Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 24

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  


அத்தியாயம் : 24

அவளோ அவனது முகத்தை தீர்க்கமாக பார்த்து, " பேசுனா என்ன பண்ணுவ??..நீ என்னோட புருஷனா இல்லையான்னு முடிவு செய்ய வேண்டியது நான் நீ இல்லை..என் கூட படுத்து ஒன்னுக்கு இரண்டு புள்ளைய ஒரே நேரத்துல நீ கொடுத்திட்டா நீ ஆம்பிளை கிடையாது ..பொண்ணுங்களை மதிக்க தெரியாத உனக்கு எல்லாம் எதுக்கு மீசை??.." என்று அவனது முகத்தை பார்த்து தன் மனதில் கொந்தளித்து கொண்டிருக்கும் வார்த்தையை அவள் கேட்க,

அவளது கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்த கடம்பனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏற அவளது கழுத்தை நொடியில் பிடிக்க அவள் கண்ணில் சிறு துளி பயம் இல்லை..அவனது பிடி இறுகி இருந்தாலும் அவள் அவனை தைரியமாக அவனை எதிர் கொண்டு நின்றவள், " என்னோட அன்பு எவ்வளவு பெரிசோ அதைவிட எனக்குள் இருக்கிற திமிரும் பெரிசு தான்.. என்னோட அன்பு மட்டும் தான் நீ பார்த்திருக்க என்னோட திமிரை நீ பார்த்ததில்லை.. இனி பார்ப்ப நீ எப்படி இருந்தாலும் என் அப்பாவை கொன்னுடுவ ...குழந்தை வெளியில் வந்ததும் என்னை கொன்னுடுவ.. என்னோட பிரண்ட்ஸை கொன்றுவேன்னு சொல்லிட்டு தான் இங்க என்னை பிடிச்சு வெச்சு இருக்க என்னை அடைச்சு வெச்சு என்ன பண்ண போற?? உன்னால ஒன்னும் பண்ண முடியாது அடை காக்கிற கோழி மாதிரி என்னை பாத்துகிட்டே இருப்பியா உன்னால் முடியாது எனக்கு நான் சாக போறதை பத்தி கவலை இல்லை ஆனா இதோ என் வயிற்றில் வளர உன்னோட குழந்தைகள் நான் தான் பெத்தாலும் அவங்க வெளியில் வருவதில் எனக்கு துளியும் விருப்பம் கிடையாது... ஏன்னா நீயே இப்படி இருக்க அப்படின்னா உன்னோட குழந்தைங்க எப்படி இருப்பாங்க??? நீ இன்னைக்கு இப்படி வளர்ந்து உன் மனசில நீ சேர்த்தி வெச்சு இருக்க வன்மத்தை பழி உணர்வோட என் மேல உன் ஆதிக்கத்தை செலுத்தி என்னை படகைகாயாக பயன்படுத்தி ஒரு குழந்தையை கொடுத்து ஒரு பெரிய ஆண்மகனா நீ என் முன்னாடி நின்னுட்டு இருக்க... நாளைக்கு இதே குழந்தைகள் வளர்ந்து இனியும் எத்தனை குடும்பத்தை சீரழிக்க போறாங்களோ தெரியல பதவி ,ஆசை ,பணம் ,புகழ் பெயர்,பழி உணர்வு,அகம்பாவம்,தான் என்கிற திமிர் எல்லாமே இருக்கிற தைரியத்தில் தானே நீ இதெல்லாம் செஞ்சிட்டிருக்க ??..அதே போல தானே உன் குழந்தைகளும் இப்படித்தான வளருவாங்க ...நாளைக்கு அவங்களும் பழிவாங்கும் குணத்தோட தானே இருப்பாங்க... அதனால என் வயித்துல வளறதை நான் சுமையா தான் நினைக்கிறேனே ஒழிய சுகமா நினைக்கல ஏதோ ஒரு கடனுக்காக சுமந்திட்டு இருக்கேன்"...என்று தைரியமாக அவள் கூற அதைக் கேட்ட அவனோ ஒரு நொடி அதிர்ந்தான்..அவன் அவளை பற்றி நினைத்து வைத்திருந்தது எல்லாம் நொடி பொழுதில் தகர்ந்து போனது என்னவோ உண்மை தான்..

ஆம் என்ன பேச்சு இது எப்படி பேசுகிறாள் அவள் கூறுவது அனைத்தும் உண்மை தானே என்று அவனது மனம் உணர்ந்தாலும் அவனுக்கு இருக்கும் பழி உணர்வுக்கு அவள் பேச்சு தீனி போட்டது போல இருக்க அவளது கழுத்தில் கை வைத்த கையை மேலும் இறுக்கியவன், " என்னடி பேசிட்டு இருக்க நீ என்னோட குழந்தைகளை சுமக்கிற அப்படிங்கற ஒரே காரணத்துகாக மட்டும் தான் நீ இன்னும் என் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க இல்லை அப்படின்னா இப்பவே உன்ன கொன்னுடுவேன்..ரொம்ப பேசிட்டு இருக்க என்னை பத்தி உனக்கு தெரியாது ..என்னமோ உன்னை ரேப் பண்ணின மாதிரி இல்ல பேசிட்டு இருக்க..என் கூட நீயும் சேர்ந்து தானே என்ஜாய் பண்ணின அப்போ அந்த நேரத்தில் என்ன எல்லாம் பண்ணின என்ன எல்லாம் பேசினன்னு எனக்கு நல்லா நியாபகம் இருக்கு உனக்கு இருக்கா???"....என்று கூற,

