மான்ஸ்டர் 17
அத்தியாயம் : 17
மான்ஸ்டரும் மான்விழியும்
அந்த இடம் அரச குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட கல்லறைகள் போலும்..அதை கூட வெளியுலகம் அறியாத படி பூமிக்கு அடியில் ஒரு வீடு போன்ற அமைப்பில் உருவாக்கி இருந்தனர்..
அதில் அரச குடும்பத்தில் யார் எல்லாம் மரணமடைந்து இருக்கிறார்களோ.. அவர்களின் பெயர்கள் கொட்டை எழுத்தில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது..மேலும் அவர்களின் சித்திரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன..அதை எல்லாம் சுற்றி பார்த்து கொண்டிருந்தவளுக்கு தலையே இருட்டி கொண்டு வந்தது போல தோன்றியது...
"எழில் வாங்க ப்ளீஸ் போகலாம்".. என்று மீண்டும் பயத்தில் அழைக்க,
"இவ்வளவு தூரம் வந்திட்டு எழிலை பார்க்காமல் போனா எப்படி??".. என்று அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க
அவளோ புரியாமல் அவனை விழிக்க அவனோ அவளது கையை அழுத்தத்துடன் கிட்டத்தட்ட அவளை ஒரு அறைக்கு இழுத்து சென்றான் என்றே கூற வேண்டும்..
அதுவும் கல்லறை தான் ஆனால் அந்த கல்லறையை கண்டதும் அவள் காண்பது நிஜம் தானா என்பது போல அவளுக்கு தோன்றியது..ஆம் தன் கையை பிடித்து நிற்பவன் எதிரே மாட்டப்பட்டிருந்த படத்துக்குள் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவன் சட்டத்துக்குள் சிரித்த முகமாக இருக்க ஆரபியின் விழிகள் தன் அருகில் உள்ள அவனையும் அந்த படத்தையும் மாறி மாறி பார்த்தாள்..
அதிலும் அந்த படத்த்தில் இருப்பவன் அச்சு அசலாக இதோ தன் அருகில் நின்று கொண்டிருக்கிறானே அவனை போலவே இருக்க, என்ன இது மாயம் என்று அந்த கல்லறை முழுவதும் ஆவேசமாக சுற்றிப் பார்த்தாள் ஆரபி..
அதில் மரணமடைந்த பலரும் மரணமடைந்தவர்கள் என்றாலும் அதில் பெரும்பாலும் இரட்டையர்கள் தான்...
அதிலும் கடம்பனின் ஒத்த உருவத்தை பெற்ற அந்த படத்தில் இருப்பவனின் படத்துக்கு கீழ் கடம்பெழிலோன் என எழுதி அதற்கு கீழே எழில் என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது...
அதை கண்டவள் பேயறைந்தது போல கடம்பனை பார்த்து விழிக்க,
அவனோ அவளது ஒவ்வொரு அசைவையும் பார்த்தவன் விழிகள் ரத்தமென சிவந்து, " என்ன பாக்குற?? இது தான் நான் உனக்கு அளித்த பரிசு .. எப்படி இருக்கு !! "...என்று கசப்பான குரலில் கூறவும் ,
அவளுக்கு எங்கேயோ இடிப்பது போல இருந்தது...என்னவோ தானும் இந்த புதைகுழியில் மாட்டியது போன்ற உணர்வை அவளுக்கு கொடுத்தது..
