நேசம் 7
நேசம் : 7
வெற்றியும் கண்மணியும் உரையாட அறைக்குள் சென்ற பின்னர் பெரியவர்கள் அனைவரும் உரையாடி கொண்டு இருக்க சரவணன் போனை எடுத்து கொண்டு அவர்கள் வீட்டு தோட்டத்தினை பார்வை இட்டு கொண்டு இருந்தான்...பின்னாலே வந்த அவள், "அயோ பாம்பு "...என்று கத்த அவனும், "எங்கே எங்கே"... என்று பதறி கொண்டே கேக்க அவளோ கூலாக, "அதுவா அது எங்கேயோ போயிடுச்சு"... என்று சிரித்து கொண்டே அனு கூறினாள்... அவனோ அவளை முறைத்து பின் சிறு பெண்ணிடம் போய் இப்படி ஏமாந்து விட்டோமே என தலையை சொரிந்து கொண்டே சிரித்தவன்.. அப்போது தான் அவளை பார்த்தான்...அவளும் அவனை பார்த்து சிரித்து கொண்டு தான் இருந்தாள்...அரக்கு வண்ண நிறத்தில் பாவாடை சட்டை அணிந்து இருக்க சரவணனோ அவள் உடையை பார்த்தும், அவளின் உடல் வாகை பார்த்தும், " ஏன் பாப்பா விளையாட நான் தானா உனக்கு கிடைச்சேன் "...என்று கேட்க...
அனுவோ, " என்ன பாப்பாவா ...ஹலோ என்னை விட உயரமா வளர்ந்துட்டிங்க.. இல்லை என்று கூறி நிறுத்தியவள், அவன் கண்ணை பார்த்து,
"நான் பாப்பா வா ...நான் காலேஜ் படிக்கிறேன்".. என்று மூக்கு சிவந்து தன் முட்டை கண்ணை விரித்து கொண்டு கூற அந்த முட்டை கண்ணில் விழுந்து விட்டான்...அப்புறம் சிறிது நேரம் இருவரும் உரையாட...என்ன பேசினர் என இருவரும் அறியர்... வெகு சீக்கிரத்தில் இருவரும் தங்கள் மொபைல் எண்களை பரிமாறி கொண்டு விட்டனர் ...அந்த அளவிற்கு இருவரும் பழக்கம் ஆகி இருந்தனர்.....காதலிக்க படுவதற்கும், காதலிக்க தொடங்குவதற்கும் நேரம், காலம், நீண்ட நாள் பழக்கம் எதுவும் தேவை இல்லையே ஒரு நொடி போதும் ...ஒரு வினாடி போதுமே...எந்த வினாடி சரவணனுக்கு அவளிடம் தோன்றியது என தெரியவில்லை... என்னவோ அவளிடம் உள்ள ஒன்று அவனை போட்டு தாக்கியது என்றே கூறலாம்...ஆனால் அனுவின் மனதில் அவனை தாக்கியது போல ஒன்றும் தாக்க வில்லை....
அவன் பெண்களை ஒன்றும் காணாதவன் அல்ல ...பார்த்ததும் கவர கூடிய அழகி அனு இல்லை ஆனாலும் அவளை அவனுக்கு பிடித்து இருக்கிறது...அவள் வேண்டும் என அவள் உள்மனம் கூறியது...என்ன தான் என்றாலும் அவளை நான் விட போவது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டான்... அதற்கு உன் அண்ணன் திருமணம் நடக்க வேண்டும் என்று மனசாட்சி அறிவுரை கூற அதை நடத்த வேண்டியது என் பொறுப்பு...நான் எப்படியாவது அண்ணன் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து விட்டான்...
