மான்ஸ்டர் 22
அத்தியாயம் : 22
"என்னை நிம்மதியாகவே இருக்க விட மாட்டியா இப்படித்தான் தொல்லை பண்ணிட்டு இருப்பியா?? " என்று கேட்க ,
அவனோ, " அதில் என்ன சந்தேகம் சத்தியமா உன்னை தொல்லை பண்ணத்தான் நான் கூட்டிட்டு வந்திருக்கேன்".. என்று கூறவும்,
இவனிடம் போயி இந்த கேள்வியைக் கேட்டோமே என்று நினைத்த அவளது கண்ணில் கண்ணீர் சுரந்தது.. அது அப்படியே அவளை அணைத்து நிற்கும் அவனது கைகளிலும் பட மெல்ல அவளைத் திருப்பி அவன் அவளது முகத்தை தீர்க்கமாக பார்த்தவன் அவளது தோள்தொட்டு, " என்னோட இலக்கை அடையும் வரை உனக்கு இந்த தண்டனை தொடரும் ".. என்று கூறிவிட்டு ,
"இப்போ நீ கீழ போய் இருக்க!!".. என்று எச்சரித்து கூற , அவளோ, " என்னால முடியாது "...என்று மறுத்தவளுக்கு கோபம் சுடர் விட்டு எரிய அது புரிந்து அவளது கண்களை பார்த்தவன் மெல்ல இளநகை பூத்தான்...
அந்த புன்னகை மெல்ல மெல்ல அவளை பரிகசிக்கும் புன்னகையாக மாறி, " நான் சொல்ற பேச்ச நீ கேட்கவே மாட்ட போலிருக்கே ??"..என்று எதையோ யோசிப்பவன் போல கூற ,
அவனது போனை எடுக்க அவன் எதற்காக போனை எடுக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் வேகமாக, " நான் போறேன் நான் போறேன் "...என்று அவனிடம் கூற,
அவளது பீதியை கண்ட அவனோ அவளது முக வளைவுகளை தன் விரல்களால் அளந்து , "இப்படித்தான் இருக்கணும் "..என்று கூறியவனுக்கு அவளது அதிர்ச்சி நிறைந்த முகத்தை காணவும் மோகம் கரைபுரண்டோட,
"கிஸ் மீ "..என்றான் அவளோ அவன் என்ன கூறுகிறான் என புரியாமல், " வாட்".. என்க ,
"கிஸ் மீ ..எனக்கு இப்போ ஒரு முத்தம் நீ தர..நானா உனக்கு தரதுல என்ன கிக் நீ தரும் போது தான் கிக் "... என்று கூற ,
அதை கேட்ட அவளோ கண்ணில் நீர் சுரந்து, " என்னால முடியாது ..ப்ளீஸ்..என்னை விட்டுடு "..என்று கூற,
அவனும் தோள் குலுக்கி, " ஓகே".. என்று கூறியவன் மொபைலை பார்க்கவும் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிந்தவளோ வேகமாக அவனது கன்னத்தில் முத்தமிட போக அவனோ அந்த நொடி பார்த்து முகத்தை திருப்பி அவனது உதட்டை காட்டினான்..
அவளோ விதியே என நினைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டு போக அது உதட்டில் பட்டதும் பட்டென்று அவள் விலக்க துடிக்க அவளால் முடியவில்லை.. அவள் இதழ் தான் அவன் வசம் ஆகி போனதே..
மெல்ல சாவதானமாக ருசித்து ரசித்து அவள் இதழில் தேன் உறிஞ்சிய வண்டாக மாறி போனவன் மெல்ல அவளது உதட்டை விட்டு, " நீ ஒன்னும் சாதாரண குடிமகனோட பொண்டாட்டி இல்ல வீட்ல சண்டை கட்டினா வெளியில அதை வெளிச்சம் போட்டு காட்டிட்டு இருக்க நீ இந்த நாட்டோட ராஜாவோட பொண்டாட்டி அதாவது இந்த நாட்டின் ராணி அதுக்கு தகுந்த மாதிரி இரு இனி ஒரு தடவை வேலைக்காரன் கிட்டயோ இல்ல வீட்டில மத்தவங்க கிட்ட முகத்த காட்டிட்டு இருக்காத அப்படி இனி ஒரு தடவை நீ இருந்தா நான் என்ன செய்வேன்னு சொல்லிட்டு இருக்க மாட்டேன்.. செஞ்சிடுவேன் "...என்று அவளை கிட்டத்தட்ட மிரட்டி விட்டே சென்றான்...
