நேசம் 2
அத்தியாயம் : 2
சில மணி நேரங்களுக்கு முன்
திருநெல்வேலியில் ஒரு அடுக்குமாடி குடி இருப்பில் ஒரு வீட்டுக்குள் இருந்து, "என்னங்க அவன் கிட்ட என்ன சொல்லி வைச்சிங்க "...என்று கணவன் வேல் முருகனின் காதை கடித்து கொண்டு இருந்தார் அன்னலக்ஷ்மி ...
அவரோ , "நான் ஒன்னும் சொல்லலையே...போய் சொல்லிட்டு வந்திட வா நாம போறது கோவிலுக்கு இல்லை ...பொண்ணு பார்க்க தான் னு"... என்று உளறி கொண்டு இருக்க தோசை வார்த்து கொண்டே கரண்டி சகிதம் வெளியே சென்று நோட்டம் பார்த்து விட்டு வந்து கணவனின் முன் தோசை கரண்டியை நீட்டி கொண்டே , "நீங்க ஏதாவது அவன் கிட்ட உளறி கொட்டி வைச்சிங்க அப்புறம் அவ்ளோ தான்...நானே ரெண்டு பையனை பெத்துட்டு யாருக்காவது கல்யாணம் பண்ணி பார்த்திட மாட்டேன் னா னு இருக்கேன் நீங்க என்ன டா னா காரியத்தை கெடுக்க பார்க்கிறீங்களே"...என்று கரண்டியை நீட்டி கொண்டே பேச
அவரோ எங்கே தன் மனைவி அந்த சூடான கரண்டியை வைத்து எனக்கு ஒரு மார்க் போட்டு விடுவாளோ என்ற பீதியிலே , "நான் ஒன்னும் சொல்லல அன்னம் அந்த கரண்டியை அந்த பக்கம் வை...நீயே போய் அவன் கிட்ட என்ன புளுக போறியோ புளுகு போ "...என்று விரட்டி விட்டார்...
அவரின் மனைவியோ ,"ஆமா நாங்க தான் பொய் சொல்லிட்டு திரியறோம் நீங்க எல்லாம் ரொம்ப சுத்தம் "...என்று அவரை நொடித்து கொண்டே, " இந்த கரண்டியை பிடிங்க அந்த தோசையை திருப்பி போடுங்க "...என்று மனைவியின் ஆயுதத்தை அவரிடம் நீட்டி விட்டு சென்று விட்டார்...
ஆம் அவரும் அந்த வீட்டில் அன்னலக்ஷ்மி யின் எடுபிடி தான் மகன்களை ஏவ முடியாததை எல்லாம் இவரை வைத்து சரி செய்து கொள்வார்...சில சமயம் மகன்களை கடிய முடியாதது எல்லாம் இவரை வைத்து தீர்த்து கொள்வார்...அவரும் தலையை ஆட்டி கொண்டே சென்று விடுவார்...வேல் முருகன் சீறும் போது மனைவி அமைதி ஆவதும் அன்னம் சீறும் போது வேல் முருகன் அமைதி ஆவதும் அந்த வீட்டின் வழமை அதனால் முப்பது வருட இல்வாழ்க்கை அழகாக இரண்டு ஆண் மக்களோடு நகர்ந்து கொண்டு இருக்கிறது..
அன்னலக்ஷ்மி சமையல் அறையில் இருந்து வெளியே செல்லும் போதே உறங்கும் தன் இரண்டாவது மகன் சரவணனை , " சரவணா சீக்கிரம் ரெடி ஆகு பா "...என்று கத்தி கொண்டே அந்த வீட்டின் பால்கனியில் கட்டி வைத்து இருக்கும் மணி அவர்கள் வீட்டு செல்ல பிராணிக்கு பந்து இட்டு விளையாடி கொண்டு இருக்கும் தன் மூத்த மகன் வெற்றி வேலை காண சென்றார்...
இவர்கள் இரண்டு பேரை போல அவனிடம் அன்னத்தின் உருட்டும் பிரட்டும் எல்லாம் வேலைக்கு ஆகாது...நயமாக பேசினால் மட்டுமே காரியம் நடக்கும்..பொதுவே கோபக்காரன் ..அதிலும் அவன் பிரியப்பட்டு செய்த வேலையில் முதல் சஸ்பென்ட் கிடைத்து மூன்று மாதமாக வீட்டில் இருக்கிறான்...அதுவே அவனுக்கு கடுப்பை கொடுக்க எல்லோரிடமும் எறிந்து விழுந்து கொண்டு இருக்கிறான்...
அவனுக்கு கல்யாணம் யோகம் கூடி வந்து இருக்கிறது பெண் பாருங்கள் என அவர்களின் குடும்ப ஜோதிடர் கூற அன்னம் அதற்கான வேலையில் இறங்கி விட்டார்..
மூன்று மாதமாக மகன் அறியாமல் பெண் பார்க்க வலை வீசி கொண்டு இருக்கிறார்...அவர் வலையில் வீழ்ந்தது தான் கண்மணி குடும்பம்...அவனிடம் வேலை போய் இருக்கும் சமயத்தில் கல்யாணம் என்று கூறி கொண்டு சென்றால் வெற்றியிடம் இருந்து அன்னம் தான் வாங்கி கட்டி கொள்ள நேரிடும்...அதனால் வெற்றியிடம் அவர் இந்த விஷயத்தை பற்றி ஒன்றும் கூற வில்லை...
