Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 16

இலந்தரையரின் மனதுக்குள்ளும் பல கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன.. முன்பெல்லாம் கடம்பனிடம் பல விஷயங்களை முன் வைக்கும் போது அதை எல்லாம் ஒன்று விடாமல் ஏற்றுக் கொண்டவன் இப்பொழுதெல்லாம் அவரை தவிர்க்கிறான்..

அப்படி இருக்க இவள் வந்த பிறகு முழுவதுமாக அவர் புறக்கணிக்கப் படுவதை அவரே உணர்கிறார் எப்படியாவது இதிலிருந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது..

இவர்கள் அனைவரையும் விடவும் கடம்பனின் மனதில் வன்மம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவளுடன், அவன் மனதில் நினைத்திருக்கும் விஷயதற்காக அவன் காத்திருக்க அந்த நாளுக்காக அவன் பொறுமையாக இருக்கவும் செய்கிறான்...ஒரு பக்கம் ஆடலும் பாடலும் என அனைவரும் மகிழ்ந்தாலும் அரச குடும்ப உறுப்பினர்கள் யாரும் மகிழ்ச்சியே இல்லாமல் வெறுமையாக இருந்தனர்..

அதிலும் விழாக்குழுவினர் அவர்கள் இருவரையும் நடனமாட கூறினர்..ஆரபியோ அவனை முந்திக்கொண்டு மறுத்தாள்..

ஆனால் ஆரபியோ ஒரு சில நேரமாக ஏதோ ஒரு தொந்தரவில் அவள் நெளிவது கவனித்துக் கொண்டே இருந்தவன் , "என்ன??".. என்று அவளைப் பார்த்து கேட்க ,

அவளோ ஒன்னும் இல்லை என்று கூறினாள்..ஏனெனில் அவள் இட மறந்த அந்த ஒரு ஊக்கு அவளை அமைதியாக விடாமல் குத்திக்கொண்டே இருந்தது ..

அதன் பலத்தில் அடுத்த ஊக்குகளும் அவிழ்ந்து கொண்டே இருக்க அவளோ என்ன செய்வது என்று புரியாமல் நெளிந்து கொண்டிருந்தாள்..

அதில் வேறு நடனம் புரியும் அவர்கள் கூறவும் அவன் அமைதியாக இருக்க அவளோ மறுத்தாள்.. கடம்பனோ அவள் முகம் சரி இல்லையே என நினைத்து மீண்டும் , "என்ன??".. என்று கேட்க ,அவளோ கழிவறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறினாள்....

பின் அவள் வேகமாக அரண்மனைக்குள் அவர்களின் அறைக்குள் சென்று விட, அவள் சென்று ஒரு மணி நேரமாகியும் அவளை காணவில்லை .. அவனோ அவளை தேடி எழுந்து அரண்மனைக்குள் வந்து விட்டான்..

அவன் அவளை தேடி வர அவளோ அவர்களது அறையில் இருப்பதை கண்டவனின் விழிகளோ ஒரு நொடி விரிந்தது..ஆம் அவள் அப்போது தான் ஊக்கு இட முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்க கதவு வேறு திறந்திருக்க எப்போதும் போல வந்தவனின் விழிகளோ மெய்சிலிர்த்துப் போனது ..

ஆம் ஆரபி ஒவ்வொரு ஊக்கும் இட முனைந்து போட முடியாமல் அனைத்து ஊக்குகளும் அவிழ்ந்து போக, அவளது பின்னழகு முழுவதும் அவனுக்கு தெரியும் படி இருந்தது..அதிலும் அவளது கவுன் வேறு அவிழும் சூழ்நிலையில் இருக்க,

அதில் அவன் வேறு , "என்ன செய்ற இங்கே??".. என்று சட்டென்று கேட்கவும், அந்த கவுன் கிட்டத்தட்ட அவிழ்ந்து விட்டது.. பின்னழகு முழுவதும் அவனது விழிகளுக்கு தெரிந்து கொண்டிருக்க ,

அவன் கேட்டதும் அவள் சட்டென்று திரும்பிய வேகத்தில் அவளது முன்னழகும் அவனது கண்களுக்கு விருந்தாக,

விளக்கு வெளிச்சத்தில் பெண்ணவளின் உடல் எழில் ஓவியமாக தெரிய அவனை தவிர யாரேனும் வந்து விடுவார்களோ என பயந்து அவள் வேகமாக அந்த கவுனை தூக்கிப் பிடிக்க , அதற்குள் கூட விடாமல் அதற்கு முன்பே கடம்பன் கதவை அடைத்து இருந்தான்..