அவன் பேசிய பேச்சில் அவளது முகம் அவமானத்தால் தன் மானங்கெட்டதனத்தையை எண்ணி சிவந்தாலும் எவ்வளவு தூரம் அவன் மீது காதலை தன் கண்களில் தேக்கி வந்திருந்தாலோ அந்த கண்களில் இப்பொழுது காதல் இல்லை... அதற்கு பதிலாக கோபம் அவன் மீதுள்ள வெறுப்பு அது மட்டும் தான் அவளுள் துடித்துக்கொண்டிருந்தது..

அவளோ, " என்ன பயம் காட்டுறியா எனக்கு பயமெல்லாம் இல்லை... எல்லாத்துக்கும் துணிஞ்சு தான் நான் இருக்கேன்.. நீ என்ன கொன்னுடுவேன் எனக்கு நல்லாவே தெரியும் ஆனா நான் எதுக்கு நீ கஷ்டப்பட்டுட்டு அதுக்கு முன்னாடி உன் குடும்பத்துக்கு இரண்டு வாரிசைப் பெற்றுக் கொடுத்துட்டு போகணும்ன்னு எனக்கு எந்த தேவையும் இல்லை.... அது குழந்தைங்க பிறந்து உன்னை மாதிரி வேற ஒரு ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிக்க எதுக்கு இதெல்லாம்...அதுக்கு பதிலா இந்த பாவ மூட்டைங்க வயித்துக்குள்ளயே சாகட்டும்.. குழந்தை வேணும்னு தானே என்னை உயிரோடு வெச்சு இருக்க நான் இப்போ செத்துட்டா குழந்தைங்க இருக்குமா?? அப்போ என்ன சொன்ன எப்படி குழந்தைங்க போனாலும் என்னை வெச்சு குழந்தை உருவாக்குவியோ?? நான் என்ன உங்க குடும்பத்துக்கு குழந்தை பெத்து கொடுக்கிற காண்ட்ரேக்ட் ஆஹ் நடத்திட்டு இருக்கேன்..நீ செய்யற கொடுமை எல்லாம் அனுபவிச்சு உனக்கு பயந்து இருக்கணும்னு எனக்கு தேவையா இதெல்லாம் எதுக்கு இந்த பாழா போன உயிருக்கு தானே அந்த உயிரை நானே எடுத்துட்டா??"... என்று எகத்தாளமாக கேள்வி கேட்டவள் பால்கனியின் விளிம்பின் கம்பி போல டிசைன் செய்யப்பட்ட அந்த திட்டில் ஏறியவள் கண்ணிமைக்கும் நொடிபொழுதில் அப்படியே பின்னோக்கி சரிந்தாள்...

ஒரு நொடி அவனுக்கு உலகமே ஸ்தம்பித்தது போல இருந்தது வேகமாக தனது கையை கொடுத்து அவளது கையைப் பற்றி அவனது பலம் முழுவதும் பிரயோகித்து அவளை தூக்க அவளோ அவனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தவள் அவனது கையை விட போராடினாள்..அவள் கண்ணில் சாக போகிறோம் என்ற பயம் கூட இல்லை... ஆனால் அவனோ அவனது பிடியை இறுக்கி அவள் கையை விடாமல் அவளை நொடிப்பொழுதில் காப்பாற்றி விட்டான்...

காப்பாற்றியவன் கைகள் அவள் உடலை வேகமாக ஆராய்ந்து அவளுக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்று பதறி எல்லா இடங்களிலும் ஆராய்ந்தவன், " என்ன காரியம் செய்யத் துணிஞ்ச உனக்கு அறிவிருக்கா??? "..என்று அவளிடம் பதட்டத்தோடு கேட்க ,

அவனது குரலில் இருந்த பதட்டம் அவளுக்கு புதிதாக இருந்தது இருந்தாலும் அந்த பாவையின் உள்ளம் அவனது பதட்டத்தை ரசித்ததோ, அவனது கைகள் தன் மேனியில் ஊர்வதை பார்த்து வேகமாக அவனது கைகளை தட்டி விட்டவள், " நீ தான் கொன்னுடுவன்னு சொன்னியே..நீ என்னை என்ன கொல்றது?? என் உயிரை எப்படி எடுக்கணும்னு எனக்கு தெரியும்.. செத்தா இப்படித்தான் இருக்கும்னு காட்ட தான் நான் இப்படி செஞ்சி காட்டினேன்".. என்று கூற ,

