மோகம் 3

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

மோகம் - 3

விடியும் வரை ஆதியின் கண்களில் படாமலும் மாலதியின் கண்களில் படாமலும் சைந்தவியுடன் உறங்கி விட்டாள் கண்மணி..

அவளின் அக்காவை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதனால் கல்லூரி கதைகள் முதல் வீட்டில் நடக்கும் எல்லா கதைகளையும் இரவெல்லாம் வாய் வலிக்க பேசிய படி எப்போது உறங்கினாள் என தெரியாது..

"சைந்தவி கதவை திற, கண்மணி என்ன பண்றீங்க?? டைம் ஆச்சு மண்டபத்துக்கு போகணும்" என கதவை தட்டி உடைக்கும் சத்தம் கேட்க அப்போது தான் உறக்கம் கலைந்த கண்மணி தன் அருகே பார்க்க அவளுடைய அக்காவை காணவில்லை..

அதற்குள் கதவை தட்டி அவர்கள் உடைக்க இவளோ குழம்பியபடி கதவை திறக்க, இவளை கண்டதும் மாலதியும், மங்கையர்கரசி இருவரும் சேர்ந்து, "இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?? சைந்தவி எங்கே??" என கேட்க, "அக்காவை காணோம்.. குளிக்க போய் இருப்பாங்க போல" என கண்மணி உறக்க கலக்கத்தில் கூற அதை கேட்ட மாலதி நங்கென்று அவள் தலையில் ஒரு போடு போட்டு, "இன்னும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு?? மரியாதையா என்கூட வந்து தூங்க சொன்னேன்ல" என்று அந்த சமயம் கூட முணுமுணுக்க அதுவரை இருந்த தூக்கம் எல்லாம் போய் அம்மாவை கண்டதும் அவளுக்கு பயம் வந்துவிட்டது...அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் அமைதியாக நின்றாள்..

அதற்குள் மங்கையர்கரசி அறைக்குள் சென்று அவளை தேடி பார்த்தவர் சைந்தவியை காணவில்லை என அலறி கூற நொடியில் அந்த இடம் பரபரப்பாக ஆகியது..

அந்த பெரிய வீடு முழுவதும் சைந்தவியை தேடினார்கள்.. எங்கேயும் அவளை காணவில்லை.. எல்லோருக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது.. காளியம்மாள் இடிந்து போய் அமர்ந்து விட்டார்..

சொந்தங்கள் எல்லோரும் திருமணத்திற்காக கூடி இருக்க, அந்த தருணத்தில் மணப் பெண்ணை காணவில்லை என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது..

அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் இடி விழுந்தது போல இருந்தனர்... அனைவருக்கும் என்ன செய்வது என தெரியவில்லை.. வினோத் தன் தங்கையை காணவில்லை என்றதும் போலீசில் தகவல் கொடுக்கலாமா என தகவல் கொடுக்க சென்றான்..

மங்கையர்கரசி ஒரு மூலையில் இருந்து அழுது கொண்டிருக்க, காளியம்மாள் இறுகிய முகத்தோடு இதுவரை இந்த வீட்டில் நடக்காத ஒரு காரியம் நடந்திருப்பதில் என்ன பேசுவது என தெரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார்.. அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இதுவரை அவர் ஆட்டி வைத்தது போல தான் இந்த வீடு ஆடி இருக்கிறது.. முதன்முறையாக இது போல நடக்கவும் அவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது..

இந்த திருமணம் முடிவு ஆனதில் இருந்து ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது என்பது மட்டும் அந்த பெரிய மனுசிக்கு புரிந்து இருந்தது.. அது இது தானா?? இனி அனைவரும் என்ன சொல்ல போகிறார்களோ என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கியது..

இந்த விசயம் அங்கு கல்யாண மாப்பிள்ளையான ஆதியின் காதுகளையும் வந்தடைந்தது.. அதை கேட்டதும் அவனுக்கும் அதிர்ச்சி தான் என்றாலும் தனக்கு எதிரே நிற்கும் விக்கியை முறைத்தான்.. இவன் தானே நேற்று அவ்வளவு பக்க டயலாகை பேசியது என கடுப்பாகி பார்த்தான்..

அவனோ விஷயத்தை கேள்விபட்டு அதிர்ச்சி மாறாமல், "டேய் என்ன மச்சான் இது?? சைந்தவியை காணோம்னு சொல்றாங்க??" என விக்கி அதிர்ந்து கூறினான்..