அவளோ அவளது நிலையை எண்ணி வருந்தியவள் வேகமாக தன் முகத்தை அழுந்தத் துடைத்து மெல்ல மாடியில் இருந்து கீழே இறங்கினாள்...
கீழே வந்தவளை கண்டதும் தாமரை விழியாள் எழுந்து வந்து, " இப்ப எப்படி இருக்கு" என்று அக்கறையாக நலம் விசாரிக்க பதிலுக்கு தலையை மட்டுமே ஆட்டினாள்... பதில் ஒன்றும் கூறவில்லை ..
அவனோ அந்த ஆளுயர ஒற்றை இருக்கையில் அமர்ந்து கொண்டு அவளின் செய்கைகளை கால் மீது கால் போட்டு பார்த்துக் கொண்டே இருக்க, இலந்தரையரோ இந்த காட்சிகள் பிடிக்காமல் எழுந்து சென்றுவிட்டார்..
பின் தாமரை விழியாள் இந்த சமயம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என அவளிடம் கூற அதை காது கொடுத்து கேட்காமல் குனிந்த தலை நிமிராமல் ஒரு பொம்மை போல இருந்தாள்... தாமரையோ அவளின் இயந்திரதனமான செய்கையை பார்த்து ஒரு வேளை மகன் ஏதாவது சொல்லி இருப்பானோ என மகனது முகத்தை பார்க்க அவனோ அவரது பார்வையை எதிர் கொள்ளாமல் அவனது போனை பார்த்துக் கொண்டிருந்தான்..
பார்த்து கொண்டிருப்பது போல அவளை அவளின் அசைவுகளை கண்காணித்துக் கொண்டு தான் இருந்தான் பின் இறுதியாக தாமரை விழியாள் அவருக்கு சொல்ல வேண்டியது எல்லாம் ஆரபியிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட ,
அவளும் பொம்மை போல மாறி விட்டாள்... அவனும் அவளது செய்கைகளை கவனித்தாலும் அதைப்பற்றி எல்லாம் அவனுக்கு வருத்தம் ஒன்றும் இல்லை அவனுக்கு அவன் நினைத்தது நடக்க வேண்டும் அவ்வளவே..
அதற்குள் அங்கே அரண்மனையில் மியா போனையே பார்த்துக்கொண்டிருந்தாள்...அவளது முகம் பல நாட்களுக்கு பிறகு மிகவும் புத்துணர்வாக காணப்பட்டது..
வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த அவளது காதலன் பிரதீஷ் வேறொரு எண்ணிலிருந்து அவளுக்கு குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தான்..அது தான் அவளது தற்போதைய இன்பத்துக்கு காரணம்..
