Share:
Notifications
Clear all

மந்தாரம் 23

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

மந்தாரம் : 23

இவள் ஒரு வார்த்தை கூறி இருந்தால் தனக்கு இந்த நிலை வந்திருக்காது அல்லவா?? அனைத்திற்கும் காரணம் இவள் தான் என்ற கடுப்பு அவனுக்கு வந்தது..

அவன் ஒன்றும் நல்லவன் இல்லை தான்.. பெண் தேகமே ருசித்திடாத ஒரு கண்ணியவான் அவன் இல்லை தான்..ஒரு அழகான பெண்ணை பார்க்கவோ அதுவே அந்த பெண்ணுக்கு அவன் மீது மையல் வந்தால் அந்த பெண்ணாக அவனை தேடி வரும் நேரங்களில் அவன் பெண்களை நாடியதுண்டு.. அது வேறு அதற்காக பார்க்கும் பெண்களை எல்லாம் தேடி போகும் ரகம் அவனில்லை.. அவனை அப்படி சித்தரித்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அதெல்லாம் அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை அதில் யாரும் மூக்கை நுழைக்க அவன் அனுமதித்தது இல்லை..

திருமணம் என்பதை வெறுக்கும் அவனுக்கு இப்படி ஒரு சூழலில் திருமணம்.. அதுவும் அவனை ஒரு பொறுக்கி போல அனைவரும் பாவித்து ஒரு பெண்ணை கட்டி வைத்து இருக்கிறார்கள்..அது அவனை பொறுத்தவரை எவ்வளவு பெரிய அவமானம்..

இந்த ஊரார் அவனுக்கு செய்ததை விட அவனுடன் நடந்து கொண்டே அவனுடைய கழுத்தை அறுத்த அவளை தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

அப்போ இவளும் ஏதோ எண்ணத்தில் தான் அவனுடன் பழகி இருக்கிறாள் என்பதை அவனுடைய மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டான் விது..

இத்தனை செய்த ஊராரை கூட விட்டு விடுவான்.. ஆம் இவளை மட்டும் விடவே மாட்டான்..

இவளுக்கு இவன் தாலி கட்டியது இவளை இனி பழி வாங்கத்தான்.. ஆம் அவள் கழுத்தில் தாலி கட்டி முடித்த அடுத்த நொடி அவன் யோசித்தான் விது..

இனி அவள் அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவள் அவனுக்கு செய்த துரோகத்திற்காக அவள் வருந்தாத நாளாக இனி இருக்கவே கூடாது என்பதை அவன் முடிவு செய்து விட்டான்.. அதற்கு முன்னோடியாக தான் இந்த அடி அவளுக்கு விழுந்து இருந்தது..

"ஹே என்னப்பா எங்க கண் முன்னாடி அந்த பொண்ணை அடிக்கிற??" என அந்த ஊர் மக்கள் அதிர்ச்சியோடு கேட்டனர்..

"நான் ஏன் அடிச்சேன் அப்படின்னு அவளுக்கு தெரியும்..எதுக்கு அடி வாங்குறா அப்படின்னு எனக்கு தெரியும்..எனக்கு இப்படி ஒரு கல்யாணம் பண்ணி வைச்ச உங்களுக்கு இது புரியாது" என்றவன்,

அதோடு நில்லாமல் அவர்களை எல்லாம் ஒரு அழுத்தமான பார்வை பார்த்த அவன், "அது தான் நான் தாலி தான் கட்டிட்டேன்ல.. இனி நான் அவளை என்ன வேணாலும் செய்யலாம் தானே.. இனி ஒருத்தன் என்கிட்ட பேச கூடாது.. தாலி கட்டிட்டேன்..இனி எவனாவது எகிறிட்டு வந்தீங்க இவளுக்கு தான் விழும்.. சொல்லிட்டேன்" என்றான்.. அதை பார்த்து அந்த ஊர் மக்கள் அனைவரும் திகைத்தனர்..

பஞ்சாயத்து தலைவரோ எப்படியோ என்னுடைய கடமை முடிந்தது என எண்ணிக் கொண்டார்..எப்படியோ இவளை இவன் தலையில் கட்டி விட்டோம்.. பாட்டி ஆசைப்படி பேத்திக்கு திருமணம் ஆகி விட்டது எனக்கு இனி எந்த பாவமும் பிடிக்காது என அவர் எண்ணிக் கொண்டார்..