அதை கேட்ட ஆதி அவனை முறைத்து கொண்டு, "என்னமோ சொன்ன?? அவளுக்கும் கல்யாணத்துல விருப்பம் இருக்கும் அப்படின்னு பார்த்தியா?? அவ என்ன வேலை பண்ணி இருக்கா அப்படின்னு" என எரிச்சலோடு கூறினான் ஆதி..

அவளின் செயலால் கடுப்பாக அமர்ந்திருந்தான் ஆதித்யா.. அவன் திருமணம் வேண்டுமென யாரிடமும் கூறவில்லை.. அம்மாவின் நிர்பந்தம் அதற்காக மட்டும் தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தான்.. நேற்று வந்ததில் இருந்து அம்மாவும் பேசவில்லை.. அவனும் பேசவில்லை..

ஆனாலும் அம்மாவுக்காக ஒரு திருமணம் என மனதுக்குள் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டு திருமணத்திற்கு இன்று தயாராகினான்...ஆனால் நடந்ததோ வேறு.. குடும்ப மானத்தை சைந்தவி வாங்கி விட்டாள்..

விருப்பம் இல்லையென்றால் முதலிலேயே சொல்லி இருக்கலாம்.. அவளின் அம்மாவிடம் சொல்ல தயக்கம் என்றால் என்னிடம் ஆவது கூறி இருந்தால் ஏதாவது செய்த திருமணத்தை நிறுத்தி இருக்கலாம்..

ஆனால் இவள் குடும்ப மானத்தை இப்படி வாங்கி இருக்க வேண்டியதில்லை என்பது அவனுடைய எண்ணமாக இருந்தது.. அவள் மட்டும் கையில் கிடைத்தால் அவ்வளவுதான் என்ற கடுப்பில் அவன் இருந்தான்...

அப்படி இருக்கும் போது தான் அந்த வீடு தீடிரென பரபரப்பு ஆகியது... பல அழு குரல்களும், பல ஆத்திரத்தின் உச்சியில் உள்ள பேச்சுகளும் அடைக்கப்பட்ட கதவுகளுக்கு இடையே ஆதியை வந்தடைய, அவனின் கண் பார்வையை வைத்து வேகமாக விக்கி என்னவென்று கதவை திறந்து பார்க்க அந்த காட்சியை கண்டதும் அதிர்ந்தான் விக்கி.

"ஆதி.." என்றான்..

"என்ன??"

"சைந்தவி வந்திருக்கா" என அதிர்ச்சி மாறாமல் கூற ஆதியும் இறுகிய முகத்தோடு அவனுடைய அறையை விட்டு வெளியே வந்தான்..

அங்கு சைந்தவி மாலையும் கழுத்துமாக வேறொருவனுடன் வந்து நிற்கிறாள்.. அதற்காகத்தான் இந்த கூச்சல்களும் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தன.. ஆதியின் பார்வை சைந்தவி மீதே நிலைத்திருந்தது.. விட்டால் அவளை கண்களாலேயே பொசுக்கி இருப்பான்..

ஆம்.. மணமேடையில் அமர தயாராக இருக்கும் போது அவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய பெண் அவள்..

அதாவது அவனின் மூத்த தாய் மாமனின் மகளான சைந்தவி.. ஓடி போனது மட்டுமின்றி இதோ பட்டு வேட்டி சட்டையில் அவன் தயாராக இருக்க, அவனுக்கு எதிரே அவனுடைய அம்மா பார்த்து பார்த்து சைந்தவிக்கு வாங்கி கொடுத்த முகூர்த்த பட்டை அணிந்து கொண்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வேறொருவன் கழுத்தில் தாலி வாங்கி இதோ அவர்களை அசிங்கப்படுத்த வீட்டுக்கு வந்து நிற்கிறாள்.. அவளின் புரட்சி செய்ய வேறு நேரம் கிடைக்கவில்லையா என்னவோ??

அவளை கண்ட அனைவரும் பதறி நிற்கவும் மனோன்மணி மட்டும், "என்ன காரியம் செய்திட்ட??" என பதறி கேட்க, அவளோ பதில் கூறாமல் இறுகியபடி நின்றாள்.. அவளுக்கு அவருக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை என்பது போல நின்று கொண்டாள்..

