மான்ஸ்டர் 21
அத்தியாயம் : 21
மான்ஸ்டரும் மான்விழியும்
இரண்டு நாட்களுக்கு பிறகு அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதை அறிந்த தாமரை விழியாள் மற்றும் இலந்தரையர் கடம்பனின் பேலசிற்கு அவனையும் அவளையும் காண வந்து இருந்தனர்...
ஆரபியோ அவளது தந்தையை அவன் கொன்று விடுவேன் என்று கூறி இருந்தால் கூட அவனிடம் பணிந்து போயிருக்க மாட்டாள் ஆனால் அவனோ அவளது நண்பர்களை நோட்டம் விட்டுக்கொண்டு இருக்க , அதை எண்ணியவள் அவனுக்கு பணிந்து போக முயன்றும் முடியாமலும் தத்தளித்துக்கொண்டிருந்தாள்..
அவளுள் அவன் மீது தாங்கொன்னா வெறுப்பு சுழன்று கொண்டிருக்க தன் நண்பர்களை ஏதாவது செய்து விடுவேன் என கூறி மிரட்டி கொண்டிருப்பவனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவளுள் கிளர்த்து கொண்டிருந்தது..அதனால் அவனது முகத்தையே காண பிடிக்காத அவள் அவர்களது அறையே கதி என்று கிடக்க துவங்கினாள்...
இதில் வேறு எப்பொழுதும் வராத மாமியாரும் அவனது தாய் மாமாவும் வர பணியாள் வந்து, " மேடம் சாரோட அம்மாவும் ,மாமாவும் வந்திருக்காங்க..உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க"... என்று கூற ,
அதை கேட்ட அவளோ, "அதுக்கு நான் என்ன பண்ணனும்..எழுந்து நிற்கணுமா???"... என்று சூடாக பதிலளித்தாள்...
அந்தப் பணி பெண்ணோ, என்ன சொல்வது என்று புரியாமல், " மேடம் அவங்க வந்து இருக்காங்க நான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்"... என்று தயங்கித் தயங்கி உளற ,
அவளோ அவளது பதிலில் மேலும் சூடாகி, " அதான் சொல்லிட்டல்ல கிளம்பு "..என்று கூறியவள் படுக்கையில் இருந்து எழுந்து நடைபழக துவங்கினாள்...
"நாம் தேடிப் போகும் போது மட்டும் வராதவங்க இப்ப மட்டும் தேடி வந்திருக்காங்க எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம்..பெத்தா மட்டும் போதாது பசங்களுக்கு எது சரி எது தப்புன்னு சொல்லி கொடுக்க வேணாமா?? அது தான் இப்படி வளர்ந்து நிற்கிறான் ராட்சசன் "...என்று முணுமுணுத்துக் கொண்டே பால்கனிக்கு சென்றவள் தூரே தெரியும் கடல் தீரத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்...
அவளுக்கு அவர்களை காண பிடிக்கவில்லை அவன் சார்ந்த எதையும் நாட பிடிக்கவில்லை மொத்தத்தில் அவன் மீது உச்சகட்ட வெறுப்பில் இருந்தாள்..
காத்திருந்து காத்திருந்து அவள் வரும் சுவடே இல்லை ..தன் மகனது வீடே என்றாலும் அவளை தேடி வந்தவர்களுக்கு ஆரபியாக அவர்களை காண வராத போது அவர்களே சென்று அவளை பார்ப்பது சரியல்ல என்று அங்கேயே காத்து இருந்தனர்..
இலந்தரையரோ தன் தங்கையிடம், " நாம கிளம்பலாம் இங்கேயிருந்து அவமானப்பட எனக்கு விருப்பம் இல்லை "...என்று கூற தாமரை விழியாளுக்கு தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதற்கிணங்க அவருக்கு ஆரபியை காண துளியும் விருப்பம் இல்லை என்றாலும் அவள் வயிற்றில் உதித்திருக்கும் இவர்களின் குலக்கொழுந்து இந்த நாட்டின் அடுத்த வாரிசை சுமக்கும் அவளது மணி வயிற்றை காண ஆவலுடன் வந்திருந்தார்...
