மோகம் 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

மோகம் - 5

கண்மணியும் அவளுடைய தோழியும் நின்று கொண்டிருக்க, அங்கே வந்த மாலதி,
"கண்மணி, இங்கே வா உன்கிட்ட ஒன்னு பேசணும்" என்றவர் அவளின் தோழியிடம், "அவள் சீக்கிரம் துணி மாத்திட்டு வந்துடுவா" என்று கூறி விட்டு அவளை அழைத்து செல்ல அவளுக்கோ அம்மா தன்னை அடிக்க தான் செல்கிறார்கள் என பயம் தொற்றிக் கொண்டது..

உள்ளே சென்றதும், "அம்மா நான் ஒன்னும் செய்யல.." என பயந்து போய் அவள் கூறினாள்.

அதை கேட்டு அவர் கண்களை உருட்டி, "வாயை மூடு டி..நான் சொல்றதை முதல்ல கேளு.. இங்கே பார்.. இப்போ உனக்கு கல்யாணம் புரியுதா" என மிரட்டும் தோரணையில் கூறினார்..

அதே நேரம் கல்யாணம் என்றால் என்ன என தெரியாத கண்மணி அதை கேட்டு முழித்தாள்..

"கல்யாணமா எனக்கா??" என அதிர்ந்து போய் கேட்டாள்..அவளை பொறுத்தவரை அவள் சின்ன பெண்.. ஆறு மாதம் முன்பு தான் பன்னிரண்டாம் வகுப்பை முடித்து இப்போது கல்லூரியில் படித்து கொண்டு இருந்தாலும் இன்னும் அவள் பள்ளி செல்லும் சிறுமி என்ற நினைவில் இருந்து இன்னும் அவள் வெளியே வரவில்லை..

என்ன இருந்தாலும் பதினெட்டு வயது ஒன்றும் பெரிய வயதல்லவே.. அவள் இன்னும் ஒரு குழந்தை தானே.. அந்த வயதுக்கு உண்டான பக்குவம் தானே அவளுக்கு இருக்கும்..

அப்படி இருக்க, தனக்கு திருமணமா என அவள் நினைத்தாள்.. ஆனால் அதை எல்லாம் அவளின் அம்மாவிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு அவளுக்கு தைரியம் இல்லை.. அப்படி இருக்க அவள் கேட்டதும் அவரோ, "என்னடி சைந்தவி மாறி பண்ற ஐடியாவா?? உனக்கான்னு கேக்குற?? உனக்கு தான் அதுவும் இப்போ.. புரியுதா??" எனக் கூறவும் அவள் கண்களில் முணுக்கென்று கண்ணீர் வந்தது..

அதை கண்ட அவரோ இவள் எங்கேயாவது சொதப்பி விடுவாளோ என எண்ணி, மாலதி தன் கண்ணை உருட்டி அவளை அடிக்க போகும் தோரணையில், "எதுக்கு டி அழுகுற?? எவனையாவது இழுத்துட்டு போலாம்னு நினைப்பா??" என அவர் உறுத்து கேட்டார்..

அவளோ அம்மா அவள் கனவிலும் நினைக்காத விஷயத்தை கூறவும், "அம்மா இல்லை மா.. அப்படி எல்லாம் இல்லை மா.. எனக்கு படிக்கணும் மா.." என கெஞ்சி கூறினாள்..

"அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் படிக்கலாம்..இந்த கல்யாணத்தை நீ பண்ணிக்கிற.. அதுவும் ஆதி தான் உன்னுடைய புருஷன்.. இப்போ உன்னை கீழே கூட்டிட்டு போவேன்..அங்க சபைல யார் கேட்டாலும் எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் அப்படின்னு மட்டும் சொல்ற.. ஏதாவது மாத்தி சொன்ன அவ்வளவுதான்.. முக்கியமா ஆதி கேட்டா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் அப்படின்னு மட்டும் தான் சொல்ற.. எங்கேயாவது மாத்தி சொன்ன அவ்வளவுதான் என்னை பத்தி தெரியும்ல்ல.." என்று மாலதி மிரட்டி கூறும் பொழுது அவளுக்கு பயம் தான் வந்தது..

ஆம்.. அவள் கல்யாணம் வேண்டாம் எனக் கூறினால் அம்மா அங்கேயே அவளுக்கு தூக்கு மாட்டி தொங்க விட்டு விடுவார் என நன்றாக அவளுக்கு தெரியும்.. அந்த அளவுக்கு அவளை அவளுடைய அம்மா கொடுமை செய்வார்..

