Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 20

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 20

மோதியவளை இரும்பு பிடியாக அணைத்து அவன் அவளது காதில், "எனக்கு உன் மேல என்ன உரிமைன்னு தானே கேட்ட?? உனக்கும் எனக்கும் என்ன பந்தம் நமக்கு இடையில் இருக்கிற உறவுக்கு என்ன பெயர்ன்னு சொல்லுது உன் கழுத்தில் பார் ".. என்று அவன் கூற,

அவர்களுக்கு இடையே அவன் அவளது கழுத்தில் கட்டிய தாலி இடையில் நின்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.... அதை கண்டவள் முகத்தை திருப்பிக் கொள்ள அவனோ, " இப்பவும் சொல்றேன் இது தான் நிஜம் இது மட்டும் தான் நிஜம் அதனால இந்த காதுல பூ சுத்துற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் புரியுதா?? நான் எதை சொல்றேன்னு உனக்கு தெரியும்... புரியாட்டி தெளிவா சொல்றேன்..

என் அண்ணனை உன் அப்பன் கொன்னு இருக்கான் அதுக்கு உன் குடும்பத்தை அழிக்கறது தான் என்னோட வேலை..இதுல நீ கொஞ்ச நேரம் முன்ன பேசுனியே நியாயம் நீதி நேர்மை எல்லாம் அது எல்லாம் எனக்கு தெரியாது அதற்கு எல்லாம் அப்பாற்பட்டவன் தான் நான்.. என்னமோ ஒரு மோதிரத்தை காட்டி கல்யாணம் ஆச்சுன்னு சொன்னியே இந்த தாலியை விட அந்த மோதிரம் பெரிசா இல்லை?? உன் கழுத்தில் இந்த உலகத்தார் முன்னாடி நான் கட்டின தாலி பெரிசா??? என்று கேட்க,

அவனது கேள்வியில் அவளது கையில் பிடிமானத்துக்கு பிடித்து இருந்த பெட்டி அவள் கையில் இருந்து தவறி கீழே விழுந்தது..அந்த பெட்டி வேறு திறந்து கொள்ள அதில் அவள் வைத்திருந்த பொக்கிஷமான அவளும் அவனது அண்ணனும் எடுத்த புகைப்படம் வெளியே எட்டி பார்த்து சிரித்தது...

அதை கவனித்த கடம்பனோ, உனக்கு திருமணம் ஆனதுக்கு யார் சாட்சி, அப்படியே சாட்சி இருந்தாலும் நீ சொன்ன மாதிரி இது கல்யாணமே ஆனாலும் என் அண்ணன் இறந்ததுக்கு பிறகு நீ யார் உன்னை இந்த உலகத்தில என்ன சொல்லுவாங்க?? எப்படி பார்த்தாலும் உன் பாஷையில் மறு வாழ்வே என்றாலும் இப்போ உனக்கு புருஷன் நான் தான் புரியுதா..."..என்று அவன் நீட்டி முழக்கி அவளுக்கு நான் தான் உனக்கு கணவன் என் அண்ணன் அல்ல என்பதை அவளிடம் விலக்கி கொண்டிருக்க,

அதை கேட்ட அவளோ என்ன சொல்கிறான் அவன் சொல்லும் விதத்தில் பார்த்தால் சரி தான் இருந்தாலும் எனக்கு என்று ஒரு மனம் இருக்கே என்று நெனைத்தவள், " அப்போ என் மனது அதை பத்தி உனக்கு கவலை இல்லையா ?? ".. என்று அவள் கேட்க,

"எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை "... என்று அவனிடம் பட்டென பதில் வந்தது...மேலும் அவன், " இனி இது மாதிரி ரூம் நாசம் செய்கிற வேலை எல்லாம் வேணாம் நீ என் கிட்ட நல்ல புள்ளையா இருந்தா என் காரியம் முடிஞ்சதும் உன்னை விட்டுடுவேன் அப்படி இல்லை அப்படின்னா நீ இங்கு என்ன எல்லாம் எனக்கு எதிரா செய்றயோ அதற்கான தண்டனை உனக்கு கண்டிப்பா கிடைக்கும் புரியுதா?? ".. என்று அவன் அவளை எச்சரித்து கூற,

அவளோ அவனை பேயறைந்தது போல பார்க்க இப்போதும் அவனது கைவளைக்குள் தான் அவள் இருக்க அவனுக்கு அவளது அருகாமை அந்நேரம் தேவைப்பட்டதோ என்னவோ அவன் மனதில் காமம் கரைபுரண்டு ஓட அவளது இதழை மென்மையாக கவ்வி இழுத்தான்..

