்க, "இதோ பார் என் குழந்தைங்க எப்படி இந்த பூமிக்கு வரணும்ன்னு எனக்கு தெரியும் புரியுதா??? என் குழந்தைங்க என் இஷ்டப்படி தான் வரணும்...அவங்க வருவாங்க..உன் இஷ்டம் போல நடந்துக்க முடியாது..உன் இஷ்டத்துக்கு விட்டு தான் இனி இப்படி நிற்கிற?? "..என்று கூற,

அவன் அவளது தோளில் கை வைத்து அவளோ கைகளை விலக்க முயன்று முகத்தை சுருக்கினாள்.. அதை கண்டவனோ, " என்ன டி நான் தொட்டா பிடிக்கலையோ??.. ".. என்று கையை வைத்த இடத்தில் இருந்து எடுக்காமலேயே கேட்க ,

அவளோ , " அது தான் உனக்கு நல்லாவே தெரியுமே அப்புறம் எதுக்கு கையை வெச்சிட்டு இருக்க இனி கையை வெச்சா நான் என்ன பண்ணுவேன்னு முன்னாடியே சொல்லி இருக்கேன்"... என்று எச்சரிக்கை குரலில் கூற,

அவனுக்கு அந்த குரல் பிடிக்கவில்லை போலும் மேலும் மூன்று மாதங்களாக அவளது அருகாமையை தீண்டிடாத அவனுக்கு இன்று ஏனோ முடியவில்லை...அவள் அப்படி என்ன தான் செய்து விடுவாள் என்ற எண்ணம் உதிக்க, " நான் தொட்டா நீ செத்துடுவ ..அப்படித்தானே".. என்று ஒரு மாதிரி குரலில் கேட்க,

அவளோ அவனை உறுத்து விழித்து பார்த்தவளுக்கு அவனது முகம் அருகாமையில் ஏதோ ஒரு மாறுதல் தெரிய அவனது கண்களில் காமம் புகுந்து தேன் குடிக்கும் வண்டாக அவன் மாறி கொண்டிருப்பதை உணர்ந்தவள், " என்ன கிஸ் பண்ண துடிப்ப போலிருக்கு ..உன் அண்ணனும் இதே மாதிரி தான் என்னை கிஸ் பண்ணுவான் ..இதே மாதிரி கட்டி பிடிப்பான் இதோ இதே மாதிரி புள்ள கொடுக்கிற முன்னாடி வரேன்னு போனவன் தான் ஆனால் ஆளையே காணோம் ஒரே அடியா போய் சேர்ந்துட்டான் "..என்று வேண்டும் என்றே அவனை வெறுப்பேற்றி பார்க்க அவள் கூற,

அதை கேட்ட அவனுக்கும் உடல் விறைத்து அவளை பிடித்த பிடியை விடாமல் இறுக்கி, " இந்த மாதிரி தரம் குறைஞ்சு பேசி உன்னை நீயே தரம் தாழ்த்திக்காத ...நீ அப்படிப்பட்டவ இல்லைன்னு எனக்கு தெரியும்... நீ ஒரு நெருப்புன்னும் எனக்கு தெரியும்...நீ நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் நீ செஞ்சு இருந்தா இந்த கல்யாணமே நடந்து இருக்காது..இதோ சீமந்தம் வரை போய் இருக்காது...அதுனால எனக்கு கோபம் வரை வைக்கணும்னு இதெல்லாம் ட்ரை பண்ணி உன் நேரத்தை கடத்தாத...".. என்று கூறியவன்,

மேலும் அதிர்ந்து இருந்த அவளை பார்த்தவனோ, " என்னமோ சொன்ன நான் தொட்டா செத்துடுவன்னு தினமும் நான் தொட்டுட்டு தான் இருக்கேன்".. என்று அவன் தன் மீசையை முறுக்கி கொண்டே கூற,

அவளோ திருத்திருவென விழித்தாள்..எனக்கு நினைவு இருக்கும் போது அவன் தொட்டதும் இல்லை அதற்கு நான் விட்டதுமில்லை.. ஒரு வேளை நான் உறங்கும் போது ஏதாவது செய்து இருப்பானோ என அவள் விழிக்க அவனோ அவளது மான்விழியை கண்டு மயங்கியவனுக்கு நெடுநாளாக அவளது வயிற்றை தொட்டு பார்க்க வேண்டும் என்ற ஆசை கொண்டவனுக்கு அவனுக்கு கிடைத்த இந்த அருகாமையை அழகாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எண்ணி கொண்டான் போல, தனது மான்விழியை விரித்து அதிர்ச்சியாக வேறு அவள் பார்த்து கொண்டிருக்க,

" என்னோட உயிர் அணு தான் அனு தினமும் உன்னை தொட்டுகிட்டே இருக்கே"... என்று அவள் வயிற்றில் கை வைக்கவும் அவளது வயிற்றில் வளரும் குழந்தைகள் அவன் சொன்னது சரி என்பது போல உதைக்க அதை கண்டவன் யாருக்காகவும் தலை குனியாதவன் அவள் வயிற்றில் குனிந்து மென்மையாக முத்தமிட்டான்..அவன் முத்தமிட்டதும் அவள் விலக துடிக்க அவனோ அவளை விடாமல்,

மேலும் அவன் அவளை பார்த்து , "அதனால தயாராகிற வழிய பாரு...நீ செத்தாலும் நான் என்னெல்லாம் எனக்கு செய்யணும்னு தோணுதோ அதை எல்லாம் செய்வேன்.." என்று அழுத்தமாக அவள் கண்களை பார்த்து கூறி விட்டு சென்றான்..

மேலும் இரண்டு நாட்கள் கழித்து நாளை தான் சீமந்தம் என்ற நிலையில் மியா ஷாப்பிங் செய்ய தனியாக கிளம்பி இருந்தாள்.. அவள் முகம் பிரகாசமாக இருந்தது...வெகு நாட்களுக்கு பிறகு அவள் வெளியே வருகிறாள்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top