நேசம் 8
அத்தியாயம் : 8
நேசமடி நேசம்
காரின் வெளிச்சத்தின் மூலம் ஒருவரை நான்கு நபர்கள் துரத்தி வருவதை மட்டுமே கண்டான் வெற்றி...அதும் முன்னால் ஒருவர் ஓடி வர ஒரு 15 அடி வித்தியாசத்தில் அந்த நால்வரும் துரத்தி வந்து கொண்டு இருந்தனர்... தன் காரை நோக்கி ஓடி வரும் உருவம் ஆணா பெண்ணா என்று இருட்டில் அவனால் கணிக்க கூட முடியவில்லை என்றாலும் ஓடி வரும் நபரை காப்பாற்றும் கடமை வெற்றிக்கு உள்ளதால் வேகமாக வெற்றி காரை விட்டு கீழே இறங்கவும் அவனுடன் அவனின் நாய் மணியும் குரைத்து கொண்டு இருந்தது....ஓடி வந்த அந்த உருவமும் வெற்றியின் மீதே மோதியது...இன்னும் அவர்கள் பின்னால் ஓடி வந்து கொண்டு இருந்தனர்....
மோதியவுடன் தான் அவனுக்கு புரிந்தது அது ஒரு பெண் என்று...அவளும் அதிர்ச்சியில் இருந்தவள் அவன் மீது மோதியதும் அந்த பெண் அவன் மேலேயே சரிந்து மயங்கி விழுந்தாள்.... அவன் அந்த பெண்ணின் முகத்தை மிக சரியாக பார்க்க கூட இல்லை...அவனுக்கு இந்த பெண்ணை துரத்தி வரும் நபர்களை பந்தாட வேண்டிய நிலையில் அவன் இருந்தான்...அதனால் அவனும் அவளை காணும் முயற்சியில் ஈடுபடாமல் அவளை தன் காரினுள் வேகமாக படுக்க வைத்து விட்டு திரும்ப அதற்குள் அவனுக்கு துணையாக மணியும் இறங்கியது....அவன் அவளை படுக்க வைத்து விட்டு திரும்பிய அந்த 30 வினாடிக்குள் அவளை துரத்தி வந்த கயவர்கள் வெற்றியின் அருகே வர வெற்றி திரும்பி தன் கைகளை முறுக்கி நின்றான்...அவளை துரத்தி கொண்டு வந்தவர்களும் அவனை கண்டதும் ஓட்டத்தை நிறுத்தி அவன் அருகில் வந்து அவனையும் காரினுள் இருக்கும் அவளையும் மாறி மாறி பார்த்தபடி நின்றவர்களுக்கு அவன் யார் என தெரியவில்லை....
அந்த வடநாட்டு கயவர்கள் நால்வரும் யாரோ ஒரு வழிப்போக்கன் என வெற்றியை நினைத்து அவனை எப்படியாவது அடித்து நொறுக்கியாவது அவளை கூட்டி செல்ல முடிவு தங்களுக்குள் ஹிந்தியில் முணுமுணுத்து கொண்டனர்...
ஆம் அவர்களுக்கு அவள் வேண்டும் அவளை கூட்டி சென்றே ஆக வேண்டும்.... அவளை கடத்தினால் மட்டுமே அவர்களுக்கு தருவதாக கூறிய பணம் அவர்களுக்கு கிடைக்கும்...அதிலும் 20 இளபெண்கள் வேண்டும் என ப்ரோக்கர் கூறி இருக்க ஒரோ பெண்ணுக்கும் ஒரு லட்சம் வீதம் கணக்கிட்டு இருபது லட்சம் என அவர்களுக்கு வேலை ஒத்துக்கப்பட்டு இருக்க இவர்களும் மூன்று நாளில் 19 பெண்களை கடத்தி விட்டனர்...அவர்களை எல்லாம் யாருக்கும் சந்தேகம் வராத விதத்தில் ஒரு கன்டெய்னர் இல் போதை ஊசி இட்டு படுக்க வைத்து உள்ளனர்...
அதும் அவர்களுக்கு வேலை தரும் ப்ரோக்கர் பிரேஷ் இளபெண்கள் தான் வேண்டும் என்று கூறி இருக்க அதனால் மட்டுமே இந்த கயவர்கள் கை தொடாமல் உள்ளனர்...இல்லை என்றால் எப்போதே அந்த இளம் பெண்களை சூறையாடி இருப்பர்... இன்று இரவுக்குள் இவர்களை ஒப்படைக்க வேண்டும் இன்று தான் கடைசி நாள் என்பதால் தான் அவர்கள் இந்த பெண்ணை துரத்தி வந்தனர்....
