Share:
Notifications
Clear all

மான்ஸ்டர் 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 15

மான்ஸ்டரும் மான்விழியும்

அவனுடைய தனிப்பட்ட உதவியாளராக தான் அவள் நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் விட்டது..அவனுடன் தான் அவளுக்கு பெரும்பாலும் வேலை.. அவன் சொல்வதை சரி பார்த்து தருவது அவனுடைய வேலைகளை எல்லாம் ஒழுங்குபடுத்துவது என பெயருக்கு ஒரு சில வேலைகள் மட்டும் தான் அவளுக்கு அளிக்கப்பட்டது.. ஆம் அவளை அவன் அவனுடைய கைவளைவுக்குள்ளே வைத்திருந்தான் என்றே கூற வேண்டும்... அவளது சிறு மூளையும் வேறு எதையும் யோசித்து விடாமல் வைத்திருந்தான்...

அப்படி ஒரு நாள் அவள் அவனிடம் , " ஏன் கடம்பா உங்க அம்மா தங்கை எல்லாம் உங்களை தேடி வர மாட்டேங்கிறாங்க ?? நீங்களும் அங்க போகலையே ஒரு வேளை என்னை கல்யாணம் செய்ததுனால தான் அவங்க ஒதுங்கி இருக்காங்களா?? என்னை அவங்களுக்கு பிடிக்கலையா?? என்று ஒருநாள் இரவு அவளை நாட வந்தவனிடத்தில் "..அவள் கேட்க,

அவனும் அவளது முகத்தை தீர்க்கமாக பார்த்து, "அவங்களுக்கு கோபமா இருந்தா நான் என்ன செய்ய முடியும்... நீ என்ன பத்தி மட்டும் யோசிச்சா போதும் உன் குட்டி மூளை வேறு எதையும் யோசிக்க வேண்டாம்".. என்று செல்லமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் கூறியவன் , மேலும் அவளிடம், "இதற்கு மேலும் இதை பத்தி என்கிட்ட பேசாத".. என்று கூறி முறுக்கி கொள்ள, அவள் தான் அவனிடம் இறங்கி போக வேண்டியதாகி போனது,

தன்னருகில் விலகி படுத்திருக்கும் தன் கணவனின் கோபத்தை அறிந்தவள், அவன் மீது ஏறி படுத்தவள் அவனது சிவந்த மூக்கை பிடித்து ஆட்டி, " எனக்கு நீ மட்டும் போதும் போதுமா நான் உன்னை மட்டும் தான் யோசிப்பேன் போதுமா "... என்று கூற அவளது முகத்தை அவ்வளவு அருகில் கண்டதும் அவனது உணர்வுகள் கிளர்த்து எழ அதிலும் அவளது பூ போன்ற உடல் அவன் மீதிருக்க ,

அவனது கையோ இயல்பாக அவளை வளைத்து அவளது செவ்வரளி பூப்போன்று சிவந்திருந்த அவளது உதட்டை தீண்ட அவனது தடித்த உதடுகளால் அவன் தீண்ட, அவளோ முகம் சிவந்து அவனுக்கு தன் இதழை தாரை வார்த்து கொடுத்தவள் அலை அலையான கேசத்தை பற்றி இழுத்தவள் தன் கைகளால் அளந்து அவனை மேலும் அவளுள் புதைய வைத்தாள்..சிவக்கும் அவளது கன்னக் கதுப்புகளில் அவனோ தன் நாசியால் உரச அவளோ மோக கரையிலுள்ள மிதக்கத் தொடங்கினாள்..இப்படி தான் அவர்கள் இருவரின் ஒவ்வொரு நாளும் தொடங்கும் ஒவ்வொரு நாளும் முடியும் இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை..

என்ன தான் அவனுடனான வாழ்க்கை அவளுக்கு மிகவும் விருப்பமாக இருந்தாலும் தன் மாமியார் மற்றும் நாத்தனார் தன்னுடன் முறையாக பேசுவது இல்லை என்ற வருத்தம் அவளை வாட்டியது...

அவனை திருமணம் செய்த இந்த இரண்டு மாதத்தில் இரண்டொரு முறை அவர்கள் இருவரும் அரண்மனைக்கு சென்றாலும் அவர்கள் இருவரையும் முறையாக காணமுடியவில்லை.. அவனிடமே ஒதுக்கமாக இருப்பவர்கள் , அவர்களிடத்தில் இவளுக்கு என்ன வேலை என்றாலும் இவளாக பேச போனாலும் அவர்கள் பேச விருப்பம் காட்டுவதில்லை ..

