Share:
Notifications
Clear all

நேசம் 9

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

நேசம் : 9

அவன் ஓடி விடாமல் பிடித்து கொண்டே ஒரு கையால் போனை எடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க அவர்களும் விரைந்து வந்தனர்...இவனை கண்ட காவல்துறையினர் சல்யூட் அடித்து  சுருண்டு கிடந்தவனையும் வெற்றியின் கையால் அடி வாங்கியவனையும் காவலர்கள் கைது செய்ய அவன் மறைத்து வைத்து இருப்பதாக கூறிய பெண்களை தேடும் வேட்டை தொடங்கியது...

அவன் கூறியபடி பார்த்தால் அந்த கன்டெய்னர் மக்கள் இல்லா பகுதியில் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து அதிலும் பிடிபட்ட இருவர் வாக்குமொழி கூறிய இடத்தில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....மணி மட்டும் நிராயுதபாணியாக தனியே வர மணி துரத்திய இருவர்கள் எப்படியோ தப்பித்து இருந்தனர்....அவர்களை தேடவும் ஒரு குழு அமைக்கப்பட்டது....

அதற்குள் சம்பவம் நடந்த இடத்திற்கு கமிஷனர் நரசிம்மன் இவர்களுக்கு எல்லாம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து கொண்டே அடித்து பிடித்து பாதி உறக்க கலக்கத்தில் வந்தார்... கமிஷனர் நரசிம்மன்...குற்றம் புரிபவர்களுக்கு அந்த கடவுள் நரசிம்மனே தான்....நேர்மையான போலீஸ் அதிகாரி அதனால் வெற்றியை போல பல சஸ்பெண்ட்கள் வாங்கி இதோ இன்னும் இரண்டு வருடத்தில் பணி ஓய்வு பெற இருக்கும் சமயத்தில் கமிஷனர் ஆகி இருக்கிறார்...ஒரு போலீஸ் கண்களாலேயே அவன் குற்றம் புரிந்து இருக்கிறானா என கணித்து விட வேண்டும் ...குற்றம் புரிபவன் அதற்கான தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர் இன்றும் அதில் இருந்து துளியும் மாறாமல் அதனால் பல இன்னல்களுக்கு ஆளாகியும் மனம் தளராமல் இப்போது தனிமரமாக வாழ்ந்து வருகிறார்...

அவருக்கு வெற்றியை பார்க்கும் போது எல்லாம் தன்னை பார்ப்பது போல இருக்கும் அதனால் அவனை மிகவும் பிடிக்கும் ஆனால் அதை அவர் ஒரு நாளும் அவனிடம் கூறியது இல்லை...அவனை பாராட்டியதே இல்லை என கூறலாம்...எப்போதும் அவனிடம் கடிந்து தான் பேசுவார்...எல்லோரிடமும் திமிருடன் இருப்பவன் ஏனோ இவரிடம் மட்டும் அடங்கி போவான்....அவனுக்கு இப்போது அவர் மீது கோபம் தன்னை சஸ்பெண்ட் செய்து விட்டாரே என்று அதனால் அவரிடம் பேசாமல் அவரை தவிர்த்து வருகிறான்...

வெற்றியை கண்டதும் முறைத்து பார்த்து கொண்டே வேகமாக வந்த நரசிம்மன் அந்த கடத்தல்காரர்களை ஆராய்ந்தார்...எங்கே இவன் அவனுடைய அவசர புத்தியாலும் கோபத்தாலும் அவர்களை கொன்று விட்டானோ என்று தான் அவர் பார்த்தது...ஆனால் அது போல சம்பவங்கள் ஒன்றும் நடக்கவில்லை...ஆனாலும் அவர்கள் இருவரின் நிலையை பார்த்து அவனை முறைத்து தான் பார்த்தார்...  அவர்களுக்கு வேகம் முதலுதவி செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர்கள் ஆபத்து ஆகி விடும் என்று உணர்ந்த அவர் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு இட்டார்...

பின் அனைவரும் கலைந்த பின்னர் அவரை கண்டதும் முறுக்கி கொண்டு வண்டியை எடுக்க போக இருந்தவனை பார்த்து , "மிஸ்டர் வெற்றி நில்லுங்க...யாரை கேட்டு நீங்க அவனை அடிச்சீங்க..சஸ்பெண்ட் ல இருக்கும் போது நீங்க எப்படி குற்றவாளி யே ஆனாலும் நீங்க எப்படி அவரை அடிக்கலாம்"... என்று கேட்டார் கமிஷனர் நரசிம்மன்...

ஆனால் அவனோ அவருடைய வயதுக்கோ அவருடைய பதவிக்கோ மரியாதை கொடுக்காமல் காரில் ஏற போக, "நான் உங்ககிட்ட தான் பேசுறேன் மிஸ்டர் வெற்றி "...என்று தன் கர்ஜனை குரலில் நீ அங்கேயே நில் என்பது போல அவர் கூற  அந்த குரலில் அவன் கால்கள் தானாக அங்கேயே நின்றது...