அவளோ அவனை பார்த்து, " அப்போ அப்போ இது யாரு உங்க சகோதரனா?? .. எப்படி இறந்தாங்க அவங்க பேர் கடம்பெழிலோன்ன்னு போட்டு இருக்கு உங்க பெயரும் கடம்பன் தானே ".. என்று அவள் வினவ,
அவனோ இப்போதும் அவளது நடிப்பை பார்த்து கோபம் கொண்டவன், " என்ன டி நடிப்பா ரொம்ப நல்லா இருக்கு சரி பதில் சொல்றேன் உன் நடிப்புக்கு ஏத்த மாதிரி பதில் சொல்றேன் "...என்று கூறியவன், " ஆமாம் இது என் அண்ணன் தான் இறந்துட்டான் போதுமா..அப்புறம் என்ன கேட்ட பெயரா அவன் கடம்பெழிலோன் (எழில்) நான் கடம்பெழிலன்(எழில்) இப்போ விளங்குச்சா???".. என்று பாண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு தன் கோபத்தை அடக்கி கூற,
அவளோ , " அப்போ அவர் பெயருக்கு கீழே எழில்ன்னு எழுதி இருக்கு ".. என்று அப்போதும் புரிந்தும் புரியாமல் பாவம் மீண்டும் நம்பிக்கை இல்லாமல் அவள் வினவ,
அவனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை போலும், தன் அருகில் இருந்து தன்னையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவளின் சிகையை கற்றையாக பிடித்து இழுத்தவன், " என்ன டி என்கிட்டயே நடிக்கிறியா உன் அப்பனால தான் டி அவன் இறந்துட்டான்...விட்டா அவனையே தெரியாதுன்னு சொல்லுவ போல...என் எழிலை என்கிட்ட இருந்து பறிச்சிட்டியே டி...பாரு டி இவனை தான் நீ காதல்ன்னு ஒரு வலையில் விழ வெச்சது நீ என்றால் அவனை கொன்னது உன் அப்பா..நாங்க இரண்டு பேர் இப்போ நான் ஒருத்தன் மட்டும் தான் ஒரே ஒரு கடம்பன் தான் ஒரே ஒரு எழில் தான் எல்லாமே நான் தான்..இந்த கடம்பெழிலன் தான் எல்லாமே "...என்று கடம்பன் ஆவேசமாக கூற,
கடம்பனின் இந்த முகத்தை அவள் இதற்கு முன் இரு முறை பார்த்து இருந்தாலும் இந்த முகம் அதை விட ஆவேசமாக இருக்க பெண்ணவளோ அவன் அழுத்தமாக பிடித்திருக்கும் கற்றை முடியின் அழுத்தத்தில் வேதனையால் துடித்தவள்,
" நீ அவனுக்கு செஞ்ச தப்புக்கு தண்டனை இது தான் பரிசு " என்று கூறியவன், அப்போதும் ஆத்திரம் அடங்காமல் அவளது கழுத்தை பிடித்து அப்படியே தூக்க அவளோ அவனது செய்கையில் திகைக்க கொஞ்சம் கொஞ்சமாக அவளது கழுத்தை அழுத்தியவன் ,
"உன்னை என்னால இந்த நொடியே கொல்ல முடியும் ஆனால் செய்ய மாட்டேன் உனக்கு நான் தர கால அவகாசம் உன் வயித்துல இருக்கற எங்க பரம்பரை கரு என் கைக்கு வர வரைக்கும் தான்.. இதோ நீ காதலிச்சு ஏமாத்தி உன் அப்பனால கொல்லபப்ட்டவனுக்கு நான் கொடுக்கும் பரிசு அவன் நேசித்த பொண்ணு கையால ஒரு குழந்தை..எப்படி அவன் இறந்தானோ எதுக்காக அவன் இறந்தானோ அவ மூலமே அவனை இந்த உலகத்தில் மீண்டும் ஜெனிக்க வைக்க போறேன்..இப்போ புரியுதா நீ எதுக்கு இங்கே வந்திருக்கன்னு "..என்று கூற,
அவளுக்கு அவன் கூறிய எதுவும் கேட்கவில்லை.. அவன் என்ன கூற வருகிறான் என்றும் புரியவில்லை அவன் கை என்ற தூக்கு கயரில் தொங்கும் போது கூட அவளது பார்வை முழுவதும் சட்டத்தில் மாற்றப்பட்ட அந்த புகைப்படத்தின் மீதே நிலைத்திருந்தது..
