காதல் 50

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

அத்தியாயம் : 50

காதலது கண்ணில் கண்டேன்

கண் விழித்த மதுவிற்கு தான் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை... ஆனால் அவள் குடும்பமே பரபரப்பாக சுற்றி கொண்டு இருப்பதை பார்க்க அவளுக்கு தலை சுற்றியது...

அதற்குள் ஒரு லேடி டாக்டர் வந்தார்...அவள் தந்தையின் சிஷ்யை போலும் அவளிடம் சிரித்த முகத்துடன் பரிசோதித்து பார்த்து, " காங்கிராட்ஸ்"... அவள் வயிற்றை தொட்டு காட்டி, "இன்னொரு ஆள் உள்ளே இருக்காங்க"... என்று மகிழ்ச்சியுடன் கூற அவளுக்கு  தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை... ஆனால் அவள் கைகள் தானாக நீண்டு அவளின் மணிவயிற்றை தீண்டி பார்த்தது...ஏனோ கண்கள் கலங்கியது தாயாகி விட்டால் எல்லோர்க்கும் வரும் ஆனந்த நீரூற்று அவளையும் விட்டு வைக்கவில்லை....

ஆனால் மதுவுக்கு இந்த நிமிடம் இந்த நொடி அவனை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது...இதற்கு பெயர் தான் காதலா...கணவன் மனைவியை காண வேண்டும் அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க நினைத்து இருக்க இங்கே மனைவி அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க காத்து இருக்கிறாள்...

அதன் படி அவள் தான் அவனிடம் கூற வேண்டும் என்றும் வேறு யாரும் சொல்ல கூடாது என்று எல்லோரிடமும் கூறி விட்டாள்...எல்லோருக்கும் சிரிக்க கோல்ட் மட்டும் , "இப்போ மட்டும் மூஞ்சியை பாரு...நல்லா இழிச்சுட்டு நிக்குறா ...இத்தனை நாள் மூஞ்சியை பார்க்கணுமே"... என மோவாயை இடித்து கொண்டு நிற்க எல்லோரும் சிரித்தனர்...அனைவரும் சிரிக்க மதுவோ அசடு வழிந்தாள்...எல்லோரும் அன்றைய இரவும் அங்கே கழித்து பின் உறங்க அவரவர் வீட்டிற்கு பிரிந்து சென்றனர்....

அன்றைய இரவு எல்லோரும் உறங்க யாருக்கும் தெரியாதே இவன் வருவான் என்று...மது அவள் அறையில் உறங்கி இருக்க விக்ரம் அவனிடம் இருக்கும் சாவியை கொண்டு வீட்டை திறந்தான்...மெல்ல திறக்க ஆனால் அங்கே வாசுதேவன் நின்று கொண்டு இருந்தார்....ஏனெனில் அவன் வீட்டு கதவில் இரவு நேரத்திலோ இல்லை யாரும் இல்லாத சமயத்திலோ யாரேனும் கதவை திறக்க முற்பட்டால் வாசுதேவன் மொபைலிலோ இல்லை விக்ரமின் மொபைலிலோ அழைப்பு வரும் அதை வைத்து யார் கண்டு பிடித்து விடலாம்...இது எல்லாம் விக்ரமின் வேலை தான்..ஆனால் அதை மறந்து அவனே பூனையை போல கதவை திறக்க அங்கே அவனின் அப்பா நின்று கொண்டு இருந்தார்...

மகனை கண்டதும் அவர் சிரிக்க இவன் தலையை சொரிந்தான்...சில வார்த்தைகள் பேசிய அவர் நலம் விசாரித்து விட்டு மறந்தும் அவர் தாத்தா ஆகியதை கூறவில்லை...எங்கே அவர் ஏதாவது உளறி கொட்டினால் மருமகள் காலையில் அவர் தலையை வைத்து பொங்கல் வைத்தாலும் வைப்பாள் என்பதை உணர்ந்த அவர் மகனிடம் அதை பற்றி மட்டும் மூச் விட வில்லை...

