நேசம் 11
நேசம் : 11
"என்னை கேக்கணும்...உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால யாரையும் கல்யாணம் செய்ய முடியாது...இப்போவே நீங்க முடிவு செஞ்சதை நிறுத்துறீங்க"... என்று குரல் உயர்த்தி கூற
ஜானகியோ அவளை ஏறிட்டு பார்த்து கோபத்துடன் அவருக்கு கண்மணியின் குரல் உயர்ந்தது சுத்தமாக பிடிக்கவில்லை எனபது அவரின் முகத்தின் சாயல் மாறுபட்ட போதே கண்மணிக்கு அது விளங்கியது....இருந்தாலும் அவளுக்கு வேறு வழி இல்லை...பேசித்தான் ஆக வேண்டும்...ஆனால் ஜானகிக்கு அது எல்லாம் தெரிய தேவை இல்லை பெத்த அம்மாவிடம் இவள் எப்படி குரல் உயர்த்தலாம் என்பதே அவரின் கோபத்தின் காரணமாய் அமைய ,"ஏன் டி பேசமாட்ட நீ இதுவும் பேசுவ.. இதுக்கு மேலயும் பேசுவ...உன்னை கஷ்டப்பட்டு வளர்த்தி ஆளாக்கினேன் பாரு உனக்கு இது தான் பேச தோணும்...இதோ பாரு உங்களுக்கு எது நல்லதுன்னு எங்களுக்கு தெரியும்... அதுனால இப்படி குரல் உயர்த்தி பேசுறதை எல்லாம் என்கிட்ட வேண்டாம்...யார் கிட்ட பேசுறோம் னு பார்த்து பேசு ...இந்த கல்யாணம் நடந்தே தீரும்....உன்னால முடிஞ்சத செஞ்சுக்கோ"...என்று முகத்தில் கடுமையை வரவழைத்து கூற அவள் அதுக்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை...தன் தாய் உறுதியுடன் ஒரு விஷயத்தை கூறினால் அது நடத்தி காட்டி விடுவார் என கண்மணி அறிவாள்...
அவளுக்கு அவளின் ஆசை, ஏக்கம், கனவை கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை... அந்த இயலாமை அவளுக்கு கண்ணீரை வரவழைக்க யாரிடமும் அவளுக்கு மேற்கொண்டு பேச பிடிக்கவில்லை...
அவள் கூற வரும் விஷயம் அவள் ஏன் இந்த திருமணம் வேண்டாம் என்று கூறுவது எல்லாம் ஜானகி க்கு தெரிந்தாலும் அவருக்கு இப்போது எப்படியாவது தனது மூத்த மகளின் திருமணத்தை நடத்தி பார்த்து விட மனம் துடித்தது...அதும் அவருக்கு சில நாட்களாக அவரின் உடல் அவரின் கட்டுப்பாட்டை மீறி போய் கொண்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் அவருக்கு எழ தனக்கு பிறகு தன் குழந்தைகள் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி அவர் மனதை அரித்து கொண்டே இருக்க அதனால் தான் அவர் படிக்கும் பெண் என்று கூட பார்க்காமல் திருமணத்தை நடத்த பார்க்க துடிக்கிறார்...
இவளுக்கு ஒரு வழி செய்தாலே அவளுக்கு பின் நிற்கும் அனுவுக்கும் நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க முடியும் என்று நினைத்து தான் தன் மகளின் கோபத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்....
ஆனால் இது ஒன்றும் கண்மணிக்கு தெரியாதே அவளுக்கு அங்கே மூச்சு அடைப்பது போல இருந்தது...தன் மனதில் குமையும் எண்ணங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் , வெறுத்து போய் விரக்தியின் பிடியில் இருந்த அவள் அதன் பிறகு தான் தாயின் முகம் காணாமல் வேகமாக உடையை மாற்றிய கண்மணி தன் பேக்கில் அவளின் உடைகளை எல்லாம் திணித்து விட்டு சென்னை செல்ல தயாரானாள்...
தன் தாயிடம் விடை பெற கூட தோணாமல் கிளம்பி கொண்டு இருந்தவளை கண்டும் காணாமல் இருந்தார் ஜானகி என்ற இரும்பு மனுஷி...ரெடியாகி வந்தவள் தன் தங்கையிடமும் பேசாமல் வெளியே வாயில் படி கடக்கும் போது உள்ளே வந்தார் விஜயராஜன்...
"என்ன மா அதுக்குள்ள கிளம்பிட்டியா"... என்று கேட்க , "ஆமா தாத்தா நாளைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு "...என்று அவர் முகம் பார்க்காமல் வாயில் வந்ததை உளறிக்கொட்டி விட்டு வந்தாள்... மதியத்துக்கு மேல் கிளம்பியவள் பஸ் பிடித்து சென்னை போய் சேர்வதற்குள் நள்ளிரவு ஆகி விட்டது... பஸ் ஸ்டாப்பில் இருந்து அவளது ஹாஸ்டல் ஐந்து நிமிடம் தூரம் தான் அவளுடன் இறங்கிய ஒன்றிரண்டு பயணிகள் இவள் செல்லும் வழியில் நடக்க எப்போதும் ஆட்டோ பிடிக்கும் அவள் இன்றைய மனநிலையில் அவர்களுடன் நடந்து செல்ல தொடங்கினாள்...எல்லோரும் ஆங்காங்கே பிரிய அடுத்த வீதியில் தான் அவளின் ஹாஸ்டல் இவள் அந்த தெருவை கடக்கும் போது எங்கிருந்து தான் இந்த நால்வர் வந்தனரோ தெரியவில்லை... அவளை நோக்கி வரவும் கண்மணிக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை....அதிலும் அவர்கள் இருவர் அவள் முன்பு இருந்த வர பின்னால் இருவர் வர என அவளை அவளுக்கே தெரியாமல் அந்த கயவர்கள் சுற்றி வளைத்து இருந்தனர்...
