மந்தாரம் 25
மந்தாரம் : 25
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு..
இந்த மூன்று மாதத்தில் பெரிதாக எந்தவிதமான மாறுதல்களும் தேவியின் வாழ்க்கையில் ஏற்படவில்லை என்றாலும் தேவி விதுவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அன்றைய சம்பவத்திற்கு பிறகு நன்றாக படித்து கொண்டாள்..
ஆம்..அன்றைய அந்த முத்தத்திற்கு பிறகு தேவி அவனுடைய முகத்தை கூட இன்று வரை நிமிர்ந்து பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும்..
இவ்வளவு ஏன் அவன் இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுக்கவில்லை..
ஏதாவது அவனுக்கு தேவை என்றாலும் அவளோடு பணி செய்யும் அக்காவிடம் கொடுத்து அனுப்பி விடுவாளே ஒழிய அவளாக அவன் முகத்தை பார்ப்பதும் இல்லை..
அவன் இருக்கும் திசை பக்கம் செல்வதும் இல்லை அந்த அளவுக்கு அவள் முன்னேறி இருக்கிறாள்..
அவன் இப்பொழுதும் அப்படியேதான் இருக்கிறான்.. எப்பொழுது அவளை கிடைத்தாலும் கடித்து குதறலாம் என்று தான் அவன் காத்துக் கொண்டிருக்கிறான்.. அவளும் சிக்காமல் கண்ணாமூச்சி அவனிடம் ஆடிக் கொண்டு இருக்கிறாள்.. அதுவும் அவனுக்கு கடுப்பாக தான் இருக்கிறது..
அப்போது தான் ராம் மோகன் கொடுத்த வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தான் விஷ்வா..
விஷ்வா அவன் வேறு யாருமில்லை.. ராம் மோகனின் விசுவாசியின் மகன்.. விஷ்வாவின் தந்தை சம்பத் மற்றும் அவனின் அம்மா ஒரு விபத்தில் இறந்து போக சம்பத்துக்காக அனாதையாக நின்ற விஷ்வாவை படிக்க வைத்து அவர் சம்பந்தப்பட்ட கம்பெனிகளில் ஒரு முக்கிய பொறுப்பை கொடுத்து இருக்கிறார்..
அவனும் அவர் சொன்ன வேலையை திறம்பட செய்து வருகிறான்..இப்பொழுது தான் வட இந்தியாவில் இருந்த அவனை இங்கு ராம் மோகன் அழைத்து இருக்க, அவனும் வீட்டுக்கு வரவும் ராம் மோகன், ரேவதி இவன் வருவதை அறிந்து அவனுக்காக உண்ணாமல் காத்துக் கொண்டு இருந்தனர்..
ஆம்.. அங்கு விஷ்வாவுக்கு வேண்டி, மிதமான விருந்து ஒன்றை தேவி உருவாக்கி இருந்தாள்.. எல்லாம் அழகாக உணவு மேசையில் விது வருவதற்கு முன்பு வைத்து கொண்டு இருந்தாள்..
அன்று வேறு விது வீட்டில் இருந்தான்.. அவன் கண்ணில் பட கூடாது என சமயம் பார்க்க அவன் வரும் சமயம் என்பதால் வேகமாக அடுக்குகளைக்குள் நுழைந்து கொண்டாள் தேவி..
அப்போது தான் விஷ்வா வீட்டுக்குள் நுழைய அவனை கண்டதும் ராம் மோகன், "ஹே விஷ்வா வா டா" என கூறவும் அவனோ, "வந்துட்டேன்.. வந்துட்டேன்.. அங்கிள்.. அதான் நான் வந்துட்டேன்ல நீங்க இன்னும் இங்கே என்ன பண்றீங்க??" என கூறவும் ரேவதி, "இவனுக்கு எப்போவும் விளையாட்டு தான்" என கூறி சிரிக்க அவரும் சிரித்தார்..
அந்த சமயம் பார்த்து கிச்சனில் இருந்து நல்ல மணம் வருவதை பார்த்து, "அங்கிள் சாப்பிட சமைக்கறிங்களா?? இல்லை வீட்டுக்கு வந்த ஆளை விரட்ட சமைக்கறீங்களா?? நல்ல மணம் வருது.." என கேட்டான்..
உண்மையிலுமே தினமும் ஹோட்டல் சாப்பாடு உண்ணும் அவனுக்கு இந்த உணவின் மணமே நாடி நரம்பை எல்லாம் சுண்டி இழுத்தது..
"ஆன்ட்டி நாம ஏன் சாப்பாடு சாப்பிட்டுட்டு பேச கூடாது??" என விஷ்வா கேட்டான்..
"இருடா இருடா உனக்காகத்தான் ஸ்பெஷலா சமைக்க சொல்லி இருக்கேன்.. வெயிட் பண்ணு சாப்பிட போலாம்.. நம்ம விது அவனும் வந்துடட்டும்" என்று ரேவதி சிரித்துக் கொண்டு கூறினார்..
