மோகம் 4

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

மோகம் - 4

ஒரு வழியாக தம்பி குடும்பத்தை சரிகட்டி விட்டு மனோன்மணி தன் மகனிடம் பேசுவதற்காக சென்றார் அதுவல்லவா அவருக்கு பெரிய டாஸ்க்..ஆனால் ஒரு போதும் மகனிடம் தாழ்ந்து பேச கூடாது.. பொறுமையாக பேசினால் இவனிடம் எடுபடாது என்பதை உணர்ந்தவர் சற்று கௌரவமாகத்தான் தன் முகத்தை வைத்திருந்தார்..

அக்கா சென்றதும் சதாசிவம், "உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு??.. 18 வயசு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு சொல்ற??" என்று சதாசிவம் மாலதியை கடிந்தார்..

"இங்க என்ன நடக்குதுன்னு பார்த்தீங்க இல்ல.. உங்க வாழ்க்கையிலும் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்லி தெரிய வேண்டாம் இல்ல.. எனக்கு ஒன்னே ஒன்னு தான்.. நான் வளர்த்த பொண்ணு தப்பா போயிருக்கக் கூடாது.. இப்போ நல்ல வாய்ப்பு அவளுக்கு வந்து இருக்கு.. மாப்பிள்ளை வேற யாரும் கிடையாது.. நம்ம ஆதி தான் அவனை விட ஒரு நல்ல பையன் இவளுக்கு கிடைக்க மாட்டான்..ரொம்ப யோசிக்காம கல்யாணம் பண்ணி குடுங்க"

"ஏய், அவ படிச்சிட்டு இருக்காடி"

"கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டுமே யாரு படிக்க வேண்டாம்னு சொன்னா?? ஆமா படிச்சு அவள் கலெக்டர் ஆகப் போறா பாரு" என மாலதி கூறினார்..

அதை கேட்டு சதாசிவம் யோசிக்க, "என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?? உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க ஏதாவது எடுத்து வச்சிருக்கீங்களா?? நாம எவ்ளோ கடன்ல இருக்கோம்னு உங்களுக்கு நான் சொல்லணும்னு அவசியம் இல்ல.. இப்போ எந்த செலவும் இல்லாமல் புள்ள கல்யாணம் நடக்கப் போகுது அத நினைச்சு சந்தோஷப்படுங்க.. வேற யாருக்கும் கொடுக்கல இல்ல.. உங்க அக்கா மகனுக்கு தானே கொடுக்கிறீங்க.. இதைவிட நல்ல பையன் எங்கே கிடைப்பான்?? அதனால நான் சொல்றதை கேட்டு நடங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன்" என்று சதாசிவத்தை கடிந்தார்..

அதேசமயம் உடைகளை எல்லாம் மாற்றிய ஆதி தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் விக்கியை பார்த்து, "நீ கிளம்பல??" என்று கோபமாக கேட்டான்..

"இப்போவே வா??" என்றான் சந்தேகமாக..

"வேற எப்போ??"

"இல்லை எல்லோரும் கல்யாணம் நடக்கலையேன்னு வருத்தமா இருக்காங்க.. அதான்" என இழுக்க,

"அவள் தான் வேற கல்யாணம் பண்ணி ஓடி போயிட்டாளே.. மத்தவங்க வருத்தப்படுறாங்கன்னு நான் என்ன உனக்கா தாலி கட்ட முடியும்??" என கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அவனுடைய அறையை யாரோ தட்ட விக்கி போய் கதவை திறந்தான்..

அங்கு மனோன்மணி அறைக்குள் வரவும், ஆதி அழுத்தமாக தன் தாயைப் பார்த்தான்.. அவனுக்கு தாய் மீது கோபம்.. அவனின் கோபம் நிறைந்த விழிகள் அவரை குற்றப்படுத்தியது..

