Share:
Notifications
Clear all

நேசம் 1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 7 months ago
Messages: 540
Thread starter  

அத்தியாயம் : 1

நாயகன் : வெற்றிவேல்

நாயகி : கண்மணி

அம்பாசமுத்திரம்- கல்லிடைகுறிச்சி

   கல்யாண புரி என அழைக்கப்படும் கல்லிடைக்குறிச்சி ... கல்+இடை+குறிச்சி இது தான் கல்லிடைக்குறிச்சி என்று அழைக்கப்படுகிறது என்ற கருத்து  இங்குள்ள குடியானவர்களால் பேசப்படுகிறது. இரண்டு கற்களுக்கு இடையை உள்ள குறிச்சி. குறிச்சி என்றால் இருப்பிடம். இரண்டு கல் என்று குறிப்பது மணிமுத்தாறுக்கும், அம்பாசமுத்திரத்துக்கும் இடையே உள்ள ஊர் என்பதை குறிக்கிறது. இந்த இரண்டு ஊர் கல்களும் இடையே உள்ள குறிச்சி கல்லிடைக்குறிச்சி என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்லிடைக்குறிச்சி முன்பு வழங்கப்பட்ட பெயர் கல்யாணபுரி...

இந்த அழகிய கல்யாணபுரியில் தான் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என்று அவள் பிடிவாதம் பிடித்து கொண்டு இருக்கிறாள் ஒருத்தி...யாரிடமும் முறையிட கூட முடியாமல் அவள் போர்வையினுள் தலையை விட்டு அதனிடம் சண்டை இட்டு கொண்டு இருக்கிறாள்... அவளின் திருமணத்திற்கான முதல் படி பெண் காணும் சடங்கு இன்று நடைபெற இருக்க அவளோ யாருக்கு வைத்த விருந்தோ என துயில் கொண்டு இருக்கிறாள்....

"ஹே கண்மணி எழுந்திரிச்சு தொலை டி பத்து மணிக்கு எல்லாம் மாப்பிளை வீட்டில் எல்லாம் வந்திடுவாங்க".... என்று தன் மைக் செட் குரலில் ஊரே கேக்கும் படி ஜானகி கத்தி கொண்டே வியர்வை ஒரு புறம் வழிந்து கொண்டு இருக்க முந்தானையால் துடைக்க கூட  சமயம் இல்லாமல் பலகாரம் செய்து கொண்டு இருந்தார்... அவருக்கு அவசரம் மாப்பிளை வீட்டார் வரும் முன் எல்லாம் செய்து முடித்து விடுவேனா என்று பயந்து கொண்டே பாவம் காலை நான்கு மணி முதல் அடுக்களையில் வெந்து கொண்டு இருக்கிறார்...

அம்மாவின் குரலில் அசையாத கண்மணியை பார்த்து , "அக்கா எந்திரி அக்கா எந்திரி"... என்று அஞ்சலி பாப்பா போல அவளை எழுப்பி கொண்டு இருக்கும் அவள் தங்கை அனு ஆகட்டும் யாருடைய குரலும் அவளுக்கு செவி சாய்க்க வில்லை...

அவளோ உங்க பேச்சு எல்லாம் என்னால கேக்க முடியாது நான் என்ன நினைச்சு இருக்கேனோ அதை தான் நான் செய்வேன் என்று யாருக்கும் அடங்க மாட்டேன் என்று  இழுத்து போர்த்தி உறங்கி கொண்டு இருந்தாள்...

"என்ன மா ...கண்மணி ரெடி ஆகிட்டாளா"... என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விஜயராஜன்....ஆம் வயது 68 ஆனாலும் இன்னும் உடம்பை கனகச்சிதமாக வைத்து கொண்டும் அவரின் முறுக்கு மீசையை கண்டால் போதும் அவர் வீட்டில் யாரும் அண்ட மாட்டார்கள்...இன்றும் அந்த ஏரியாவில் தானும் ஒரு போலீசாக இருந்தேன் என்னிடம் வந்தால் உனக்கு அடி உறுதி என்று கை முஷ்டியை முறுக்கி கொண்டே வாக்கிங் முடித்து கொண்டு உள்ளே வந்தார் விஜயராஜன் ...

