Share:
Notifications
Clear all

மந்தாரம் 21

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

மந்தாரம் : 20

பஞ்சாயத்து கூடி இருந்தது.. பஞ்சாயத்தின் முன்னால் விது மற்றும் தேவிகாவை நிறுத்தி இருந்தார்கள்.. குற்றவாளிகளை போல அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்..

அவனுக்கோ அவனுடைய நிலைக்கு இவர்கள் முன்னால் இப்படி எல்லாம் நிற்க வேண்டுமா என இருந்தது.. ஆம்.. அவனுடைய போன் முதல் அவனுடைய அனைத்து பொருள்களையும் பறிமுதல் செய்த அந்த கிராமத்தார்கள் அவனை அடுத்து என்ன செய்வது என யோசிக்க கூட விடாமல் வீட்டு சிறை செய்து இருந்தார்கள்..

அவர்கள் சொல்வது போல நடந்து கொள்ளவில்லை என்றால் அவன் இந்த கிராமத்தை விட்டு செல்ல முடியாது என்ற நிலையில் அவர்கள் அவனை வைத்து இருந்தார்கள்.. அதை எல்லாம் பார்த்து ஏக கடுப்பில் அவன் இருந்தான்..

பாட்டி தன்னை விட்டு சென்ற துக்கம் அவள் முகத்தில் தாண்டவம் ஆடியது.. பாட்டி சொன்ன சொல்லை கேட்காதது எத்தகைய நிலைக்கு தன்னை ஆளாக்கியது என அவளுக்கு இந்த ஒரு வார காலத்திற்குள் புரிந்தது..

இந்த ஒரு வாரத்தில் அவளுக்கு புரிந்தது ஒன்றே ஒன்று தான் பாட்டி தான் அவளுடைய தைரியம் என்றும் அவர் இல்லாமல் தான் ஒரு அனாதை என்ற நிலையில் அவள் இருந்தாள்..

அந்த ஊரார் அனைவரும் அவளை ஒரு தாசியை போல காண்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..என்னவோ அவள் ஒரு கொலை குற்றவாளி போல அவளை கண்டாலே தீண்ட தகாத பெண் போல அவளை நடத்தினர்..

கிட்டத்தட்ட பாட்டி இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது படித்துப் படித்து சொன்னார் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அப்பொழுதெல்லாம் கேட்கவில்லையே.. இப்பொழுது பாட்டி தனக்காக உயிரை விட்டு விட்டாரே என்ற வருத்தத்தில் தேவிகா நின்று கொண்டிருந்தாள்..

இப்போது அவளை பொறுத்தவரை அதாவது அவளுடைய மனதை பொருத்தவரை அவளுக்கு இதோ அவளுக்கு எதிரே இருக்கும் விது அவன் மட்டும் தான் உறவாக இருக்கிறான்.. ஆனால் அதை அவன் உணர்வானா??

ஆனால் விது அவனின் முகம் கடுப்பாக இருந்தது.. ஏனெனில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக தன்னை பிணைய கைதி போல பிடித்து வைத்து இருப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.. ஒவ்வொரு நொடியும் அவனுக்கு முள் மீது நிற்பது போலதான் அவன் இருந்தான்..

ஆம் அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த ஊர்க்காரர்கள் கண்ணுக்கு அவன் தேவியிடம் அத்து மீறியது போல தோன்றி இருக்கிறது.. தேவியும் அவனை அணைத்து இருப்பதை கண்டவர்கள் இருவரும் தவறு செய்தார்கள் என முடிவு செய்து விட்டார்கள்..

எத்தனையோ முறை இருவரும் ஒன்றாக நடப்பதை அந்த கிராமமே பார்த்து இருக்கிறதே..

அது மட்டுமில்லாமல் ஒரு இரவு முழுவதும் ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்து இருக்கிறார்கள் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம் இதற்கு ஒரு தீர்மானம் ஆகாமல் விதுவை விடக் கூடாது என எண்ணி அவனை பிடித்து வைத்திருக்க அவன் எவ்வளவோ முறை தன் பக்க நியாயத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை..

