Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 23

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 23

மான்ஸ்டரும் மான்விழியும்

மூன்று மாதங்களுக்கு பிறகு..

கடம்பனின் பேலஸில் படுக்கையில் படுத்திருந்தாள் ஆரபி... ஒரு மருத்துவர் குழு அவளை பரிசோதித்துக் கொண்டிருந்தது...கடம்பனின் முகம் இறுகிய பாறைப் போல இறுகி இருந்தது... அவனுள்ளே கோபக்கனல் வீசிக் கொண்டிருக்கிறது...

அந்த அறையில் உள்ள அனைவரும் அதை உணர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர் கோபத்தை கட்டுப்படுத்த வழி தெரியாது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு கொண்டு நின்று கொண்டிருந்தான்..

அவளை பரிசோதித்து விட்டு கடம்பனை பார்த்த மருத்துவரோ, " கடம்பா உங்க வைஃப் இப்போ நார்மலா இருக்காங்க ஆனா அவங்க உடம்பு ரொம்ப மோசமா இருக்கு தைராய்டு, பிபி ,சுகர் எல்லாமே இருக்கு எக்கசக்கமா ஏறி இருக்கு..நான் சொன்ன டயட் சார்ட்டை நீங்க போலவே பண்ணலையா???..இப்படியே போனா நிலைமை கொஞ்சம் மோசமகிடும்"... என்று மருத்துவர் அவனை பார்த்து கூற,

அதை கேட்ட அவனோ திகைத்து "இல்ல டாக்டர் எல்லாமே கரெக்டா தான் சாப்பிட்டுட்டு இருக்கா"... என்று படுக்கையில் படுத்திருந்த அவளை ஒரு நோட்டம் பார்த்துக் கொண்டே அவன் பதிலளிக்க, அவளோ யாருக்கு வைத்த விருந்தோ என எங்கேயோ வெறித்து கொண்டிருந்தாள்...

அவரோ அவனது பதிலை மறுத்து, "சாப்பிட்டு இருந்தா அவங்க இப்படி படித்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே???அவங்களுக்கு இப்போ ஏழு மாசம் தான் ஆகுது.. ஆனா அவங்க வெயிட் ரொம்ப ஜாஸ்தியா இருக்காங்க அதைவிட அவங்க நான் சுகர் சாப்பிட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் ஆனால் அவங்க சுகர் சாப்பிட்டுட்டு இருக்காங்க... கை கால்ல எல்லாம் வீக்கம் வந்திருக்கு நிறைய காரம் சாப்பிடுவாங்க போல தண்ணி நிறைய குடிக்க மாட்டாங்க போல..அதுனால பிரஷர் வேற இருக்கு... இது எல்லாமே கம்மி பண்ணனும் இல்லைனா டெலிவரி சமயத்தில் ரிஸ்க் ஆயிடும் "... என்று டாக்டர் அறிவுரையுடன் கூடிய எச்சரிக்கையை விடுக்க,

அவனோ அவர் கூறியதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து, "என்ன டாக்டர் எல்லா வியாதிகளுக்கும் சொல்றீங்க???"... என்று இன்று கொஞ்சம் பதட்டத்துடனே அவன் கேட்க,

அவனது குரலில் சிறு மாற்றம் இருந்ததோ என்ற சந்தேகம் படுத்திருந்தவளுக்கு எழாமல் இல்லை.. அவளோ கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பி காதை மட்டும் நன்றாக பட்டை தீட்டி வைத்திருந்தாள்..

அவனை பழிவாங்க அவளுக்கு வேறு வழி தெரிய வில்லை எந்தப் பக்கம் போனாலும் அந்த வழியை அடைத்து அவனிடம் அவளை அடக்கி அவனுக்கு கீழ் வைத்திருப்பவனை அடக்க வேண்டுமெனில் அவள் கையில் உள்ள பிரம்மசாஸ்திரம் அவள் வயிற்றில் வளரும் அவனது குழந்தைகளே இவர்களை வைத்து தான் என் வன்மத்தை நான் தீர்த்து கொள்ள முடியும் இது தான் வழி என அவள் உணர்ந்து அந்த பாதையில் பயணித்து கொண்டிருக்கிறாள்....