வெற்றிக்கு இவர்கள் முகம், உடை எல்லாம் தன் போலீஸ் மூளையை உபயோகித்து அளவிட்டு கொண்டு இருக்கும் போதே நான்கு பேரில் முதலாமானவன் வேகமாக வந்து வெற்றியை தாக்க வர கண் இமைக்கும் நேரத்தில் அவன் எங்கே விழுந்தான் என்று தெரியாது..அவனின் அடி வயிற்றில் ஒரு குத்து கொடுத்து இருந்தான் வெற்றி....நம் எதிராளி நம்மை தாக்க வரும் நேரம் அவர்களின் அடி வயிற்றில் தாக்கினால் அவர்களால் எளிதில் நம்மை தாக்க இயலாது என்பதால் தான் அவனை வெற்றி அடித்தது...வெற்றியிடம் குத்து வாங்கியவன் வாயில் ரத்தம் வர வலியால் சுருண்டு விழுந்து விட்டான்...
அதற்குள் மணியை கண்ட இருவர் ஓட பார்க்க மணி அவர்களை துரத்த தொடங்கியது...ஆனால் அந்த இருவரும் மணியை கூட்டு சேர்ந்து தாக்க தயாராக இருக்க மணி அவர்கள் காலில் கடிக்க பாய்ந்து ஒருவனின் காலில் கடிக்கவும் செய்து விட அவர்களால் சமாளிக்க முடியாமல் இருவரும் ஓட தொடங்கி விட்டனர்....
ஒருவன் சுருண்டு விழுந்து கிடப்பதை பார்த்தும் இருவர் ஓடி போவதை பார்த்தும் அசையாமல் நின்று கொண்டு இருந்தவன் தன் கையில் இருக்கும் கத்தியை எடுத்து வெற்றியை தாக்க வர வெற்றி அவன் கத்தி பிடித்து கையை முறுக்க அவனோ வலி தாங்காமல் அவனுடைய கையில் இருக்கும் கத்தி தானாக கீழே விழுந்து அவனுடைய பெரு விரலை பதம் பார்த்தது..
வலியால் துடித்த அவன் அவனுடைய மற்றொரு கை மூலம் வெற்றியை தாக்க முயற்சி செய்தான் அவனால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது.... இயவில்லை...அதற்குள் வெற்றி அவனை சுருட்டி எடுத்து விட்டான்... வெற்றி அவனை அடித்து நொறுக்க அடி வாங்கியவன் சுருண்டு விழும் முன் இன்னும் மிச்சம் உயிர் மட்டுமே என்ற நிலையில் அவனிடம், " யார் நீ எதுக்காக இவளை கடத்த பார்க்கிற".. என அடியின்னூடே விசாரித்தான் வெற்றி...
ஆனால் அடி வாங்கியவனோ பதில் கூறாமல் மறுத்து கொண்டே இருந்தான் பொறுமை இழந்த வெற்றி தன்னுடைய பூட்ஸ் காலால் அவனின் ரத்தம் வழிந்து கொண்டு இருக்கும் அவனுடைய காலை மிதித்து பதம் பார்க்க முதலிலே உடல் வேதனையிலும் நரக வேதனையிலும் இருந்தவன் இந்த உயிர் போகும் வலியை அவனால் தாங்க முடியவில்லை... வலியால் துடித்து கதறினான்...
வெற்றியோ நீ சொன்னால் தான் விடுவேன் என்பது போல கூலாக நின்று கொண்டு இருந்தான்...அவன் துடிப்பதை பார்த்து வெற்றிக்கு ஒன்றும் தோணவில்லை கூலாக தன் பாண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஒரு சாக்லேட் எடுத்து தன் வாயில் இட போகும் முன், " உனக்கு வேணுமா "...என்று துடித்து கொண்டு இருப்பவனிடம் நக்கலாக கேக்க அவனோ அந்த வலியிலும் தன்னை விடுமாறு பாதி ஹிந்தியிலும் , தமிழிலும் கலந்து இறைஞ்ச நீ சொன்னால் தான் விடுவேன் என்பது போல தன் வாயில் சாக்லேட்டை இட்டு மெல்ல ரசித்து மென்று சுவைத்து கொண்டு இருந்தான் வெற்றி....
அடி வாங்கியவனின் காலின் விரல் கிழிய தொடங்க இனி முடியாது என நினைத்தவன் அந்த பெண்ணை கடத்தினோம் என்ற உண்மையை கக்க அதை கேட்ட வெற்றிக்கு கோபம் தாளாமல் அடித்து நொறுக்கி விட்டான்....அதிலும் ஒரு அடி அவனின் மர்ம இடத்தில் கொள்ள வலியால் துடித்து கதறினான் அந்த கடத்தல்காரன்...
ஆனால் அவனை சொல்லியும் குற்றம் இல்லை..பாவம் அவனே கூலிக்கு வேலை செய்யும் ஆள்...அவனிடம் பேசிய ப்ரோக்கரை இது வரை அவன் இது நாள் வரை சந்தித்தது இல்லை என்னை விட்டு விடுங்கள் என்று வெற்றி கேக்காமலே எல்லாம் கூறி கதறி துடித்து கொண்டு இருந்தான்....அவன் கூறுவதை எல்லாம் பொறுமையாக கேட்ட வெற்றி மெதுவாக தன் காலை எடுத்தான்....