அப்படி இருக்க, இன்று தான் அதற்கு ஒரு தீர்மானம் எடுக்க போகிறார்கள் அதற்கு தான் பஞ்சாயத்து கூடி இருக்கிறது..

அந்த ஊர் மக்கள் முழுவதும் என்ன நடக்க போகிறதோ என்ற ஆவலில் காத்து இருக்கிறார்கள்..அதற்குள் பல இட்டு கதைகளையும் கட்டி இருந்தார்கள் என்பது வேறு விஷயம்..

"குமரேசா முடிவா என்ன சொல்ற?? அதுதான் மழை அதனால உச்சி மலையில் இருந்து இறங்க முடியல அப்படின்னு இவங்க ரெண்டு பேரும் சொல்றாங்க.. வேற எந்த தப்பும் நடக்கல அப்படின்னு சொல்றாங்க.. நீ இதுக்கு என்ன சொல்ற??" என்று பஞ்சாயத்து தலைவர் கேட்டார்..

"ஐயா நீங்களா இருந்தா உங்க பையனுக்கு இப்படி ஒரு இரவு ஒருத்தன் கூட இருந்துட்டு வந்தவளை கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?? அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்ததை ஊரே பார்த்து இருக்கு.. இதுக்கு மேல என்ன வேணும்?? மழையோ எதுவோ அவங்க இல்லைன்னு சொன்னாலும் என்ன நடந்துச்சுன்னு நமக்கு தெரியாதுல்ல.. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் நீங்க என்னமோ பண்ணிக்குங்க எனக்கு தெரியாது எவன் கூடவோ போய் படுத்துட்டு வந்தவளை கல்யாணம் பண்ற அளவுக்கு நல்ல மனசு எனக்கு கிடையாது.." என்று அவன் தன் பேச்சு தான் இறுதிப் பேச்சு என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்..

அதை கேட்டதும் கூட்டத்தில் ஒருவன், " ஐயா ஒரு மானமுள்ள ஆம்பிளை இப்படி தான் பண்ணுவான்..நீங்க என்ன கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?? இதுங்க இரண்டையும் ஊரை விட்டு அடிச்சி துரத்தி விடுங்க" என்றார்..

அதை கேட்டு பஞ்சாயத்து தலைவர், "சும்மா இருப்பா அது தான் நான் பேசிட்டு இருக்கேன்ல" என்றான்..

தேவிக்கு இவர்கள் பேச்சு எல்லாம் காது கொடுத்து கேட்க கூட முடியவில்லை..கண்ணீர் தான் வந்தது..

இப்பொழுது அவளுடைய திருமணம் நடக்காது என முடிவு ஆகிவிட்டது.. இப்பொழுது அவளுடைய நிலைக்கு ஏதாவது ஒரு தீர்ப்பு கொடுத்து ஆக வேண்டும் என்ற நிலைக்கு பஞ்சாயத்து தலைவர் ஆகிவிட்டார்..

ஆனால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு பொறுமை விது பிரதாப்புக்கு இல்லை .

அதனால், "இது பாருங்க இதெல்லாம் ரொம்ப தப்பு.. மலை மேலே இருந்து இறங்குறதுக்குள்ள மழை வந்துடுச்சு.. நாலா பக்கமும் தண்ணி.. இருட்டு வேற.. மண் சரிவு.. மரம் விழுந்து இருந்துச்சு..இதுல எங்க இருந்து கீழ இறங்கி வருது?? அடுத்த நாள் காலையில நாங்க கிளம்பி வரும் பொழுது தான் நீங்க எங்களை பார்த்தீங்க.. இது நடுவுல நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல.." என அவன் கூறினான்..

அதற்கு கூட்டத்தில் ஒருவர், "அப்போ நாங்க பார்த்தது ஒன்னும் இல்லைன்னு சொல்றியா?? அதுதான் நீயும் அவளும் அரையும் குறையுமா கட்டி பிடிச்சிட்டு இருந்தீங்களே.. கண்றாவி.. நாலு செவுத்துக்குள்ள பண்றதை எல்லாம் வெட்ட வெளியில் பண்ணிட்டு??" என அவர் கூறினார்..