அதற்குள் வினோத் இதை கண்டு ஆத்திரம் தாளாமல் ஓடி வந்து அவனுடைய சகோதரியை அடிக்க பாயவும் சைந்தவி கழுத்தில் தாலி கட்டிய அருண், "வினோத் என்னோட பொண்டாட்டி அடிக்க உரிமை யாருக்கும் கிடையாது.. இதுவரைக்கும் எப்படியோ இந்த நிமிஷம் முதல் உங்க எல்லோரையும் விட எனக்கு தான் அவள் மீது உரிமை அதிகமாக இருக்கு.. இனி உங்க குடும்பத்தில் இருந்து யாரும் என்னுடைய மனைவியை எதுவும் சொல்லக்கூடாது.." என்று கம்பீரமாக கூறினான்..

அதை கேட்ட அனைவரும் அதிர ஆதி mattum, "வினோத் வேண்டாம் விட்டுடு. ஓடிப்போனவளை நீ கைவைத்து உன்னை கரையாக்கிக்காத.. அது நம்ம குடும்பத்துக்கு அசிங்கம் ஆகிடும்" என்றான் ஆதி.. ஆம்.. அவனின் வார்த்தைகளிலேயே சைந்தவியை தூர தள்ளி நிறுத்தி இருந்தான்...ஆதியின் பேச்சை கேட்டு வினோத் அடங்கி நின்றான்.. மங்கையர்கரசி அவளின் செய்கையை கண்டு அழுது தீர்த்தார்..

மனோன்மணி மேலும் மனம் ஆறாமல் ஏதோ பேச போக, "அம்மா அவ கிட்ட எதுவும் பேச வேண்டாம் விட்டுடுங்க.. இது அவளோட வாழ்க்கை.. அவளுக்கு முடிவு செய்ய எல்லா உரிமையும் இருக்கு.. நீங்க இனி நம்ம குடும்ப அளவில் மட்டும் யோசிச்சா போதும்.. நம்ம குடும்பம் வேணாம்னு போனவ கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை.." என்று அந்த வீட்டின் ஆண் மகனாக ஆதி கூறினான்..

அவனுடைய பேச்சை கேட்டதும் அனைவரும் அமைதியாக இருந்தனர்.. உண்மையில் அந்த வீட்டின் ஆணாக சதாசிவம் ஏதாவது பேசியிருக்க வேண்டும் ஆனால் மாலதி கண்களை உருட்டிக் கொண்டிருக்க அவரோ அதை கண்டு நமக்கு ஏன் வம்பு என அமைதியாக இருந்தார்..

மாலதிக்கு மட்டும் உள்ளுக்குள் இவர்களுக்குள் திருமணம் நடக்கவில்லையென்ற எண்ணம் மகிழ்ச்சியை கொடுத்தது..

ஆம்.. எதற்கெடுத்தாலும் கண்மணியை திட்டுகிறேன் என அனைவரும் கூறுகிறார்களே.. இதுபோல எல்லாம் வந்து விடக்கூடாது என்று தானே நான் இதையெல்லாம் செய்கிறேன் இப்போ இவங்க மூஞ்சி எல்லாம் எங்க கொண்டு போய் வச்சு இருப்பாங்க.. என மனதுக்குள் வறுத்தெடுத்து கொண்டு இருந்தார்..

அதே மகிழ்ச்சியில் மகளை பார்க்க அவளோ சைந்தவி அக்காவின் செயலை பார்த்து வாயை பிளந்து கொண்டு அடுத்து என்ன நடக்கும் என ஒரு படம் பார்ப்பது போல வேடிக்கை பார்த்துக் கொண்டு கண்மணி இருக்க, உடனே மாலதிக்கு ஆத்திரம் வந்தது..