தேவியால் தான் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை..அதிலும் அவள் செய்தது தவறென்று நன்றாக தெரியும்.. ஆனால் அவளுக்கு வேறு வழியின்றி தான் இதை செய்து விட்டாள்..

அப்படி இருக்க, அவனும் ஆத்திரத்துடன் அவளை பார்த்து, "ஏய் கிளம்புடி" என்றவன் அடுத்து ஒரு நொடி கூட அங்கு இருக்கவில்லை..

அவன் இந்த ஊருக்கு வரும் போது இருந்த மகிழ்ச்சி அவன் செல்லும் போது இல்லை.. அவளுக்கோ அவன் கையால் தாலி வாங்கி விட்டோம் என்ற சிறு ஆறுதல் மட்டும் தான் இருந்தது..

ஆனால் அதனால் அவளுக்கு கிடைக்க வேண்டிய சந்தோசம் மட்டும் கிடைக்கவே இல்லை..ஆம்.. அவனுக்கு அவள் செய்த வஞ்சம் அவளை கொலையாக கொன்றது..

அவனுடைய மனதை உடைத்து விட்டோம் என்றெல்லாம் எண்ணினாலும் அவன் வாழ்க்கையை நான் தொந்தரவு செய்ய மாட்டேன் எனக்கு அவர் கட்டிய தாலி மட்டும் போதும் என அவள் எண்ணிக் கொண்டாள்..

ஒரு வழியாக கனத்த இதயத்துடன் அந்த ஊரை விட்டு தேவிகா வெளியேறினாள்... அப்போது அவளுக்கு உயிரே இல்லை என்றாலும் தனக்கு தாலி கட்டிய கணவனுடன் தான் செல்கிறேன் என்ற எண்ணத்தில் அவள் இருந்தாள்..

அந்த ஊரை விட்டு வெளியேறிய பின் தான் பாட்டியும், அந்த ஊரும் அவளுடைய பலம் என்பதை அவள் உணர்ந்தாள்.. இப்போது அந்த பலம் இல்லாமல் அவளால் ஒரு அடி கூட அவனுடன் செல்ல முடியவில்லை..

அவனுடைய முகத்தை கூட பார்க்கும் திராணி அவளுக்கு இல்லை.. அவன் அவளிடம் அவ்வளவு கோபத்தில் இருந்தான்..

அந்த ஊரை விட்டு வெளியே வந்த பின்னும் அவன் அதே கோபத்தில் இருக்க அவளோ கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தபடி, "இதோ பாருங்க என்னை மன்னிச்சிடுங்க.. எனக்கு நான் உங்களுக்கு செய்தது தப்பு தான்.. என்னை எங்கேயாவது ஆசிரமத்தில் கூட விட்டுடுங்க.. நான் உங்களை தொல்லை செய்ய மாட்டேன்.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. உங்க மேல தெரியாமல் ஆசை வைச்சிட்டேன்.. இதை சொல்ல கூட எனக்கு மனசு வரல.. அந்த அளவுக்கு உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கு..இப்படி ஒரு பாக்கியம் எல்லாம் என் கனவில் தான் நான் தினமும் கண்டு இருக்கேன்..

நான் பண்ணினது தப்பு தான்.. எனக்கு உங்ககிட்ட இருந்து எதுவும் வேண்டாம்..நீங்க கட்டின தாலி மட்டும் போதும்.. நீங்க உங்களுக்கு தகுந்த மாதிரி வேற ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கோங்க.. எனக்கு என்னோட பாட்டியும் இல்லை.. ஊரார் சொன்ன இதே கரையோட என்னால அந்த ஊரில் வாழவும் முடியாது.. அதுனால தான்.." என்று அவள் அவளுடைய பக்கத்து நியாயத்தை கூறினாள்..

அதை கேட்ட அவனுக்கு மீண்டும் ஆத்திரம் பொங்க, "யப்பா.. என்ன ஒரு நியாயம்?? ஏன் டி.. அப்படியே நீ சொன்னதை கேட்டதும் எனக்கு அப்படியே எனக்கு உச்சி குளிர்ந்து போச்சு..உன் முகத்தை பார்த்தாலே கொல்லனும்னு தான் ஆத்திரம் வருது டி.. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.. எப்படி எப்படி தாலி வேணுமா உனக்கு?? என்னை பைத்தியக்காரன் ஆக்கி அத்தனை பேர் முன்னாடி அசிங்கப்படுத்தி இருக்க.. உன்னை அப்படியே விட்டுடுவேன்னு நினைச்சிட்டு இருக்கியா??