ஒரு வழியாக வீட்டிற்கு வந்ததும் மகன் சரி சொல்லிவிட்டான் என்ற தைரியத்தில், "பொண்ணு நல்ல கலையா இருக்கு ல தம்பி "...என்று அன்னம் எடுத்து விட கண்மணி வீட்டில் இருந்து அவன் வீட்டுக்கு வரும் வரை அவள் நினைவில் இருந்தவன் இப்போது தான் தாய் கேட்கவும் மீண்டும் தன் குடும்பம் செய்தது நினைவு வர இவர்களால் தானே அவள் என்னிடம் இந்த அளவுக்கு பேசினாள் என்ற கோபம் துளிர் விட எல்லோரையும் பார்த்து முறைத்து ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு சென்றான் அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு பேக்கோடு வந்த வெற்றியை கண்டதும் தான் வேல் முருகனுக்கு சமாதானம் வந்தது...
ஆம் அவன் எதிர் வினை ஆற்ற வில்லை என்றால் அது அவரின் மகன் வெற்றி வேல் அல்லவே...இவன் எங்க கிளம்பிட்டான் என நினைத்த அன்னம், "எங்கே வெற்றி கிளம்பிட்ட"... என்று கேட்க
அவனோ மீண்டும் முறைத்தான்... அன்னத்திற்கு தான் விளங்கவில்லை... அவர் பார்வையில் அவன் தான் திருமணத்திற்கு சரி என்பது போல அங்கே சபையில் பெண்ணை பிடித்து இருக்கிறது என்று கூறி விட்டானே பிறகு என்ன என்ற யோசனையில் அவர் இருக்க அவனோ வேகமாக சென்று அவன் வளர்த்தும் அவனின் நாய் மணியை அவிழ்த்து கொண்டு இருந்தான்...
"என்ன வெற்றி அம்மா கேக்குறேன் நீ ஒன்னும் சொல்ல மாட்டேங்குற "...என்று மீண்டும் கேக்க அவன் பார்வை பார்த்து நாயை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, "உங்க கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு ...பொய் சொல்லி தானே கூட்டிட்டு போனீங்க...அந்த வீட்டுக்குள்ள போற வரை என்னை முட்டாள் ஆக்கிட்டு தானே இருந்தீங்க" ..அதனால் உங்ககிட்ட பேச ஒன்னும் இல்லை என்பது போல அவன் முறைத்தான்
மூன்று ஆண் மகன்களை கட்டி மேய்த்து வரும் அவருக்கு தெரியாதா தன் மகனை எப்படி வளைப்பது என்று...
ஒன்றும் தெரியாதது போல முகத்தை வைத்து கொண்டு, "அங்கே போனதுக்கு அப்புறம் நீ தானா ராசா அந்த பொண்ணை புடிச்சு இருக்கு னு சொன்ன"... என்று அவருக்கு நேரே பாய்ந்த ஈட்டியை லாவகமாக மகனுக்கே திருப்பி விட்டார் அன்னம்...
இதை எதிர் பார்க்காத வெற்றி அது வந்து என்று அவன் வார்த்தைகள் தடுமாற அன்னமோ இப்போ பதில் சொல்லு என்பது போல நின்று கொண்டார்...
"இப்போ சொல்றேன் எனக்கு அவளை பிடிக்கலை ...சொல்லிடுங்க"... என்று கூறி பேச்சை முடிக்க பார்க்க ....அன்னமோ அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் இவனை இப்படியே விட்டால் சரி வாராது என்று முடிவு செய்து விடாமல், "அப்படி எல்லாம் சொல்ல முடியாது ...என்ன காரணம் னு சொல்லு...நீ தான் வாக்கு கொடுத்து இருக்க நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க"...அவருக்கு இருக்கும் ஒரே பிடியே... அவன் கூறிய அந்த ஒரு சொல் தான் ...அதை கெட்டியாக பிடித்து கொண்டார் அன்னம்....
ஏனோ அவனுக்கு அவள் தன்னை பிடிக்கவில்லை என்று கூறியது மட்டும் யாரிடமும் ஏனோ கூற மனம் வரவில்லை... அதும் வேறு அவனை எரிச்சலை கொடுத்தது...அதிலும் அவனின் அம்மா வேறு சொன்னதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டு இருக்க அவனுக்கு எரிச்சல் மேலிட்டது...
இப்படியே நின்று கொண்டு இருந்தால் பேசியே கரைத்து விடுவார்கள் என நினைத்து அவன் கோப முகம் பூசி வெளியேறி விட்டான்....