கண்மணியின் பெற்ற அம்மா மாலதியின் அக்காவின் செயல் ஞாபகம் வந்து போக இவள் இதை எல்லாம் பார்த்து வழி தவறி செல்வாளோ எனக் கருதிய மாலதி உடனே தன் மகள் அருகே வந்தவர் யாரும் அறியாமல் அவளுடைய கையை கிள்ளி, கண்ணை உருட்ட அவளோ பயந்து போய் பார்க்கவும், "என்ன அங்கேயே பார்த்துட்டு இருக்க.. அது மாதிரி உனக்கும் பண்ணனுமா?? இந்த மாதிரி ஏதாவது நீ செய்தா நான் ஒன்னும் வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டேன்.. அப்படியே எரிச்சிடுவேன்..போடி வீட்டுக்குள்ள.. இந்த பக்கம் உன்னை பார்த்தேன் அவ்வளவுதான்" என மிரட்ட அவளோ பொங்கி வழியும் கண்ணீரை அடக்கியபடி உள்ளே செல்ல அது ஆதியின் கண்களில் பட்டாலும் அதை கருத்தில் கொள்ளாமல், சைந்தவியை பார்த்துக் கொண்டு நின்றான்..

இங்கு வீட்டுக்குள் சென்ற கண்மணிக்கு அழுகை தாளவில்லை.. அம்மாவின் அடி, உதை இதையெல்லாம் கூட அவள் வாங்கி விடுவாள்..

எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் குத்தி காட்டி சந்தேகப்படுவதை தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..

அம்மா இடைஇடையே அவளின் பெற்ற அம்மாவை பற்றி பேசுவது அவளுக்கு புரிகிறது.. அதுமட்டுமின்றி தன்னையும் அதேபோல் ஆகிவிடுவாய் என கூறி கூறி அவளை அடக்கி வைக்கவும் அதுபோலம்தான் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள் கண்மணி...

அதனாலேயே என்னவோ மாலதியின் பேச்சுகளை கேட்டுக்கொண்டு அமைதியாக தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாள் அந்த 18 வயது பாவை..

அவள் எப்பொழுது பெரிய மனுஷி ஆனாலோ அப்போது இருந்து அம்மா இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்.. இப்பொழுது சைந்தவி அக்கா வேறு வேறொருவரை கல்யாணம் செய்து விட்டு வந்து விட்டாள்..

இனி அதை காரணம் காட்டி இவளை கடித்து குதறி விடுவார் என எண்ணி அவள் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் அழுது கொண்டு இருந்தாள்.. அப்போதுதான் திருமணத்திற்கு வந்த கண்மணி என் தோழி இந்த காட்சியை கண்டு கண்மணியைத் தேடி வர அவளைக் கண்டதும் ஒரு மூச்சு அழுதவள் தன் தோழியின் ஆறுதலில் அமைதி ஆனாள்..

இவளின் அழுகையோ அல்லது இவளின் மனக்குமுறலோ என்று பெரிதல்லவே.. அதைவிட பெரிய காரியம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது அல்லவா??

ஆம்..அதே நேரம் சைந்தவியின் கழுத்தில் கட்டி இருக்கும் தாலியையும், அருணின் பேச்சையும் கண்ட அனைவரும் திகைத்துப் போய் நிற்க, மங்கையர்க்கரசி தன் மகள் இப்படி ஒரு இடியை இறக்கி விட்டாலே என எண்ணி மூளையில் நின்று அழ மொத்தத்தில் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்றது..

பழி வாங்கி விட்டாள் சைந்தவி..அவள் முகத்தில் அனைவரின் சங்கடம் நிறைந்த முகத்தை பார்த்து எள்ளல் புன்னகை தான் வந்தது... அதை கண்ட ஆதிக்கு ஆத்திரம் வந்தது.. அனைவருக்கும் ஏதேதோ சொல்ல வேண்டும் என தோன்றினாலும் ஆதியின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருந்தனர்...

அந்த பெரிய குடும்பத்தின் கொள்கைக்கும், கோட்பாடுக்கும் எதிராக அவள் நின்று விட்டாள்.. அவள் ஜெயித்து விட்டதாக தான் அவள் நம்புகிறாள்..

திருமணத்திற்கு வந்த ஊர் ஜனமே அதிர்ந்து போய் இருந்தனர்.. மனோன்மணிக்கு இந்த அதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…

காளியம்மாள் அவளை பார்த்து, " ஏன் டி.. உனக்கு பிடிக்கல அப்படின்னா சொல்லி இருக்க வேண்டியது தானே?? மொத்த குடும்பத்தையும் சந்தி சிரிக்க வச்சுட்டியே??" என வெகுண்டு கேட்டார்..

