காதல் 51

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

காதலது கண்ணில் கண்டேன்

அத்தியாயம் : 51

"மது ...மது....ரெடியா "...என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தான் விக்ரம்..."என்ன டி பண்ணிட்டு இருக்க"... என்று கத்திக்கொண்டே வர அவளோ, "இங்கே இருக்கேன் மாமா"... என்று அவர்கள் அறைக்குள் இருந்து குரல் கொடுத்தாள்...

இவனோ அவர்கள் அறை இருக்கும் பக்கம் செல்ல அவனை போக விடாமல் இரண்டு சின்ன பீம் பாய்ஸ் தடுத்தனர்... அது வேறு யாரும் அல்ல மது விக்ரமின் இரட்டை குழந்தைகள் தான் அது ...இருவரும் விக்ரமின் பனியனை மாட்டி கொண்டும் அவனின் ஷூவை அணிந்து கொண்டு அவனை தடுத்தனர்...

விக்ரமோ மனதுக்குள் அம்மாவுக்கும் பசங்களுக்கும் ட்ரெஸ் வாங்கி கொடுக்கறது வேஸ்ட் போல குடும்பமே என்னோட ட்ரெஸ் தான் எடுத்து போட்டுட்டு சுத்துதுங்க என்று நினைத்து கொண்டே உள்ளே போக முயல...

"சா..ர்..ர்..உள்ளே போகாதீங்க ...அம்மா ட்ரெஸ் பண்றா"...என்று அவனின் ஒரு வாண்டு அபிஜித் கூற ...அதும் மது கூறுவது போல அவனை மிரட்ட சார் என அழைத்து கூற அவனோ என்கிட்டேயேவா வா என்பது போல விக்ரம் பார்த்தான்...

மேலும் முன்னேற போனவனை அவனின் இன்னொரு மகன் விபீஜித் தடுத்து அவனை பார்த்து விக்ரம் முறைப்பது போல முறைத்தான்...ஆம் மூத்தவன் விபீஜித் அப்படியே விக்ரமின் குணங்களோடு பிறந்தவன் ...அதே போல இரண்டாவது மகன் அபிஜித் அப்படியே மதுவை உரித்து வைத்து பிறந்தவன்...

இருவரை கண்டால் குடும்பத்தார் அல்லாது வேறு யாராலும் எளிதில் கண்டு கொள்ள முடியாது..ஒரே முகம் , ஒரே ஜாடை, நடை, உடை அப்படியே இருவரும் ஒரே போல இருப்பர்....."அபி போ அம்மா வை அப்பாவுக்கு பார்க்கணும் "...என்று கூற

விபீஜித் , "அப்பா அம்மா ட்ரஸ் மாத்துறாங்க பா"... என்று கதவை தாண்டி உள்ளே போய் பார் அது அப்பா ஆக இருந்தாலும் சரி என்பது போல அவன் கதவை அவனின் பிஞ்சு கைகளால் பிடித்து இருந்தான்...தன் மக்கள் இருவரும் நிற்பதையும் அவர்களின் மழலை மொழியும் அவர்களின் உடையும் பார்க்க அவனோ இருவரையும் ,"வாங்க"... என்று அழைத்தான் விக்ரம்...

குழந்தை இருவரும் வர மறுத்தனர் எங்கே தங்களை மீறி அப்பா உள்ளே போய் விடுவாரோ என்று அதற்குள் தன் பாண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டு தான் கொண்டு வந்த சாக்லேட் எடுத்து காட்ட இருவரும் அவனிடம் தாவி விட்டனர்...

அபிஜித்க்கு அவனின் அம்மாவின் குறும்பு மொத்தம் கிடைத்து இருக்கிறது...சாக்லேட் சாப்பிட்டு அதை அப்படியே விக்ரமின் சட்டையில் தேய்த்து கொண்டு இருந்தான்...

விக்ரமோ அதை கண்டு சிரித்து கொண்டு இருந்த விக்ரமை பார்த்து கொண்டே மது வந்தாள்... வந்தவள் மூவரையும் பொரிய துவங்கினாள்...