அவனது கண்கள் வேறு அவளது மேனியில் கோலமிட்டு கொண்டே வலம் வர அவளோ நாணத்தால் முகம் சிவந்து தலை தாழ்த்தி, " யாரையாவது கூப்பிடுங்க ப்ளீஸ் "... என்று கெஞ்ச,

அவனோ அவளின் கேள்விக்கு பதில் பேசாமல் அவளருகில் மெல்ல நடந்து வந்தான்...அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவளை பார்த்து கொண்டே வர அவளோ திரும்பி நின்று கொண்டாள்..

அவனோ அவளருகில் வந்த வேகத்தில் அவளை சட்டென்று திருப்பியவன் அவளது வெண்ணிற முதுகில் மெல்ல வருடிக் கொடுக்க ஆரபியோ நெளிந்து கொண்டே இருந்தாள்..யாரையாவது கூப்பிடுங்க என்று அவள் கூறிக்கொண்டே இருப்பது அவனது செவியை அடைய முடியவில்லை போலும்..

அவன் ஒவ்வொரு ஊக்கும் இடும் போதும் ஒரு முத்தம் கொடுத்துக்கொண்டே அவளது உணர்ச்சிகளை கிளப்பி விட்டு அதில் அவனும் குளிர் காய்ந்தான்..ஒரு வழியாக போட்டு முடித்ததும் அவளை சட்டென்று திருப்பி வன்மையான முத்தத்தையும் பரிசளித்தான்..

அவளுக்கு எப்போதும் ஒரு பெருமை உண்டு அவளை அவன் எப்போது கண்டாலும் அவளும் அடைய துடிப்பதை அவள் மனம் விரும்புகிறது தன் மீது இவ்வளவு ஆசை வைத்திருக்கிறானே என்று அவள் நினைத்து கர்வப்பட்டு கொள்பவள் மையலுடன் அவன் நாடும் போது அழகாக அவன் கைகளில் துவளவே துடிப்பாள் அன்று இரவும் அவர்கள் இருவருக்கும் விடியா இரவாக அமைந்தது..

இரண்டு நாட்கள் கழித்து விடியற்காலையில் எழுந்த ஆரபிக்கு எழவே முடியவில்லை கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது தலை வேறு மிக பாரமாக இருக்க அவளுக்கு என்ன ஆகிற்று எனக்கு என்று யோசித்து கொண்டே குளியறை சென்று வந்தவள் அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது நாட்கள் தள்ளிப் போன விஷயமாக நாட்களை கணக்கிட்டு பார்த்தவளின் மனது வேறு குதுகலித்தது..

அதுவும் சந்தோஷமான நிகழ்வு நிகழப்போகிறது தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் ஆனாலும் அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை அவனிடம் இப்போதே கூற வேண்டும் என்ற அவா அவளுள் எழுந்தது..அப்போது தன்னிடம் ஒரு போன் கூட இல்லையே என்று வருத்தப்பட்டவள் இந்த விஷயத்தை கூற லேண்ட்லைன் நம்பர் மூலம் அவனுக்கு தொடர்பு கொண்டாள்..

ஓரிருமுறை அவள் முயற்சி செய்ய அதற்குப்பின் கடம்பன் போனை எடுத்தான்..

"ஹலோ" என்ற அவனின் கணீர் குரல் கேட்கவும், அவனிடம் அவளோ, " உங்களை எனக்கு பாக்கணும் போல இருக்கு வாங்க" .. என்று கூற

அவனோ, " என்ன விஷயம்னு சொல்லு அபி".. என்று கூற

அவளோ, " நீங்க வாங்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்கிறேன்".. என்று கூற ,

அவனோ, " என்ன விஷயம்??".. என்று கேட்கவும் ,

அவளோ செல்லமாக சிணுங்கி, " நீங்க வாங்க வந்த தான் நான் சொல்லுவேன்".. என்று கிட்டத்தட்ட அவள் அடம் பிடித்தாள்..

