மந்தாரம் 24
மந்தாரம் : 24
தேவியின் வாழ்க்கை ஒன்றும் அவன் வீட்டுக்கு சென்ற பின் அவ்வளவு இயல்பாக இருக்கவில்லை..அப்படி இருக்க அவனும் விடவில்லை என்பது தான் முக்கியமான விஷயம்..
வேலைக்காரி என்று தானே அவன் கூறினான்.. அப்போது வீட்டு வேலை தானே என அவள் எண்ணி அவள் வேலைகளை அவள் கச்சிதமாக செய்ய, அந்த வீட்டில் அவளிடம் அவனின் அம்மா முதல் யாரும் அவளை கஷ்டபடுத்தவில்லை..
ஆனால் அவன் அவளை மனதளவில் படாதபாடு செய்தான் என்று தான் கூற வேண்டும்..
ஆம் அவள் செய்த தவறுக்கு ஈடாக இதையெல்லாம் அவள் பொறுத்துக் கொண்டாலும், அவளை எங்கேயும் அம்போ என விட்டுவிட்டு வரவில்லையே அவனுடன் தானே அழைத்து வந்து இருக்கிறான் என்ற எண்ணம் அவளை அங்கு பிடித்து நிற்க வைத்து இருந்தது..
ஆனால் அதை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதத்தில் தான் அவன் ஒவ்வொரு வேலையும் அங்கு செய்து வந்தான்..
ஆம்.. முதலில் அவனுக்கு நடந்த அவமானத்தை மறக்க தொழிலில் முழுமையாக இறங்கி விட்டான்.. ஊன், உறக்கம் எதுவுமின்றி தொழிலில் களம் காண துவங்கி விட்டான்..அதில் முன்னேற்றம் அடைய துவங்கி விட்டான்..
தன்னுடைய இயல்பான குணத்தை சற்று மாற்றி கடினமாக ஆகி விட்டான்.. மென்மை அவனிடத்தில் சென்று இருந்தது..
அதனால் வீட்டுக்கு பெரிதாக அவன் வருவதில்லை.. வரும் நேரங்களில் எல்லாம் இவளுக்கு சோதனை காலமாக தான் இருக்கும்..
அவனுடைய அம்மா சொன்னது போல அவள் சமைத்து வைத்து இருப்பாள்.. ஆனால் இவனோ இதில் உப்பு இல்லை.. காரம் இல்லை.. என ஏதாவது குறை சொல்லி சாப்பிடாமல் செல்வான்..பல முறை அவன் தட்டை அவள் முகத்துக்கு நேராக பறக்க விட்டு இருக்கிறான்.. அவளுக்கு அதை கண்டு ஒரே அவமானமாக இருக்கும்..
அவர்களின் பெற்றோர்கள் கூட அருமையாக இருக்கிறது ஊர் பக்கம் இருக்கும் சமையல் போல இருக்கிறது என கூறினால், "அப்போ நீங்களே சாப்பிடுங்க.. வாயில வைக்க முடியல" எனக் கூறி விட்டு அவன் சென்று விடுவான்..
இவர்களுக்கு இடையே இருக்கும் உறவு என்ன என்பது அவர்களுக்கு தெரியாது அல்லவா?? அதனால் அவர்களும் இவளிடம், "வெளிநாட்டில் படிச்சவன் மா அவனுக்கு இதோட அருமை எல்லாம் தெரியாது.. அதுனால நீ எதுவும் நினைச்சுக்காத.. உன் சமையல் எங்களுக்கு பிடிச்சு இருக்கு" என கூறி அவளை சமாதானம் செய்து விடுவார்கள்.. ஆனால் அவளுக்கு இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பது தெரியும் அல்லவா?? அதனால் அவள் அதை கேட்டு அமைதியாக இருப்பாள்..
இதை எல்லாம் அவளால் பொறுத்து கொள்ள முடிந்தது.. ஆனால் அவளுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..