திருமணம் செய்தது மட்டுமின்றி சைந்தவி, "உங்க எல்லாரையும் அசிங்கப்படுத்த மட்டும் தான் நான் இதை செய்தேன்.. எவ்வளவு நாள் தான் பொண்ணுங்களை அடிமையாக வெச்சிருப்பீங்க.. அதுக்கான அடியா இதை எடுத்துக்கோங்க.. என்னையும் அத்தை, என்னோட அம்மா அப்புறம் உன்னோட லிஸ்ட்ல சேர்த்தலாம்னு பார்த்தீங்க தானே.. உங்க வீட்ல பொறந்தா எங்களுக்கெல்லாம் ஆசை இருக்கும்னு உங்களுக்கு தோணாதா.. மூச்சு விட கூட உங்ககிட்ட தான் பர்மிஷன் கேட்கணும்னு சொல்லுவீங்க போல.. நடக்காது.. இனி எனக்கு பிடிச்சதை தான் நான் செய்வேன்.. இதை சொல்லத்தான் இந்த நிமிஷம் வரை காத்துகிட்டு இருந்தேன்..உங்க மகனுக்கு வேற யாராவதா பார்த்து கட்டி வைங்க.. அதுவும் அந்த பொண்ணுக்கு பிடிச்சு இருந்தா மட்டும்.." என்று கூறினாள்..

இதை பார்க்கும் பொழுது அவனுக்கு மிகப்பெரிய கடுப்பு தான் வந்தது.. சைந்தவி திருமணம் செய்தது அவனுடைய பிரச்சனை அல்ல..

ஆனால் இப்படி மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம் என்பது தான் அவனுடைய பிரச்சனை.. இதில் அவனையும் அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறாள்.. அதை அவனால் ஏற்க முடியவில்லை…

அதனால் அவனும் நொடி பொழுதும் தளராமல், "வந்த வேலை முடிஞ்சிடுச்சில்ல கிளம்பு.. எங்களுக்கு அடி கொடுத்திருக்கட்டும்.. நீ அடி வாங்காம வாழற வழிய பாரு.. இனி உன்னை எங்க வாழ்க்கையில சந்திக்க கூடாதுன்னு நாங்க நினைக்கிறோம்.. அப்புறம் ஒரு சின்ன விஷயம்.. உன்னோட புரட்சி எல்லாம் உன்னோடு இருக்கட்டும் இங்க வேண்டாம்..மிஸ்டர் உங்க பொண்டாட்டிய கூட்டிட்டு இப்பவே கிளம்புங்க" என கூறி விட்டு அழுத்தமாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தன் வேலை முடிந்தது என்பது போல சென்றான் ஆதி..

அதோடு மட்டுமின்றி தன் மகள் செய்த தவறுக்காக மங்கையர்கரசி அழுதுகொண்டு ஆதியிடம் மன்னிப்பு கேட்க மங்கையர்க்கரசி வர,"அத்தை உங்களுக்கெல்லாம் பைத்தியமா பிடிச்சிருக்கு.. கிறுக்கு பிடிச்சு குடும்பத்தை பத்தி புரியாம ஏதோ பண்ணிட்டா.. என்கிட்ட சொல்லி இருந்தா கூட நானே ஜாம் ஜாம் கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்.. இப்படி வந்து பேசணும்னு அவசியம் இல்ல.. அவள் செய்ததற்கு அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க நீங்களும் சரி.. நம்ம வினோத்தும் சரி.. இதெல்லாம் பண்ண கூடாது.. நாம் எல்லாம் ஒரு குடும்பம் அத்தை... அவள் கிடக்கறா..நீங்க கவலைப்படாம இருங்க நான் இருக்கேன்.. டேய் வினோத் கொஞ்ச நாள் இருந்து அம்மாவை பார்த்துக்கோ.." என்று வீட்டுக்கு பெரியவனாய் அவன் கூறினான்..

அதைக் கேட்டு இருவரும் தலையாட்டினார்கள்... வினோத் தன்னுடைய அம்மாவை அவர்களுடைய அறைக்கு அழைத்துச் சென்றான்..

என்ன தான் உள்ளே பேசி விட்டு வந்தாலும் அவனுக்கு கடுப்பு தான் மனம் ஆறவில்லை.. அவன் அணிந்து இருந்த திருமண உடை அவனை கேலி செய்தது போல இருந்தது.. அதற்கு காரணம் சைந்தவியின் நக்கல் பார்வையாக இருக்கும் என எண்ணிக் கொண்டான்..