அப்படி இருக்க, அந்த கொடுமையில் இருந்து தப்பிக்க கல்யாணம் செய்து கொள்ளலாம் என யோசித்தால் கூட ஆதி அந்த பெயரை கேட்டதுமே அவளின் அடிவயிற்றில் இருந்து ஒரு அமில வாயை சுரந்து அவளுக்கு பய பந்தை அல்லவா உருட்டிக் கொண்டிருக்கிறது..

அவளின் ஆதி அண்ணா என்றாலே அவளுக்கு பயம்.. அப்படி இருக்க அவரை போய் எப்படி திருமணம் செய்து கொள்வது??

இப்போது என்ன செய்வது என தெரியாமல் கண்மணி கண்ணீரோடு தன் அம்மாவை பார்த்துக்கொண்டு இருந்தாள்…

அவரோ இது போன்ற வாய்ப்பு அவரின் குடும்பத்துக்கு கிடைக்காது என்ற நிலையில் கல்யாணம் உடனே நடந்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தார் மாலதி..

அப்படி இருக்க சைந்தவி திருமணத்திற்காக மனோன்மணியும் இவளுக்காக எடுத்துக் கொடுத்த புடவை கட்டி கொடுத்து, அழகாக தலைவாரி நான்கு முழம் பூவை வைத்து, பெரிய பொட்டெல்லாம் வைத்து அவர் காலத்தில் அணிந்திருந்த நெக்லஸ் மற்றும் பெரிய ஆரத்தை அவளுக்கு அணிவித்து சற்று பெரிய பெண் போல அவளை அழகுப்படுத்தி இப்போவே கல்யாணத்துக்கு தயார் என அனைவரையும் நம்ப வைக்கும் பொருட்டு அவர் அவளை தயார் செய்து கொண்டே, "நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல.. அங்க போய் எங்கேயாவது அழுத அவ்வளவு தான்.. யாராவது கேட்டா எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் அப்படின்னு சொல்ற..என்ன கேட்டாலும் உனக்கு சம்மதம் மட்டும் தான் சொல்லணும் புரியுதா??" என்று மிரட்டி அவளை அழைத்து சென்றார்..

சபை கூடி இருந்தது.. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தனர்.. எல்லாம் இவள் சொல்லும் வார்த்தைகள் தான் உள்ளது என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்தார்கள்...

தன்னை இப்படி ஒரு இக்கட்டில் தன்னுடைய அம்மா நிறுத்தியிருப்பதை சுத்தமாக அவன் விரும்பவில்லை..

கல்யாணம் செய்யவில்லை என்றால் வாழ முடியாதா?? எதற்காக கல்யாணம் என அம்மா என்னை போட்டு பாடாகப் படுத்துகிறார் என்று நினைத்தவனுக்கு மாலதி அத்தை உடன் வரும் கண்மணி முகத்தை பார்க்க கூட கஷ்டமாக இருந்தது..

அவளை அறுக்க போகும் ஆட்டை அழைத்து வருவது போல அத்தை அழைத்து வருவதை கண்ட அவனுக்கு ஏனோ அவள் மீது பரிதாபம் வந்தது..

எப்படியாவது அவள் வாயில் இருந்து இந்த திருமணம் வேண்டாம் என்ற வார்த்தையை புடுங்கி விட வேண்டும்.. பிறகு இருக்கிறது இவர்கள் அனைவருக்கும் என மனக்கோட்டை கட்டிக் கொண்டு இருந்தான்.. அது சற்று நேரத்தில் சிதற போகிறது என்பது தெரியாமல் அதுவும் அவன் யாரை பாவம் என எண்ணினானோ அவளே அவனுக்கு எமனாக வருவாள் என்பது தெரியாமல் அவள் மீது பரிதாபப்பட்டு கொண்டு இருந்தான் ஆதி..

சேலை உடுத்தி பெரிய பொட்டு எல்லாம் வைத்து அவளை பார்க்கும் பொழுது சற்று பெரிய பெண் போல அவனுக்கு காட்சி அளித்தாலும் அது ஒன்றும் தலையில் ஏறாதது போல அவனுக்கு இருந்த அழுத்தம் அவனை அமைதியாக நிற்க செய்தது..

காளியம்மாள் அமைதியாக இருந்தார்.. அவர்கள் முடிவு செய்யட்டும் அனைவரும் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணம் மட்டும் தான் அவளுக்கு இருந்தது..

மனோன்மணி இன்ஹெலர் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தவருக்கு அவள் எப்படியாவது இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என இருந்தது..

ஏனெனில் இவள் ஏதாவது உளறிவிட்டால் அவ்வளவுதான் மகனை பிடிக்க முடியாது..

ஏற்கனவே அவருடன் வாழ்நாள் முழுவதும் பேசாமல் இருக்கும் அளவுக்கு மகனை மனோன்மணி தொல்லை படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும்..