மேலும் அவளோ, "எவ்வளவு நாள் தான் நீ என்னை காப்பாற்ற போற அப்படிங்கிறதை நான் பார்க்கிறேன்.. இனி உன் கை என் மேல பட்டுச்சு அவ்வளவு தான் ...உனக்கு உன் குழந்தைங்க உயிரோடு வேணும்னா இனி என்னை தொடவே கூடாது"...என்று கூறியவள் அதிர்ந்த அவனது முகத்தை பார்த்து, " கவலப்படாத உன்னை மாதிரி நான் இல்லை... நீ இரண்டு உயிரைக் கொல்றேன்னு சொன்னாலும் நான் ரெண்டு உயிரை உனக்கு கொடுத்து தான் போவேன்"... என்று கூறி விட்டு சென்றாள்...அவனோ செல்லும் அவளை பார்த்து ஸம்பித்து நின்றான்...

அன்றிலிருந்து அவள் அருகே செல்லவே அவனுக்கு பயம் ..பயமா மான்ஸ்டருக்கா???ஆம் எப்போது அவள் அவளையே மாய்த்து கொள்ள துணிந்தாலோ அப்போதிருந்த அவனுக்கு அவளிடம் ஒரு சிறு பயம் வந்தது என்னவோ உண்மை தான்...ஒரு நொடியில் அந்த மான்ஸ்டரையே அவள் தண்ணி குடிக்க வைத்து விட்டாள்..எவ்வளவு தூரம் அவன் பின்னால் நாய் குட்டி போல ஒரு மட சந்துவை போல அவன் பின்னால் சுற்றினாலோ இப்போது அதற்கு நேர்பதமாக இருக்கிறாள்...

கடம்பனுக்கு இப்போதும் அவள் விழுந்த அந்த காட்சியை இப்போது நினைத்தாலும் அவனுக்கு உடல் விறைப்பதை அவனாலேயே உணர முடிந்தது அன்றிலிருந்து அவளிடம் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தான் குழந்தைகளுக்கு வேண்டியா அல்லது அவளுக்கு வேண்டியா என தெரியவில்லை இருந்தாலும் ஒரு ஒதுக்கத்தோடு தான் அவளிடம் பரிமாறினான்...

ஆனால் அவளோ அவனை வைத்து செய்தாள் என்றே கூற வேண்டும் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் எதையும் உட்கொள்ள மாட்டாள்.. மருத்துவர்கள் இதை சாப்பிடக் கூடாது என்றால் அதைத் தான் அதிகமாக சாப்பிடுவாள் அவனுக்கு தான் சோதனையாக இருக்கும்...அவன் எவ்வளவோ முறை தடுத்து பார்த்தும் அவள் கேட்பதாக இல்லை...

அவனை பழி வாங்க வேண்டும் என கருதி , உண்டு உண்டு அவள் உடலை நான்கு மடங்கு பெருக்கி வைத்திருக்கிறாள்.. அவள் வயிற்றில் வளர்வது இவனை போல இரட்டையர்கள் தானே...அவளை சொல்லி ஒன்றும் குற்றமில்லை அவளுக்கு பசி அதிகம் அதனாலேயே அவள் உட்கொள்கிறார்..

ஆனால் அதனுடன் அவனை நினைக்கும் போதே அவளுக்கு ஆத்திரம் தான் அதற்காகத்தான் அவள் இப்படி செய்து கொண்டிருக்கிறாள்..அவன் தீண்டிய உடலை வதைக்க அவளுக்கு வேறு வழி தெரியவில்லை... தன்னையே அவள் கஷ்டப்படுத்தி கொள்கிறாள்...

குழந்தைகள் மீது பாசம் இருக்கிறதா என்று கேட்டால் அவளுக்கு விடை தெரியவில்லை விடையில்லா கேள்விகளுக்கு பதில் வைக்க அவளுக்கு விருப்பமில்லை... குழந்தைகள் மீது பாசம் என்பதை விட அவன் மீதுள்ள வெறுப்பு அதிகமாக இருந்தது..

இப்படி சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் தாமரை விழியாள் தன் மகனிடம் , "இந்த குடும்பத்து வாரிசு சுமந்துட்டு இருக்கிற பொண்ணுக்கு சீமந்தம் வைக்கணும் "...என்று கூற அதை கேட்டவனோ, " ஏற்பாடு பண்ணுங்க".. என்று மட்டும் கூறி விட்டு நகர்ந்து கொண்டான்..

அதை அவளிடம் கூற அவளோ, " யாரைக் கேட்டு இதெல்லாம் நீ ஏற்பாடு பண்ணின?? எனக்கு இதில் எல்லாம் துளியும் விருப்பம் இல்லை என்னால முடியாது "...என்று கூறி மறுத்துவிட்டாள்...

அவளது ஒவ்வொரு செய்கையிலும் எழும் ஆத்திரத்தை அடக்கியவனுக்கு இப்போது அடக்க முடியவில்லை..அவனுக்கு என்று இருக்கும் சிறு துளி பொறுமையையும் அவள் பிடுங்கி கொண்டிருக்க அவன் கொந்தளித்து விட்டான்..

மான்ஸ்டர் வருவான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top