அது தான் ஸ்ரேயா அவளுடனான உறவை தான் அவளால் பொறுத்து கொள்ள முடியவில்லை..
ஆம்..என்ன தான் வாய் வழியாக அவள் நீங்க உங்களுக்கு விருப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துக்கோங்க என கூறினாலும் அவளுக்கு அதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
அப்படி ஒரு நாள் மாலை வேளையில்...
"என்ன இவன் எப்போ பார்த்தாலும் ஸ்ரேயாவை வீட்டுக்கு கூட்டிட்டு வரான்.. என்னமோ இருக்குங்க" என காபி கொண்டு வந்து கொடுக்க வந்த தேவி முன்னிலையில் அவனுடைய அம்மா ராம் மோகனிடம் கூறினார்..
அவரும் அவளிடம் இருந்து காப்பியை வாங்கி கொண்டே, "இப்போ எல்லாம் ரொம்ப வேகமாக தொழிலில் இருக்கான்.. எல்லாம் சரியா இருந்தா கல்யாணம் செஞ்சு வைச்சிட வேண்டியது தான்" எனக் கூற இவளுக்கு திக்கென்று இருந்தது..
"நானும் அதை தாங்க யோசிக்கிறேன் அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா.. நல்லா பேசுறா.. நம்ம விதுவுக்கு ஏத்த பொண்ணு தான்" என்று அவனின் அம்மாவும் கூறிக் கொண்டே, "அவங்க இரண்டு பேருக்கும் காபி கொண்டு போய் கொடு மா" என கூற அவளும் சரிங்க மா என கூறிக் கொண்டே அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை கேட்டு, உள்ளுக்குள் பொங்கிய அழுகையை அடக்கியபடி சென்றாள்...
அவளுக்கும் விது ஸ்ரேயா உடன் பழகுவது உள்ளுக்குள் பெரும் வலியை தான் கொடுத்தது.. அந்த வலியோடு அவள் அவனுடைய அறைக்கு சென்றாள்..
கதவு இலேசாக அடைக்கப்பட்டு இருந்தது.. முழுதாக அடைக்கவில்லை.. அதனால் அவளும் ஏதோ நியாபகத்தில் உள்ளே சென்றுவிட்டாள்.. கதவை தட்ட மறந்தும் இருக்க, அவள் உள்ளே சென்றதும் அவள் கண்ட காட்சி அவளுக்கு அப்படியே தலையை சுற்றுவது போல இருக்க, அந்த காட்சியின் வீரியத்தில் கையில் உள்ள காபி ட்ரேயை கீழே விட கீழே விழுந்த காப்பி அப்படியே ஸ்ரேயா மற்றும் விது இருவரின் மீதும் தெரித்தது..
அவர்களும் ஒரு நொடி திகைத்து என்ன நடக்கிறது எனப் பார்க்க அங்கு அவள் காப்பி ட்ரெயை கீழே போட்டுவிட்டு அதிர்ந்த நிலையில் அவள் இருக்கிறாள்..
அப்படி என்ன காட்சி அவள் கண்டால் என்ன கேட்டால் அவளுக்கு தாலி கட்டிய அவளுடைய கணவன் அவள் கண் முன்னாடியே வேறொரு பெண்ணான ஸ்ரேயா உடன் இதழோடு இதழ் வைத்து இதழ் நீரை ருசித்துக் கொண்டிருக்கிறான்..
அவனுடைய கைகள் அவளுடைய தேகங்களில் வலம் வர அவளும் அதற்கு இணைந்து கொண்டு அவனுடைய முதுகில் தன் அழகிய விரல்களால் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் காட்சியைத்தான் தேவி கண்டாள்..