அவருக்கு மகனின் முகத்தை பார்க்க ஒரு மாதிரியாக இருந்தாலும் பேச வேண்டியது பேசியாக வேண்டும் என தயக்கத்தில் இருக்க அதை கண்ட விக்கி, "எனக்கு ஒரு போன் பண்ணனும் நீங்க பேசிட்டு இருங்க நான் இதோ வந்துடறேன்" எனக் கூறி அவர்களுக்கு இடைவெளி கொடுத்து அவன் சென்றான்..

அவன் சென்றதும் மகனோ இனி என்ன பேச இருக்கிறது என அவனுடைய உடைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருக்க, "எங்கே கிளம்பிட்ட ஆதி..??"

"இனி இங்க இருந்து என்ன பண்றது எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதனால நான் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.." என்றான்..

"கல்யாணம் நடக்காம நீ எங்க போற??" என்று மனோன்மணி நேராக விஷயத்துக்கு வந்தார்..

"கல்யாணம் தான் நின்னுடுச்சுல" என்றான் வறண்ட குரலில்..

"அது சைந்தவி கூட நடத்தி இருந்த கல்யாணம் தானே.. அவள் போனா போகட்டும்.. நான் இப்போ அவளைப் பற்றி பேசல.. உன்னை பத்தி பேசிட்டு இருக்கேன்"

"என்னை பத்தி பேச என்ன இருக்கு??" என்றான் கேள்வியாக..

அவரும் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டு, "குறிச்ச முகூர்த்தத்தில் உனக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்கும் பொண்ணு வேற யாரும் இல்லை கண்மணி தான்.. அதனால கல்யாணத்துக்கு தயாராக வழியைப் பார்.."என்று போட்டு உடைத்து விட்டார்..

அம்மா முன் பின் எந்த பேச்சும் இல்லாமல் நேராக விஷயத்துக்கு வரவும் அவனுக்கு அதிர்ச்சி தாழவில்லை..

"புரியல" என்றான்.. அவனின் சர்வ கோபத்தையும் அடக்கிக் கொண்டு..

அவரோ, "உனக்கும் கண்மணிக்கும் நான் கல்யாணம் முடிவு பண்ணி இருக்கேன்.. இந்த முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கணும்.. தயார் ஆகு" என்று மனோன்மணி கூறினார்..

"இல்ல தெரியாம கேட்கிறேன் என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?? இப்பதான் ஒருத்தி என்னை செருப்பால அடிச்ச மாதிரி பேசிட்டு போனா.. அடுத்தது ஒருத்தியை ரெடி பண்ணிட்டீங்களா?? நான் உங்ககிட்ட கல்யாணம் வேணும்னு கேட்டேனா?? ஆரம்பத்திலேயே சைந்தவி முடிவு பண்ணும்போது எனக்கு விருப்பமில்லை அப்படின்னு சொன்னேன்.. உங்க தொல்லை தாங்க முடியாம தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. அதுக்கு அவ எப்படி என்ன அடிக்க முடியுமோ அடிச்சிட்டு போயிட்டா.. இப்ப மறுபடியும் ஒருத்தியா?? உங்களுக்கு வேற வேலையே இல்லையா அம்மா?? என்னை ஒவ்வொரு நிமிஷம் வாசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க...அதுவும் கண்மணியா.." என்றான்.. அதிர்ச்சி நிறைந்த விழிகளோடு..

அவரோ அவன் பேசுவது புரியாதது போல தான் பேச்சிலேயே நிலையாக நின்று கொண்டு, "ஆமாம் கண்மணியே தான்.. நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு.. அதை திரும்ப பேசி நமக்கு எதுவும் கிடைக்கப் போறது கிடையாது.. இனி நடக்கப் போறதை பார்த்தே ஆகணும்.. நீ எனக்கு சத்தியம் பண்ணி இருக்க இப்போ இந்த நிமிஷம் கல்யாணம் நடக்கணும்.. இப்போ உனக்கு கல்யாணம் நடக்கலைன்னா சுத்தமா கல்யாணம் நடக்காது.. உன்னுடைய கல்யாணத்தை நான் பார்த்தே ஆகணும்.." என்றார் அவரும் விடாபடியாக..

"யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னான் சொல்லியெல்லாம் என்னால கல்யாணம் பண்ண முடியாது.. அவன் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நீங்க கூட என் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்கறீங்க" என்க

"ஆதி.. அவர் சொன்ன எல்லாம் நம்ம குடும்பத்தில் நடந்து இருக்கு.. அதுனால தான் சொல்றேன்.. இப்போ கல்யாணம் நடக்கணும்.. நீ சொல்லி இருக்க யார் பொண்ணா இருந்தாலும் எனக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்படின்னு அப்புறம் என்ன??" என்றார் அவரும்..

"என்ன விளையாடுறீங்களா???..அவ வயசு என்ன?? என்னோட வயசு என்ன?? என் வயசு 28 முடிய போகுது.. அவளுக்கு 18 வயசு 7 மாசம் தான் ஆகுது.. என்னை விட கிட்டத்தட்ட 10 வயது சின்ன பொண்ணு.. அவளை போய் கல்யாணம் பண்ண சொல்றீங்களா?? கல்யாணம் அப்படிங்கற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?? அவளுக்கு தெரிஞ்சுதான் நீங்க இதெல்லாம் பண்றீங்களா??" என கடுப்பாக கேட்டான் ஆதித்யா..

"நல்லா தெரிஞ்சு தான் நான் செய்றேன்..அதுல என்ன தப்பு இருக்கு?? உன்னோட அப்பாவுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 வயசு வித்தியாசம்.. நாங்க என்ன சந்தோஷமா வாழலையா?? இல்லை உன்னையும் உன்னோட தம்பியையும் பெத்து இவ்வளவு தூரம் வளர்க்கலையா..

இதோ பார்.. ஆதி எனக்கெல்லாம் தெரியாது.. எனக்கு இப்போ இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்.. நீ அம்மா தலையில அடிச்சு சத்தியம் பண்ணி இருக்க.. கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி இருக்க.. ஊர் காரங்க முன்னாடி என்னை அசிங்க படுத்தினா அவ்வளவுதான் சொல்லிட்டேன்..

ஒன்னு இங்கே கல்யாணம் நடக்கணும் இல்ல கருமாதி தான் நடக்கும் சொல்லிட்டேன்" என்று அவனுடைய அம்மா மனோன்மணி அவருக்கே உரித்தான திமிருடன் கூறினார்..

அதைக் கேட்டு அவனுக்கு ஆத்திரம் தாழவில்லை.. டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த அவன் அங்கிருந்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்தினான்..

தன்னை ஒரு மனுஷனாக கூட அம்மா மதிக்காமல் இப்படி அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை தன்னை வைத்து செய்ய வைக்கிறாரே என்ற ஆத்திரத்தில் அவன் அனைத்தையும் சேதப்படுத்தினான்..

ஆனால் அது எல்லாம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்ற கடுப்பில் அவர் நின்றவர், "உன்னால எவ்வளவு தூரம் இதையெல்லாம் உடைக்க முடியுமோ உடைச்சிட்டு 15 நிமிஷத்துல தயாராகிக் கீழே வா.. இல்ல உன்னோட அம்மாவோட கருமாதி செய்ய தயாராக இரு" என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்..

சென்ற அவரையே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு அவனுக்கும் அம்மா அவனுக்காக பார்த்திருக்கும் கண்மணிக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் அவனை வெகுவாக வாட்டியது..

எப்படி என்னால் முடியும் ஸ்விட்ச் போட்டது போல அம்மா மாறுகிறார்.. அதுபோல என்னால் மாற முடியுமா?? கண்டிப்பாக மாற முடியாது..