அதைக் கேட்டுக்கொண்டு விது அவனுடைய அறையில் இருந்து கீழே இறங்கி வந்தான்..
அவனைக் கண்டதும் விஷ்வா, "ஹாய் விது.. இப்போ நீ தான் ஹாட் டாபிக்.. பிசினஸ் மேக்னட்ஸ் எல்லோரும் உன்னை பத்தி என்கிட்ட விசாரிக்கிறாங்க" என கூற
அதை கேட்ட அவனோ, "ரியலி.." என மென்மையாக சிரித்தான்..
"நிஜம் விது.. அப்பாவும், மகனும் தொழிலில் இறங்கினால் நாங்க என்ன பண்றதுன்னு என்கிட்டயே நிறைய பேரு சொல்றாங்க" என்று அவன் சந்தோஷமாக கூறவும் அதைக் கேட்டு விது, "போதும் போதும் விஷ்வா.. அவங்க பேசுவதை விட நீ பேசி இப்பவே என்னுடைய வயிறை நிறைச்சிட்ட.. இனி என்னால முடியாது" என சிரித்தவன், "சரி நான் கிளம்புறேன் எனக்கு டைம் ஆச்சு" என்று கூறி அவன் கிளம்பினான்..
"சாப்பிடலையா.. நீ வந்தா தான் எனக்கு சாப்பாடு அப்படின்னு ஆன்ட்டி சொல்லிட்டாங்க" என விஷ்வா கூறினான்..
அதை கேட்டு மென்மையாக சிரித்த விதுவுக்கு விஷ்வாவை ரொம்ப பிடிக்கும்.. யாரும் இல்லாமல் தனியாக வளர்ந்த அவனுக்கு அவனின் ஆரம்ப காலத்தில் நல்ல நண்பனாக இருந்தவன் தான் விஷ்வா.. இப்பொழுதும் நல்ல நண்பனாகத்தான் இருக்கிறான்.. ஆனால் விது தான் அவனை சுற்றி ஒரு வட்டம் வரைந்து அதற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறான்..
"இல்ல விஷ்வா எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு டைம் ஆச்சு.. நீ சாப்பிடு.. ஈவ்னிங் சீக்கிரம் வரேன் வெளியே போலாம்" என்று கூறி அடுத்த கேள்விக்கு நிற்காமல் விது கிளம்பி விட்டான்..
அதை கண்ட ரேவதி, "இந்தப் பையன் இப்படித்தான் வீட்டில் சாப்பிடவே மாட்டேன் என்கிறான்" என்று புலம்பிக் கொண்டே, "தேவி சாப்பாடு எடுத்து வைம்மா" என்று கூற விஷ்வாவும் முதல் ஆளாக அமர்ந்து விட்டான்..
அவள் அடுக்களைக்குள் இருந்து விது செல்லும் ஓசையை கேட்டவள் அப்பாடா நிம்மதி அவர் போயிட்டாரு என்று கூறிக்கொண்டு அவள் இன்று செய்திருந்த பாயசத்தை எடுத்துக் கொண்டு உணவு மேசைக்கு வர அங்கு தான் விஷ்வா அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்..
அதைக் கண்டு அவள் பயந்து போய் தேவி மலங்க மலங்க நிற்க, "நீதான் எல்லாம் சமைச்சியா??இல்லை ஏதாவது கடையில் இருந்து வாங்கி வைச்சியா??" என கேட்டான்..
அவளும், "நான் தான் சமைச்சேன்" என்று கூற அதை கேட்ட அவன் அவளை குறுகுறுவென சந்தேகமாக பார்க்க இவளோ என்ன இவன் இப்படி பார்க்கிறான் என பயந்து அங்கேயே நின்றாள்..
"டேய் ஏன் வந்ததும் உன்னோட அவள்கிட்ட வாலுதனத்தை காட்டுற??" என கூறிய ரேவதி, "தேவி நீ வந்து பரிமாறு அவன் அப்படித்தான் விளையாடுவான்.. நீ கண்டுக்காத.." என்று கூற அவளும் சிரித்த முகத்தோடு வந்து அனைவருக்கும் பரிமாற, உணவை வாயில் எடுத்து வைத்ததுமே, "வாரே வா சூப்பரா இருக்கு.. இப்படி ஒரு சாப்பாடு நான் இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை எப்படா சாப்பிடுவேன் காத்துகிட்டு இருந்தேன்.. தேவி ரொம்ப நல்லா இருக்கு.. ஒரு வாய் சாப்பிட்டு இருக்கேன் அம்சமா இருக்கு..இன்னும் இருக்குல்ல" என கூறி ரசித்து சாப்பிட அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஆகி விட்டது..
அதன் பிறகு அவனுக்கு வேண்டும் வேண்டும் என்று அளவுக்கு அவள் அவனை சிறப்பாக கவனிக்க அவனும் வயிறு முட்ட உண்டான்.