ஆம் சட்டையை அசுத்தம் ஆக்கியதுக்கு தான் இந்த சண்டை...விக்ரம் அதை எல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை...அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் வீடு பரபரப்பு ஆகியது...இரண்டு வாண்டுகளை ரெடி ஆக்கி கருணை இல்லம் சென்றனர்...

மாதம் ஒரு முறை அவர்கள் அங்கே சென்று வருவார்கள் அதற்கு தான் இப்போதும் சென்று கொண்டு இருக்கிறார்கள்...மதுவின் குடும்பமும், வாசுதேவன் எல்லோரும் மூகாம்பிகா சென்று உள்ளனர்... அவர்கள் எங்கே சென்றாலும் வாசுதேவன் அவர்களோடு சென்று விடுவார்...

விக்ரமுக்கு வேலை இருப்பதால் அவனின் குடும்பம் மட்டும் செல்லவில்லை...அதற்கு பதில் இதுவும் கோவில் போல தானே என்று இங்கே வந்து விட்டனர்...

அங்கே இவர்கள் வாங்கி வந்த சரக்குகளை எல்லாம் அங்கே இருந்த பணி ஆள் இறக்கி வைத்து கொண்டு இருக்க குழந்தைகள் இருவரும் ஓடி விளையாடி கொண்டு இருந்தனர்...

மது அவர்கள் பின்னே ஓடி கொண்டு இருந்தாள்...விக்ரம் அந்த இல்லத்தை நடத்தும் அய்யாவிடம் பேசி கொண்டு இருந்தான்...

அப்போது அபிஜித் , விபீஜித் ஐ விளையாடி கொண்டே தள்ளி விட மது ஓடி வருவதற்குள் வேறு ஒரு நபர் வந்து குழந்தையை தூக்கினார்...மதுவும் ஓடி வந்து அபியை தூக்கி அடி பட்டு இருக்கிறதா என்று பார்க்க , "கவனமா விளையாட கூடாதா பா "...என்று விபியின் காலில் உள்ள மண்ணை தட்டி விட்டு கொண்டே ஒருவர் கேக்க

குழந்தையோ ,"அவன் தள்ளிட்டான்".. என அழ தொடங்கினான்...குறும்பு அபியோ தன் உடன்பிறப்பு அழுவதை பார்த்து அவனும் அழ இருவரையும் மது மற்றும் அவர்களுடன் நின்று கொண்டு இருந்த ஒருவரும் சமாதானம் செய்து கொண்டு இருந்தனர்...

அதற்குள் விக்ரம் மதுவை தூர இருந்தே அழைத்தான் மதுவின் கூட இருந்த நபர் விக்ரமை பார்த்ததும் குழந்தையை இறக்கி விட்டார்...அவர் வேறு யாரும் அல்ல கிரிஜா தான்...

ஆம் அவர் இங்கே வந்து ஒரு மாதம் ஆகிற்று யாரும் இல்லை சுருக்க அவர் கூறும் வழக்கில் கூறினால் அனாதை ஆகி விட்டார்...அவரும் அந்த வடநாட்டு ஆளும் இணைந்து வாழ்ந்தனர்..வெறி மட்டுமே காமம் மட்டுமே அதில் நிறைந்து இருக்க அவர் செய்த பாவமோ இல்லை புண்ணியமோ தெரியவில்லை விக்ரமை தவிர வேறு யாருக்கும் அவரால் பிறப்பு அளிக்க முடியவில்லை... இருவரும் அவர்கள் வாழ்க்கையை அவர்களுக்கு பிடித்தது போல நடத்தி வந்தனர்...ஆனால் ஆரம்பத்தில் சுகித்து இருந்தவன் போக போக அவரை வெறுக்க தொடங்கினான்...அவரை அடிப்பதும் சூடு போடுவதும் என கொடுமை படுத்தினான்...அவரால் சகித்து கொள்ள முடியவில்லை ...இருந்தும் விதியே என வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருந்தார்...

ஆறு மாதத்திற்கு முன்பு அவரின் காதலன் ஒரு கொடிய நோயில் மரணிக்க ..காதலனின் உறவினர்கள் கிரிஜாவை அடித்து துரத்தி விட்டனர்...அவர்களிடம் கிரிஜாவால் ஜெயிக்க முடியவில்லை...கிரிஜாவோ நிற்க இடம் இல்லாமல் உடுக்க துணி இல்லாமல் இங்கே வந்து சேர்ந்தார்....வேறு இடத்தில் இருந்த அவரை அந்த இல்லத்தார் இங்கே கொண்டு வந்து விட்டு விட்டனர்....

