Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 18

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 18

அதிலும் அவன் கூறியதுபோல இவன் தான் உனது காதலன் என்று கூறியது மட்டும் தெள்ளத் தெளிவாக கேட்க அந்த இடத்திலேயே அவள் உடைந்து போனாள்..ஆம் அவளது காதல் இறந்து போனது என்ற செய்தி அவளை பகுதி தின்றது என்றால் காதலன் என நினைத்து அவனுடைய அண்ணனை மனம் செய்திருப்பது அதை விட அவளை மேலும் தின்று அவளை கொன்றது...

அவளது மனம் முழுவதும் வெறுத்துப்போன நிலை தான் இவன் என்ன தான் பழிவாங்க அவளை பகடைக்காயாக உபயோகப்படுத்தினாலும் அந்த நொடி அவளுக்கு அவன் மீது கோபம் வரவில்லை அது நினைவே வராமல் ,

தன் மீது தான் அவளுக்கு சுய ஆத்திரம் வந்தது மனதில் தன் காதலனை எண்ணி இவனுடன் தன் உடலையும் உயிரையும் மேலான கற்பையும் பகிர்ந்து இவனுடன் ஒரு வேசி வாழ்க்கை வாழ்ந்து விட்டேனே என நொந்தவளின் மூச்சு திணற அதை கண்டவன் வேகமாக அவளை இறக்கி விட்டான்..

அவன் இறக்கி விட்டதும் பொத்தென கீழே வீழ்ந்தாள் ஆரபி...அவளுக்கு அவளது கழுத்து நொறுங்கி போனது போன்ற வலியை கொடுத்தாலும் அதை விட அவள் மனது நொறுங்கும் வலியை அவள் உணர அதை கண்டு ரசித்தான் அந்த மான்ஸ்டர்..

இது தான் பிறர் துன்பத்தில் இன்பம் காண்பதோ ..இது தான் பழி வெறி என்பதோ?? இதற்கு தானோ அவளுடன் அவன் கூடினான்..இதற்கு தானோ இந்த திருமணம்?? அப்பன் கொன்றான் என அவர் பெற்ற மகளை தண்டிப்பது சரியா ?? நீதி , நியாயம் கிலோ என்ன விலை என்று கேட்பவனிடம் எப்படி நியாய தர்மத்தை பற்றி பேச இயலும்..அவனோ ஆரபியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து கொண்டிருக்க,

கீழே விழுந்தவள் , "எழில் "..என அந்த சுரங்கம் முழுவதும் கேட்கும் அளவுக்கு கதறினாள்..."நீ செத்துட்டியா இது தான் நீ எனக்கு தந்த சப்ரைஸ் ஆஹ்?? இது தான் நீ விட்டுவிட்டு போன உன் காதலா நான் உன் காதலை கொன்னுட்டேன் எழில் கொன்னுட்டேன்...இவன் தான் என்னுடைய எழில்ன்னு நினைச்சு ஒரு அர்க்கனுடன் என்னோட மொத்த காதலையும் பகிர்ந்து கொடுத்துட்டேனே " .. என்று அவள் கதறியவளுக்கு,

கடம்பெழிலோன்(எழில்) அவளுடைய காதலனை சட்டத்துக்குள் பார்க்க பார்க்க தாங்கொன்னா வலியை கொடுத்தது...கூடவே அவனை போன்ற உருவத்தை கொண்டு அவளுடைய வாழ்க்கையை சிதைத்தவனை பார்க்கும் போதே அவளுள் ஆத்திரம் சுடர் விட்டு எறிந்தது...

அவனை தீப்பார்வை பார்த்தவள் பொங்கி வழியும் கண்ணீரை துடைத்தவள் ஆத்திரத்துடன் எழுந்து அவனது சட்டையை பிடித்து, " ஏன்டா இப்படி பண்ணின?? ஏன் இப்படி பண்ணின?? அப்போ அவன் தான் என்னோட காதலனா சொல்லு சொல்லு "..என்று கேட்க,

தன் சட்டையை பிடித்து இருக்கும் அவளது ஆங்கார முகத்தை கண்டவன் மெல்ல அவளது பிடியிலிருந்து அவனது சட்டையை உருவி எடுத்தவன் அவளுக்கு பதிலே கூறாமல் அவளை பார்க்க அவனது விழியே கூறியது அது அவன் தான் என்று இருந்தாலும் , " ஆமாம் அவன் காதலிச்சது உன்னை தான் ".. என்றான் அப்போதும் அவள் எழிலை காதலித்தால் என்பது அவனது வாயில் இருந்து உதிர்க்கவே இல்லை..

அதை கேட்டவள் , "அப்ப நீ ஏன்டா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட ?? எதுக்கு இந்த நாடகம்?? இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல சொல்லு டா இதில் உனக்கு என்ன கிடைச்சது சொல்லு டா ".. என்று ஆரபி கதறி கேட்க ,

அவனோ அவளை பார்த்து இரக்கமே இல்லாமல், "அதெப்படி விட முடியும் களங்கண்டான் குடும்பத்தையே அழிக்கிறது தான் டி என்னோட குறிக்கோள்..அதுல உன்ன மட்டும் சும்மா விட முடியுமா?? என்ன இருந்தாலும் நீயும் ஒரு காரணம் தானே ...எப்படி இருந்தாலும் உன் அப்பன் சாவு என் கையில் தான் கூடவே உன் வாழ்க்கையும் "..என்று கடம்பன் ரசித்து கூற ,

அதைக் கேட்ட ஆரபியோ தன் தலையில் தானே அடித்து அடித்து அழுது அவனது காலடியிலேயே விழுந்து அழுதாள்..அப்போது கூட இரக்கமே இல்லாமல் அவன் அவளை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்..