"நான் திருமணம் செய்து கொள்ள கேட்டேனா?? இது எனக்கு தேவையா என அனைவரின் பார்வையும் அவன் பக்கம் பரிதாபமாக திரும்பும் பொழுது அதை ஆதித்யாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..

அதனால் கடுப்பு ஆன அவன்
திருமணம் தான் நின்று விட்டதே என எண்ணி வேகமாக டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று தான் அணிந்திருந்த பட்டு வேட்டி பட்டு சட்டையை மாற்றிக்கொண்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தமானான்… விக்கி அதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தாலும் அவனால் ஆதியை தடுக்க முடியவில்லை..

பார்த்து பார்த்து இந்த திருமணத்திற்காக எல்லாம் செய்த மனோன்மணிக்கு மிகப்பெரிய இடியாக விழுந்தது..

தன்னைப் போலவே வீம்பும், வீராப்பும் உடைய மகன் மறுபடியும் ஒரு திருமணத்திற்கு சம்மதிப்பானா என்ற பதட்டம் அவருள் வந்தது..

இந்த திருமணம் முடியும் வரை மகனிடம் பெரிதாக பேச்சு வைத்துக் கொள்ளக் கூடாது.. என ஒதுங்கி இருந்த அவருக்கு மகனை நீ எப்படி சமாளிப்போம்.. மகனுக்கு இனி எப்படி திருமணம் செய்து வைப்பது என்ற பதட்டம் மகனைப் பெற்ற தாயாக அவருக்கு வந்து போனது..

மகனுக்கு வேறு ஜாதகத்தில் இப்போது திருமணம் செய்ய வில்லை என்றால் பிறகு திருமணமே நடக்க வாய்ப்பில்லை என்று வேற கூறி இருக்க அதுவும் அவருடைய மூளையில் பேரடியாக வந்து இறங்கியது..

இனி வேறொரு பெண்ணுக்கு நான் எங்கு செல்வேன் எப்படி அவனுக்கு கல்யாணம் நடக்கும் என யோசித்துக் கொண்டிருந்தார்..

அப்போதுதான் ஒரு மூச்சு அழுது முடித்த கண்மணி தன் தோழியின் நிர்ப்பந்ததாலும் சைந்தவி சென்று விட்டாள் என கூற அப்போது தான் அறையில் இருந்து வெளியே வந்தாள் கண்மணி..

சைந்தவியும் அவளின் கணவனோடு சென்று விட்டாள்.. இனி என்ன செய்வது என அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பேசிக் கொண்டு இருக்க மனோன்மணியின் மனதில் மகனுக்கு திருமணம் நின்றுவிட்டது..

இனி அவனுக்கு திருமணமே நடக்காதா என இருக்க காளியம்மாள் எல்லாம் முடிந்ததும் அந்த அசிங்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், அங்கு இருக்க பிடிக்காமல் அவர் அவருடைய அறைக்கு சென்றுவிட்டார்..

மனோன்மணிக்கு இது அதிர்ச்சி என்றாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என தான் அவருடைய தலையில் ஓடிக் கொண்டிருந்தது..

அப்போது தான் தோழியின் கையைப் பிடித்துக் கொண்டு இங்கு என்ன நடக்கிறது என தன்னுடைய அம்மாவுக்கு தெரியாமல் மறைந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவரின் இரண்டாவது தம்பியான சதாசிவத்தின் மகள் 18 வயதான கண்மணி அவருடைய கண்களில் பட்டாள்..

அவளை கண்டதும் அவருக்கு இவளை ஆதிக்கு கட்டி வைத்தால் என்ன என அவர் நினைக்க உடனே அவர் வேகமாக தன் அம்மாவிடம் விஷயத்தை கூற சென்றார்.. ஏனெனில் அவருக்கு எப்படியாவது இன்று திருமணம் நடந்தே ஆக வேண்டும் என இருந்தது.. அந்த அளவுக்கு சைந்தவி அவரை வெறுப்பேற்றி இருக்கிறாள்..