என்னால் ஒத்துக் கொள்ளவே முடியாது என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அகிலன் ஓடி வந்து, "ஆதி மாமா அத்தைக்கு உடம்பு முடியல மூச்சு வாங்குது.. உங்களை சீக்கிரம் வர சொன்னாங்க" என கூறவும் அவன் என்னதான் அம்மா மீது கொலைவெறி இருந்தாலும் அம்மாவுக்கு முடியவில்லை என்றதும் வேகமாக ஓடினான்..

அங்கு மனோன்மணி இன்ஹெலர் வாயில் வைத்து ஊதியப்படி மூச்சை வேகமாக இழுத்துக் கொண்டிருக்க ஒரு நொடி அந்த இடம் பரபரப்பாகியது..

விஷ்வா மனோன்மணி அருகில் நிற்க சதாசிவம் மற்றும் மாலதி வினோத் அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள் அனைவருக்கும் பதட்டமாகிவிட்டது..

காளியம்மாள் பதறி விட்டார்.. "ஐயோ ஆத்தா என் குடும்பத்துக்கு என்ன ஆச்சு இப்படி பாடா படுத்துறியே??" என அவர் ஒரு பக்கம் கதற துவங்கி விட்டார்..

திருமணம் நின்றதால்தான் மனோன்மணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது என அவர்கள் நினைக்க, இங்கு ஆதித்யா தன் தாயை பார்க்கவும் அவரோ மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, "நீ இப்ப கல்யாணத்துக்கு சம்மதிக்கல அவ்வளவு தான்" என அப்போதும் கூறினார்..அம்மாவின் நிலையை கண்ட அவனுக்கு வருத்தம் ஏற்பட்டது.. அவனால் அவரின் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை..

அப்பா இறந்த போதும் அவர் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் இன் ஹெல் எடுக்காமல் உடம்பை கெடுத்து உயிர் போய் உயிர் பிழைத்தார் என்று தான் கூற வேண்டும்.. அது வேறு அவன் கண்முன் வந்து அவனை தொல்லை படுத்தியது..

ஆனால் அவனுக்கு அம்மாவின் பிடிவாத குணம் தெரியும் என்பதாலும் அவர் பிடிவாதம் பிடித்து விட்டால் தன்னை தானே அழித்து கொள்ளும் ரகம் என்பதும் அவருக்கு நன்றாக தெரியும்..

அதனால் அவனுக்கு உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அம்மாவை பார்த்து, "நீங்க தயவு செஞ்சு பதட்டப்படாமல் இன் ஹெல் பண்ணுங்க.. உங்களுக்கு என்ன நான் கல்யாணம் தானே பண்ணிக்கணும்.. அவ்வளவு தானே..பண்ணிக்கிறேன்.. நீங்க சொன்ன பொண்ணுக்கு தாலி கட்டுறேன்.. ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு அவளுக்கு இதுல சம்மதமான்னு தெரியணும்.. என்னைப் பார்த்து அவள் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லணும்..

அவளுக்கு இதுல சம்மதமா இருந்தா மட்டும்தான் நான் கல்யாணம் பண்ணுவேன்.. இல்லைன்னா கல்யாணம் பண்ண மாட்டேன்.. உங்களுக்கு மட்டும் தான் மிரட்ட தெரியும்னு நினைக்காதீங்க அம்மா.. நான் உங்க மேல வச்சிருக்க பாசத்தை இப்படி பகடைக்காயா உபயோகிக்காதீங்க.." என்று எச்சரிக்கையோடு கூறவும் மாலதி ஐயோ அம்பு என்ன நம்ம பக்கம் வருது என்று யோசித்தவர், "அதனால என்ன ஆதி நான் இப்போ அவளை கூட்டிட்டு வரேன்.. அவள் சொன்னா நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வ தான இப்ப அவளை கூட்டிட்டு வரேன்.." என அவர் வேகமாக தன் மகளை தேடி சென்றார்..

டியர் all 

இக்கதையின் நகர்வு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top