Share:
Notifications
Clear all

நேசம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 10

நேசமடி நேசம்

   கண்மணி தான் உயிரை பிடித்து கொண்டு அவனை நோக்கி ஓடி வந்தாள் என்பதே அவன் மனதை அரிக்க ஒரு வேளை அவள் என்னை தேடி வராமல் அவனிடம் அவள் அகப்பட்டு இருந்தால் அவனுக்கு நினைக்கவே பதறியது..

அவள் இன்னும் அவனுடைய சொந்தம் எல்லாம் ஆகவில்லை.. எனினும் ஏனோ அவனின் மனதின் ஓரத்தில் வலித்தது...எந்த பெண்ணுக்கும் இந்த சூழல் வந்தாலும் அவன் மனம் பதறும் அதுவும் இவளுக்கு நடக்கும் என அவன் நினைத்து கூட பார்க்க வில்லை....அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தாலோ என நினைக்கவே வெற்றியின் மனம் பதைப்பதைத்து....இந்த எண்ணம் எல்லாம் எனக்கு ஏன் வருகிறது என்று இந்த நேரத்தில் அவனுக்கு தோன்ற வில்லை....

இன்று காலை புடவை உடுத்தி அலங்காரத்தோடு பார்த்தற்கும் இப்போது பயத்தில் வியர்த்து உதடு எல்லாம் வெளிறி பார்ப்பதற்கும் பாவமாக இருந்தது..ஆனால் அவள் எப்படி இங்கு வந்தாள் எப்படி இவர்களிடம் சிக்கிக்கொண்டாள் என்ற கேள்வி மட்டும் அவன் மனதில் எழ அவளை பார்த்து கொண்டே இவன் யோசித்து கொண்டு இருந்தான்...அதற்குள் நரசிம்மன் வந்து தான் கேட்ட கேள்விக்கு இவனிடம் இருந்து பதில் வாராது திமிர் பிடித்தவன் என்று முணுமுணுத்து கொண்டே , "ஓ இது தானா அந்த பொண்ணு ...மயக்கமா இருப்பா போல"....  என்று வெற்றியிடம் கேக்க அதற்கும் அவனிடம் பதில் இல்லை ...அவன் கண்கள் அவளையே வெறித்து கொண்டு இருந்தது....

அவரின் பொறுமையை இவன் சோதிக்க பொறுமை இழந்த அவர் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் க்கு அழைக்க போனார் ...ரிங்கின் ஒலி  மறுபுறம் ஒலிப்பதற்குள் உயிர் பெற்ற வெற்றி அவரின் செவியில் இருந்த போனை பிடுங்கி  அணைத்தான்...

அவனின் செயல் அவருக்கு கோபத்தை வரவழைக்க அவரோ அவன் மீது சினம் மூண்டு, " என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசில ...என்ன நினைச்சிட்டு இருக்க ...டிபார்ட்மெண்ட் ஐ தப்பா பேசுற ..இப்போ என்னோட வேலையும் பார்க்க விட மாட்டேங்கிற எதுக்கு இப்போ போனை ஆஃப் பண்ணின "...என்று கடுப்புடன் கூறிய நரசிம்மன் அவன் கையில் இருந்த அவருடைய போனை வாங்கினார்

அவனோ, " ஒரு நிமிஷம் யாரையும் அழைக்காதீங்க சார்... இந்த பொண்ணு ...இவ "...என்று வார்த்தைகள் அவனுக்கு கோர்க்க வர வில்லை... இந்த பொண்ணுக்கு என்ன என்று அவர் கேக்க வெற்றியிடம் பதில் இல்லை...

"என்ன டா நான் கேட்டுட்டு இருக்கேன் நீ ஒன்னும் சொல்ல மாட்டேங்கிற "...என்று கடுப்புடன் எப்போதாவது நரசிம்மன் விளிக்கும் ஒருமையில் பேச அவனோ, "இந்த பொண்ணு எனக்கு தெரியும்"... என்றான்....