அவனும் இரு வாக்குகள் தன் தந்தையுடன் பேசிய விக்ரம் மெல்ல அவன் அறைக்குள் நுழைந்தான் அங்கே இரவு உடையில் அதும் அவனின் இரவு உடையை அணிந்து படுத்து உறங்கி கொண்டு இருந்தாள் மது...மெல்ல அருகே சென்றவன் அவள் துயில் உறங்கும் அழகை கண்டு ரசித்தான்...சில நிமிடங்கள் அதில் கழிந்தன...மெல்ல அவள் அருகே வந்தவன் அவளின் நெற்றியில் தன் இதழை பதித்தான்....அவனின் அருகாமையில் அவனின் சுகந்தத்தை உணர்ந்தாளோ என்னவோ மெல்ல கண் விழித்து பார்க்க அங்கே அவள் கணவன் அவளுக்கு கனவு தானா என அதிர்ந்து மீண்டும் மீண்டும் கண்ணை கசக்கி பார்த்தாள்... அங்கே ஆறு அடி உயரத்தில் அவள் கணவனே தான்...கனவு தானா என இவள் பார்க்க அவனின் இதழ்கள் விரிந்து கனவு அல்ல டி பெண்ணே நானே தான் என அவள் கணவன் அவளுக்கு உணர்த்தினான்...

மதுவுக்கு அவனை கண்டதும் சந்தோஷத்தில் , "மாமா "....என எழுந்து அவனை கட்டி கொண்டாள்....அவனும் கட்டி பிடித்து , "அதான் வந்துட்டேனே மறுபடியும் அழுகையா "..என சமாதானம் செய்ய, " உனக்கு இப்படி ஒரு சப்ரைஸ் பண்ணின நீ சந்தோசப்படுவ னு நினைச்சா நீ அழுகற "...என்று கேட்க அவளோ சலித்து கொண்டு "இதை விட பெரிய சப்ரைஸ் இருக்கு "...என்றாள்...

அவனோ , "அப்படி என்ன சப்ரைஸ்"... என்னை விட இருக்க போகிறது என நினைத்தவன் என்ன என்பது போல அவளை பார்க்க அவளோ நானினாள்... இவ எதுக்கு இப்போ வெக்கப்படுறா என்று அவன் முழிக்க...

அவளோ வெட்கப்பட்டு கொண்டே தலை கவிழ்ந்து நின்றவள்," என்ன டி பண்ணின யார் கிட்டேயாவது சண்டைக்கு போனியா"... என்று தான் கேட்டான்...ஆம் அவள் வம்பு அல்லாமல் வேறு எதுவும் செய்ய மாட்டாளே என்பது அவனின் வாதம் இருந்தும் இதற்கு எல்லாம் வெக்க பட மாட்டாளே என சந்தேகமாக அவளை பார்த்தான்......

அவளோ அவனை பார்த்து முறைத்து , "சார் உங்களுக்கு ஏன் சார் புத்தி இப்படி போகுது...சண்டை போட்டா யாராவது வெக்க படுவாங்காளா"... என்று கேட்டாள்...ஆம் இப்போதும் அவளுக்கு கோபம் வருகையில் சார் என்ற அழைப்பு  தான்...அதை கேட்டால் அவனுக்கு கோபம் வரும் இருந்தாலும் அவனின் அவளை திருத்த முடியாது என அவன் அறிவான்.....

அவனோ நீ எந்த நேரத்தில என்ன பண்ணுவ னு யாருக்கும் தெரியும் அவனுக்கும் அனுபவம் உண்டு அல்லவா...அவனின் ஆடியை பதம் பார்த்தவள் ஆகிற்றே அதை இப்போது நினைத்தவன் முனகி கொண்டே , "அப்போ நீயே சொல்லு "...என்றான்...அவளோ வெக்க பட்டு கொண்டே சந்தோசத்தில் கண்களில் நீர் வர அவனின் கையை எடுத்து அவள் வயிற்றில்  வைத்து , "குட்டி ப்ரொபஸ்ஸோர் உள்ளே இருக்காங்க "...என்று கூற அவனோ சந்தோஷத்தில் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை...இருந்தும் அவன் தன் நிதானத்தை இழக்கவில்லை... நிதானத்தை இழப்பவன் விக்ரம் அல்லவே....பல தருணங்களில் நிதானத்தை இழக்காதவன் இப்போதும் இழக்க வில்லை....

