Share:
Notifications
Clear all

மந்தாரம் 22

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  


அத்தியாயம் : 22

அதை கேட்ட அவன், "அவளோட வாழ்க்கை அவளோட கையில தான் இருக்கு.. அவளோட பாட்டி இறந்துட்டான்னு சொல்லி நான் என்ன பண்ண முடியும்?? வேற ஏதாவது மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க.. எதுக்கு என்னை பிடிச்சு வச்சிருக்கீங்க??" என்று அவன் கேட்டான்..

அதைக் கேட்டதும் அந்த ஊர்க்காரர்கள் எல்லாம், "என்ன தம்பி சத்தம் அதிகமா இருக்கு?? நாங்க தான் பார்த்தோமே.. நீ அந்த பொண்ணை கட்டிப்பிடித்து இருந்ததை அவளும் தான் ஒன்னும் சொல்லிக்கிறதுக்கு இல்லை..இவன் என்னென்ன பண்ணி இருப்பான்னு நமக்கு என்ன தெரியும்?? அந்த பொண்ணுடைய ஜாக்கெட் எல்லாம் கிழிஞ்சு இருந்துச்சு..அவள் உடம்பு மேல தாவணி இல்ல.. இன்னும் மேல எல்லாம் சொல்ல கூசுது.. நீங்க ஒரு முடிவு கட்டுங்க தலைவரே" என்று ஊர்காரர்கள் கொந்தளிக்க அதைக் கேட்டதும்,

அவனும் விடாமல், "உங்களுக்கு என்ன எல்லாம் பைத்தியமா யோசிக்கக்கூட மாட்டீங்களா?? மலை மேல இருந்து உருண்டு வந்தோம் அதனால உடை எல்லாம் விலகி இருந்துச்சு.. மத்தபடி நான் ஒன்னும் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்கல.. தேவி என்ன பார்த்துட்டு இருக்க நடந்தது என்ன அப்படின்னு சொல்லு??" என்று அவனும் கூறினான்..

இவன் மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறான் ஆனால் அவள் வாயையே திறக்க மாட்டேன் என்கிறாளே என்று அவள் மீது கோபம் அவனுக்கு வந்தது..

"நீங்க என்ன சொன்னாலும் எங்களால ஏத்துக்க முடியாது.. நாங்க எல்லாம் கிராமத்தில் வளர்ந்தவங்க.. ஒரு பொண்ணோட உடம்ப அவள் புருஷனை தவிர வேற யாரும் பார்க்கக்கூடாது.. தொடக்கூடாது அப்படின்னு வளர்ந்தவங்க நாங்க ..

உங்களுக்குள்ள என்ன நடந்திருந்தாலும் சரி.. நடக்கலைனாலும் சரி அந்த பொண்ணு அலங்கோலமா இருக்கிறதை நீங்க பார்த்து இருக்கீங்க..அவளை தொட்டு இருக்கீங்க.. கூட இருந்து இருக்கீங்க..நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்து இருக்கீங்க அதை பார்த்த பத்து பேரு எங்க ஊரிலேயே இருக்காங்க.. இதுல முடிவு பண்ண வேண்டியது தேவிதான்.. தேவி என்ன நடந்துச்சு சொல்லு" என்ற பஞ்சாயத்து தலைவர் கூறினார்..

"தேவி நீ என்னம்மா சொல்ற?? சொல்லு மா.. இதோ பாரு உன்னோட பாட்டி வேற செத்துப் போயிட்டாங்க.. ஒன்னு நீ இவரை கல்யாணம் பண்ணிக்கோ.. இல்ல அப்படின்னா வேற ஏதாவது மாப்பிள்ளை பார்க்கிறோம்.. அதுவும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் நடக்கணும் இல்லேன்னா உன்னை கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுவோம்.. நீ இப்போ அனாதையா இருக்க உனக்குன்னு யாரும் இல்ல உன் மனசுக்குள்ள என்ன நினைச்சிருந்தாலும் சொல்லிடு.. உன்னால ஒரு களங்கம் இந்த ஊருக்கு வர வேண்டாம்.. நாளைக்கு வேற பொண்ணுங்களும் வேற பசங்க கூட இருந்துட்டு வந்துட்டு வேறொருத்தங்களை கல்யாணம் பண்ணிக்கிறத நாங்க ஒத்துக்க மாட்டோம்.. ஒன்னு இவரை கல்யாணம் பண்ணிக்கோ இல்லை அம்மனுக்கு நேர்ந்து விட்டு விடுவோம்" என்று கேட்டார்..

