Share:
Notifications
Clear all

நேசம் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

நேசம் : 5

"பொண்ணு வந்தாச்சு மாப்பிளை பாருங்க "...என்று சற்று முன் அவனை கடுப்பேற்றியவர் மேலும் கடுப்பேற்ற நிமிராமல் அமர்ந்து இருந்தவனை கண்டு, "மாப்பிளை ரொம்ப தான் வெக்கப்படுறாரு".. என்று மேலும் குசும்பு பேச  வெற்றியோ தன் இரு கையையும் பர பர வென தேய்த்தான்... இவன் அடி வாங்காம போக மாட்டான் என நினைத்து கொண்டு இருக்கும் போதே வெற்றியின் அருகில் அமர்ந்து இருந்த சரவணன் தன் அண்ணனுக்கு கோவம் வந்து விட்டதை உணர்ந்து வெற்றியின் கையை அமர்த்தி யாருக்கும் கேக்காத வண்ணம் , "கொஞ்சம் பொறுமையா இரு டா "...என்று மீண்டும் கூறினான்...வெற்றியோ குடும்பத்தின் மீது உள்ள கோபத்தில் அவனின் கையை தட்டி விட்டு அமைதியாக கோபத்துடன் அமர்ந்து இருந்தான்...

விஜயராஜன், " கண்மணி எல்லோருக்கும் கொடு மா"... என்று கூற மெல்ல அன்னநடை நடந்து வர அன்னத்திற்கோ மகிழ்ச்சி தாளவில்லை...

ஆம் கண்மணியின் அழகு அவரை கொள்ளை கொள்ள செய்தது என்றே கூறலாம் வெங்காய நிற சீலை உடுத்தி அதற்கு தகுந்த அணிகலன்கள் எல்லாம் அணிந்து இருக்க அதிலும் தலை குனிந்து அவள் வருவதை பார்த்ததும் பொண்ணு ரொம்ப அடக்கமான பொண்ணு மாதிரி இருக்கா அழகா ..லட்சணமா தான் இருக்கா ...என்று எல்லாம் கண்மணிக்கு ஒரு மாமியாராய் மார்க் இட்டு கொண்டு இருக்க ஒரே ஒரு குறை முடி மட்டும் கொஞ்சம் நீளமாக இருந்து இருக்கலாம் என்று...ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட குறை தான் அது....கண்மணி அவருக்கு டீ கொடுத்து முடிப்பதற்குள் அவளை அளந்து விட்டார்...அன்னத்தின் கண்களில் திருப்தி ஏற்பட்டது...

அடுத்து வேல்முருகன் மற்றும் சரவணனுக்கு கொடுக்க அவர்களும் எடுத்து கொண்டனர்...அடுத்து வெற்றி அவன் குனிந்த தலை நிமிரவே இல்லை...அவனுக்கு வெக்கம் இல்லை...பாவம் இந்த பொண்ணு ஒரு வேளை கல்யாண ஆசை ஏதாவது மனதில் வைத்து இருந்தால் என்ன ஆவது...அதிலும் இந்த பெண் பார்க்கும் சடங்கில் பெண்களை காட்சி பொருள் ஆக்கி நிறுத்துவது அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் அவனுக்கு கண்மணி மீது கரிசனம் வந்தது.... ஆனால் அவளின் குணம் தான் அன்னம் மற்றும் வெற்றிக்கு தெரியாதே...இப்போது கரிசனம் உள்ள அவன் மனதில் அவளின் பேச்சு இன்னும் சற்று நேரத்தில எரிச்சலை  கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...

அவளும் டீயை நீட்டி கொண்டே இருக்கிறாள் இவனோ தலையை நிமர்த்தவே இல்லை...இறுதியில் சரவணன் , "வெற்றி "...என்று அழைக்க அதுவரை அவளின் சாரியின் பார்டரை பார்த்து கொண்டு இருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்...அவளின் முகத்தை முதல் முறையாக வருங்காலத்தில் தனக்கு மனைவியாக ,காதலியாக, எதிரியாக,தோழியாக அவனுக்காக பிறந்த அவனின் சண்டி ராணியை பார்த்து விட்டான் வெற்றி....வெற்றியின் நெற்றிகண்ணை திறக்க வந்து விட்டாள் அவனின் கண்மணி...