ஒரு நாள் இது போல அவர்கள் இருவரும் சென்றிருந்த போது தாமரை விழியாளிடம், " உங்களுக்காக நான் இதை வாங்கிட்டு வந்தேன்".. என்று ஒரு புடவையை கொடுக்க,

அவரோ அவளை தீர்க்கமாக பார்த்து, "எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா?? "... என்று கேட்டார் ..

அவளோ , "தாராளமாக சொல்லுங்க நான் செய்யறேன்".. என்று கூற ,

அவரோ, "தயவு செஞ்சு என்னை பார்க்கவோ பேசவோ வராத எனக்கு உன்ன பார்க்க பார்ப்பதில் எந்த விருப்பமும் இல்லை "..என்று முகத்தை திருப்பிக் கொண்டு கூற,

அவளோ அவரது வார்த்தையில் மனம் நொந்தாள்..அவரிடமே, " நான் அப்படி என்ன செஞ்சுட்டேன் அப்படின்னு சொல்லி நீங்க என்கிட்ட இப்படி நடந்துக்கறீங்க ?? "...என்று அவள் வினவ,

அவரோ , "அது உனக்கே கொஞ்ச நாள்ல புரிஞ்சிடும் அப்போ நீ ரொம்ப வருத்தப்படுவ அதை பார்க்க என்னால முடியாது ".. என்று கூற,

அவளோ அவரது பதிலில் புரியாத பாவத்தை மேலும் அவரிடம் பேச போக அவரோ மறுத்துவிட்டார்..

அதே போல மியாவை தேடி செல்ல அவளோ அவரிடம் முகம் கூட கொடுக்க மறுத்துவிட்டாள்... அதையெல்லாம் கடம்பனிடம் வருத்தப்பட்டு அவள் கூற அதைக் கேட்ட கடம்பனோ, " உன்கிட்ட நான் எப்போவும் சொல்றது தான் உன் குட்டி மூளை என்னை சுத்தி மட்டும் வந்தா போதும்..இனி நீ அவங்க கூட பேச வேணாம்".. என்று கூறி அவளது பேச்சை அத்தோடு நிறுத்தி விட்டான்..

இப்படியே ஒரு மாதம் கழிய ஒரு நாள் அரச குடும்ப விழா என்றும் அதற்கு, " வேகமாக தயாராகு".. என்று கடம்பன் கூறியிருக்க,

அவளோ ஆகாய வண்ண நிற ஒரு கவுனை அணிந்து கொண்டிருந்தாள்..அது பிரேத்யமாக அவளுக்காக தயார் செய்த உடையாக இருக்க அவளுக்கு ஒப்பனை செய்த ஒப்பனை கலைஞர்கள் அவளை மிக அழகாக தயார் செய்து இருக்க அவளுக்கே அவளை காணும் போது மிக அழகாக இருந்தது..

ஆனால் அந்த கவுனில் பின் பக்க ஊக்கு மட்டும் சரியாக போடாமல் விட்டு விட்டனர் அவளை தயார் செய்த கலைஞர்கள் அவளும் பரபரப்பில் கவனிக்காமல் விட்டு விட்டாள்..

மேலும் அவனும் வந்து அவசர படுத்தவே அப்படியே கவனிக்காமல் கிளம்பி விட ஒரு வழியாக விழா நடக்கும் இடத்தை அடைந்தனர்.. ஆடலும் பாடலும் என விழா கோலாகலமாக துவங்கி இருக்க இவர்களின் திருமணத்திற்காக அரச குடும்பத்தாரால் நடத்தப்படும் விழா ஆகும்..

அதில் நாயகர்களாக இவர்கள் இருவரும் முன் நிற்க பல கேளிக்கை நிகழ்ச்சிகள் துவங்கின... அதில் அனைவரும் குதூகலித்துக் கொண்டிருக்க ,

இலந்தரையர், தாமரை விழியாள் மற்றும் மியா மூவருக்கும் அங்கு வர விருப்பமில்லை என்றாலும் குடும்ப கௌரவத்தின் பெயரில் அமைதியாக விழாவை கண்டு களித்தனர்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top