எல்லாம் கண்மணி குடும்பத்திடம் பேசி முடித்தாகி விட்டது...இனி இவனை எப்படியாவது இழுத்து செல்ல வேண்டுமே என்று நினைத்து மெல்ல அவனிடம் செல்ல
அங்கே அவரின் மகன் வெற்றியோ மூன்று மாத தாடியை மலிக்காமல் நாயுடன் விளையாடி கொண்டு இருக்கிறான்...
"ராசா வெற்றி".. என்று அழைக்க என்ன என்பது போல ஒரு பார்வை மட்டுமே வந்தது அவனிடம் இருந்து அவனுக்கு பதில் அவன் வளர்த்தும் நாய் அவர் கூற வருவதை கேக்க காதை தீட்டி கொண்டு அவரை பார்த்தது..
அதை பார்த்ததும் அன்னத்திற்கு கோபம் வந்து மகனை முறைக்க முடியாததற்கு நாயை முறைத்து மனதை ஆற்றி கொண்டார்...
"தம்பி அம்பாசமுத்திரம் பக்கத்தில ஒரு கோயில் இருக்கு பா ...வா ராசா எல்லோரும் போய் சாமி கும்பிட்டு வந்திடுவோம் "...என்க...
எப்போதும் போல வர முடியாது என்னை எதுக்கு கூப்பிடுறீங்க என்பது போல முறைத்தான்...வாயை திறந்து தான் அவன் கூற மாட்டானே...அவ்வளவு திமிர்....அதை எல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகுமா என்று நினைத்த அன்னம்...
"தம்பி ஜோசியர் கிட்ட போனேன்... உனக்கு கிரகம் சரி இல்லையாமா ... ஒரு எட்டு இந்த கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வந்தோம் வை எல்லாம் சரி ஆகும் தம்பி...அம்மாக்கு வேண்டி வா பா"... என்று தேனும், பாலும் ,பழமும் சேர்த்த குரலில் அவர் கூற அவனோ ,"மப்ச்".. ...சலித்துக் கொண்டு, "ஏன் அந்த கோவிலுக்கு போகாட்டி என் கிரகம் போகாதாமா...என் கிரகத்தை நான் தான் முடிவு பண்ணனும் அந்த ஆள் இல்லை புரியுதா "..என குதர்க்கமாக கேள்வி கேட்க,
அவரோ கையையும் சேலை முந்தானையும் பிசைந்து கொண்டு நின்று கொண்டு இருந்தார் இதற்கு என்ன பதில் சொல்ல என்று...இது அவரது வாடிக்கை தான் இருந்தாலும் மகன் முன்னிலையில் அப்படி தான் இருப்பார்....
தாய் முழிப்பதை பார்த்து என்ன நினைத்தானோ, " வரேன் போங்க "...என்று கூறி விட்டு மீண்டும் நாயுடன் விளையாடி கொண்டு இருந்தான்...
அவருக்கோ அந்த சமயம் தான் தொண்டையில் அடைத்த ஒரு குண்டு இறங்கி வெளியே சென்றது...இனியும் ஒரு குண்டை கூட அவர் இறக்கி வைத்து விட முடிவு செய்து, " தம்பி சேவ் பண்ணிக்க பா...முகமே தெரிய மாட்டேங்குது"... என்று கூற
வெற்றி முறைக்க போகும் முன் அங்கு அன்னம் நின்று கொண்டு இருந்தால் தானே ஓடி விட்டார்...அவரை முறைத்து பார்த்து கொண்டே வெற்றி தன் அறைக்குள் செல்ல அங்கே அவனின் கண்ணாடி , தன் தாய் கூறியது சரி தான் என்பது போல கூற நாள் பட்ட தன் தாடியை சரவம் செய்தான்... இப்போது தான் அவனின் முகமே வெளிச்சத்திற்கு வந்தது...பின் குளிக்க சென்றான் வெற்றி...
"தம்பி இந்த ட்ரெஸ் போட்டுக்கோ "...என்று குளியல் அறையை தட்டி அன்னம் ஒரு பொதியை வைத்து விட்டு சென்றார்... குளித்து முடித்து வந்தவன் கண்ணில் அங்கே நீல கலர் சட்டையும் அதற்கு மேட்ச் ஆக அந்த கரை கொண்ட வேட்டியும் இருந்தது...அவனோ அந்த உடையை பார்த்து விட்டு வெற்றி மனதுக்குள் பொண்ணா பார்க்க போறேன் ...கோவிலுக்கு தானே போறோம் இதுக்கு புது ட்ரெஸ் என்று அந்த புது உடையை எடுத்த இடத்திலே வைத்து விட்டு வேறு உடை எடுக்க போனவன் என்ன நினைத்தானோ மீண்டும் அவனின் அன்னைக்கு வேண்டி அவர் வைத்து இருந்த உடையையே உடுத்தினான்...
அவன் மனதில் நினைத்த காரியம் தான் நடக்க போகிறது என்று தெரியாமல் தயாராகி விட்டான்...அம்பாசமுத்திரத்தில் என்ன நடக்க போகிறது என்று தெரியாமல்....வெற்றியின் தம்பி சரவணன் கார் எடுக்க போக வேண்டாம் என மறுத்து அவனே வண்டியை ஓட்டி கொண்டு இருக்கிறான்...அன்னமும் தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டி தன் மகனுக்கு நல்லது நடக்க வேண்டி கொண்டு காரில் ஏறி அமர்ந்து விட்டார்...
நேசம்......
