Share:
Notifications
Clear all

நேசம் 6

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 6

நேசமடி நேசம்

 
    கண்மணியின் அறையில் இருவர் நின்று கொண்டு இருக்க ஒரு ஐந்து நிமிடம் மௌனமே மொழியாய் மாற அந்த இடம் முழுவதும் நிசப்தம் ஆட்கொண்டது... கண்மணியோ திரை சீலைகளை பார்வை இட்டு கொண்டு இருந்தாள்...அவளுக்குள் போராட்டம் எல்லாம் இல்லை சொல்ல வந்ததை சொல்லி இதோட எல்லாம் நின்று விட வேண்டும் என்ற நல்ல எண்ணம் மட்டுமே...அதிலும் அச்சம் ,மடம், நாணம் ,பதட்டம் இதில் எல்லாம் என்ன என்று கேக்கும் இவள் அவனிடம் பேச தன்னை தயார் செய்து கொண்டு இருக்கிறாள்...

அவனோ என்ன இவ திரும்பி நின்னுட்டு இருக்கா ஒரு வேலை வெக்கமா இருக்குமோ...சொல்ல வந்ததை
சொல்லிட்டு போய்டுவோம் பாவம் அந்த பெண்ணை பார்த்தாலும் கஷ்டமா தான் இருக்கு என்று அவளை பற்றிய நல்ல எண்ணங்களை தேடி பிடித்து அவன் விதைத்து கொண்டு இருக்க அதை தவிடு பொடியாக்கும் விதத்தில் , கண்மணி தொண்டையை கணைத்து அவனை அழைக்க அதுவரை அந்த அறையில் அவளும் அவள் தங்கையும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை பார்வையிட்டு கொண்டே யோசித்து கொண்டு இருந்த வெற்றி உடனே திரும்பினான்...

அவள் கணைத்ததும் அவனுக்கு ஒரு அதிர்ச்சி... அவன் ஒரு ஆண் மகன்...அதும் அவன் ஒரு போலீஸ்....அதை விட திமிர் பிடித்தவன்....இப்போது அவனின் ஒரு செயலில் சஸ்பெண்ட் பெற்று இருந்தாலும் இப்போதும் அவன் போலீஸ் அல்லவா அவளின் கணைப்பு அந்த விளி மெல்ல அவனின் கோபத்திற்கு வடிகால் இட...

அவன் பார்த்ததும் பொறுமை இல்லா அவனின் வருங்கால சண்டி ராணி பொரிய தொடங்கி விட்டாள்... "இதோ பாருங்க உங்க மனசில ஏதாவது நினைச்சிட்டு இருந்தீங்கனா அதை அழிச்சிடுங்க மிஸ்டர்...எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கலை"...என்று வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக ஒரே போடு போட்டாள்...முதல் முறை இவர்கள் உரையாடல் சுபமாக இப்படி தொடங்கியது...

அவனோ என்ன கூற வருகிறாள் என்று கேப்பதற்குள் அவள் பொரிய வெற்றிக்கு அதிர்ச்சி ...அவனோ இவளுக்கு என்ன உலக அழகி னு நினைப்பா... அதும் நான் சொல்ல வேண்டியது இவ சொல்லிட்டா அது கூட ஒகே விடு போகட்டும் ...ஆனால் உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கல னு சொல்றா ...அவள் பிடிக்கவில்லை என்று சொன்னதும் ஒரு ஆண் மகனாய் அவனின் தன்மானம் தூண்டி விட அதும் ஒரு பெண்ணின் நிராகரிப்பு அவனை மேலும் உசுப்பேற்ற மார்பில் கை கட்டி அவளை தலை முதல் கால் வரை அளவெடுத்தான்...

அவளோ இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என கூற வந்தவள் தன் அவசர துடுக்குத்தனத்தில் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டாள்..தான் என்ன கூறினோம் என்று கூட கண்மணிக்கு நினைவில்லை அது வேறு விஷயம்...அவளுக்கு எப்படியாவது இந்த ஏற்பாடு நிற்க வேண்டும்  அவ்வளவே...அதற்கு தான் தான் என்ன உளறினோம் என்றே தெரியாமல் உளறி கொண்டு இருக்கிறாள்...

வெற்றியோ மனதுக்குள் கொஞ்சம் முன்னே எல்லோர் முன்னிலையில் பேசுவதற்கே தெரியாதது போல அப்பாவி மாதிரி இருந்த இவளா இந்த பேச்சு பேசுறா அதும் அவளின் முகத்தின் மாற்றம் , அவளின் கோபம், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கொஞ்ச நேரம் முன்னாடி நான் சைட் அடிச்சது இவளை தானா னு அவனுக்கு தோன்ற அது இவளே தான் என அவன் மூளை அவனின் தலையில் ஒரு கொட்டு கொட்டியது....உடனே அவனின் திமிர் இப்போது குதித்து விடுவேன் என்பது போல வெளிப்பட்டது...