அவரை நோக்கி திரும்பிய அவனோ ஆக்ரோஷம் நிறைந்த விழிகளில் "என்ன போலீஸ் சார்  நீங்க எல்லாம் ..ஒரு கும்பல் ஒரு பொண்ணை கடத்த பாக்கிறாங்க.. இதுல ஒரு நெட்ஒர்க் கே இருக்கு....மூன்று நாளில் 19 பெண்களை கடத்தி இருக்காங்க...கமிஷனரா நீங்க என்ன ஆக்ஷன் இதுல எடுத்தீங்க"......அதற்குள் அவர் ஏதோ கூற வருவதற்குள் தன் கையை காட்டி தடுத்த வெற்றி மேலும் தொடர்ந்தான்.. "உங்களுக்கு எப்படி இந்த விஷயத்தை பத்தி தான் தெரியாதே...தெரிஞ்சு இருக்கவும் வாய்ப்பு இல்லை"....என்று நக்கல் மிகுந்த குரலில் கூற

அவரோ அவனை முறைத்த படி "அந்த கேங் யை டிபார்ட்மெண்ட் சைலண்ட்டா கவனிச்சிட்டு தான் இருக்கு நாங்க தேடிட்டு தான் இருக்கோம் "...என்று அவர் கூறுவதை அவன் கேக்க கூட இல்லை...அவனுடைய கோபம் எல்லை மீறி இருந்தது...அந்த பெண்களின் நிலை என்ன இப்போது அவர்களின் நிலை என்ன என்று எல்லாம் நினைத்து அவன் கருத்தில் கொண்டு தான் இப்படி எல்லாம் பேசுவது... அவனுக்கும் தெரியும் தான் இப்போது வேலையில் இல்லை என்று அதை சொல்லி என்னால் இதை எல்லாம் கண்டு சும்மா இருக்க முடியாது என்று நினைத்து தான் அவன் இதை செய்தது...மேலும் தன் கோபம் குறையாமல் தொடர்ந்தான்...

" என்ன கவனிச்சீங்க நீங்க...அந்த பொண்ணுங்க எல்லாம் இன்னிக்கு ராத்திரி எல்லோரையும் வேற இடத்திற்கு மாற்ற போறாங்க...இனியும் நீங்க கவனிச்சுட்டே இருந்தா நாளைக்கு நியூஸ் ல வரும்..கடத்தபட்டாங்கன்னு ...அதையும் கவனிச்சிட்டு இருங்க...அதை தடுத்த என்னை  நீங்க கேள்வி கேக்குறீங்க...நீங்க மூணு நாளா தேடிட்டு இருந்த விஷயத்தை நான் 30 நிமிஷத்தில் கண்டு பிடிச்சேன்...இதுக்கும் டபுள் சஸ்பெண்ட் குடுங்க...உங்களுக்கு ஒன்னும் இது எல்லாம் புதுசு இல்லையே...இப்போ நான் சாதாரண குடிமகன் தப்பு நடக்கும் போது தட்டி கேட்டேன்...அது தப்புனா அர்ரெஸ்ட் பண்ணிக்கோங்க...என்னால உங்களை மாதிரி அநியாயத்துக்கு துணை போக முடியாது"......என்று எல்லாம் பொரிந்து கட்டி கொண்டு இருந்தவன் ஒன்றை மறந்து விட்டான் அது தான் காரில் பின் பக்கத்தில் மயக்கத்தில் இருக்கும் பெண்ணை இந்த களேபரத்தில் வந்த ஏரியா போலீசும் குற்றவாளிகளை கைது செய்து விட்டு நரசிம்மனை கண்டதும் சென்று விட்டனர்...அதனால் யாரும் அந்த பெண்ணை யாரும் கவனிக்க வில்லை... இவனுடன் சேர்ந்து அவனின் நாய் மணியும் அவரை பார்த்து இரண்டொரு முறை குரைத்தது... நாயை கண்ட நரசிம்மன் மனதுக்குள் நாயை கூட அவனை மாதிரி வளர்த்தி வெச்சு இருக்கான் எப்படி சவுண்ட் விடுது பாரு என்று மனதுக்குள் சிரித்தார்...

அவரிடம் கத்தியவன் அவரிடம் வாக்குவாதம் செய்ய விருப்படாமல் காரின் அருகில் செல்ல அவரோ அவன் கூறுவதை எல்லாம் நிதானமாக கேட்டவர் அவனிடம் அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்காமல்,  "அந்த பொண்ணு எங்கே மிஸ்டர் வெற்றி"..அதாவது அந்த பொண்ணு எங்கே இனி நான் எல்லாம் பார்த்து கொள்கிறேன் என்பது போல கூற அவனுக்கு அப்போது தான் அந்த பெண்ணின் நினைவு வந்தது...

   உடனே வேகமாக காரின் பின்பக்க கதவை திறந்து அந்த பெண்ணை பார்த்தான்...பார்த்தவன் அதிர்ந்து விட்டான்...அவள் தானா என்று ஒன்றிற்கு இருமுறை பார்வை இட்டான்...அது அவளே தான் ... கண்மணி....இவ எங்கே இந்த நேரத்தில் இங்கே என்ன செய்யுறா...மதியம் தானே இவளை பார்த்தேன்...இந்த ராத்திரி ல இவ என்ன செய்யுறா என்று பல கேள்விகள் அவன் மண்டையை குடைந்து கொண்டு இருக்கும் போதே  அவன் அருகில் வந்தார் கமிஷனர் நரசிம்மன்....

நேசம் தொடரும்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top