இதே காட்சியை தேவி ஒரு நாள் கனவில் கண்டு தான் வாழ்ந்தால் இவனோடு தான் வாழ்வேன் என முடிவு செய்து ஒரு பொய்யின் மூலமாக அவன் கையால் தாலி வாங்கி இப்பொழுது அவன் வீட்டில் வேலைக்காரியாக அவள் இருக்க, இப்பொழுது அவள் கண் முன்னே கணவன் வேறொரு பெண்ணோடு சல்லாபம் செய்வதை கண்ட அந்த கிராமத்து பெண்ணான தேவிக்கு தாங்க முடியாத வலியை அது கொடுத்தது.. அந்த பதட்டத்தில் தான் அவள் காப்பி ட்ரேயை கீழே போட்டு விட்டாள்..
ஆம்.. அவள் தான் அவளுடைய கணவனை வேறொருவருடன் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளுங்கள் என கூறி இருந்தால் ஆனால் இப்பொழுது அவள் கண் முன்னே இந்த காட்சி அவளுக்கு அவளுடைய உயிரே வெளியே வந்து நின்று அவளை பார்த்து கேலி செய்தது போல இருந்தது..
ஆனால் அவளுடைய கணவனுக்கோ தன் மோன நிலையை தடுத்தும் இல்லாமல்,. தன் மேலேயே காப்பி கொட்டி விட்டாள் என்ற ஆத்திரத்திலும், அவளைக் கண்டாலே ஏற்படும் அழுத்தமும் சேர்ந்து கொண்டு என்ன நடக்கிறது எனக் கூட யோசிக்காமல் அவளை அடிக்க போனான் விது..
அதற்குள் ஸ்ரேயா வந்து தடுத்து,"விடு விது ஏதோ தெரியாம பண்ணி இருப்பா..அடிக்காதே"
"கதவை தட்டிட்டு உள்ளே வரணும்னு மேனேஸ் தெரியாதா??" என்று அவன் அவளை அடிக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் கேட்க அவள் எதுவுமே பேசவில்லை தலைகுனிந்து அப்படியே நின்று கொண்டிருந்தாள் தேவி..
அவள் கண்ணில் கண்ணீர் மட்டும் பெருக்கெடுத்து ஓடியது... ஸ்ரேயாவுக்கு அவள் மீது கொட்டிய காப்பியை பார்த்து அருவருப்பாக இருக்க, "விடு விது.. நான் இதை க்ளீன் பண்ணிட்டு வரேன்.." என கூறி பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்..
இப்பொழுது தேவியும், விதுவும் மட்டும் தான் அந்த அறைக்குள் இருந்தார்கள்..
அவளுக்கோ அவனுடன் இருக்கும் இந்த தனிமை இந்த நொடி பயத்தை கொடுத்தது..
அதனால் அங்கிருந்து செல்லலாம் என கருதி அவள் திரும்ப, அவனோ கடுப்பில், "ஏய் நில்லு டி..இப்படியே போனால் எப்படி??" என்றான்..
"இதோ நான் சுத்தம் பண்ணிடறேன்.. என்னவோ பதட்டத்தில் ஏதோ தெரியாமல் நடந்துடுச்சு மன்னிச்சிடுங்க" என்று தழுதழுக்கும் குரலில் மன்னிப்பையும் அவள் கேட்டுக் கொண்டு செல்ல போகும் முன் அவளுடைய கையை பிடித்து அவள் எதிர்பாராத தருணத்தில் இழுக்கவும், அவன் மீது மோதி இருந்தாள் தேவி..
இப்பொழுது அவர்களுடைய இடைவெளி மேலும் குறைந்து இருந்தது.. ஆம்.. அவனின் உடலில் உரசிய போல தான் அவள் நின்று கொண்டு இருந்தாள்.. இயல்பாக இது நடந்து இருந்தால் அவள் அவ்வளவு ரசித்து இருப்பாள்.. ஆனால் சூழ்நிலை இப்போது சரியில்லாததால் அவளுக்கோ அவனுடைய நெருக்கம் அதை விட பதட்டத்தை கொடுத்தது..