வெற்றியோ அவள் கண்களை நேருக்கு நேராக பார்வை இட்டான்... அவளை மேலும் கீழும் பார்த்து கொண்டே கோபத்துடன், " உன்னை எல்லாம் யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா..உன் மனசில என்ன ரொம்ப அழகி னு நினைப்போ"... தன் கையை தூக்கி அவள் முன்னால் நீட்டி, " நீ அந்த அளவுக்கு எல்லாம் என்னை இம்ப்ரெஸ் பண்ணல...நானும் உன்னை பிடிக்கலை னு தான் சொல்ல வந்தேன் அதுனால கொஞ்சம் அடங்கு "...என்று தெனாவெட்டாக , திமிராக , தன் ஒரு கையை தூக்கி அடங்கும் மாறு சைகையுடன் கூற கண்மணியின் முகம் கருத்து விட்டது..

ஆம் கல்லூரியில் அவள் பின்னால் சுற்றும் வாலிபர்கள் எத்தனை பேர் ...அதும் அந்த பிரகாஷ் இப்போது அவள் கண் அசைத்தாலே போதும் அவளின் கால் தரையில் படாமல் கூட தாங்குவான்... இவன் என்ன இப்படி சொல்லி விட்டான்.. இவனுக்கு திமிர் அதிகம் தான் ஆளும் மூஞ்சியும் பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி...மூஞ்சியை ஏன் தான் உர் உர் னு வெச்சு இருக்கான்...என்று மனதுக்குள் அவனை எப்படி எல்லாம் திட்ட முடியுமோ அவ்வளவு வறுத்து எடுத்து விட்டாள்...அது போதாமல்...

"ஹலோ யாரு நீ ....என் வீட்டுக்குள்ள அதும் என் ரூமுக்குள்ள நின்னுட்டு என்னையே பிடிக்கலை னு சொல்ற "...அவளால் அவன் கூறிய விதத்தை ஏற்று கொள்ளவே முடியவில்லை அதை வெளிப்படுத்த வில்லை என்றால் அவளால் உறங்க கூட முடியாது...

அவனோ, " சந்தேகமே வேணாம் உன்னை தான் அதும் உன் மூஞ்சியை தான் பிடிக்கல னு சொன்னேன்...அதும் மேக்கப் பாரு... பஞ்சு மிட்டாய் கலர் ல ஒரு ட்ரெஸ் ..காதுல ஒரு ஜிமிக்கி, கழுத்துல யானை பட்டம் மாதரி ஒரு செயின் ...இதுல என்னை பிடிக்கலை னு சொல்றா "..என்று முணுமுணுக்க..என்று அவளை வேண்டும் என்றே வெறுப்பேற்ற...சிறிது நேரத்திற்கு முன் எது எல்லாம் அவனை கவரந்ததோ அது எல்லாம் இப்போது அவனுக்கு கேவலமாக இருக்க அதை அவன் கூறி விட்டான்...

சண்டி ராணியோ அவன் கூறியதை கேட்டதும் மலை ஏற தயாராகி  இவன் என்ன நினைச்சிட்டு இருக்கான் என நினைத்து, அதிலும் அவள் உடையை பற்றி அவன் விமர்சித்தது அவளுக்கு அவன் மேல் எரிச்சலை கொடுக்க , "நான் ஒன்னும் உனக்கு வேண்டி ட்ரெஸ் பண்ணி நிக்கல என்னோட காதலனுக்கு வேண்டி தான் ட்ரெஸ் பண்ணி இருக்கேன்  "...என்று கூறி விட்டாள்....

அவனோ , "யாரு உன் மூஞ்சிக்கு லவ்வர் ஆஹ் "...என்று நக்கல் சிரிப்பை உதிர்த்து விட்டு அதே நக்கல் குரலில், " எப்படியோ கட்டிட்டு நாசமா போங்க"... என்று நடையை கட்ட தொடங்கினான்...

அவளுக்கு அவனின் நக்கல் தான் ஏற்று கொள்ள முடியவில்லை அப்படி எனக்கு என்ன குறை இவன் வந்து அசிங்கப்படுத்துகிறான் என நினைத்து "என் மூஞ்சிக்கு என்ன டா குறைச்சல்"... என்று அவனிடம் எகிறினாள்......

அதுவரை அவளை பார்த்து கொண்டு இருந்தவன் , "யாரை பார்த்து டி.. டா னு சொல்ற நான் யாரு னு ...உனக்கு தெரியுமா... நான் நினைச்சேன் னா உன்னை என்ன வேணா செய்யலாம் தெரியுமா ".....என்று அவன் கோபத்தில் ஒரு எட்டு முன்னே வந்து கூற

அவள் கால்கள் இரண்டு எட்டு பின்னுக்கு சென்றாலும் அவள் கூற வருவதை நிறுத்தவில்லை..."நீ யாரு னு எனக்கு தெரியும் போலீஸ்க்காரன் தானே நீ...காசு கொடுத்தா என்ன வேணாலும் செய்விங்க"... என்று கேவலமான முகத்தை மாற்றி அவள் கூற கடுப்பு ஆகி விட்டான் வெற்றி...