அதைக்கேட்ட அவர்களோ, "என்ன இவளை அம்மன் கோவிலுக்கு நேர்ந்து விட போறீங்களா?? இதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம்.. கற்பு கலைஞ்ச ஒருத்தியை கோவிலுக்குள்ள விடறதை நாங்க ஏத்துக்க மாட்டோம்.. ஒன்னு இவளை அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க.. இல்லை இவளை இந்த ஊரை விட்டு துரத்தி விடுங்க.. இவள் இந்த ஊரில் இருக்கிறதை நாங்கள் ஏற்க மாட்டோம்" என்ற அனைவரும் கொந்தளித்தனர்...

அதைக் கேட்டு பஞ்சாயத்து தலைவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..

தேவிக்கு உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை.. எந்த தவறும் நடக்கவில்லை என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.. ஆனால் ஊர்மக்கள் அவளை ஒரு புழுவைப் போல பார்ப்பது அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. இனி அவள் என்ன சொன்னாலும் அவர்கள் நம்ப போவதும் இல்லை..

அதே நேரம் பாட்டி இறந்து விட்டார் தான் இப்பொழுது ஒரு அனாதை தனக்கு என்று உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.. தன்னால் இவர் இப்படி பழி சொல் ஏற்பது அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..

அதே நேரம் இந்த நொடி அவரை விட்டு விட்டால் அவரை இனி அவள் வாழ்க்கையில் சந்திக்க முடியாது.. அவள் விது மீது உயிரையே வைத்து விட்டாள்.. வாழ்வோ சாவோ இப்பொழுது அவருக்கு மனைவியாகும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருக்கிறது அதை அவள் தக்க வைக்க எண்ணினாள்..

அது தவறு என்று தெரிந்தாலும் அதை விட்டால் அவளுக்கு ஆசைப்பட்ட விதுவை தவறவிட நேரிடும் என கருதினாள்.. தவறு என்றே ஒரு தவறை செய்ய முடிவு செய்தாள் தேவிகா..

"என்னது எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா?? என்னால எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது.. யாரை கேட்டு எனக்கு கல்யாணம் முடிவு பண்றீங்க??" என்று அவன் கூறினான்..

அதைக் கேட்டு அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவனும், "என்ன பார்த்துட்டு இருக்க சொல்லு.. கல்யாணம் எல்லாம் பண்ண முடியாதுன்னு சொல்லு.. அவங்க என்னென்னமோ பேசிட்டு இருக்காங்க.. நீ அமைதியா இருக்க.. நடந்ததை என்னன்னு சொல்லு" என கோபமாக கேட்டான்..

அந்த நொடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள் வாழ்க்கையிலேயே முதலும் கடைசிமான ஒரு தவறை அவள் செய்தாள்..

" இந்த ஊரு என்ன சொல்லுதோ அதுக்கு நான் கட்டுப்படுகிறேன்.. என்னை இவரு தொட்டது உண்மை.. என்னை இவரு யாரும் பார்க்க கூடாத அந்த கோலத்தில் இவரு பார்த்து இருக்காரு.. அப்படி இருக்கும்போது என் உடம்பை பார்த்த இவரைத்தான் நான் கல்யாணம் பண்ணுவேன்.. அப்படி இல்லை அப்படின்னா நான் செத்து போகிறேன்" என்று அவள் கூறினாள்..

பெண் பேச்சு தான் பொல்லாததாகிற்று அல்லவா?? அவள் அவ்வாறு கூறியதும் அவ்வளவுதான் அனைவரும், "நான் சொல்லல தப்பு நடந்து இருக்கும் அப்படின்னு அதுதான் அவளே சொல்லிட்டாலே தப்பு நடந்து இருக்கு அப்படின்னு.. இனி இந்த பயலை சும்மா விடக்கூடாது.. நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி இவன் கூட கண்டிப்பா அனுப்பியே ஆகணும்" என்று ஊர் மக்கள் எல்லாம் கொடி பிடிக்க துவங்கினர்..