"பேபி மா நாம எப்போ மீட் பண்ணுவோம்??"... என்று அவன் கூற,
அவளோ , "எனக்கும் உன்னை பார்க்கணும் போல இருக்கு டா".. என்க,
அவனோ, " நாம அந்த ருசி ருசி ஹோட்டல்ல சமோசா சாப்பிட்டோம்ல எனக்கு அது சாப்பிடணும் போல இருக்கு தெரியுமா ?? "..என்று அவன் ஏக்கமாக கூற,
அதைக்கேட்ட அவளோ , "அறிவுகெட்ட தண்டமே எப்ப பார்த்து தின்னுட்டு இருக்கிறது தான் உனக்கு வேலையா?? இவ்வளவு நாள் கழிச்சு ஒரு நம்பர்ல இருந்து மெசேஜ் பண்ணி இருக்க ஹாய் எப்படி இருக்க என்ன பண்ற அந்த மாதிரி எதுவும் கேக்க மாட்டியா ?? அப்போவும் சமோசா பத்தி தான் நீ பேசுவியா?? ".. என்று அவனது கேள்விக்கு மியா பொங்க,
அதைக் கண்ட அவளது காதலன் பிரதீஷ், " நான் என்ன பண்ணட்டும் மியா?? வீட்டுக்குள்ளேயே இருக்கேன் அம்மா சமையல் அத தான் சாப்பிட்டு இருக்கேன் அது ஒரு கொடுமை தெரியும்மா?? எப்படி கேவலமா இருக்குன்னு உனக்கு தெரியுமா?? எல்லா பொருளும் உங்க அண்ணன் ஆளுங்க மூலம் வீட்டுக்கு வந்தாலும் எங்க அம்மா யூடியூப் பார்த்து அதை செய்யலாம் இதை செய்றேன்னு சொல்லி கொலையா கொல்றாங்க!! நேத்துக்கூட குலாப் ஜாமூன் கேட்டேன் ஆனால் எனக்கு கரிக்கட்டை ஜாமுன் தான் எனக்கு கிடைத்தது ".. என்று கூற அதை படித்த மியாவோ மனதுக்குள் தின்னி பண்டாரம் என்று நினைத்தாலும்,
அவளது காதலனை எண்ணி அவளுக்கு அந்த நொடி கூட சிரிப்புதான் வந்தது அவளது ஸ்டிரஸ் பஸ்டர் அவன் தான்..
தன்னுடைய கோபத்துக்கும் ஆளுமைக்கும் சற்றும் பொருந்தாத ஒருத்தன்தான் பிரதீஷ் அவள் ஒரு அல்ட்ரா மாடர்ன் என்றால் இவன் ஒரு பழைய பஞ்சாங்கம் எப்படி பொருந்திப் போனது என்று அவளுக்கு இன்று வரை புரியவில்லை..
பள்ளி கல்லூரி என அனைத்திலும் அவனுடன் படித்து வந்த பிரதீஷை அவளுக்கு ரொம்ப பிடிக்கும் எப்படி காதலித்தார்கள் என இருவருக்கும் தெரியாது ஆனால் ஒரு நாள் மியாவுக்கு இவன் தான் அவளுடைய வாழ்க்கை என புரிந்து போக ,
ஒரு நாள் வேறொரு பெண்ணுடன் பேசி கொண்டிருந்த அவனிடம் வந்து, "ஏய் நான் உன்ன லவ் பண்றேன் அதனால வேற யார் கிட்டயும் பேசிட்டு இருக்காத புரியுதா??".. என்று மியா அவனிடம் காதலை எச்சரிக்கையாகவோ இல்லை காதலாகவோ ஏதோ ஒன்று மியா செய்ய,
அவனோ பதிலுக்கு ஒரு நொடி யோசித்தவன், " சரி எனக்கு டெம்ப்டேஷன் சாக்லேட் வாங்கி தருவியா??".. என்று கேட்க , அவளோ தலையிலடித்துக் கொண்டு, " வா வாங்கித்தருகிறேன்" என்று கூறி அழைத்து சென்றவள் தான் இன்று வரை கிட்டத்தட்ட அவனை குழந்தை போல பார்த்துக் கொள்கிறாள்..
எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க விஷயம் கசிந்து கடம்பனின் செவிகளை அடையும் வரை எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது..
ஒரு நாள் வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தவளை பார்த்த கடம்பன் , " எங்கே போற?? "..என்று கேட்க,
" நான் வெளில போறேன் அண்ணா".. என்று பதிலளித்தாள் மியா ..