அவனை இதுவரை அவள் சாடும் போது பொறுமையாக இருந்த வெற்றி காவல்துறை பற்றிய அவளின் பேச்சை சகித்து கொள்ள முடியாதவன் இனி ஒரு நிமிடம் நான் இங்கே நின்றேன் என்றால் இவளை என்ன செய்வேன் என்று திரும்ப அவளோ விடாமல் ஏதோ நியாபகத்தில், "பொறுக்கி ங்க "...என்று அவள் முணுமுணுக்க  அவனுக்கு அது தெளிவாக கேட்டு விட்டது... அதற்கு மேல் பொறுமை இல்லை நேரே அவள் அருகே வந்தவன்," பொறுக்கி னு தானா சொன்ன"... என்று கேட்க கோப விழிகளில் கேக்க , அவளோ பதில் கூறாமல் முகத்தை திருப்பி கொண்டாள்...அவள் முகமே அவனுக்கு கூறியது...தான் கூறியது அந்த வார்த்தை தான் என்று...

அவனோ அவளிடம் நெருங்கி நின்று மெல்லிய குரலில் , "எது நீ வேண்டாம் னு சொன்னியோ , எது நீ வேண்டாம் னு நினைச்சியோ அது நடக்க போகுது"...என்று கூறி விட்டு வெளியேறி விட்டான்...அவன் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தவள் அப்போதும் அவன் மீதுள்ள கோபம் தனியாமல் இருக்க பொறுக்கி எப்படி போறான் பாரு என்று நினைத்து கொண்டு இருந்தாள்...அப்போதும் அவள் வாய் அடங்கவில்லை...

அவளை மிரட்ட வேண்டும் என்றே அவன் கூறி விட்டு அறையில் இருந்து வெளியே வந்த வெற்றியிடம் விஜயராஜன் மற்றும் அவரது உறவினர்கள்," என்ன தம்பி பேசுனீங்களா பொண்ணு பிடிச்சு இருக்கா "...என்று கேட்க

அவனோ நக்கல் குரலில் ,"எனக்கு  பிடிச்சு இருக்கு உங்க பொண்ணுக்கு பிடிச்சு இருக்கா னு கேளுங்க "...என்று கூறி அங்கே இருப்பவர்கள் வயிற்றில் பால் வார்த்து அன்னத்தின் தலையில் ஒரு குண்டை இறக்கி ....அறைக்குள் இருந்தே அவன் கூறியதை கேட்ட கண்மணிக்கு அவளது பாஷையில் கூற வேண்டுமெனில் ஆயுதமே இல்லாமல் பல்லை பிடுங்கி விட்டான்....அவன் சம்மதம் சொல்லுவான் என்று அன்னம் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை....அதே போல தான் கண்மணியும் இவன் என்ன என்னிடம் பிடிக்க வில்லை என்று கூறி விட்டு வெளியே போய் பிடிச்சு இருக்கு னு சொல்றான் என்று குழம்பி அங்கே இருந்த கட்டிலில் பொத்தென்று அமர்ந்து விட்டாள்...அதன் பின் அங்கே நடப்பது ஒன்றும் அவளுக்கு நினைவு இல்லை...

காரில் பயணம் செய்து கொண்டு இருந்த வெற்றி தான் என்ன கூறி விட்டு வந்தோம் அவர்களிடத்தில் கோபத்தில் இப்படியா சொல்லிவிட்டு வருவது...அவள் பேசிய பேச்சுக்கு இப்படி கூட செய்யவில்லை என்றால் எப்படி...ஒரு வேளை இந்த திருமணம் நடந்து விட்டால்...அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை...அவள் ஏதாவது செய்து நிறுத்தி விடுவாள் என்று நினைத்து கொண்டே பயணப்பட...

அன்னமோ நான் வேண்டியது போல அந்த பெருமாள் தன் மகனை மாற்றி விட்டானோ பெண்ணை பிடிச்சு இருக்கு னு சொல்லிட்டான் பாரு என்று வாய் மொத்தம் பல்லாக அமர்ந்து கொண்டு இருந்தார்...வேல் முருகனோ என்ன இவன் டக்குன்னு சரி னு சொல்லிட்டான் ...என்று குழம்பி மனைவியை பார்க்க அவர் சிரித்து கொண்டு இருக்கிறார்... அன்னத்தின் சந்தோஷம் வேறு சிறிது நேரத்தில் தவிடு பொடி ஆக போவது தெரியாமல் அனைவரும் பயணப்பட்டு கொண்டு இருக்கின்றனர்...

சரவணனோ வேறு ஒரு மனநிலையில் இருந்தான் ஆம் அங்கே அனுவை பார்த்தது முதல் அவனுக்கு என்ன ஆகிற்று என்றே தெரியவில்லை... முதல் பார்வையிலே அனு அவனை வீழ்த்தி விட்டாள் என்றே கூற வேண்டும்...அதிலும் அவளின் குழந்தை தனமான செய்கைகள் அனைத்தும் அவனுக்கு கண் முன்னே வந்து போனது...அவர்கள் இருவரும் கழிந்த அந்த நிமிடங்களை அசைபோட்டு கொண்டே இருந்தான் சரவணன்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top