ஆனால் அவருக்கு அவரின் நம்பிக்கையை விட்டுக் கொடுக்க முடியவில்லை.. அதனால் இன்று திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று வெறி அவர் எழுந்தது..

அது மட்டும் இன்றி தங்களை இவ்வளவு தூரம் அசிங்கப்படுத்தி சென்ற சைந்தவி முன்னால் தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணமும் அவரை இதையெல்லாம் செய்ய வைத்தது..

அவர் நினைத்த காரியம் நடக்கும் வரை அவர் பின்வாங்க மாட்டார் என்ற நிலையில் அவர் அமர்ந்திருந்தார்..

அதற்குள் மாலதி அவளை அழைத்து வந்து, "இப்போ யாருக்கு என்ன என்ன கேட்கணுமோ கேட்டுக்கோங்க.. நான் அவகிட்ட விஷயத்தை சொல்லிட்டேன்.. அவள் கல்யாணத்துக்கு சம்மதம் அப்படின்னு சொல்றா.. இனி நீங்க கேட்டுக்கோங்க" என்று நல்லவள் போல அவர் பேசிவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டார்..

யார் இதை கேட்பது என அமைதியாக இருக்க மனோன்மணி தன்மகனை பார்த்து, "நீயே அவ கிட்ட கேளு.. திரும்ப நான் ஏதாவது சொல்லி அதுக்கும் நீ ஏதாவது சொல்லுவ.. எனக்கு எப்படி இருந்தாலும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அவ்வளவுதான்.. நீயே கேட்டுக்கோ.." என்று அவர் மூச்சை இழுத்து விட்டபடி கூறினார்..

அதைக் கேட்டு அவன், "உங்க தர்மத்துக்கும், நியாயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று கூறி, "கண்மணி" என அழுத்தமாக கூற, அவனின் கணீர் குரலை கேட்ட அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. அவனின் குரலும் அவனின் பார்வையும் அவளுக்கு படபடப்பை கொடுத்தது..

அவனுடைய பார்வையில் அழுத்தம் அவனுடைய பார்வையை கண்டதுமே அவளுக்கு கண்களில் இப்ப கொட்டி விடுவேன் என்ற கண்ணீர் துளி ததும்பியது..

ஆனால் அழுதுவிட்டால் அவ்வளவுதான் அவளுடைய அம்மா இங்கேயே அவளை நரபலி கொடுத்து விடுவார்.. அப்படி இருக்க, கண்ணீரை அடக்கிப் பிடித்த படி, "சொல்லுங்க ஆதி அண்ணா" என கூறினாள்..

அவனுக்கோ அவள் அண்ணா என்றதும் சுத்தமாக என்ன கேட்கப் போகிறோம் என்பதே மறந்து போனது.. இவளை போய் கல்யாணம் செய்ய வேண்டுமா என்று அவனுக்கு இருந்தது..

உடனே மாலதி," என்ன அண்ணா சொல்ற கல்யாணம் கட்டிக்க போறவனை மாமான்னு சொல்லு..??' முறை தவறி கூப்பிடாதன்னு உன்கிட்ட எத்தன தடவ சொல்றது என்று மாலதி அப்போதும் கடிந்தார்..

அவனுக்கு அதுவும் எரிச்சலாக இருந்தது.. அவன் பேச வந்தது ஒன்று இவர்கள் பேசிக் கொண்டிருப்பது ஒன்று என்பது போல, "அத்தை இருங்க நான் பேசறேன்.. அவள் என்னமோ என்னை சொல்லிட்டு போறா எனக்கு பத்தி கவலையே இல்லை.. நான் கேட்க வேண்டியது கேட்டுடுறேன்" என்று கூறியவன் அவளை பார்த்து, "கண்மணி உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா??" என்றான்..

"சம்மதம்" என கூறினாள்.. அதை கேட்டதும் அங்கு இருந்த அனைவர் முகத்திலும் வெளிச்சம் பரவி இந்த திருமணம் எப்படி இருந்தாலும் நடக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்தது..

அதைக் கேட்டவன் உடைந்து போனான்.. ஏனோ இவர்கள் அத்தனை பேரும் அவனை போட்டு அழுத்தியதில் இந்த சிறு பெண் சம்மதம் என்ற ஒற்றை வார்த்தையை கூறியதும் அவனுக்கு கோபம் வந்தது..

ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல், "நல்லா யோசிச்சுக்கோ இப்பதான் எனக்கும் சைந்தவிக்கும் நடக்க இருந்த கல்யாணம் நின்னு போச்சு.."

"பரவால்ல நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று அவள் கூறினாள்..