"இது நார்மலா பிரசவத்தில் எல்லாருக்கும் வர வியாதிகள் தான் மிஸ்டர் கடம்பன்...ஒரு சிலருக்கு எதுவுமே இருக்காது ஒரு சிலருக்கு இதில் ஏதாவது ஒன்னு சிலர் இன்னும் சிலருக்கு தான் எல்லாமே இருக்கும் அந்த வகையை சேர்ந்தவங்க தான் உங்க மனைவி...பிரசவத்தில் வர வியாதி பிரசவத்தோட போயிடும் சொல்லுவாங்க சோ டோன்ட் ஒரி...ஆனா உங்க வைஃப் கொஞ்சம் கேர்லெஸ் ஆஹ் இருக்காங்க அவங்கள கவனமா இருக்க சொல்லுங்க கூட இருந்து பார்த்துக்கோங்க ..கொஞ்சம் டென்ஷனில் இருப்பாங்க போல பிரஷர் வேறு அதிகமா இருக்கு அது மாதிரி புட்டும் கண்ட்ரோல் பண்ணுங்க ஓவர் வெயிட் இப்போவே இன்னும் அதிகமா வெயிட் போட்டா பிரசவத்துக்கு கொஞ்சம் கிரிட்டிக்கல் ஆயிடும் ".. என்று மருத்துவர் கூறி மருந்துகளையும் அவளுக்கான டயட் சார்ட்களையும் கொடுத்து விட்டு செல்ல,

அவர்கள் வெளியே சென்றதும் அதையெல்லாம் அவள் முகத்தில் எரியத் துடித்த கையை அடக்கி அருகில் உள்ள மேசையில் இருந்து விட்டெறிந்தவன் அவளுக்கு என்று அவன் ஒதுக்கி இருக்கும் பணியாளர்களை அழைத்து, " மேடம் என்ன சாப்பிடறாங்க?? எத்தனை மணிக்கு சாப்பிடறாங்கன்னு கூட கவனிக்க முடியாம தான் நீங்க இருக்கீங்களா?? உங்ககிட்ட என்ன சொல்லி இருந்தேன் நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?? உங்களுக்கு இதை விட என்ன வேலை இருக்கு??? நீங்க எல்லோரும் நான் சொன்ன வேலையை சரியா செய்யலன்னு நினைக்கிறேன் அதற்கான தண்டனை உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் "..என்று அவளை கடிய முடியாமல் அந்த கோபத்தை இவர்கள் மீது திணிக்க

அவர்களோ பயந்து போய், "சார் நாங்க சரியா தான் கொடுத்துட்டு இருக்கோம் மேடம் தான் அதையெல்லாம் ஃபாலோ பண்றது இல்லை "...என்று அவர்கள் உண்மையை கூற அது தான் அவனுக்கு தெரியும் ஆச்சே அவளை திட்ட முடியாத கோபத்தில் அவர்களை சாட அவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்..அவன் முன்னே முழி பிதுங்கி தான் நிற்க கொண்டிருந்தார்கள்..

அவளோ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சாவதானமாக எழுந்தவள் அவனை கண்டு கொள்ளாமல் அந்த பணிப்பெண்களிடம், " எனக்கு சாக்லேட் கேக் வேணும் ஃபுல் சாக்லேட் கேக்..சீக்கிரம் கொண்டு வாங்க "...என்று கூற அவனுக்கு எதுவுமே பேச முடியவில்லை ..கையை பிசைந்து நிற்பதை விட வேறேதும் செய்ய இயலாத நிலையில் தான் அவன் இருந்தான்..