அதை கேட்ட கடம்பனோ, "பிரதீஷை பார்க்க போவதா இருந்தா பார்க்க போக வேண்டாம் அவன் நீ சொன்ன இடத்துல இருக்க மாட்டான் அவன் இப்போ வீட்டு சிறையில் இருக்கான் "... என்று கடம்பன் கூலாக கூற, அதை கேட்ட அவளோ திகைத்து விழித்து, " யாரைக் கேட்டு நீ அவனை அரெஸ்ட் பண்ண??".. என்று அவனிடம் காய,
அவனும் கூலாக , "நீ எந்த குடும்பத்தில் பொறந்திருக்கன்னு உனக்கு தெரியுமா?? நீ யாரை லவ் பண்ணிட்டு இருக்கன்னு உனக்கு தெரியுமா?? எப்படியும் இதெல்லாம் நடக்க போறதில்லைன்னு தெரிஞ்சும் நீ பண்ணிட்டு இருக்க வேலை யாருக்கும் தெரியாதுனா நெனைச்சுட்டு இருக்க?? அவனை வெளியில் விட்டா தான் நீ அவன் கூட சுத்துற அதனால் தான் அவனை வீட்டு சிறையில் வெச்சேன் உனக்கான தண்டனையை அவன் அனுபவிக்கிறான் சிம்பிள் "... என்று கூறியவன்,
" இனி நீ தாராளமாக வெளியில சுத்தலாம் ஆனா உன் கூட நம்ம கார்ட்ஸ் இருப்பாங்க".. என்று கூறி அவளுக்கும் ஒரு செக் வைத்து விட்டான்.. அன்றிலிருந்து தன் அண்ணனை சுத்தமாக வெறுத்து கொண்டு இருக்கிறாள் மியா..
வீட்டு சிறையில் மொத்த குடும்பத்தையும் கடம்பன் வைத்திருக்க இந்த ஆறு மாத காலமாக அவன் எங்கே இருக்கிறான் என அவளுக்கு தெரியவில்லை மேலும் பிரதீஷிடமிருந்து ஒரு போன் இல்லை மெசேஜ் இல்லை இவள் தலை கீழாக நின்றால் கூட அவனை பற்றிய சிறு விஷயத்தை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை..
அப்படி இருக்க இன்று அவனாகவே வேறு எண்ணில் இருந்து மெசேஜ் செய்யவும் அவள் ஒரு சந்தோஷம் தாங்க முடியவில்லை ..
"ஏய் எப்படிடா மெசேஜ் பண்ற?? செக்யூரிட்டி சிஸ்டம்ல அவன் உன்னை கேட்ச் பண்ணிட்டானா ?? என்ன செய்யறது ".. என்று கேட்க ,
பிரதீஷோ, " நான் உனக்கு மெசேஜ் பண்ணும் போது அது ஹேக் பண்ண முடியாதபடி நான் புரோடெக்ட் பண்ணி வச்சிருக்கேன் அதனால எதுவுமே பண்ண முடியாது இதை செய்யத் தான் ஆறு மாசம் சமயம் எடுத்துக்கிட்டேன் இனி நாம தைரியமா மெசேஜ் பண்ணலாம்..நான் மெசேஜ் பண்ணும் போது ஜாமர் மூலமா ஹாக் ஆகிடும் சோ யாராலையும் என்னோட நம்பரை ட்ரேஸ் பண்ண முடியாது ".. என்று கூற,
என்ன தான் பிரதீஷ் ஒரு அப்பாவியாக இருந்தாலும் அவனது மூளையோ வேறு லெவலாக இருந்தது ..அவன் கூறியதை கேட்ட பின் தான் மியாவிற்கு சற்று ஆசுவாசமாக போக எப்போதும் போனும் கையுமாக திரிந்தாள்..
ஆரபிக்கு முதல் பரிசோதனை செய்ய அவன் கூறியது போல இரட்டை குழந்தைகளை தான் அவள் சுமந்து கொண்டிருந்தாள்..அதை மருத்துவர் கூற அவளோ அவனை பார்க்க அவனோ அவளை பார்த்து மென்மையாக சிரித்து, " பசங்க தானே டாக்டர் ??"...என்று கூற அவரும் ஆமாம் என்று கூறி விட்டு சென்றார்..
இதற்கிடையே கடம்பனிடம் மீண்டும் பேச்சுவார்த்தை செய்ய கடம்பனை போனில் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தார் களங்கண்டான்..
அவனோ அவரது போனை பார்த்தாலும் பார்க்காதது போல இருந்தவன் , "என்ன என்னோட உயிரை என் கிட்ட இருந்து எடுத்துட்டு உன்னோட பொண்ணுனா மட்டும் உனக்கு இனிக்குதா ??"... என்று நினைத்தவன் மீண்டும் தன் நெஞ்சில் வன்மத்தை விதைத்து கொண்டான் அதில் பாவம் அவனிடம் சிக்கி சிதறியது என்னவோ ஆரபி மட்டுமே..
மான்ஸ்டர் வருவான்..