அவள் பேசியதை அவன் அதிர்ச்சியோடு பார்த்தான்.. அதனால் சுத்தமாக நம்ப முடியவில்லை.. எப்படி இவ்வளவு கூசாமல் பொய் சொல்கிறாள் என திகைத்தான் விது..

அவனுடைய பார்வையோ அவள் பேசியதை கேட்டு தீ பார்வையாக இருந்தது.. தன் மேல் இப்படி ஒரு பழி போட்டு விட்டாலே என இருந்தது..

பிறகு அவனை அந்த கிராமத்தார் விடவில்லை.. தாலி கட்டியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு அவன் சென்றான்..

அவனை எப்படியவாது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவள் முடிவு செய்து விட்டால் போலும்.. அதனால் ஒரு மக்கள் எல்லாம் ஒன்று திரள தாலி கட்டினால் மட்டும் தான் இந்த ஊர் எல்லையை தாண்ட முடியும் என அவர்கள் அவனை சுற்றி வளைக்க, தன் மேல் இந்த பழியை போட்ட அவள் மீது கடும் கோபத்தில் இவளை அவ்வளவு எளிதாக விடக்கூடாது என கருதி, வேறு வழியின்றி அவன் அந்த ஊர் அம்மனின் சாட்சியாக தாலி கட்டி விட்டான்..

அவளுக்கோ அந்த தாலி அவள் கழுத்தில் ஏறியதும் இனம் புரியா உணர்வு மேல் எழும்பி நிற்க ஊரார் எல்லோரும், "எப்படியோ அந்த பிள்ளைக்கு திருமணமாகிவிட்டதே" என்ற நினைப்பில் அனைவரும் இருக்க பஞ்சாயத்து தலைவர், "தம்பி பிரச்னை பண்ணனும்னு நினைக்காதீங்க.. அந்த பிள்ளையை கூட்டிட்டு போய் வாழ பாருங்க.. இது எங்க ஊரு.. எங்க ஊரு சட்டத்தை எல்லாம் எங்களால யாருக்காகவும் மாத்திக்க முடியாது.. நாங்க ஊர் மக்கள் அனைவரும் ஒன்னா சேர்ந்துதான் ஒரு முடிவு எடுத்து இருக்கோம்.. அதுக்கு நீங்க கட்டுப்பட்டு தான் ஆகணும்.. எங்க ஊரு பொண்ணை தொட்டு இருக்கீங்க.. அப்படியெல்லாம் உங்களை விட்டு விட மாட்டோம்.. அதுக்குத்தான் இந்த கல்யாணம் செஞ்சு வச்சோம்.. அந்த பிள்ளைக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு உங்களை சும்மா விடமாட்டோம்.. அவ்வளவுதான் சொல்லிட்டோம்.. நீங்க யாரு?? உங்க அப்பா யாரு?? எல்லா விவரமும் எங்களிடம் இருக்கு.. அதனால் அவளை கூட்டிட்டு போய் எங்கேயாவது விடலாம் என்று மட்டும் நினைக்காதீங்க" என்று எச்சரிக்கை செய்தார்..

அவனோ அதை கண்டு அவர்களை எல்லாம் முறைத்து பார்த்தவன் தன்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்ட வைத்து திருமணம் செய்து கொண்டாலே என்ற கடுப்பிலும் ஒரு வாரமாக தன் வாழ்க்கையின் வெறுப்பின் உச்சிக்கு சென்ற அவனுடைய தற்போதைய மனநிலையையும் ஊரார் பேசிய வார்த்தைகளும் எல்லாம் கலந்து எதுவுமே யோசிக்காமல் தாலி கட்டிய அடுத்த நொடி அவன் கண்கள் நிறைய விதுவை நிமிர்ந்து பார்த்த அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் விது பிரதாப்..

அதை அங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை..அனைவருமே அவனுடைய செயலில் அரண்டு போயினர் என்று தான் கூற வேண்டும்.. இவ்வளவு ஏன் சுள்ளென்ற அறையின் தாக்கத்தில் அவளின் கன்னத்தில் அவனுடைய கை ரேகை பதியும் அளவுக்கு அழுத்தமாக அவன் அடித்து இருந்தான்..

அவனின் கோபத்திற்கான காரணம் அவளுக்கு தெரியும் என்பதால் அவள் கண்களில் நீர் நிறைய அமைதியாக நின்றாள் தேவிகா..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top