அப்போது தான் அவளை பார்த்து பலரும் சொன்ன வரத்தைகள் அவளுக்கு தெளிவாக புரிந்தது... அப்போது எல்லாம் புரியாதது இப்போது பட்டதும் தெரிந்து விட்டதே என தன்னை தானே நொந்து கொண்டவள்,

"இதுக்கு நீ என்னை நீ கொன்றிருக்கலாம்".. என கூறியவள்," உயிரோடு என்னை கொன்னு அந்த ரத்தத்தில் உன் சகோதரனின் கல்லறையை சுத்தம் செய்து இருக்கலாம்.. இப்படி ஒரு தண்டனை எனக்கு நீ கொடுத்திருக்க வேண்டாம் அவன் செத்துட்டான் தெரிஞ்ச உடனே என்னோட உயிர் போயிடுச்சு.. இதுல மேலும் இந்த செத்த புணத்துக்கு மேல உன் பழி வெறியை வெச்சிருக்க வேணாம்..நீ இதை என்கிட்ட முதலிலேயே சொல்லி இருந்தால் நானே செத்து இருப்பேன்..என் உயிரை அவனுக்காக மாய்ச்சு இருப்பேன் சந்தோஷமா ".. என்று அவள் கூற ,

அதை கேட்ட அவனோ ஒரு நொடி அதிர்ந்தான் அவள் என்ன சொல்கிறாள் உண்மையாக தன் அண்ணனை ஒரு வேளை இவள் காதலித்து இருப்பாளோ என்று நெனைத்தவனின் கண் முன் அவளது தந்தை களங்கண்டான் நியாபகத்துக்கு வர,

உடனே அவன் மனம் மீண்டும் இறுகி, "அதெப்படி களங்கண்டான் குடும்பத்தை அவ்வளவு சீக்கிரம் விட நான் ஒன்னும் முட்டாள் இல்லை ".. என்று கூறியவன்,

மேலும் ஆவேசத்துடன், "உயிருக்கு உங்கப்பன் உணர்வுக்கு நீ இதை இரண்டையும் எடுத்துட்டு தான் நான் அடங்குவேன்".. என்று கூற ,

அவளோ அவன் கூறுவதை கேட்டு அழுது கரைந்து நிறைந்தவள், " நீ எல்லாம் மனுசனா எவ்வளவு கெட்ட எண்ணங்கள் உன் மனசுக்குள்ள நிறைஞ்சு இருக்கு..நீ ஆழகால விஷம் "... என்று கூற,

அவனும் விடாமல் , "யாரு விஷம் நானா??...உண்மை தான் நான் விஷத்தை விட கொடியவன் தான் நான் நல்லவன் எங்கேயும் சொன்னது இல்ல சொல்லவும் மாட்டேன் ".. என்று கூற

அவளோ, " எங்கப்பா அவனை கொன்னு இருந்தா அவரு கூட என்னையும் சேர்ந்து கொன்னு இருக்க வேண்டியது தானே அப்ப கூட நான் சந்தோஷமா செத்து போய் இருப்பேன்..ஆனால் நீ இப்படிப்பட்ட மிருகத்தனமான செயலை எனக்கு செய்வன்னு நான் நினைச்சு கூட பார்க்கல "...என்று கூறியவள்,

அவனை பார்த்து கொண்டே அவள் எப்பொழுதும் அணிந்திருக்கும் விரலில் உள்ள மோதிரத்தை காட்டி, " இது என்னன்னு தெரியுமா?? நானும் உன் அண்ணனும் கல்யாணம் பண்ணிக்கிட்ட மோதிரம்...நாங்க இரண்டு பேரும் ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க.. இப்ப புரியுதா நான் யாரு உனக்குன்னு??? "...என்று வெகுண்டு கூற,

அவனோ அவளை புரியாத பார்வை பார்க்க அவளோ , "உன் அண்ணன் இறந்திருந்தாலும் அவனுக்கு நான் மனைவி... அடுத்தவன் பொண்டாட்டிய தான் நீ அபகரித்து இருக்க ...அதுவும் உன் அண்ணனுடைய பொண்டாட்டியை..இந்த பழி வாங்கும் படலத்தை நீ உன் அண்ணன் கடம்பெழிலோனுக்கு நீ தரும் நீதியா எடுத்துக்கலாம் ஆனால் இது நீதி இல்லை அநீதி உன் அண்ணனுக்கு நீ செய்த அநீதி... நல்லது செய்கிறேன்னு நினைத்து அவனுக்கு நீ துரோகம் பண்ணிட்ட இதனால அவனோட ஆத்மா சாந்தி அடையும்ன்னு நீ நினைச்சுட்டு இருக்க சத்தியமா சாந்தி அடையாது... ஒரு நாளும் சாந்தி அடையாது "...என்று ஆத்திரத்தில் வெகுண்டு கூறியவளை அவன் என்ன சொல்கிறாள் என அவளுடைய கையையும் அவளது முகத்தையும் அவன் பார்க்க,

அவளோ அவன் மீதுள்ள ஆத்திரத்தை அடக்க முடியாமல் கடம்பன் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள் ஆரபி...

மான்ஸ்டர் வருவான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top