அவரின் முறுக்கு மீசைக்கு பயந்தே அவர் வீட்டை இளவட்டங்கள் நோட்டம் விட மாட்டார்கள்....நோட்டம் விட்டால் என்ன நடக்கும் என்று அந்த ஏரியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்பதால் அந்த தொல்லைகள் இல்லை...அந்த வீட்டுக்குள் நண்டும் சிண்டும் ஆக இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலும் யார் கண்ணும் அவர்கள் மீது விளாது....

விஜயராஜன் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி... அவருடைய ஒரே மகன் தர்மராஜ் அவரும் மிலிட்டரியில் வேலை செய்து கொண்டு இருந்தவர் தான்.. ஆனால் பணியில் இருக்கும் போதே இறந்து விட்டார்...ஒரு போரில் மகன் இறந்து விட நாட்டுக்காக தானே என் மகன் உயிர் இழந்தான் என்று மகன் இறந்த போது கூட ஒரு துளி கண்ணீர் சிந்தாமல் இறுதி சடங்கில் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு கம்பீரமாக நின்று கொண்டு இருந்தார்...அவரின் கம்பீரம் ஒன்றும் மனைவிக்கு இல்லை..தன் மகன் உயிர் இழந்து விட்டான் என்ற அதிர்ச்சி தாங்க முடியாமல் அந்த வருத்ததிலே இருந்த ருக்குமணி அம்மா அவரும் அடுத்த ஒரு வருடத்தில் தன் மகன் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டார்...

ஜானகி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் சகிதம் மாமனார் விஜயராஜன் உடன் தங்கி விட்டார்...ஆம் ஜானகி விஜயராஜனின் அக்கா மகள் என்பதால் அக்கா , மாமா மறைந்து விட தன்னோடு தன் வீட்டில் ஜானகியை படிப்பித்து வளர்த்தி வந்தார்...ஜானகியும் அவரின் தந்தை குடும்பத்தோடு செல்லாமல் தாய் மாமன் வீட்டிற்கே வந்து விட்டார்...பருவம் வந்ததும் தன் மகனையே திருமணம் செய்து கொடுத்தார்...

தன் மகன் தர்மராஜூம், ஜானகியும் இல்லற வாழ்வில் மிக சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்..அதற்கு சாட்சியாக இரண்டு மக்களை ஜானகிக்கு கொடுத்து விட்டு தாய் நாடும் என் இல்லமே என்று நினைத்து தாய் நாட்டிற்காக வீர மரணம் எய்தினார்...

என்ன தான் அவர் நாட்டிற்காக வீரமரணம் அடைந்தாலும் ஜானகிக்கு உள்ளுக்குள் தன் அத்தையை போல உயிரை மாய்த்து கொள்ள முடியவில்லை... இருந்தும் தன் கணவருக்கு முதல் இரவு அன்று கொடுத்த வாக்கு படி அவரின் குழந்தைகள் கண்மணி, அனுக்காக உயிரை பிடித்து கொண்டு இருக்கிறார்....

முதலில் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவர் விஜயராஜனின் அறிவுரையில் கணவர் இறந்த துயரில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார்...

ஜானகியின் மூத்த மகள் கண்மணி சென்னையில் பல் மருத்துவ படிப்பு படித்து கொண்டு இருக்கிறாள்...இறுதி ஆண்டில் இருக்கும் அவள் வேலைக்கு சென்று தன் காலில் நின்ற பின்னரே திருமணம் செய்வேன் அதும் தன் தந்தை , தாத்தா போல(போலீஸ், மிலிட்டரி) ஒருவரை திருமணம் செய்ய மாட்டேன் ...காதலித்து தான் திருமணம் செய்வேன் என்ற முடிவில் இருக்கிறாள்...அவள் பின்னால் சுற்றி கொண்டு இருக்கும் அவள் கல்லூரி சீனியர் பிரகாஷ் யை வைட்டிங் லிஸ்டில் வைத்து இருக்கிறாள்...எப்போது வேண்டுமானாலும் அவள் ஓகே சொல்ல கூடிய நிலையில் தான் கண்மணி இருக்கிறாள்...ஆனால் அவளின் ஆசை கனவுகள் எதுவும் நடக்க போவது இல்லை என தெரியாமல் தூங்கி கொண்டு இருக்கிறாள்...