ஆம் ஒரு மாதத்திற்கு முன்பு

முதல் மூன்று மாதம் மசக்கையின் பாதிப்பால் ஆரபி வெகுவாக அவதிப்பட்டாள்... அவளால் எதுவும் சாப்பிடவோ முடியவில்லை எதுவும் செய்யவும் முடியவில்லை...தலையே தூக்கவே முடியாமல் படுத்து கிடந்தாள்...

அவளது பாதிப்பை அறிந்தவன் மருத்துவரை வர வரவழைத்து அவளை பரிசோதிக்கச் சொன்னான் அவரும் பரிசோதித்துவிட்டு , "மிஸ்டர் கடம்பன் இது நார்மல் தான் எல்லா பெண்களுக்கும் உள்ளது தான் பெரிசா எதுவும் இல்லை"... என்று கூற,

அவனது குரலிலோ பதற்றம் நிறைந்து, "சார் ரெண்டு குழந்தை இருக்கு சார் இவ இப்படி ஸ்டிரெயின் பண்றதால குழந்தைகளுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா எதுவுமே சாப்பிடறது இல்லை "என்று கூற ,

அவரோ ஒரு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிட்டு, " இத சாப்பிடறதுக்கு முன்னாடி சாப்பிடுங்க வாமிட்டிங் வராது "...என்று கூறிவிட்டு சென்றார்... அவளோ மீண்டும் வாந்தி வருவது போல அவளுக்கு இருக்க வேகமாக பாத்ரூம் சென்றவள் பின் ஒரு சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவளின் தலை பாரமாக இருக்க தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்..

அவனோ அவளது அருகே சென்று தலையில் கை வைத்து , "தலை வலிக்குதா??"... என்று மென்மையாக கேட்க , அவளுக்கு அவனது மென்மையான குரல் அவளுள் ஏதோ செய்ய அவளுக்கு ஆத்திரம் தாளாமல் தன் மீது வைத்திருக்கும் அவனது கையை தட்டி விட்டு , "இதோ பார் உன் குழந்தைங்க மீதுள்ள அக்கறையை அவங்ககிட்ட மட்டுமே வச்சுக்கோ எங்கிட்ட எல்லாம் வேண்டாம்..கையை எடு உன்னை மாதிரி ஆள் எல்லாம் என் மேல கை வைக்கிறதே அருவருப்பா தான் நான் நினைக்கிறேன்..அண்ணன் காதலிச்சு கல்யாணம் பண்ணின பொண்ணை மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டு என்னமோ பாசமா இருக்கிற மாதிரி நடிக்கிறியா உன் அக்கறை வேஷம் என்கிட்ட வேணாம்..உன்னை பார்க்கவே ஆத்திரமா வருது ..முடிஞ்சா என்னை சீக்கிரம் நீயே கொன்னுடு "...என்று சூடாக பதிலளிக்க ,

அதை கேட்ட அவனோ, " ஹா ஹா நான் உன் புருஷன் டி..நீ நடந்து முடிஞ்சு செத்து போன விஷயத்தை பேசிட்டு இருக்க ஆனால் இது தான் நிஜம் அதை நீ யோசிக்க மாட்டேங்கிற?? ஏன் நான் உன் மேல அக்கறை படக்கூடாதா??".. என்று கேள்வி கேட்க

அவன் பேசியதை காது கொடுத்து கேட்க விரும்பாதவள் போல பால்கனியில் சென்று நின்றவளை பார்த்து அவளது உதாசீனத்தை பொறுத்து கொள்ள முடியாதவனோ அவள் பின்னே சென்று, "உனக்கு என்னடி அவ்வளவு திமிரா ???..இதோ பார் நான் தான் உன் புருஷன் நான் மட்டும் தான் அவன் கூட நடந்தது ஒரு கல்யாணமே கிடையாது இனி ஒரு தடவை அதை பத்தி பேசின??".. என்று அவன் கடுமையான குரலில் அவளிடம் கூறினான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top