நீ என்ன டி என்னோட வாழ்க்கையை பத்தி நீ சொல்றது?? அதை எப்படி அமைச்சுக்கணும்னு எனக்கு தெரியும்.. என்ன தைரியம் இருந்தா இந்த வேலையை நீ செஞ்சிருப்ப.. உன்னோட மூளைக்கு நீ இந்த அளவுக்கு யோசிக்கும் போது என்னோட மூளைக்கு நான் எவ்வளவு யோசிக்கணும்??

இதுக்கு எல்லாம் திருப்பி கொடுக்க வேண்டாம்?? இந்த விதுவோட ஒரு முகத்தை தானே பார்த்து இருக்க வேறொரு முகத்தையும் பார்த்திட்டு நீ போனா போதும் டி.. அதுக்கு அப்புறம் சொல்லு என்னை பிடிச்சு இருக்கு அப்படின்னு" என கூறியவன் அவளை கொண்டே போனான்..

அதை கேட்ட அவளோ அவனது பேச்சில் உள்ள வெறுப்பை பார்த்து, "என்னை மன்னிச்சிடுங்க".. என அவள் அழுதுகொண்டே கூறினாள்..

அதை கேட்டவன் மேலும் கொந்தளித்து, "மன்னிப்பா உனக்கா இந்த ஜென்மத்துல கிடையாது.. உன்னோட தகுதி என்ன?? என்னோட தகுதி என்ன?? நீ ஆசைப்பட்டதை நீ அடைஞ்சிட்டேன் அப்படிங்கற அந்த திமிர்ல பேசிட்டு இருக்கியா?? நான் உன்னோட ஊர் காரர்களை கூட விட்டுடுவேன்.. ஏன்னா உங்க ரூல்ஸ் அது இதுன்னு சொல்லி ஒரு கூட்டுக்குள்ள வாழ்ந்துட்டு இருக்காங்க.. ஆனால் நீயும், நானும் எப்படி பழகி இருக்கோம் அப்படின்னு உனக்கு நல்லா தெரியும்.. அதே நேரம் அந்த ராத்திரி என்ன நடந்துச்சு அப்படின்னு உனக்கும் தெளிவா தெரியும்..

அப்படி இருந்தும் நீ அவங்க முன்னாடி எதுவுமே பேசாம நான் இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் தப்பு நடந்துச்சுன்னு சொன்ன பார்த்தியா?? அப்பத்தாண்டி உன்னுடைய சுய ரூபமே எனக்கு தெரிஞ்சது இனி உன்னை விட மாட்டேன்.. அதுக்கு தான் என் வீட்ல யார் இருக்காங்க யாரை வேணாலும் நீங்க கல்யாணம் பண்ணலாமான்னு கேட்டியா??..அப்போ நீ பக்கா பிளான் பண்ணி செய்து இருக்க சரியான ஆள் தான் டி நீ" என கொந்தளித்து கூறினான்..

அதை கேட்டு அவளோ அழுதாள்..அவளுக்கு அவள் செய்தது தவறென்று தெரிந்தாலும் அவன் நினைப்பது போல அவள் நினைக்கவில்லை.. அவள் செய்தது எல்லாம் அவனை ஆசைப்பட்டது மட்டும் தான் என்றாலும் அவளின் தகுதியை அவன் வாயில் இருந்து கேட்கும் போது அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது..

அதை பார்த்தவன், "என்ன நடிப்பா தாலியை இவன் கட்டிட்டான் என்ன வேணாலும் இனி செய்யலாம்னு நினைப்பா?? ஏண்டி உனக்கெல்லாம் ஒரு தராதரம் வேண்டாம்.. யாரை ஆசைப்படனும் யாரை ஆசைப்படக்கூடாதுன்னு தெரிய வேண்டாம்.. ஆசைப்பட்டதை அடைய அப்போ நீ என்ன வேணாலும் செய்வ போல.. இவ்வளவு கேவலமான ஒருத்தியை நான் பார்த்ததே இல்லை..

பார்க்க ஒன்னுமே தெரியாதவ மாதிரி இருந்திட்டு உன் கைவரிசையை என்கிட்ட காட்டிட்ட தானே.. இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்.. நீ என்கூட இருக்கிற ஒவ்வொரு மணி துளியும் நீ அனுபவிக்கனும் டி" என்று கூறியவனுக்கு துளியும் ஆத்திரம் அடங்கவில்லை.. ஒரு வாரம் அவர்கள் பிணைய கைதி போல வைத்ததும், இவள் பேசியதும், இவள் முதுகில் குத்தியதும் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

அவளை ஒருவழியாக அவனுடைய வீட்டுக்கு அழைத்து சென்றான்.. அவனுடன் இந்த பயணமே போதும் போதும் என்ற அளவுக்கு அவளை நோகடித்து இருந்தான்..

