மான்ஸ்டர் 19
அத்தியாயம் : 19
மான்ஸ்டரும் மான்விழியும்
அவளால் எதிரே உள்ளவன் கொடுத்த அழுத்தம் தாங்க முடியாமல் அவனை அடித்த கையோடு கண்கள் இருட்டிக்கொண்டு வர அவன் மார்பிலேயே சரிந்தாள் ஆரபி..
அதன் பிறகு அவளுக்கு என்ன நடந்தது என்று நினைவு இல்லை..எங்கு இருக்கிறாள் என அவளுக்கு தெரியவில்லை..ஏதோ படுக்கையில் அவள் படுத்து இருப்பதாக அவள் மூளை அவளுக்கு கூறியது..யார் அவளை எடுத்து வந்து படுக்க வைத்தனர் என தெரியவில்லை...
ஆரபி இமையை பிரிக்க முடியாமல் பிரித்தாள்... அவளால் அவளது தலையை அசைக்க கூட முடியவில்லை அவளது கை கால்கள் வலுவிழந்தது போல இருந்தன.. கண்களை சுழல விட்டவள் தான் எங்கே இருக்கிறோம் என தேட அவள் மிகப் பாதுகாப்பாக அவர்களது படுக்கை அறையில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்தாள்...
ஆரபி கண்விழித்து பார்த்த போது அவள் அந்த அறையையும் அந்த படுக்கையையும் காணவும் ஆத்திரம் தாளவில்லை... இங்கே தானே என்னை இவன் சூறையாடினான் என நினைக்கும் பொழுது எனக்கு ஆத்திரம் அவளுக்கு கிளர்த்து கொண்டு எழ வேகமாக அந்த படுக்கையிலிருந்து தீ சுட்டது போல எழுந்தாள் ஆரபி..
அவள் கண்விழிப்பதற்கு ஏதுவாக காத்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸும் ஒரு பணிப்பெண்ணும் அவளது பதட்டத்தை கண்டு, "மேடம் மெதுவா நீங்க இந்த நேரத்தில் இப்படி எல்லாம் எந்திரிக்க கூடாது மேம் ".. என்று கூற,
அதை கேட்ட அவளுக்கு எதற்காக அவர்கள் கூறுகிறார்கள் என்பதை அறிந்தவளுக்கு ஆத்திரம் சுடர் விட்டு எரிய வெறி கொண்ட வேங்கை போல எழுந்தவள், " கெட் அவுட் என் கண் முன்னாடி நிற்காதீங்க "...என்று கத்தினாள் ஆரபி.....
அந்த பணிப்பெண்கள் இருவரும் அவள் போட்ட சத்தத்தில் பயந்து வெளியேற அவளோ ஆத்திரம் அடங்கும் வரை அந்த அறையை அவளால் முடிந்த வரை நாசம் செய்தாள்...
அந்த பரந்து விரிந்த அந்த அறையில் அங்கே ஆள் உயர முகம் பார்க்கும் கண்ணாடி இருக்க அந்த கண்ணாடி அருகே சென்றவள் அதில் தன் முகத்தை பார்க்க அவளுக்கு அருவருப்பாக இருந்தது...அப்படியே அவளது பார்வை அவளது வயிற்றில் இறங்க கடம்பனின் முகம் தான் நியாபகத்திற்கு வந்து போனது..
ஆத்திரம் தாளாமல் கண்ணாடிக்கு அருகில் சென்றவள் அதன் அருகில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பூச்சாடியை எடுத்தவள் ஓங்கி அந்த கண்ணாடியை உடைத்து எறிந்தாள்...அவனை இது போல அடித்து நொறுக்க முடியாதவள் முயன்ற வரை அவன் உபயோகிக்கும் பொருட்களை எல்லாம் நாசம் செய்தாள்...
ஆம் அவளுக்கு அவளது முகத்தையே பார்ப்பதற்கே பிடிக்கவில்லை அவளது கண்களை மூடி கொண்டாள்.. வெளிச்சம் இல்லாத இடத்திற்கு செல்ல அவள் மனம் விரும்பியது...கண்களை மூடினாலே அவளுக்கு தாலி கட்டியவன் தான் அவள் கண்களுக்கு தெரிகிறான்.. அப்படி இருக்க மனதில் ஒருத்தனை வைத்து விட்டு இவனுக்கு முந்தி விரித்து விட்டேனே என நினைத்தவளுக்கு கண்ணீர் கூட வர வில்லை மாறாக ஏதாவது செய்ய வேண்டும் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று தான் நினைத்தாள்..
வேகமாக என்ன செய்யலாம் என யோசித்து அவளது பெட்டியை தேட அது அங்கு இல்லை அவர்களது அறைக்கு அருகில் உள்ள உடை மாற்றும் அறையில் தேட அது அங்கு அவளது பெட்டி இருந்தது.. அதை எடுத்து அவள் வேகமாக துணிமணிகளை எல்லாம் அலமாரியில் இருந்து எடுத்தவள் அந்த பெட்டியை திறக்க அதில் கடம்பனின் அண்ணன் கடம்பெழிலோன் (எழில்) னின் புகைப்படம் இருந்தது... அந்த புகைப்படத்தில் அவளும் எழிலும் சேர்ந்து எடுத்த புகைப்படம் அதனால் அதை எப்போதும் அவளுடனே வைத்திருப்பாள்..