இவள் பார்க்கும் போது அந்த தெருவில் இவளும் அந்த கயவர்கள் மட்டுமே இருக்க இவள் பயத்தில் பேக்கை எடுத்து முன்பில் இருந்த அவர்கள் மீதே வீசி விட்டு ஓடினாள்..அவர்களும் விடாமல் இவளை துரத்த யாராவது வர மாட்டார்கள் ளா என்ற ஓடியவள் முன்பு தான் அந்த கடவுள் கொண்டு வந்து நிறுத்தியது போல ஒரு வண்டி வர அவளும் தன் கையை ஆட்டி கொண்டே வந்தாள்... அந்த காரில் இருந்து இறங்கிய ஆளை கூட காணாமல் மயங்கி விழுந்து விட்டாள் கண்மணி கண் திறந்து பார்க்கும் போது அங்கே வெற்றி...
அவனை கண்டதும் அவளுக்கு எங்கு இருந்து தான் சக்தி வந்ததோ தெரியவில்லை காரில் இருந்து வேகமாக எழுந்தவள் , "நீ இங்கே என்ன பண்ற...எல்லாம் உன்னால தான் ...உன்னால தான் நான் இப்படி எல்லாம் மாட்டிக்கிட்டேன்...எனக்கு ஏதாவது ஒன்னு ஆகி இருந்தா நீ தான் டா அதுக்கு காரணம்".....என்று எல்லாம் குரலை உயர்த்தி கொண்டே பேசி கொண்டு இருந்தவள்..." அவங்க எப்படி துரத்தினாங்க தெரியுமா"......என்று குரலை தாழ்த்தி கூற அவன் முன்னால் அழ பிடிக்காமல் மூச்சை உள்ளே இழுத்து கொண்டு திரும்பி நின்றாள்....அவனுக்கு புரிந்தது அவளின் பதட்டமும் பயமும் இப்போதும் அவளின் உடலின் நடுக்கம் குறையவில்லை என அவள் உடலே அவனுக்கு விவரித்தது...
அவனோ அவள் கத்துவதை பார்த்தும் தன் உயர் அதிகாரி முன் தன்னோடு இவள் சண்டையிடுகிறாளே என கோபத்துடன் அவனும், " யாரை கேட்டு நீ இந்த ராத்திரியில் சுத்திட்டு இருக்க ...நீ எப்படி இங்கே வந்த "...என்று கேட்க..."திமிரு அதான் இப்படி சுத்திட்டு இருக்க...பயம் னு கொஞ்சமாவது வேணும் "...என முணுமுணுக்க அதில் வழிந்த அக்கறையை யாரும் கவனிக்கவில்லை என்றாலும் இவர்கள் இருவரின் சம்பாசனையை கேட்டு கொண்டு இருந்த நரசிம்மனுக்கு விளங்கியது...
" ஹம்க்கும் "...என்று தொண்டையை சரி செய்து நானும் இங்கே இருக்கிறேன் என்பது போல தொண்டையை கணைக்க அவர்கள் கூட இருந்த மணியும் குரைத்து நானும் இங்கே இருக்கிறேன் என அவர்கள் இருவருக்கும் அறிவுரைத்தனர்..
அப்போது தான் திரும்பி அவர்களை பார்த்த கண்மணியிடம் தன்னை அறிமுக படுத்திய நரசிம்மன் அவளிடம் நடந்த விஷயங்களை கேக்க அவளும் நடந்த விஷயங்களை தெளிவாக கூறினாள்... அவள் கூறுவதை கேட்ட நரசிம்மன் மற்றும் வெற்றி மேலும் சில விஷயங்களை கேட்டு தெளிவு படுத்த கண்மணியோ நரசிம்மன் கேள்விக்கு எல்லாம் பதில் உரைத்தவள் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்... அவளிடம் அவள் வீட்டு போன் நம்பர் நரசிம்மன் கேக்க அவளும் அவள் வீட்டு எண்ணை கொடுத்து விட்டாள்....வாழ்க்கை திசை திரும்ப போகிறது என்பது அறியாமலே...
ஒரு மாதத்திற்கு பிறகு....
திருமணமே வேண்டாம் என்று சொல்லி வீட்டாரிடம் சண்டையிட்டு வெளியே வந்த தனிக்காட்டு சிங்கங்கள் இருவரும் இணைய போகின்றன....வருங்காலத்தில் முட்டி கொள்ள ஏதுவாக இதோ மணமேடையில் முட்டியும் முட்டமாலும் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களையும் வாய் முணுமுணுக்க தங்களின் வாழ்க்கை இறுதியில் இப்படி ஆகி விட்டதே என்று மனம் அந்த ஹோமகுண்டத்தின் புகையை போல , புகையோடு புகையாக வெற்றியும் கண்மணியும் மணமேடையில் அமர்ந்து இருந்தனர்...இன்னும் ஐந்து நிமிடத்தில் குடும்ப பந்தத்தில் இணைய போகின்றனர்....
நேசம் தொடரும்...