"யார் இந்த பொண்ணு "...என்று மீண்டும் அவர் கேள்வி எழுப்ப இன்று காலையில் முதல் இப்போது வரை நடந்த சம்பவத்தை அவன் கூற அவன் கூறுவதை எல்லாம் கேட்ட அவரோ கெட்டத்திலும் ஒரு நல்லது என்பது போல நினைத்த நரசிம்மன் உடனே, " அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளிய வைக்க ஒரு சோடா வாங்கிட்டு வா"... என்று கூறினார்...

இரவு ஒரு மணிக்கு அங்கே ஒரு கடையும் காணவில்லை அவரோ சுற்றி முற்றி பார்க்க கடை எங்கேயும் தட்டுப்படவில்லை...இப்போ என்ன செய்ய என்று யோசித்து கொண்டு இருக்க இவர்கள் இருவரின் சம்பாசனையை கூர்மையாக கேட்டு கொண்டு இருந்த மணி அவன் காரின் முன்னால் இருக்கும் பாட்டிலை பார்த்து குரைக்க , மணியை கண்ட நரசிம்மன் நாய் விவரமான நாய் தான் என மனதுக்குள் நினைத்து, "வெற்றி உன் கார் ல இருக்கிற தண்ணியை எடுத்து அந்த பொண்ணு முகத்துல தெளி "...என்று கூற அவனும் அவர் கூறுவதை போல செய்ய அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான்...

தண்ணீரை எடுத்து அவளின் முகத்தின் அருகில் சென்று தெளிக்க அவள் எழவில்லை...மீண்டும் ஒரு முறை தெளிக்கும் போது அவன் தெளிக்க அவள் மெல்ல கண்களை திறக்க யாரை தன் வாழ்க்கையில் சந்திக்க கூடாது என நினைத்து இருந்தாலோ அவன்...கனவோ என்று கண்களை கசக்கி எல்லாம் பார்க்க அது அவனே தான் என அவள் கண்கள் கூறின....

அவனால் தான் எனக்கு இந்த நிலை வந்தது என நினைத்த அவள் அதிர்ச்சியோடு அவனை பார்த்து கொண்டே எழுந்தவள் சத்தியமாக அவனை இங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளின் முகமே அவனுக்கு காட்டி கொடுத்தது....

அதும் அவளுக்கு காலையில் இவன் குடும்பம் சென்றதும் நடந்த விஷயங்கள் எல்லாம் நிழல் போல படம் ஓடியது....காலை இவர்கள் சென்றதும் படுக்கையில் அமர்ந்து இருந்த கண்மணியின் ஜிமிக்கி இட்ட காதுக்கு தெளிவாக வெளியே குடும்பத்தார் உரையாடி கொள்வது கேட்டது... அவளின் தாத்தா விஜயராஜன் மற்றும் குடும்பம்,  "பையனை பார்த்தா நல்ல பையன் மாதிரி தான் இருக்கு...குடும்பத்தை பத்தியும் விசாரிச்சிட்டேன்...நல்ல குடும்பம் நமக்கு தேடினாலும் இது போல குடும்பம் நமக்கு கிடைக்காது அதுனால மேற்கொண்டு இந்த பந்தத்தை தொடரலாம் னு முடிவு செய்து இருக்கிறேன் இது என்னோட விருப்பம்"...என்று தன் விருப்பத்தை குடும்பத்தார் முன்னிலையில் கூறினார்....

மேலும் அவர், "என்ன மா ஜானகி நீ தான் பொண்ணோட அம்மா சொல்லு உனக்கு இந்த மாப்பிளையை பிடிச்சு இருக்கா".... என்று கேட்க அவரோ தன் கணவருக்கு கொடுத்த வாக்கின் படியும் வெற்றியிடம் குறை என்று கூற பெரிதாக ஒன்றும் அவர் காண வில்லை...அதிலும் அன்னத்தை அவருக்கு மிகவும் பிடித்து போக , "எனக்கு பிடிச்சு மாமா..பேசி முடிச்சிடுங்க"... என்று கூறினார்...

