மான்ஸ்டர் 33
அத்தியாயம் : 33
கதம்ப ராஜாவின் சடங்குகள் எல்லாம் முடிந்த பின் இலந்தரையன் தன் மருமகளிடம் வந்து நடந்த விஷயத்தை எல்லாம் ஒன்றுவிடாமல் கூறினார்.." இந்த விஷயம் எல்லாம் இப்போ உங்களுக்கு சொல்லக்கூடாதுன்னு நெனச்சிட்டு இருந்தேன் ஆனால் இந்த விஷயம் மெல்ல மெல்ல உங்களுக்கு தெரியனும்... தெரிஞ்சாதான் உங்களுக்கு நாளைக்கு அரசாலும் போது உங்க அப்பா மாதிரியே நீங்களும் வெள்ளந்தியா ஆக கூடாது அதற்குத்தான் சொல்றேன்...ஒரு வயதானதும் உன் அப்பாவை கொன்னவனை பழி வாங்கிறது தான் உங்க முதல் வேலை " என்று கூற தாமரையோ யார் என்ன பேசுகிறார்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கணவன் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர் மீளாமல் இருந்தார்..
தாமரை விழியாள் போல வேறொரு பெண்ணும் அதிர்ச்சியில் உறைந்திருந்த அவர் வேறு யாரும் இல்லை கோமகள் தான்..
தன் கணவர் தன்னிடம் சத்தியம் செய்தும் இந்த வேலையை செய்ததை எண்ணி அவரால் தாங்க முடியவில்லை இதோ இப்போது கூட அவர் வீட்டை அடையவில்லை...இன்னும் ராஜா இறந்ததை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டு இருப்பார்...
இருக்கட்டும் அப்படியே இருக்கட்டும் என எண்ணி கொண்டவர் உடம்பில் ஒரு சதை போல பழி வெறியை மனதில் வளர்த்து வைத்தவரை இப்படி காதலித்து வாழ்க்கையை இழந்தோமே என நினைத்த அவருக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது போல தோன்றியது ..
தன் குடும்பத்திற்காக ஒருவர் குடும்பத்தை ஒருவர் பின் ஒருவராக கொலை செய்யும் ஒரு கொலையாளியுடன் வாழ கோமகளுக்கு விருப்பமில்லை...
அதனால் ஒரு கடிதத்தில், " கொலையாளியுடன் உள்ள என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன்"... என எழுதி விட்டு சென்று விட்டார்..
எங்கு சென்றார் என யாருக்கும் தெரியவில்லை யாரிடமும் அவர் கூறவில்லை...அவர் வீட்டில் கூட இந்த விஷயத்தை கூறவில்லை...
நிறை மாத கர்ப்பிணியான அவர் எப்படி இந்தியா வந்தடைந்தார் என தெரியவில்லை வந்து சேர்ந்து விட்டார்.. தன் தோழியை தேடி வந்தவர் தோழியின் ஆதரவில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து குடிபெயர்ந்தார்...
பிரசவம் வரை தோழியிடம் உதவி செய்ய கேட்டுக் கொண்டார் கோமகள் அவரும் உதவி செய்ய உதவியும் பெற்றுக் கொண்டவர் குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆனதும் வீட்டிலேயே சிறு சிறு நிறுவனத்திற்கு கணக்குகளைப் பார்த்துக்கொடுத்தார்...அந்த வருவாயில் அவரது குழந்தையுடன் வாழ்க்கையை நடத்த துவங்கினார்...
மேலும் ஒரு சில மாதங்கள் வேலைக்கு செல்ல தொடங்கினார் தன் மனைவி எங்கு சென்றிருக்கிறார் என அறியாமல் தேடத் தொடங்கிய களங்கண்டானுக்கு சிறு துப்பு கூட கிடைக்கவில்லை ...ஆம் தேடி தேடி களைத்து விட்டார் என்றே கூற வேண்டும்..
ஆம் கோமகள் ஒரு இடத்தில் ஒரு மாதத்திற்கு மேலே தங்கவில்லை...அவருக்கு தன் கணவனை பற்றி நன்றாக தெரியும் அதற்காக தான் இந்த ஏற்பாட்டை செய்தார்...அவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்துக்கு செல்வதால் களங்கண்டானால் எளிதில் தன் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை...
கிட்டத்தட்ட தன் மகள் ஆரபி பிறந்து 4 வயது வரை ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு முறை இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார் தன் கணவர் தன்னை தேடி வரக்கூடாது என்று எண்ணியிருப்பார் போலும் அதில் சாதித்தும் விட்டார் கோமகள்...களங்கண்டானால் கோமகளை கண்டே பிடிக்க முடியவில்லை...
வேலை செய்து தன் மகளை கஷ்டப்பட்டு வளர்த்தினார் கோமகள்... அவரிடம் ஆரபி எக்காரணத்தைக் கொண்டும் அப்பா என்ற வார்த்தையைக் கூறி விடக்கூடாது கூறினால் ஆரபிக்கு அடி விழும்... அதனால் அரபியும் தன் தாயின் முன் தன் தந்தையை பற்றி வினவவே மாட்டாள்.. நாளடைவில் தந்தை என்ற ஒரு உறவையே அவள் மறந்து விட்டாள்..
இப்படி இருக்கும்போது காலங்கள் எப்படி உருண்டோடியது என்றே தெரியவில்லை... தான் 28 வயதான இரட்டை சகோதரர்களிடம் வந்தார் இலந்தரையர்..