அவள் இமைகள் மூடி அவள் கால்களை பார்த்து கொண்டு இருக்க அவளின் ஜிமிக்கி அவள் காதில் ஊஞ்சல் ஆடி கொண்டு இருக்க, அவளின் கழுத்தில் அணிந்து இருந்த ஆரம் அவனை அவள் அருகில் அழைப்பது போல இருக்க ஒரு நொடியில் அவளை அளவெடுத்து விட்டான்....அதில் விழுந்தும் விட்டான் வெற்றி ...ஒரு நொடி மட்டும் அவள் காதில் அணிந்து இருக்கும் ஜிமிக்கியாக மாறி விடமாட்டோமா என்று நினைத்தும் விட்டான்..."அழகா தான் இருக்கா "...என்று அவனின் மனதும் ஒத்து கொண்டது.... ஆனால் அவனுக்கு தான் திருமணம் வேண்டாமே என்று போலீஸ் மூளை அவனை தடை செய்தது......அடுத்த நொடி அவளை கண்டு தான் சிலாகித்து இருந்த விஷயத்தை எல்லாம் அழித்து விட்டான் வெற்றி...

அவளோ வெகு நேரமாக அவன் முன்னால் ட்ரேயை நீட்டி கொண்டு நிற்க இவனோ எடுக்காமல் என்ன செய்கிறான் என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்...அவள் கண்கள் அவனை சந்தித்து விட்டன...அவளும் அவனை பார்த்து விட்டாள்... தன் வருங்கால கணவனை, இனி எதிரியாக மாற போகிறவனை, காதலனாக மாற போகிறவனை , அவளின் உயிரின் சரி பாதியாக மாற போகிறவனை இமைக்காமல் ஒரு நொடி பார்த்து விட்டாள்... அதே நேரம் அவனும் அவளின் காஜல் இட்ட விழிகளை பார்த்து கொண்டு தான் இருந்தது...ஒரு அடி இடைவேளையில் இருவரும் நிற்க அவனின் பார்வை ஆளை கொள்ள ஏனோ அந்த நொடி அவள் முகமும் சிவக்கிறதா இல்லை வியர்க்கிறதா என தெரியாமல் நின்று கொண்டு இருந்தாள்...

அவன் இன்னும் டீ எடுக்க வில்லை...எடுத்தால் ஆவது போகலாம் இவன் என்ன ஒரு நொடியில் என் மூளையை மழுங்கடிக்கிறான் இவன் வேண்டாம் என்ற உறுதியோடு டீயை நீட்ட அவனும் மறுக்காமல் எடுத்து கொண்டான்...அவர்கள் இருவரை அவர்களின் இரு குடும்பங்களும் கேமரா இல்லாமல் படம் பிடித்து கொண்டு இருந்தனர்...

"இங்கே வா மா கண்மணி"... என்று அவளை அன்னம் அழைத்து தன் அருகில் நிறுத்தி கொண்டார்...இருவர் மனதிலும் போராட்டம் ...ஒரே எண்ணம்...இந்த திருமணம் வேண்டாம் என்பதே ஆனால் அது நடக்குமா...அவர்களின் எண்ணம் ஒரு போதும் நிறைவேற போவதும் இல்லை...என அறியாத இவர்கள் மனதிற்குள் போராட்டம் செய்து கொண்டு இருக்கின்றனர்...

அந்த வீட்டில் இருந்த வேறு ஒருவர், "பொண்ணையும் பையனையும் தனியா பேச சொல்லுங்கப்பா கூட்டத்துக்குள்ள அவங்க எப்படி பேசுவாங்க...வாழ போறது அவங்க பேசினா தானே ரெண்டு பேருக்கும் பிடிச்சு இருக்கா னு இல்லையா னு சொல்ல முடியும் "...என்று அவர் கூற அது எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்டது...

இந்த ஐடியா கொடுத்தவரை கண்மணிக்கு பிடித்து போனது...ஆம் கண்மணிக்கு ஒரே முடிவு தான் எனக்கு இதில் விருப்பம் இல்லை உன் மனசில் ஏதாவது இருந்தா அழிச்சிடு... ஒரு வேளை அவன் என்னை பிடிச்சு இருக்கு னு சொல்லிட்டான்னா என்று அவள்  உள்மனது கேள்வி கேட்க ...அப்படி மட்டும் அவன் சொல்லட்டும் அவனை என்ன பன்றேன் னு பாரு என்று கருவி கொண்டாள்... அவனோ அவள் வேண்டாம் என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டானே...ஆனால் இன்னும் சற்று நேரத்தில் அவனே அவன் வாயால் கண்மணியை பிடித்து இருக்கிறது என்று சொல்ல போகிறான் என்பது அறியாமல் இருவரும் பேசுவதற்கு தயார் ஆகி விட்டனர்...

இதோ இப்போது கண்மணியின் அறையில் வெற்றியும் கண்மணியும் மட்டும் நின்று கொண்டு இருக்கிறார்கள்...

நேசம் தொடரும்....



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top