அதற்கு அங்கிருந்த பெண்கள் அனைவரும், "இதோ பாருங்க ஐயா... இதுக்கு நீங்க ஒரு நல்ல தீர்மானம் கொடுக்கணும்.. கல்யாணம் ஆகாத ஒருத்தி இப்படி கண்டவன் கூட சுத்தி பழகி நம்ம ஊர் மானத்தை கெடுத்துட்டு இருக்கா.. இதெல்லாம் சரி வராது.. இதைப் பார்த்து நம்ம பிள்ளைகள் இந்த வேலையை செய்ய மாட்டாங்கன்னு என்ன அர்த்தம்?? சொல்லுங்க.. அவளை ஊரை விட்டு ஒதுக்கி வையுங்கள்.. இவ இங்கேயே இருந்தா எங்க பிள்ளைகளுக்கு தான் ஆபத்து" என அவர்கள் கூறினர்..

அதைக் கேட்டு இவர்கள் என்ன பைத்தியமா தேவையில்லாமல் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என எண்ணி விது பிரதாப், "இதோ பாருங்க நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல?? நடக்காத விஷயத்தை ஏன் இப்படி பெருசு பண்ணி பேசிட்டு இருக்கீங்க??" எனக் கேட்டான்..

அதைக் கேட்ட பஞ்சாயத்து தலைவர், "இருங்க தம்பி அதுதான் விசாரிச்சுட்டு இருக்கோம்ல.. ஏதாவது ஒன்னுனா எங்க மக்கள் பேசத்தான் செய்வாங்க.. அவங்க பேசுறாங்கன்னு நீங்க பேசக்கூடாது புரியுதா??" என்று அவர் கூறினார்

"என்ன விசாரிக்கிறீங்க?? ஒரு வாரமா நான் இதையே தான் சொல்லிட்டு இருக்கேன்.. என்னை போகவிடாமல் பிடிச்சு வச்சிருக்கீங்க.. இதுக்கு என்ன அர்த்தம் ?? என்னோட போன், என்னோட திங்க்ஸ் எல்லாமே குடுங்க எனக்கு போகணும்.." என அவன் கேட்டான்..

"தம்பி நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது.. இதுக்கு ஒரு தீர்மானம் ஆகாம நீங்க போக முடியாது.. ஏன்னா இதுல நீங்களும் சம்பந்தப்படுத்தி இருக்கீங்க.. உங்களால தான் இந்த பிரச்சனையே நடக்குது" என்று அவர் கூறினார்

"நான் அப்படி என்னங்க பண்ணினேன்??" என கேட்டான்..

"இதோ பாருங்க தம்பி அதெல்லாம் எங்களுக்கு தெரியாது.. எங்க ஊர் வழக்கப்படி இதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது.. திருமணமாகாமல் ஒரு ஆணும், பெண்ணும் தனியா இருந்தா நாங்க அதை எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது.. நீங்க என்னென்னமோ சொல்றீங்க.. இப்ப அந்த பிள்ளைக்கு பாட்டியும் செத்துப் போயிடுச்சு.. இப்போ அனாதையா இருக்கா அவளை கட்டிக்கிறேன்னு சொன்னவன் கூட உங்க கூட இருந்ததுனால கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்..

இப்போ அந்த பொண்ணை யார் கல்யாணம் பண்ணுவா?? அந்த பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை வேண்டாமா??.. இதே அவங்க பாட்டி இருந்திருந்தால் மொத்தமா ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்போம் இப்ப பாட்டி வேற இல்ல அந்த பொண்ணுக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலைமையில நாங்க இருக்கோம்" என்று அவர் கூறினார்...

ஏனெனில் பாட்டி தன்னால் தான் இறந்து விட்டாரோ என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு வெகுவாக இருந்தது.. அதனால் இவளுக்கு ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்ற உறுதியில் அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் இருந்தார்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top