அவளை காணும் போதெல்லாம் எழுந்த அழுத்ததைக் கட்டுப்படுத்த முடியாதவன் அவளை மேலும் கீழுமாக பார்த்தவன், " என்ன பெரிய ஷாக்காகி காப்பியை கீழே போட்டுட்டியா?? என்ன பார்க்கிற அந்த மாதிரி ஒரு கிஸ் உனக்கும் வேணுமா?? அதுனால தானே டி நீ கீழே போட்ட??" என அவன் கேட்டான்..
அவன் கேட்டதும் அவள் மேலும் அடிப்பட்டு போய், "என்னை விடுங்க.. நான் அப்படியெல்லாம் நினைக்கல.." என கூறியவள் மனம் மேலும் அவனுடைய பேச்சில் உடைந்து தான் போய் இருந்தது..
அதை கேட்டு அவனோ, "அப்புறம் வேற என்னடி நினைச்ச?? என்ன இதுக்குடி என் கையால தாலி வாங்கிட்டு என் வீட்டுக்குள்ள இருக்க??" என விது அவளை பார்த்து சீறினான்..
அவளும் அவனின் கோபத்தை கண்டு, "நான் இந்த வீட்ல உங்க பொண்டாட்டியா வாழல.. இந்த வீட்டு வேலைக்காரியா தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. இப்போ எனக்கு வேலைக்காரியா இந்த வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.. நீங்க இப்படி என் பக்கத்துல நெருக்கமா இருக்கிறது பாத்ரூமுக்குள்ள இருக்க உங்க காதலி பார்த்தாங்க அப்படின்னா உங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியுமா?? மரியாதையா என்னை விடுங்க" என்றாள்..
அதைக் கேட்டு அவன் மேலும் கோபம் கொண்டு, அவளுடைய கையை முறுக்க பிடிக்க அவளோ வேதனையால் துடிக்க அதை கண்டு சற்றும் மனம் இளகாமல், "விடலைன்னா என்னடி பண்ணுவ???" என்று கேட்டவன், "இந்த வேலை எல்லாம் உங்க காதலி கிட்ட வெச்சுக்கோங்க.. அதைத்தானே இத்தனை நேரம் செஞ்சிட்டு இருந்தீங்க.. என்கிட்ட வேண்டாம் என்னை விடுங்க" என்று அவள் கூறினாள்..
அதைக் கேட்டதும் அவனுக்கு அப்போதுதான் தெளிவாக ஒன்று விளங்கியது.."ஓ இதுதான் விஷயமா?? இதைப் பார்த்து தானே ஷாக் ஆன இது எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சிட்டு போ" என்றவன் நொடி பொழுதும் யோசிக்காமல் சற்று முன் ஸ்ரேயாவிடம் என்ன செய்தானோ அதே போல தேவியிடமும் நடந்துக் கொண்டான்..ஆம்.. தேவியின் இதழை ருசித்து இருந்தான் விது..
அதில் அவளுடைய உயிரை கூட உறிஞ்சி விடும் விதமான ஒரு முரட்டு முத்தத்தை அவளுக்கு பரிசாக கொடுத்தவன் அவளை அதே நொடியில் விட்டான்..
அதற்குள் ஸ்ரேயா வந்துவிட இவளும் தனக்கு என்ன நடந்தது என புரியாமல் தலை குழம்பி நின்றவள் உதடு லேசாக எறிவது போல இருந்தது அதை தொட்டுப் பார்க்க அவள் உதட்டில் ரத்தம் கசியவும் ஸ்ரேயா வரவும் சரியாக இருக்க, வேகமாக ஸ்ரேயாவிடம் இருந்து இந்த ரத்தத்தை மறைக்க அவள் திரும்பி நின்றவள் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்..
ஆனால் அவன் நொடிப்பொழுதில் செய்த செயலில் இருந்து அவள் தன்னிலை பெற வெகு நேரம் ஆகி இருந்தது..