அவளது இந்த பேச்சை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் அவன் இல்லாமல் இருக்க, " அபி என்ன விஷயம் சொல்லு??".. என்று அழுத்தமாக அதே சமயம் கோபமாக கேட்க ,

அவளோ அவனது குணத்தை எண்ணி சிரித்தவள், " எனக்கு இந்த மாசம் பீரியட்ஸ் வரல".. என்று கூற,

அதை கேட்ட அவனோ, " வாட் ?? உண்மையவா வா?? "..என்று கேட்க அவளும் ஆமாம் என்று கூறவும், " இதோ நான் இப்பவே வரேன்".. என்று கூறியவன் ,

அவன் வரும் போதே குடும்ப மருத்துவரை அழைத்து வந்தான் அவர் அவளை பரிசோதித்து அவள் வயிற்றில் 40 நாள் கரு இருப்பதாகக் கூற அதை கேட்டு மகிழ்ந்தவன் அவள் அருகே வந்து அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் அவனுக்கு எதையோ சாதித்து விட்ட வெறி அவனுள் கிளர்ந்து கொண்டு எழுந்தது....

மருத்துவரிடம் , "என்ன செய்யலாம் என்ன உணவு அவளுக்கு கொடுக்கலாம் "என்பதை விவரித்து கேட்டு வைத்தவன் அவளைக் கவனித்துக்கொள்ள ஒரு பணிப்பெண்ணையும் அடுத்த நொடியே நியமித்தான்..

அவளோ அவன் செய்வதை எல்லாம் காதலாக பார்க்க அவன் முகமோ நொடிப்பொழுதில் மாறியது ...

அவன் எதற்காக இத்தனை நாள் காத்து கொண்டு இருந்தானோ அது நிறைவேற போகிறது என நெனைத்தவன் கண்கள் பழி வெறியில் சிவந்தது ..

அவளோ அவனை கட்டி அணைத்து அவனது மார்பில் சாய்ந்து இருக்க அவனோ அவளிடம், " நீ எனக்கு ஒரு பரிசளிச்சுட்ட நான் உனக்கு திருப்பி ஒரு பரிசளிக்க வேண்டாமா ?? "..என்று கூறியவன்,

" அபி வா உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு போறேன்".. என்று கூறி அவளது கை பிடித்து அழைத்து சென்றான்..

அவளும் ஆவலுடன் அவனுடன் செல்ல அவனது அறையில் இருந்து வல பக்க கோடியில் ஒரு அறை உண்டு அந்த அறைக்கு அழைத்து சென்றவன் அதனுள்ளே தரையின் கீழே ஒரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுத்த அந்த தரையில் கீழே பதிக்கபட்டிருந்த மார்பிள் கல் மெல்ல விலகியது..

அந்த மார்பிள் விலகியதும் கீழே படி போன்ற அமைப்பு வர அவளோ வாயை பிளந்து பார்க்க அவனோ, " இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி வா உள்ளே போவோம் அங்கே தானே உனக்கான பரிசு காத்திருக்கிறது".. என்று கூறி அந்த அறையின் கீழே அவளை அழைத்து செல்ல,

அந்த பாதையோ ஒரு சுரங்கம் போல இருந்தது அந்தப் பாதை வழியே அவளை உள்ளே அழைத்து செல்ல அவளுக்கே இலேசாக பயம் எட்டி பார்த்தது.." எங்க கூட்டிட்டு போறீங்க கடம்பா??".. என்று கேட்க,

அவனோ , "வந்த தெரிஞ்சிட போகுது ".. என்று அவளை அழைத்து செல்ல கிட்டத்தட்ட அரை மணி நேர நடைப் பயணத்திற்குப் பின் ஒரு அழகிய வீடு வந்தது..

எங்கு எப்படி போகவேண்டும் எப்படி செல்ல வேண்டும் என்ற வழி கூட அவளுக்கு தெரியவில்லை..பேந்த பேந்த விழித்து கொண்டே அவனுடன் சென்றாள்..அந்த வீட்டுக்குள் செல்ல ஒவ்வொரு அறைகள் இருந்தன அந்த அறைக்குள் செல்ல செல்ல தான் அவளுக்கு புரிந்தது அதெல்லாம் கல்லறைகள் என அதை கண்டவள் திகைத்து பீதியில், " வாங்க எழில் போகலாம் எனக்கு பயமா இருக்கு "..என்று கூற அவனோ, " எழிலா வா எழிலை காட்டறேன் வா "...என்று அவளை வேறொரு அறைக்கு கிட்டத்தட்ட இழுத்து சென்றான் கடம்பெழிலன்..

மான்ஸ்டர் வருவான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top