அவளோ தீசுட்டது போல அவனிடமிருந்து விலக முற்பட அவனது பிடி வன்மையாக மாறியது.. நொடிப்பொழுதில் அவளது சேலையின் ஊக்கை அவிழ்த்து விட்டவன் கை அவளது வெண்ணிற இடையில் அழுத்தி பிடித்து இருந்தது ஆனால் அந்த அழுத்தத்திலும் ஒரு மென்மை கலந்து இருந்தது..அது அவனது குழந்தைக்கான பாதுகாப்பாக கூட இருக்கலாம்..

பின் அவளது முடி கற்றைகளை ஒதுக்கி விட்டவன் அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்து, " நான் சொல்ல வரதை நீ கேட்கவே மாட்டேங்கிற அதனால எனக்கான உரிமை என்ன உன்கிட்ட இருக்குனு உனக்கு காட்ட வேண்டிய கடமை எனக்கு இருக்கு காட்டவா??".. என்று கூற ,

அவளோ , "நான் அவ்வளவு சொல்லியும் நீ என்கிட்ட இப்படி நடந்துக்கறியே உனக்கு வெக்கமா இல்லையா???..நீ ஆயிரம் சொல்லுவ ஆனால் என் மனதில் என்னோட எழில் தான் இருக்கான் "... என்று அவனை கோபப்படுத்த வேண்டும் என்று கருதி அவள் கூற,

அவனோ , "நான் எதுக்குடி டி வெட்கப்படனும்..என் முன்னாடி உன் மனசில வேறொருத்தன் இருக்கான்னு சொல்ற நீ தான் வெட்கப்படனும்.. எனக்கு தேவை நீ இல்ல உன் வயிற்றில் வளரும் குழந்தை.. நீ ஏதாவது செய்து குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஆச்சு.. நீ சொன்னியே என்னை கொன்னு இருக்கலாமே கொன்னு இருக்கலாமே ன்னு சொல்வியே அதை செஞ்சிடுவேன்...எஸ் ஆனா சாக போறது நீ இல்லை உன் பிரண்ட்ஸ் "...என்று கூறி அவனது மொபைலில் ஒரு வீடியோவை அவளுக்கு போட்டு காட்டினான்..

அதில் லாவண்யாவும் ரிஷியும் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதுபோல ஒரு வீடியோ இருக்க அந்த வீடியோவை பார்த்த அவள் தன் நண்பர்கள் கூறியும் தான் இங்கு வந்த மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள்..மேலும் தன் நண்பர்களின் வீடியோ இவர்களிடம் என்றால் இவனின் அடுத்த இலக்கு அவர்களா என நினைத்து அவனை திகைத்து விழிக்க

அதைப்பார்த்த அவனோ, " இங்கே இருந்துட்டே எப்படி இதை எல்லாம் பண்றேன்னு பார்க்கிறாயா?? நான் எங்க இருந்தாலும் உலகத்தில் என்ன நடக்குதுன்னு என் கண்ணுக்கு தெரியும்!! அதனால என்கிட்ட வம்பு பண்ணாத... உன்னால இவங்க ரெண்டு பேரும் உயிரையும் தேவையில்லாம எடுக்க வேண்டிய சூழ்நிலையை என்னை நீ ஆளாக்கி விடாதே "...என்று கூற,

அவளோ அவன் கூறியதில் பயந்து போய் விழிக்க , அவளது விரிந்த அந்த முட்டை கண்ணின் மீது தன் இதழ்களைப் பதித்தவன் மீண்டும் வாய்பிளந்த அவளது உதட்டை இழுத்து வன்மையாக இதழ் முத்தத்தை பதித்து விட்டு சென்றான்...அவளோ இவனிடம் இப்படியும் மாட்டி கொண்டோமே என நொந்து கொண்டாள் ஆரபி...

மான்ஸ்டர் வருவான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top