அதனால், " கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம் அண்ணா"... என்று கூற அவரோ, " நாம வந்து இரண்டு மணி நேரம் ஆச்சு தாமரை இன்னும் வரல அவளுக்கு வர விருப்பம் இல்லைன்னு தானே அர்த்தம் எதற்காக நாம எதுக்கு இங்க காத்திருக்கணும்.. நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அதை எடுத்துகனுமா??" என்று கேட்க,
தாமரையோ மென்மையாக சிரித்து, " அண்ணா இதை விட அவமானங்கள் எல்லாம் பெத்த பையன் கிட்ட இருந்து பார்த்தாச்சு இதெல்லாம் புதுசு இல்லையே".. என்று கூற அந்த நேரம் பார்த்து கடம்பன் வீட்டுக்குள் நுழைந்தான்... தாயும் , தாய்மாமனும் பேசிக்கொண்டிருப்பது அவனது செவியில் அழகாக விழவும் செய்தது..
முதலில் இவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்தும் கண்டு கொள்ளாதவன் போல நேராக மாடி ஏறினான்..அதை பார்த்த தாமரை தன் அண்ணனை பார்த்து சிரித்து, " பாருங்க நம்மளோடதே இப்படி தான் அப்புறம் எப்படி இதை எல்லாம் அந்த பொண்ணு கிட்ட எதிர்பார்க்கிறது ?? ".. என்று கேட்க இலந்தரையரோ மௌனம் ஆனார்..
அவன் எதிர்பார்த்ததை போல கடல் தீரத்தை அவள் வெறித்து கொண்டிருக்க, காலை உணவுக்குப் பின் அவள் குடிக்க வேண்டிய ஜூஸ் அப்படியே மேசையில் அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தது...
அதற்கு பக்கத்தில் மருந்துகளும் வைக்கப்பட்டிருக்க அதையும் அவள் உட்கொள்ளாமல் இருந்தாள் ..அதைக் கண்டவனுக்கு ஆத்திரம் கூட, அழுத்தமான காலடியோசையோடு நடந்து வர அவனது அழுத்தமான காலடி ஓசையையும் அவனது வாசத்தையும் வைத்தே அவன் வந்து விட்டான் என திரும்பாமலேயே கணித்த ஆரபி அப்படியே சிலைபோல நின்று கொண்டிருந்தாள் அவனோ வானளவு ஆத்திரத்துடன் வந்தவன் அவள் அருகே வந்ததும் அவளது எழில் அவனை மயக்க பின்னாலிருந்து அவளை இறுக்கமாக அணைத்தவன் அவள் பரந்த முதுகில் ஒரு முத்தத்தை வைத்து கொண்டே , "என்ன எனக்கு போட்டியா?? மாறலாம்ன்னு நினைப்பா ?? "..என்று அவளது இந்த கோபத்தை சுட்டி காட்டி கூற
அவளோ, "உன்கிட்ட என்னோட கோபத்தை காட்ட முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் எனக்கு இன்னும் கோவம் இருக்கிறதையும் உனக்கு புரிய வைக்கணும் அதுக்கு தான் இப்படி செய்யறேன் "..என்று அவனிடம் இருந்து விலகிக் கொண்டே கூற,
அவள் திமிரும் பொழுது அவளது தோள்பட்டை அவனது உதட்டில் பட அதில் ஒரு முத்தத்தை வைத்தவன் மெல்ல அவளது வயிற்றில் இருந்த கையை மேலே கொண்டு சென்றான்..
அவனது விரல்களின் நாட்டியத்தை ஏற்கனவே புரிந்தவள் ஆயிற்றே அனுபவித்தவலும் ஆயிற்றே.. அவளது உடல் அவள் பேச்சை கேட்காமலேயே கூச அவனது கோலத்திற்கு ஏதுவாக இவளது உடலும் அவனுடன் கூட்டு சேர்ந்து அபிநயம் புரிய தன்னை எண்ணியே நொந்தவள் அவளின் அவஸ்தையை ரசித்துக்கொண்டே அவனது கை அவளது வயிற்றில் இருந்து மேல் நோக்கி போக, அவளோ திமிறினாள்..
