நேசம் 3
அத்தியாயம் : 3
நேசமடி நேசம்
காரில் பயணம் செய்து கொண்டு இருந்த அனைவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்...வெற்றியை தவிர எல்லோர் முகத்திலும் பீதி தான் என்ன நடக்க போகிறதோ என்று...அதிலும் சரவணனோ , "பேசாம வேலை இருக்குன்னு சொல்லி இந்த வாரம் வராம இருந்து இருக்கலாம்...இந்த அம்மா தான் அழுது சீன் போட்டு இங்கே வர வெச்சிட்டு அங்கே போய் இவன் என்ன பண்ண போறானோ "... என மனதுக்குள் புலம்பி கொண்டு இருந்தான்...
வேல்முருகன் மற்றும் அன்னத்திற்கு பீதி இருந்தாலும் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என பிராத்தனை செய்து கொண்டே பயணம் ஆகினர்....
வண்டியின் நிசப்தத்தை கண்டதும் வெற்றியின் போலீஸ் மூளையில் ஏதோ சரி இல்லை என்பது போல தோன்ற பேச்சு கொடுக்கும் விதத்தில் எப்போதும் விடாமல் கலகலத்து வரும் தன் தம்பி சரவணன் இன்று அமைதியாக வருவதை கண்டு, "சரவணா உனக்கு எப்போ போகனும் "...என்று கேட்க ஏதோ நினைவில் இருந்தவன் இப்போ விட்டா கூட நான் போயிடுவேன் டா என்று நினைத்து வெளியே கூறாமல் "நாளைக்கு"... என்று கூறினான்...அவனின் ஒற்றை பதில் வேறு வெற்றியை குழப்ப கண்ணாடி வழியே பின்னால் அமர்ந்து இருக்கும் தன் தந்தையை பார்க்க அவரோ கண்ணை மூடி படுத்து இருந்தார்...
தாயோ ஸ்லோகம் சொல்வது போல ஏதோ முணுமுணுத்து கொண்டு இருந்தார்...வெற்றியோ அந்த பக்கம் இந்த பக்கம் கார் ஸ்டியரிங் என எல்லாத்தையும் பார்வை பார்த்து கொண்டே, " எந்த கோவிலுக்கு போகனும்".. என்று கேட்கவும் ஒரு ஸ்பீட் பிரேக்கில் ஏறி குதிக்கவும் காரில் இருந்த அனைவரின் இதயம் நின்று துடிக்கவும் எல்லாம் மிக சரியாக ஒரே நேரத்தில் நடந்தது....
சரவணனோ எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என மொபைலை நோண்ட ஆரம்பித்து விட்டான்...வேல் முருகனோ வண்டி தலை குப்புற கீழே விழுந்தாலும் நான் துக்கத்தில் இருந்து எழ மாட்டேன் என்பது போல தூங்கி தூங்கி வழிந்து கொண்டார்..
அன்னம் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து முறைத்து விட்டு , "என்ன பா கேட்டே"... என்றும் ஒன்றும் கேக்காதது போல கேக்க
"எந்த கோவிலுக்கு போறோம் னு கேட்டேன்'... என்று தன் குரலை உயர்த்தி கேட்கவும் , அன்னத்திற்கு கொஞ்சம் உதறினாலும் வெளியே அதை காட்டாமல், "அது வந்து பா...ஆதிவாரகர் கோவில் பா"... என்று கூற அவனோ வண்டியை அந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் திருப்பினான்...
அன்னம் பதில் கூறி முடித்ததும் மெல்ல ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்த வேல் முருகன் செய்கையில் , "அப்போ பொண்ணு பார்க்க போகலையா "...என்று செய்கை மொழியில் கேக்க
அன்னமோ இத்தனை நேரம் தூங்குன மாதிரி படுத்துட்டு இப்போ கேள்வியா கேக்குறீங்க என்பது போல பார்த்து விட்டு அவர் கண் முன் தன் கையை நீட்டி எச்சரிக்கை செய்வது போல கண்ணை உருட்டினார்..."இத்தனை நேரம் என்ன பண்ணுனீங்களோ அதே மாதிரி கம்முன்னு தூங்குறீங்க கண்ணை திறந்தீங்க கண்ணை நோண்டி புடுவேன்"... என்று மெல்லிய குரலில் கூறி முறைக்க அவரோ எதுக்கு வம்பு என்று கண்களை மூடி கொண்டார்...
அன்னத்திற்கு தெரியும் தான் ஏமாற்றி தான் மகனை அழைத்து செல்கிறோம் என்று ஆனால் அவரும் வெற்றி வேலையில் சேர்ந்த நாள் முதல் கேட்டு அலுத்து விட்டார்..அவன் செவி தான் சாய்க்கவில்லை.... அதனால் தான் இந்த முடிவுக்கு அவர் வந்து விட்டார்..