அவன் கண்கள் அவன் உதிரம் அவள் வயிற்றுக்குள் வளர்கிறது என்றதும் அவன் கண்கள் பனித்ததோ என்று ஒரு சந்தேகம் எழாமல் அவளுக்கு இல்லை அதற்குள் அவளை அணைத்து இருந்தான்...அவனின் அணைப்பு இறுகியது..அந்த அணைப்பு சொல்லியது அவனது காதலை.....அவனின் ஆழ் மனது காதலை உணராதவள் அல்லவே மதுவும்....”யாழி” என்றான் விக்ரம்...இந்த விளி அவளும் அவனும் மட்டும் இருக்கும் தருணங்களில் மட்டும் அவன் அழைப்பது....அதும் காதல் கூடிய தருணங்களிலும் அவன் அவளிடம் தடுமாறும் சமயங்களில் மட்டும் அவன் அழைப்பான்....அதும் அவன் அவளின் காதோடு கவி பாடி அவளின் செவியை சூடேற்றி

.பின் அவளை அமர்த்தி அவளின் மணிவயிற்றில் மிருதுவாக தடவி அங்கேயும் தன் முத்திரையை பதித்தான்...இரு நிமிடம் பேச்சே இல்லை மௌனம் தான் அங்கே ஆட்கொண்டு இருந்தது...அவன் தன் தலையை அவள் வயிற்றில் இருந்து எடுக்கவே இல்லை அவனின் சூடான மூச்சுக்காற்று பட அவளோ கூச்சத்தில் நெளிய அப்போது தான் அவளை விடுவித்தான்.....

அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவளின் கன்னத்தை தன் இரு கைகளால் ஏந்தி , "என் வாழ்க்கை ல என்னை வேறு ஒரு அத்தியாயத்துக்கு கொண்டு போயிட்ட ...வேறு ஒரு உறவையும் கொடுத்துட்ட...லவ் யூ மது...நீ தெரிஞ்சோ தெரியாமலோ என் வாழ்க்கையில் நுழைந்து என்னை நீ மாத்திட்ட மது...நீ இல்லாமல் போனா நான் என்ன ஆகி இருப்பேன் னு எனக்கு தெரியாது"...என்று அவன் கூறி கொண்டும் இருக்கும் போதே மது குறுக்கிட்டாள்...

"நான் தான் ஏதும் செய்யவில்லையே "...என அவள் கூறினாள்...

அவனோ, " நீ ஏதும் செய்யல னு சொன்னாலும் நீ என்ன செஞ்சு இருக்கேன் னு எனக்கு தான் தெரியும் நீ என்னை எப்படி மாத்தி இருக்க னு "...என்று கூறி அவனின் அணைப்பை இருக்கினான்...

அவனும் வேறு ஒரு வித மனநிலையில் தான் இருந்தான்...ஏனென்றால் அவன் அஞ்சலியை மனதில் வைத்து கொண்டு தான் அவளிடம் இதை பற்றி பேசியது... அவளுக்கு மிக சரியாக அவனை கணிக்க முடியவில்லை என்றாலும் அவனின் இதயத்தின் துடிப்பை கேட்டு கொண்டு இருந்தாள் மது...

சில நிமிடம் அவன் சரியாகி அவளிடம் நடந்ததை கூறினான் விக்ரம்...அவளோ இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்...அவனின் இந்த மாற்றம் நல்லது தான் என்று மட்டும் அவள் மனதிற்கு பட்டது...

நாட்கள் செல்ல மது அவளின் பட்டப்படிப்பை படித்து முடித்து விட்டாள்... அவளுக்கு இப்போது ஐந்து மாதம் ஆகி விட்டது...ஐந்தாம் மாதமே வளைகாப்பு நடத்தி விட்டனர்...விக்ரம் பேருக்கு தான் வளைகாப்பு நடத்தினானே தவிர அவளை விட வில்லை... அவளை அவன் விட்டாலும் அவள் போனால் தானே அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் பச்சை குதிரை விளையாடி கொண்டு இருந்தாள்...அவளின் ஆட்டத்தை கண்டு கோல்ட் தன் மகன் வெங்கியிடம், " மகனே இந்த சின்ன குட்டியை வேற எங்கேயாவது கட்டி கொடுத்துடு ...ஒருத்தி எதிர்த்த வீட்டுல இருந்து அடங்காம சுத்திட்டு கிடக்குறா... அவளையாவது பத்து ஊரு தள்ளி கல்யாணம் பண்ணி கொடு "...என்று கூறினாள்...

வெங்கியும் வாசுதேவனும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர்...தினமும் காலை , மாலை என இரு நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்...வெங்கியின் உதவியால் அவரின் மூச்சு திணறல் பிரச்சனை சரி ஆகி விட்டது...அதில் இருந்து இருவரும் இணைந்து சுற்றி வருகின்றனர்.....விக்ரமின் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது....வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது...காலங்கள் உருண்டு ஓடியது...கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top