ஜானகி யின் பதில் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்க, "அப்போ கண்மணி கிட்ட ஒரு வார்த்தை கேட்டிடு மா "...என்று அவர் கூற அதற்கு ஜானகியோ , "அவளுக்கு எல்லாம் பிடிக்கும் மாமா... அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும் ...நாம சொல்லி அவ எதை மீறி இருக்கா...நீங்க மேற்கொண்டு நடக்க வேண்டியதை பாருங்க மாமா"... என தன் தாய் மாமனுக்கு உறுதி கூறிய ஜானகியை பார்த்து சிரித்து விட்டு வெளியே சென்று விட்டார் விஜயராஜன்...

அவள் வீட்டில் இருந்த உறவினர்கள் அனைவரும் அவளையும் வெற்றியையும் இணைத்து வைத்து பேசி அவளின் எரிச்சலுக்கு வடிகால் இட்டு கொண்டு இருக்க யாரை கேட்டு இவங்க முடிவு பண்றாங்க...என்ன நினைச்சிட்டு இருக்காங்க என்று எல்லாம் கண்மணியின் மனம் ஊமையாக குமைந்தது ...அவளது குமைச்சல் எல்லாம் வெற்றியின் மீதே இறங்கியது...அவன் பிடிச்சு இருக்கு னு சொல்லியதால் மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைத்த கண்மணி அனைத்து உறவினர்களும் செல்ல காத்து இருந்தாள்...

அடுத்த அரைமணி நேரத்தில் அவள் எதிர்பார்த்த படி அனைவரும் செல்ல வீட்டில் கண்மணி, அனு மற்றும் அவளின் தாய் ஜானகி மட்டுமே இருக்க, கண்மணி வெற்றி இந்த அறையை விட்டு செல்லும் போது எப்படி அமர்ந்து இருந்தாலோ அதே வாக்கிலே அமர்ந்து இருந்தாள்...

அனுவோ அவளின் மேல் உள்ள கோபத்தில் அவளை கண்டுக்கொள்ளாமல் புதிய நட்பு கிடைத்த சந்தோஷத்தில் சரவணனுக்கு ஹாய் மெசேஜ் அனுப்பலாமா வேண்டாமா அனுப்பினால் அவன் ரிப்ளை செய்வானா மாட்டானா ...என்று எல்லாம் அவனது வாட்சப் புகைப்படத்தை பார்த்து கொண்டே இருந்தாள்...இறுதியில் வேண்டாம் என விட்டும் விட்டாள்... அவனே அனுப்பட்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்...

அதுமட்டுமின்றி அவளுக்கு வேறு ஒரு முக்கியமான வேலை கூட இருந்தது தனது அம்மா காலை முதல் செய்த பலகாரத்தை புசிக்க வேண்டும் ...அடுக்களை வா வா என்று அழைக்க அந்நேரம் சரவணனோ இல்லை குமைந்து கொண்டு இருக்கும் அவள் அக்காவோ நியபாகத்துக்கு வர வில்லை...அடுக்களைக்குள் புகுந்து விட்டாள் அனு...

அந்நேரம் பார்த்து கண்மணியின் அறைக்கு சென்ற ஜானகி , "என்ன டி புடவையோட இருக்க ட்ரெஸ் மாத்திட்டு போய் சாப்பிடு போ "...என்றார் அது தான் அவருக்கு அப்போதைய முக்கியமான பிரச்சனையாக இருந்தது..

முதலிலே யாரை கடித்து குதறலாம் என காத்து இருந்தவளுக்கு தன் தாய் வரவும் பொங்கி விட்டாள்... "யாரை கேட்டு முடிவு பண்ணுனீங்க "...என்று கேட்க

அவரோ அந்த அறையை சுத்தம் செய்து கொண்டே , "யாரை கேக்கணும் "..என்று அழுத்தமாக பதில் வந்தது...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top