அன்னம் கூறிய ஆதிவாரகர் கோவிலில் வெற்றி காரை நிறுத்த எல்லோரும் இறங்கி மனம் உருக பிராத்தனை செய்தனர்....எல்லாம் முடிந்து கார் வரை அனைவரும் வந்து விட்டனர்...அதன் பின் வண்டியில் ஏற போன வெற்றியிடம் , "ராசா இங்கே அப்பாவோட பால்ய ஸ்நேகிதன் வீடு இருக்கு அங்கே ஒரு எட்டு போய்ட்டு வந்திடுவோமா "....என்று கேட்க
அவனோ , "ஏன் அவரு தனியா போய் பார்க்க மாட்டாரா குடும்பத்தோட தான் போகனுமா "...என்று தான் தன் தந்தையை பார்த்து கொண்டே அன்னத்திடம் கேள்வி கேட்க , "இல்லை பா இவ்ளோ தூரம் வந்துட்டோம் அடுத்த தெரு தான் வா பா போய்ட்டு வந்திடுவோம்"... என்று மீண்டும் அவர் நச்சரிக்க...
தாயின் தொல்லை தாங்க முடியாமல் அவனோ, " அரை மணி நேரத்து மேல என்னால இருக்க முடியாது"...என்று கூற "ராசா நீ வந்தா போதும் வா"... என்று முறுக்கி கொண்டு நின்று இருந்த வெற்றியை இழுத்து கொண்டு ஒரு வழியாக வந்து விட்டார் அன்னம்...இதோ கண்மணியின் வீட்டின் முன் வந்து விட்டனர்...
அவர்கள் வீட்டில் கார் சத்தம் வெளியே கேட்டதும் விஜயராஜன் துளி கம்பீரம் குறையாமல் , "வாங்க வாங்க "...என்று வரவேற்க வெற்றிக்கு அவரை கண்டதும் மரியாதை வந்தது தானாக கை எடுத்து கும்பிட்டான்...
வீட்டுக்குள் செல்லும் போதே வெற்றி சுற்றியும் முற்றியும் வீட்டை அளவிட்டான்...அவனுக்கு ஏதோ வளையல் சத்தம் மற்றும் யாரோ பேசுவது போல இருக்க சத்தம் வந்த திசையை பார்க்க அங்கே யாரையும் காணவில்லை...அதற்குள் சரவணன், " வெற்றி இங்கே என்ன பண்ற வா "...என்று அவனை அழைக்க வெற்றியும் உள்ளே சென்றான்...
வீட்டுக்குள் செல்ல ஒரு சில உறவினர்கள் எல்லோரும் இருக்க விஜயராஜன், " வாங்க வாங்க உக்காருங்க "..
என்று வேல்முருகன் குடும்பத்தை வரவேற்றனர்...அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜானகி நாலு மணி முதல் செய்த பலகாரங்கள் கடை பரப்பப்பட்டன.... வெற்றியோ என்னமோ பொருந்தாத சூழ்நிலையில் இருப்பது போல அமர்ந்து கொண்டு இருந்தான்....
கார் வெளியே வந்ததும் கண்மணி அவள் அறையின் திரை சீலைகளை விலக்கி வந்தது யார் என பார்த்து விட்டாள்... உடனே பெண்களுக்கே உரித்தான குணங்களில் அவனை அளவிட தொடங்கினாள்..ப்ளூ நிற சட்டையில் சுமார் ஆறு அடி உயரத்தில் வெளுப்பும் இல்லாமல் கருப்பும் இல்லாமல் கோதுமை நிறத்தில் ஆண்மைக்கே இலக்கணமாக வெற்றி இருக்க கண்மணியின் கூடே மாப்பிள்ளையை பார்த்து கொண்டு இருந்த அனு , "அக்கா அழகா இருக்கார் ல".. என்று கூற தானும் அவனை தான் இத்தனை நேரம் பார்த்து கொண்டு இருந்தோம் என்ற கோபத்தில் தங்கையின் தலையில் கொட்டி , "அப்போ நீயே கல்யாணம் பண்ணிக்கோ "...என்று திரை சீலைகளை மூடினாள்...அனு வோ தலையை கொட்டியதில் கோபம் வந்து "போடி ...என்னை கொட்டிட்டில ...உனக்கு இந்த கல்யாணம் நடந்திடும் பாரு"...என்று தன் அக்காவை சபித்து, கத்தி கொண்டு போய் விட்டாள்...
"ஹே போகாத டி...அனு...நீ சொன்னதை மாத்தி சொல்லிட்டு போ டி "... என்று கெஞ்ச அவள் துணை இருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்த அவள் மனது மீண்டும் துடிக்க தொடங்கியது...அதிலும் அனுவின் வாக்கு பலித்து விடுமோ என்ற பீதியும் இருந்தது...