இந்த புகைப்படத்தை அவள் பொக்கிஷமாக பாதுகாத்து வர அதை விட அவளது உயிராக அவன் அவளுக்கு அணிவித்த மோதிரத்தை பார்க்க அவளது விரலில் அந்த மோதிரம் இல்லை..அதை பார்த்த அவளோ பதறி துடித்தாள்..
"எங்கே போச்சு காணோமே" என துடித்தவள் எங்கே போயிருக்கும் என அந்த அறை முழுவதும் தேட அந்த மோதிரம் எங்கேயும் இல்லை தேடித் தேடி அவளது கண்கள் சோர்ந்து தான் போனது பின் தான் மிச்சம்...
இதெல்லாம் அவனுடைய வேலையாகத்தான் இருக்கும் நொடி பொழுதில் யூகித்தவள் அவன் ஆழ கால விஷம் என்பதை உணர்ந்தவளுக்கு இங்கிருந்து செல்ல வேண்டும் என முடிவெடுத்தாள்..
என்ன ஆனாலும் சரி இங்கே இருக்கப் போவதில்லை என முடிவெடுத்து தன் பெட்டியை எடுத்துக்கொண்டு அவள் கிளம்பும் நேரம் அவள் இருந்த அறை திறக்கப்பட்டது ...
அவளோ சட்டென்று யாரென பார்க்க அந்த அறையின் வாயிலை அடைத்துக்கொண்டு கைகளைக் கட்டிக்கொண்டு கதவு ஓரத்தில் சாய்ந்து அவளது செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்தான் கடம்பன்...
அவனுக்கு அவள் எழுந்த விஷயம் தெரிந்ததா தெரிவிக்கப்பட்டதா என தெரியவில்லை ஆனால் அவன் மிக சரியான நேரத்தில் வந்திருந்தான்... அவளுக்கு அவனைக் கண்டதும் ஆத்திரம் பீறிட, " எங்கே என் மோதிரம்??".. என்று வினவ,
அவனோ அவளது கேள்விக்கு பதிலளிக்காமல் அவளை பார்த்துக்கொண்டே மெல்ல தன் கைகளை தூக்கி நெட்டி முறித்து அவன் அவளை தீர்க்கமாக பார்த்து அறைக்குள் வந்தான்...அவன் ஏதோ செய்ய போகிறான் ஆரபியின் மனம் கூற துவங்கியது..
அவனுடன் இருந்த இந்த இரண்டு மாதத்தில் அவனுடைய இந்த அழுத்தமான பார்வை அவள் என்னவோ செய்ய வேகமாக பெட்டியை பலத்திற்கு பிடித்தவளின் மனதில் சிறு துளி பயம் இல்லையென்றாலும் அவள் கால்கள் பின்னோக்கி செல்ல அவனோ அவளது ஒவ்வொரு அசைவையும் பார்வையிட்டு கொண்டே சாவதானமாக அந்த அறையை சுற்றி பார்த்தான்..
பின் பட்டென கதவை காலால் எட்டி உதைக்க கதவு வேகமாக அடைத்து கொண்டது.." எங்க கிளம்பிட்ட???"... என்று கேட்க ,
அவளோ முகத்தைத் திருப்பிக் கொண்டு அவனுக்கு பதில் அளிக்காமல் இருந்தாள் அவனோ அவளை அழுத்தமாக பார்க்க அவளும் அதே அழுத்தத்துடன், " என்னோட மோதிரம் எங்கே?? "... என்று அவள் கேட்க,
அவனோ அவளது கேள்விக்கு பதில் அளிக்காமல் மெல்ல சாவகாசமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவள் அருகில் நெருங்கினான்.. அவளோ அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் இவள் பின்னோக்கி செல்ல அவனும் முன்னோக்கி சென்று ஒரே இடத்தில் அவள் அணிந்திருந்த புடவையின் முந்தானையை பிடித்து இழுக்க,
அவளோ இதை அவனிடம் எதிர்பார்க்காதவள், " சீ கையை எடு யாரை கேட்டு என் மேல கைய வைக்கிற?? நான் அவ்வளவு சொல்லியும் என் மேல கையை வைக்க உனக்கு என்ன தைரியம் இருக்கும் ???..எந்த உரிமையில் உன்னோட கை என் மேல படுது ??".. என்று அவள் திமிறிக் கொண்டே அவனிடம் இருந்து அவள் விலக முற்பட,
அவனோ மெல்ல அவளது முந்தானையை இழுத்துக் கொண்டே அவளருகே வந்தவன் அப்படியே அவளது ஒரு கையை பிடித்தவன் திமிறி கொண்டிருந்தவளின் கைகளை நொடி பொழுதில் அடக்கியவன் அவனது இரு விரல்களாலே கோலமிட்டுக் கொண்டே கைகளில் இருந்து அவளது தோள்பட்டை வரை இருந்து வந்தவனின் செய்கை அவளுக்கு கூச்சத்தை கொடுக்க,
அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அப்படியே அவளது கழுத்தில் அவன் அணிவித்த பொன்மஞ்சள் தாலியை சுட்டிக்காட்டி அவளது கையை பிடித்து இழுக்க அவளோ அவன் மீதே நிலை இல்லாமல் மோதினாள்..