"என்ன மா கண்மணி ரெடி ஆகிட்டாளா"... என்று தாத்தா வின் குரல் வீட்டின் நடு கூடத்தில் கேக்கும் போது கண்மணியின் அறையில் ஒரு மின்னல் ஓடி குளியல் அறைக்குள் மறைந்து கொண்டது...அனு கண் மூடி கண் திறக்கும் முன் இந்த சம்பவம் நடந்து முடிந்தது...

ஆம் அவளின் அக்கா தன் தாத்தாவின் குரல் வாயிலில் கேக்கும் போதே வேகமாக ஓடி புகுந்து விட்டாள்... அனுவோ மனதுக்குள் அந்த பயம் இருக்கட்டும் என்று கூறி கொண்டு தன் தாத்தாவிடம் அக்கா குளிக்க சென்று இருக்கிறாள் என கூற ஓடி விட்டாள்...

குளியல் அறைக்குள் சென்ற கண்மணியோ , "நீங்க போலீஸ் னா நாங்க பயந்திடுவோம்மா என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ...செமினார் கிளாஸ் எல்லாம் விட்டுட்டு... ட்ரைனிங் கிளாஸ் எல்லாம் மிஸ் பண்ண வைச்சு ராத்திரிக்குள்ள  வந்து இருக்கனும் னு ஆர்டர் போடுறீங்க...அடிச்சு பிடிச்சு வந்து பார்த்தா மாப்பிளை யா பார்த்து வைச்சு இருக்கீங்க... நான் கேட்டேன் னா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க னு நான் கேட்டேன் னா... அதும் என்ன உங்க இனத்துலயே பார்த்து இருக்கீங்க(போலீஸ்)....என்ன தைரியம் உங்களுக்கு"... என்று அவள் குளியல் அறைக்குள் மறைத்து வைத்து இருக்கும் அவள் தாத்தாவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வை பார்த்து திட்டி தள்ளி கொண்டு இருந்தாள்...நேரில் திட்ட முடியாதே..."என்ன மா முடிஞ்சதா "...என அவளை மனம் திறந்து திட்ட கூட விடாமல் அதற்கும் தடை இட்டு தாத்தாவின் குரல் கேட்கவும் , "இதோ வந்திடறேன் தாத்தா".... என குரல் கொடுத்தாள்...

ஆம் அவரை திட்ட முடியாதே அவரின் முறுக்கு மீசையை பார்த்தாலே போதும் கையும் காலும் உதறும்... வெளியே தைரியமாக இருப்பது போல காட்டி கொள்வாள்....ஆனால் பாவம் விஜயராஜனோ தன் பேர குழந்தைகளை ஒரு வார்த்தை கடிந்து கூட பேச மாட்டார்...மிருதுவான அறிவுரை கூட இந்த காலத்து பெண்களுக்கு பிடிக்காதே ...அதே ரகம் தான் கண்மணி...

  அவரை மனம் விட்டு திட்ட முடியாத கோபத்தில் தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை  , "டேய் மாப்பிளை பொண்ணா பார்க்க வர வா...உனக்கு இருக்கு டி மாப்பிள"... என்று கருவி பக்கெட்டில் இருக்கும் தண்ணீரை தொட்டு பார்க்க அது குளிர்ந்து இருந்தது..."ச்ச இவங்களை திட்டி தண்ணி சூடு ஆறிடுச்சே"... என நினைத்து அவளின் மனசாட்சி யோ ஏன் குளிச்சு இருந்தா தான் பொண்ணு பார்க்க வருவியோ குளிக்காம இருந்தா எங்களை எல்லாம் பார்க்க வர மாட்டியோ உனக்கு எல்லாம் நான் பாத்ரூம் குள்ள வந்ததே பெரிசு ...இதுல குளிக்க வேற செய்யனுமா... போடா என்று கூற அவள் குளிக்க வைத்த நீர் குளிர்ந்து போனதுக்கும், அவள் குளிக்காமல் இருக்க அவனை காரணம்  கூறி அவனை குறை கூறி அன்றைய குளியலுக்கு முழுக்கு போட்டாள்...

வெளியே வரும் போது குளித்து வருவது போல ஆங்காங்கே நீரை தெளித்து விட்டு வெளியே வந்தாள் அந்த ராங்கிக்காரி...இதுக்கே இந்த பாடு என்றால் அவளை பெண் பார்க்க வரும் அந்த மாப்பிள்ளையின் நிலையோ...

 



   
Quote
(@jeunifer)
Active Member
Joined: 4 months ago
Messages: 8
 

Nice start



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top