அதைக் கேட்டு மாலதிக்கு அவ்வளவு சந்தோஷம் வந்தது.. இவனோ எரிச்சல் தாளாமல், "உனக்கும், எனக்கும் இடையில 10 வயசு வித்தியாசம் நான் ரொம்ப கோபக்காரன்.. நல்லா யோசிச்சுக்கோ.. திரும்ப தப்பான முடிவை எடுத்துட்டோம்னு நீ வந்துட கூடாது.. அதுக்காக தான் சொல்றேன்" என்று அவன் கூறினான்..

அதாவது எப்படியாவது அவள் இந்த கல்யாணம் வேண்டாம் என்று கூறி விட மாட்டாளா என்ற எண்ணம் அவனுக்கு வந்தது.. அதனாலேயே அவளிடம் அந்த பதிலை சொல்லாதே கல்யாணம் வேண்டாம் என சொல் என மறைமுகமாக அவளை மிரட்டிக் கொண்டிருந்தான்..

ஆனால் ஏற்கனவே வேறொரு மிரட்டலில் இருந்த அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், "பரவாயில்ல எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதம்" என்று கிளிப்பிள்ளை செல்வது போல சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்ப கூறினாள்..

அதைக் கேட்டு அவனுக்கு ஆத்திரம் வந்தது.. படிக்கும்போது இவளுக்கு திருமணமா?? அப்படி திருமணத்திற்கு இவளுக்கு என்ன அவசரம் என்று அவளை மனதுக்குள் வறுத்தெடுத்தான்..

"அதுதான் அவ சம்மதம் சொல்லிட்டாலே.. மறுபடி மறுபடி எதுக்கு கேக்குற ஆதி??" என மாலதி கூற கூடவே மனோன்மணியும், "அதுதான் அவள் நீ கேட்டதும் ஒத்துக்கிட்டாலே.. அப்புறம் என்ன?? கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.. குறிச்ச முகூர்த்தத்தில் குறிச்ச மண்டபத்தில் கல்யாணம் நடக்கணும்" என்று கூறி அவர் எழுந்து கொண்டார்..

அனைவரும் அமைதியாக இருக்க, "எல்லாரும் கல்யாண வேலையை பாருங்க மண்டபத்துக்கு போக வேண்டிய வேலையை பாருங்க.. டைம் ஆச்சு.. இனி என்ன ஆதி நீ இப்படி நின்னுட்டு இருக்க?? நீ போய் பட்டு வேட்டி பட்டு சட்டையை மாத்திட்டு வா.. மாலதி நம்ம குடும்ப நகையை கொண்டு வந்து தரேன்.. கூடவே சைந்தவிக்கு நான் வாங்கி வச்சதையும் கொண்டு வரேன்.. அதை எல்லாம் கண்மணிக்கு போட்டு அழகுப்படுத்தி கூட்டிட்டு வா" என்று கூறியவர் சற்று முன் இன்ஹெலர் உபயோகித்து மூச்சு விடக் கூட சிரமப்பட்டு கொண்டிருந்தவர் என அவரை யாரும் கூறி விட மாட்டார்கள்.. அந்த அளவுக்கு தெளிவாக மனோன்மணி பேசினார்..

அதைக் கண்ட அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.. அம்மா நினைத்ததை முடிக்கும் ரகம் என்றாலும் அம்மாவால் திருமணத்தை நடத்தி வைக்க தான் முடியும்..

ஆனால் இந்த திருமணத்தை முறிக்கும் விஷயத்தை நான் செய்கிறேன்.. அப்போதுதான் மீண்டும் ஒரு கல்யாணம் என்று அம்மா என் பக்கம் வர மாட்டார்கள் என்று எண்ணியவன் கண்மணியை மேலும் அழுத்தமாக பார்த்தான்..

அவள் சபையில் உள்ள அனைவரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை என்றாலும் இவனின் ஊசி குத்தும் பார்வை மட்டும் அவளின் உள்ளத்தில் பதிந்ததோ எண்ணவோ கூனிக்குறுகி அந்த இடத்தில் நின்றாள்.. கண்மணி..

அதே நேரம் அம்மாவின் பிடிவாத குணத்தை அறிந்த அவனுக்கு ஏனோ தெரியாமல் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்ன அந்த கண்மணி மீது கடுப்புதான் வந்தது..கூடவே இதை எப்படி கொண்டு போகணும் எனக்கு நல்லா தெரியும் என்று மனதுக்குள் வேறொரு கணக்கு செய்து கொண்டான் ஆதி.. அவனின் கண் முன்னால் கண்மணி நிற்க அவள் தான் பகடைக்காயாக மாறப் போகிறாள் என அப்போது அவளுக்கு விஷயம் தெரிய வாய்ப்பில்லை..

எந்த பக்கம் போனாலும் பாவம் அந்த சிறு பெண்ணே பாதிக்கப்படுகிறாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top