"கீழ அம்மா வந்து ரொம்ப நேரம் ஆச்சு நீ பார்க்கலையா???"... என்று கேட்டுக்கொண்டே அவளது காது மடலில் அவனது உதட்டினால் கவி பாடிக் கொண்டிருந்தான்..
அவனது அழுத்தமான மூச்சுக்காற்று அவளுக்கு குறுகுறுப்பை உண்டாக்க இருந்தாலும் தன் உடலை அடக்க பெரும்பாடுப்பட்டு அடக்க முயன்று தோற்று அந்த கோபத்தை அவனிடம் காட்டியே ஆக வேண்டும் என நினைத்தவள், " எனக்கு நீ சார்ந்த, உன் சம்பந்தமான யாரையும் பார்க்க விருப்பமில்லை"... என்று கூற,
அவனோ, " ஓ ஹோ " என்று மட்டும் கூறியவன், அவளிடம் மேலும் அத்துமீற எண்ணியவன், மெல்ல அவளது உடலில் கோலமிடும் அவனது கைகள் அவள் வயிற்றில் இறக்கி , "அப்போ இதையும் பார்க்க விருப்பம் இல்லையா???"... என்று கேட்க ,
அவளோ அவன் கூறியதில் மேலும் கோபம் கொண்டு , "சுமக்கிறதையே நான் பாவமா தான் நெனைக்கிறேன்... எனக்கு இதை சுமப்பதில் பாரம் தான் அதிகம்... உன் கரு என் வயித்துல வளரது கூட எனக்கு விருப்பமில்லை...அது குழந்தை கூட கிடையாது..சதை பிண்டமா தான் எனக்கு தோணுது..எப்போடா இந்த பாரம் எனக்கு போகும்னு தான் எனக்கு தோணுது"... என்று அவனை வருத்த வேண்டும் வார்த்தையால் அவனை சூறையாட வேண்டும் என கருதியே வார்த்தையின் வீரியம் புரியாமல் அவள் கூற,
அதை கேட்ட அவனது கைகள் ஒரு நொடி விறைத்து..ஆனாலும் அவனது ஒற்றை புருவத்தை தூக்கியவனோ, " ரொம்ப சந்தோஷம் இதத்தான் நான் எதிர்பார்த்தேன் எங்கே குழந்தைக்கு உரிமை கொண்டாடி வந்துடுவியோன்னு நினைச்சேன்.. அப்போ நீ வர மாட்ட போல ரொம்ப சந்தோஷம் ..அப்புறம் என்ன சொன்ன?? சதை பிண்டம்னா இனி ஒரு தடவை உன் வாயில இந்த வார்த்தை வர கூடாது.. அப்படி அவங்க சதை பிண்டமா போனா மறுபடியும் அவங்களை உருவாக்க அதுவும் உன் வயித்துக்குள்ளயே உருவாக்க எனக்கு தெரியும் அதுனால எது வசதின்னு நீயே முடிவு பண்ணிக்கோ.
என்னோட இரண்டு குழந்தைகளையும் பத்திரமா பார்த்துக்கோ "...என்று கூற ,
அவளோ இரண்டா என சந்தேகமாக கூற அவனோ மெல்ல இதழ் பிரித்து, "ஆமாம் இரண்டு தான் இரண்டுமே பசங்க கவனம் தேவை ".. என்று கூற
அவளோ அவனது பதிலில் நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் கூடவே அவன் திரும்ப அந்த வார்த்தையை அவன் வாயால் கூறும் போது தான் அதன் வீரியம் புரிந்தது இருந்தாலும் அவளுக்கு தான் அவனை பிடிக்கவில்லையே என்ன செய்வது என மனதை தேற்றி கொண்டாலும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு அந்த நேரம் விளங்கவில்லை ..
என்ன தான் அவன் மீது கோபம் கொண்டிருந்தாலும் கோபத்தில் அவள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் மீதும் அவள் தகாத வார்த்தை கூறி இருந்தாலும் வயிற்றில் சுமக்கும் தாய் அல்லவா அவளுக்கு அந்த பாசம் இல்லாமல் போகாது..