அங்கு அம்மா வருத்தத்தில் இருக்க, அவரிடம், "அம்மா நடந்தது நடந்து போச்சு.. இனி அதை பத்தி யோசிச்சிட்டு இருக்க முடியாது.. எனக்கு இப்போ ஆதிக்கு கல்யாணம் பண்ணலைனா அவனுக்கு கல்யாணமே ஆகாதுன்னு ஜோசியர் சொல்லிட்டார்.. உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை.. அதனால என்ன ஆனாலும் சரி இப்போ கல்யாணம் நடந்தே ஆகணும்"

"என்னடி சொல்ற பைத்தியம் ஏதாவது பிடிச்சிடுச்சா உனக்கு? இது என்ன விளையாட்டு விஷயமா?? உடனே கல்யாணம் நடக்கனும்னா கடையில் போய் வாங்கவா முடியும்??" என கோபத்தில் கூறினார்..

"இல்லம்மா பேசாம நம்ம கண்மணியை ஆதிக்கு கல்யாணம் பண்ணி வச்சா என்ன??" என மனோன்மணி யோசனை கூறியதும் காளியம்மாளும் சம்மதம் சொல்லி, "சதாசிவத்துக்கு சரினா பண்ணலாம்.. ஆனால் அவள் ரொம்ப சின்ன பிள்ளையாட்டம் இருக்கா" என கூறவும் மனோன்மணி, "அம்மா எனக்கும், அவருக்கும் எவ்ளோ வயசு வித்தியாசம் நாங்க சேர்ந்து வாழலையா?? வயசு எல்லாம் ஒரு விஷயமே இல்லம்மா.. நம் ஆதியை பாருங்க.. அவனைப் பார்த்தால் யாராவது 29 வயசுன்னு சொல்லுவாங்களா??.. அவளுக்கும் 19 ஆகப்போகுதில்ல" என கூறினார்..

அதை கேட்டு பெரியவரும், "என்னமோ பண்ணுங்க.. குடும்பத்தை அசிங்கப்படுத்தாமல் செய்யுங்க அவ்வளவுதான் சொல்ல முடியும்" என்று கூறினார்..

அதை கேட்டு அம்மாவின் வருத்தம் அவருக்கு கஷ்டமாக இருந்தாலும், அங்கிருந்து சென்று, தன் தம்பி மற்றும் மாலதியிடம் விஷயத்தை கூற இதைக் கேட்ட அவர்கள் அதிர்ந்தார்கள்..

சதாசிவம், "அக்கா அவள் படிக்கிற பொண்ணு" என இழுக்க, மனோன்மணியின் முகம் தொங்கிப்போனது..

மாலதி இதுக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல, "அதனால என்ன?? கல்யாணம் பண்ணிட்டு அவ படிக்கட்டும்.. இதெல்லாம் ஒரு விஷயமா?? அண்ணி இந்த காலம் வேற கொடுமையா இருக்கு.. இப்ப பாருங்க இப்படி ஒரு பெரிய விஷயம் நம்ம குடும்பத்திலேயே நடந்துச்சு..

எனக்கும் பொம்பளைப் புள்ளையை வச்சுட்டு மடியில தீயை கட்டிட்டு இருக்க மாதிரி இருக்கு.. அதனால எங்களுக்கு பரிபூரண சம்மதம்.. இந்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை வச்சுக்கலாம்" என்று மாலதி இதுதான் சமயம் என கூறினார்..

அதைக் கேட்டதும் தான் மனோன்மணிக்கு உயிரே வந்தது.. காளியம்மாள், சதாசிவம் குடும்பம் என அனைவரையும் சரி கட்டி விட்டேன்.. இதெல்லாம் கூட அவருக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை..இனி ஆதி அவனை எப்படி சமாளிக்க போகிறேன் என மனோன்மணி என்னும் போதே அவர் மீண்டும் பீதியில் உறைந்தார்...அவர் நினைத்தது நடக்குமா??

ஒரு கல்யாணமே அவனின் விருப்பம் இல்லாமல் அம்மாவுக்காக சம்மதித்த அவன் அடுத்து அம்மா தலையில் ஏற்றி வைத்திருக்கும் கண்மணி அவனைவிட பத்து வயது சிறிய பெண் அவனுக்கு 29 என்றால் அவளுக்கு 18 கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம் அவர்களுக்கிடையே இருக்கிறது அம்மாவின் இந்த எண்ணம் நிறைவேறுமா?? ஒரு அடியில் இருந்து எப்படி மீழ்வது என யோசித்துக் கொண்டிருப்பதற்குள் அடுத்த அடியை கொடுக்க நினைக்கும் அந்த எண்ணம் நடக்குமா???



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top