"மருமகன்களே அச்சில் வார்த்தது போல இருக்கீங்க உங்களை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க அப்பா இறந்து கிட்டத்தட்ட 18 வருஷம் முடிஞ்சு போச்சு இனி உங்களில் ஒருவர் ஆட்சி அமைக்க வேண்டும்... உங்க அப்பா ஆசைப்படி நீங்க ரெண்டு பேரும் தான் இந்த ஆட்சியில் அமர போறீங்க என்ன தான் உங்க அப்பா கூட குடும்ப படி மூத்த மகன் தான் ஆட்சியில் அமர வேண்டும் என்று இருந்தாலும் அதை முறியடிக்க தான் ஒரே ஒரு மகன் உங்க அப்பா சொல்லியிருந்தார்...உங்களுக்குள் எந்த பிரிவினையும் வந்திட கூடாதுன்னு தான் அவர் இந்த முடிவை எடுத்து இருந்தார்...
அதாவது நீங்க ரெண்டு பேரும் தான் ஆட்சியில் அமர போறீங்க ..ஆனால் எப்படி நீங்க பள்ளியில் படிச்சீங்களோ அதே மாதிரிதான் ஒருவர் ஒரு வருடன் அரசாண்டால் மற்றொருவர் அடுத்த வருடம் அரசாள வேண்டும் இதுதான் உங்கப்பாவோட விருப்பம் "... என்று கூற
அதைக்கேட்ட இரட்டை சகோதரர்களோ மகிழ்ந்தனர் அதிலும் எழில் தான், " எங்க அப்பாவோட மகிழ்ச்சியை நாங்க நிறைவேற்றுவோம் மாமா நீங்க கவலைப் படாதீங்க"... என்று கூற ,
சின்ன எழிலோ, " எனக்கு இந்த பதவி இது மேல எல்லாம் ஆசை இல்லை அவனே இந்த அரச ஆளட்டும் நான் ஒன்னும் கம்ப்ளைன்ட் பண்ணி பிரிஞ்சு போகமாட்டேன் "..என்று குதர்க்கமாக பேச அதைக்கேட்ட இலந்தரையரோ சிரித்து," அதை எல்லாம் அப்புறம் முடிவு பண்ணிக்கலாம் முதல்ல உங்களுக்கான டாஸ்க் இருக்கு அத நீங்க நல்லபடியா முடிக்கணும்"... என்று கூற ,
இருவரும் சேர்ந்து, " என்ன டாஸ்கா??"... என்று கேட்டனர் அதற்கு இலந்தரையனோ, " ஆமா டாஸ்க் தான் அதாவது நீங்க ரெண்டு பேரும் என்னதான் அரண்மனையை வாழ்க்கை என்று இருந்தாலும் ஒரு சாதாரண குடிமகன் எப்படி வாழ்கிறான் என நீங்க தெரிஞ்சுக்கணும் அதுக்காக தான் இந்த டாஸ்க் "... என்க
அவர்கள் இருவரும் முழித்தனர் அதை கண்ட அவர்களின் மாமாவோ, " ஆமா உங்க ரெண்டு பேரையும் வேறு நாட்டுக்கு அனுப்பி வைப்போம் அந்த நாட்டு மக்களோடு நாட்டு மக்களாக கலந்து 3 மாசம் அவங்க கூட பழகணும் அதாவது உங்களுடைய அடையாளம் அனைத்தையும் துறந்து ஒரு துறவி போல நீங்க வாழனும் இதுவரை நாங்க உங்கல வெளியுலகத்துக்கு வளர்ந்த பின் அறிமுகப்படுத்தியது இல்லை ... அதனால யாருக்கும் நீங்க தான் ராஜாவோட பசங்கன்னு தெரியாது... அப்போ நீங்க மக்களோடு மக்களாக போய் அவர்களுடைய இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வரணும்..
அப்போ தான் உங்களுக்கு சாதாரண மனிதர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியும் கஷ்ட நஷ்டங்களும் புரியும் அதற்காகத்தான் இந்த டாஸ்க் இதுல யாரு நல்லா சிரத்தையோடு இருக்காங்களா அவங்களுக்கு தான் இந்த அரியாசனம் ".. என்று இலந்தரையர் கூற,
அதைக் கேட்டு இருவரும் மகிழ்ந்தனர்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மகிழ்ந்தனர் மூத்த எழிலோ எப்படியாவது அரசாட்சி பிடிக்க வேண்டும் என நினைக்க இரண்டாவது எழிலோ, " இந்த மூச்சும் முட்டும் இடத்தில் இருந்து தப்பிக்கலாம் இங்கிருந்து அப்படியே வேறொரு ஊருக்கோ நாட்டுக்கோ போய் விட வேண்டியது தான் பின் எனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ வேண்டியது தான்".. என நினைத்து கொண்டான்..
இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் பயணித்தனர் இருவருக்கும் யார் எங்கே பயணிக்கிறார்கள் என கூறப்படவில்லை தனித்தனியாக பாஸ்போர்ட் மட்டும் அவர்களின் கையில் கொடுக்கப்பட்டது..அதை திறந்து பார்த்தவர்கள் அவரது தாயாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின் இருவரும் அவரவர் கொடுக்கப்பட்ட நாட்டில் வந்து இறங்கினர்...
மான்ஸ்டர் வருவான்..