பிறகு ராம் மோகன் அவனிடம், "நான் உன்னை எதுக்கு வர சொல்லி இருக்கேன்னு தெரியுமா??" என்று கேட்க, "எல்லாம் தெரியும் நீங்களும் ஆன்ட்டியும் டூர் போறீங்க அதுவரைக்கும் இங்கே இருக்க கம்பெனி பிரான்சை நான் பார்த்துக்கணும்.. அவ்வளவு தானே நான் பாத்துக்குறேன்" என்று விஷ்வா கூறினான்..
"நம்ம விது இருக்கான் தான்.. ஆனால்.." என்று அவர் இழுக்கவும், தேவையில்லாமல் அவர் குடும்ப விவாகரத்துக்குள் மூக்கை நுழைக்க என்றைக்கும் விரும்பாத விஷ்வா எப்போதும் போல, "இப்பதானே விது அவனோட பிசினஸ்ல பிஸியா இருக்கான்.. இதையும் அவன் கிட்ட கொடுத்தா அவன் எப்படி பார்ப்பான்?? அதுதான் நான் இருக்கேன் இல்ல நான் கவனித்துக் கொள்கிறேன்.. பத்து நாள் தானே நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க" என்று கூறவும் அவருடைய தயக்கம் மாறியது..
ஆனால் உண்மையில் விதுவிடம் அவர் கேட்டிருக்க ஆனால் அவனும், "உங்க பிசினஸ் நீங்க பாருங்க.. என்னால் முடியாது டாடி" என்று கூறிவிட்டு ஒதுங்கி கொண்டான்.. அதனால் தான் விஷ்வாவை வர வைக்க வேண்டியதாக போய்விட்டது...
மகன் இதைக் கூட தனக்காக செய்யவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் அவன் ஆரம்ப கட்ட நிலையில் இருக்கிறான்.. அவன் அவனுடைய தொழிலை பார்க்கட்டும் என்று ராம் மோகனும் நினைத்து விட்டார்..
அப்படி அவர்கள் செல்லும் சமயமும் வந்து விட்டது.. இங்கு தேவிக்கு தான் பயம் தொற்றிக் கொண்டது.. அவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை என்றுதான் கூற வேண்டும்...
இனி இவன் மட்டும் தான் வீட்டில் இருப்பானா?? என்ன நடக்க போகிறதோ என அவள் யோசிக்க ராம் மோகன் மற்றும் ரேவதி எல்லாம் தயார் நிலையில் இருக்க அவளிடம் அவர்கள் வரும் வரை என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியெல்லாம் ரேவதி குறிப்புக் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது தான் விது வந்தான்.. கூடவே விஷ்வா அவனும் இருந்தான்..
அந்த சமயம் அவன் வருகிறான் என்பதை அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருக்கும் அவளுக்கு முதுகுச் சில்லிடும் உணர்வை அவனுடைய அழுத்தமான பார்வை அவளுக்கு கொடுக்க இனி என்ன ஆனாலும் திரும்பி பார்க்கவே கூடாது அவன் இருக்கிறான் என அப்பொழுதும் அவனை காணாமல் அவள் ரேவதியை பார்த்தபடி தான் நின்று கொண்டிருந்தாள்..
அதை எல்லாம் கவனித்துக் கொண்டுதான் விது நின்றான்..
"எல்லாம் நான் சொன்ன மாதிரி செஞ்சிடு தேவி.. விது சாப்பிட்டாலும் சாப்பிடலைனாலும் அவன் வரும்போது அவனுக்கு பிடிச்ச உணவு இருக்கணும் புரியுதா??" என்று கூற அவளும் சரியென தலையாட்டினாள்..
"ஆன்ட்டி என்னை பத்தி கூட கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணிட்டு போங்க" என்று விஷ்வா கூற உடனே சிரித்த ரேவதி, "நீ எப்படி இருந்தாலும் சாப்பிடுவேன்னு எனக்கு தெரியும் விஷ்வா எனக்கு விதுவை நினைச்சா தான் கஷ்டம்" என்று கூறவும் அதை கேட்ட விஷ்வா, "உங்க மகனை கண்ணும் கருத்துமாக நான் பார்த்துக்கிறேன் ஆன்டி கவலைபடாமல் போய்ட்டு வாங்க" என சிரித்துக் கொண்டு அவன் கூற அதே நேரம் அங்கு சிரிப்பலை நிறைந்தது..
அதே நேரத்தில் இருந்த விது மனதுக்குள் இந்த பத்து நாட்களுக்குள் இவளை வீட்டை விட்டு துரத்தியே ஆக வேண்டும்.. இவளுக்கு ஒரு பாடம் புகட்டி இவளை துரத்தியே ஆக வேண்டும் என அவன் எண்ணி இருக்க, தேவிக்கு உள்ளுற சற்று பதட்டம் இருக்க இவர்களுக்கு இடையே விஷ்வா!!!..அப்படி என்ன நடந்து இருக்கும்???