வேல்முருகன் பார்த்து கொண்டு இருக்க சரவணனுக்கு தான் இப்போது பீதி ஆகி விட்டது..எங்கே இவன் சென்று விடுவானோ...கல்யாணம் வேணாம் என்று கூறி விடுவானோ என்று எல்லாம் நினைத்து , "டேய் வெற்றி சொன்னா கேளு டா..அவங்களுக்கு என்ன டா குறைச்சல், நல்ல குடும்பம் டா... "....என்று ஒரு புறம் கூறி கொண்டு இருக்கும் போதே வெளியேறி விட்டானே...
ஆனால் அன்னம் மட்டும் கூலாக இருந்தார்..சரவணன் ஓடி வந்து , "என்னமா இப்படி பேசிட்டிங்க... அவன் கோபப்பட்டு போறான் மா "..என்று கூற , அவரோ சலித்து கொண்டே , "அட போடா இவன் வேற இடையில வந்து கத்திட்டு இருக்கான் என நினைத்து ...அவனே போய்ட்டான் ...பொண்டாட்டியை கையை பிடிச்சு கூட்டிட்டு வா டா னா ...நாய் கையை பிடிச்சு இழுத்துட்டு தனி குடித்தனம் போறான் ...அது எல்லாம் அவனே வருவான் போடா..."....என்று கூலாக கூறி விட்டு டிவி சீரியல் பார்க்க அமர்ந்து விட்டார்...சரவணன் அதிர்ந்து தன் அப்பாவை பார்க்க அவரோ தனக்கும் அதே சந்தேகம் தான் என்பது போல, " நீ ஏன் இப்போ இடையில வர ...இடியே விழுந்தாலும் நீ கேள்வி எல்லாம் கேக்க மாட்டியே இன்னிக்கு என்ன புதுசா அண்ணன் மேல கரிசனம் "...என்று அவர் கேட்க...
தன் முகத்தில் ஏதேனும் படித்து விடுவாரோ என நினைத்து, " போங்க பா வீட்டுக்கு பெரிய மனுசனா நடந்துக்குங்க அப்பா "...என்று அவன் பங்கிற்கு திட்டி விட்டு அவன் அறைக்குள் சென்று விட்டான்...அவரோ மனதுக்குள் எங்கே சுத்தினாலும் கடைசில குடும்பமே என் தலையையே உருட்டுறாங்க என்று நினைத்து கொண்டார் வேல் முருகன்...
.......சென்னை.......
வெற்றியின் கார் சென்னையை நோக்கி பயணமாகி நேரம் நள்ளிரவு கடந்து விட்டது ...இன்னும் பத்து நிமிடத்தில் அவனுடைய தோழன் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்த வெற்றிக்கு இருக்கும் ஒரே நண்பன் சம்பத்தின் பிளாட் வர ...அவனை அழைத்து முன்பே சொல்லி விட்டான் நானும் மணியும் வந்து கொண்டு இருக்கிறோம் என்று அவனும் சரி என்று கூறி விட்டான்...ஊரே அமைதி ஆகி இருக்க விளக்கு இல்லா அந்த தெருவில் தூரத்தில் இவன் வாகனத்தின் வெளிச்சத்தை நோக்கி ஒரு உருவம் ஓடி வந்து கொண்டு இருந்தது...
தூரத்திலே வெற்றி கண்டுவிட்டான்...அந்த உருவத்தை பின் தொடர்ந்து நான்கு உருவங்கள் அந்த உருவத்தை துரத்தி கொண்டு வந்தனர்...முதலில் வந்த உருவம் வேகமாக ஓடி வர வெற்றி தன் வண்டியின் வேகத்தை கூட்டினான்... அந்த உருவத்தின் அருகில் வெற்றியின் கார் வரவும் வெற்றி வேகத்தை குறைக்க அந்த உருவம் கையை அசைத்து வண்டியை நிறுத்த சொல்ல அவனும் வண்டியை நிறுத்தினான்...
நேசம் தொடரும்.....