அவளுக்கும் அவன் பேசி பேசியே குற்ற உணர்ச்சியால் அவள் தவித்துக் கொண்டு இருக்கும் போது தான் அவனுடைய வாகனம் அந்த பெரிய வீட்டுக்குள் நுழைந்தது..

இவ்வளவு பெரிய நகரத்தையும் அதே போல இவ்வளவு பெரிய வீட்டை எல்லாம் அவளுடைய வாழ்க்கையில் அவள் பார்த்ததே இல்லை..

அப்படி இருக்க அந்த வீட்டுக்குள் அவன் அவளை அழைத்து செல்லும் போதே அவளை பார்க்க அவள் சற்று பிரமிப்பு அதே நேரம் பயமும் வந்தது..

அவளின் பிரமிப்பான பார்வையை கண்டவன், "என்ன பார்க்கிற இதுதான் என்னோட வீடு.. இந்த மாதிரி வீட்டை எல்லாம் நீ உன்னோட லைஃப்ல பார்த்து இருக்கியா?? இதுக்கு ஆசைப்பட்டு தானே அப்படி ஒரு பொய் சொன்ன??" என நக்கலாக அவன் கேட்டான்..

அதை கேட்டதும் அவள் அடிபட்ட பார்வை அவனை பார்த்து தன்னுடைய பார்வையை தழைத்து கொண்டாள்..

அவள் இது போல வீட்டை அவளுடைய வாழ்க்கையில் அவள் பார்த்தது இல்லை.. ஆனால் அவன் சொன்னது போல பணத்துக்காக ஒன்றும் அவனை அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை அதை அவனிடம் இனி அவள் கூறினாலும் அவன் புரிந்து கொள்ள மாட்டான் அதனால் அமைதியாக அவள் இருந்தாள்..

அதை கண்ட அவன் அவளிடம், "இதோ பார், உன்னை கூட்டிட்டு வந்து இருக்கிறது குடும்பம் நடத்த இல்லை.. இவ்வளவு ஏன் உனக்கும் எனக்கும் இப்படி ஒரு உறவு இருக்குன்னு கூட யாருக்கும் தெரியக்கூடாது.. இந்த தாலி கட்டினது நான் தான் அப்படிங்கறது உண்மையாக இருந்தால் நீ என்னை புருஷன் அப்படின்னு நினைச்சுட்டு இருக்கிறது உண்மையா இருந்தா நானா இந்த விஷயத்தை வெளியே சொல்ற வரை நீ சொல்லக்கூடாது" என எச்சரிக்கை செய்தான் அவன்.. அதை கண்டு அவளோ அதிர்ந்த பார்வை பார்த்தாள்..

அவனோ அவளை கண்டு கொள்ளாமல் செல்ல அவளோ அவன் பின்னே பேசாமல் சென்றாள்.. ஆம் அவளும் அவனுக்கு துரோகம் தானே செய்து இருக்கிறாள் அதனால் அவன் என்ன சொன்னாலும் அதை செய்யும் மனநிலையில் தான் அவளும் இருந்தாள்..

அங்கு ராம் மோகன் மற்றும் அவனுடைய அம்மா இருக்க, இவனை கண்டதும், "ஒரு வாரமா எங்க போன?? எத்தனை தடவை கால் பண்றது??" என ராம் மோகன் கேட்க, "கொஞ்சம் வேலை இருந்துச்சு டாட்" என்றவன் அருகே நிற்கும் இவளை பார்த்து யார் என அவனுடைய பெற்றோர்கள் கேட்க அவர்களிடம், இவளை காட்டி, "யாரோ ஒருத்தன் தாலி கட்டிட்டு விட்டுட்டு போயிட்டான்.. உங்களுக்கு உதவியா இருப்பான்னு கூட்டிட்டு வந்தேன் வேலைக்காரியா வச்சுக்கோங்க" என கூறியவன் அதன் பிறகு அவளுடைய முகத்தை கூட பார்க்கவில்லை..அதன் பிறகு மருமகளாக அந்த வீட்டுக்குள் வர வேண்டியவள் அந்த வீட்டில் வேலைக்காரி ஆகி போனாள்.



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top