அன்று ஒரு நாள் விக்ரமை அனாதை இல்லத்தில் சேர சொன்ன அவர் இன்று அங்கே இருக்கிறார்...இது தான் காலத்தின் விதி என்பதோ...வினை அறுத்தவன் வினை பயனை அனுபவிக்கிறான் ...விக்ரமை கண்டதும் அடையாளம் கண்டு கொண்டார்...ஆனால் ஓடி சென்று வாரி அணைக்க ஒரு தயக்கம்...என்ன வென்று அவர் செல்வார்...என் மகனே என்றா இல்லை என் நிலையை பார்த்தாயா என்றா இல்லை உன்னை செல்ல சொன்ன இடத்தில் இப்போது நான் இருக்கிறேன் என்றா அவரால் போக முடியவில்லை... ஏதோ தடை செய்தது...ஆனால் கண்கள் மட்டும் குளம் கட்டி இருந்தது...

வாங்கி வந்த உடைகளை எல்லாம் அங்கே உள்ளவர்களுக்கு எல்லாம் அவர்கள் கையால் கொடுக்க விக்ரமும் மதுவும் கொடுத்து வந்து கொண்டு இருந்தனர்...கிரிஜாவிற்கு மட்டும் விக்ரம் குழந்தைகள் கையில் கொடுக்க சொல்லி அந்த இல்லத்தை நடத்தும் அவரிடம் உரையாடி கொண்டே காருக்குள் சென்று விட்டான்..

கிரிஜாவோ விழி நீர் நிறைய அவன் செல்வதையே பார்த்து கொண்டு நின்றார்...அவர் முகத்தில் கூட அவன் விழிக்க தயாராக இல்லை...அவனுக்கு அவர் மேல் கோபம் இல்லை...அதே போல வருத்தமும் இல்லை எனக்கு தேவை இல்லை அதனால் விலகி இருக்கிறேன் என்று ஒதுங்கி விட்டான்...

பின் குழந்தைகள் கொண்டு வந்து கொடுத்த உடையை வாங்கிய கிரிஜா குழந்தைகள் இருவரை ஆற தழுவி முத்தம் இட்டார்...மது அருகில் வர அவரிடமும் அழுதார்...மதுவிற்கு இவர் எதற்காக அழுகிறார் என்று புரியவில்லை என்றாலும் , "அழுகாதீங்க அம்மா"... என்று ஆறுதல் படுத்தினாள்... அப்போதும் அவரோ தன் தலையில் அடித்து, " நான் பாவி மா நான் பாவி நான் பெத்த மகனை பார்த்தும் அவன் கிட்ட பேச முடியாத பாவி ஆகிட்டேனே"... என்று விக்ரமை காட்டி அழ மதுவிற்கு எல்லாம் விளங்கி விட்டது...

இதில் அவளுக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை...இதில் முடிவு செய்ய வேண்டியது விக்ரம் மற்றும் வாசுதேவன் மட்டுமே அவளால் முடிந்த வரை சமாதானம் சொல்லி விட்டு வண்டியில் ஏறியவளை பார்த்து , "போகலாமா "...என்று கேட்டான்...அவன் முகத்தை மது பார்த்தாள் அவளால் ஒன்றும் படிக்க முடியவில்லை... இருந்தும் அவனிடம் கூற முடியாமல் திணறி கொண்டே இருந்தவளை கண்ட விக்ரம் , "என்ன மது".. என்றான்...

"அவங்க "...என்று மது திணற "அவங்களுக்கு என்ன ...இங்கே எத்தனையோ பேர் இருக்காங்க "...அது போல தான் அவங்களும் என்று சொல்லாமல் சொல்லி விட்டான் விக்ரம்...

கருணை இல்லத்தில் வந்து அவரை கண்டு வந்து இரண்டு தினங்கள் கழிந்து விட்டன மது விக்ரம், வாசுதேவன் என மாறி மாறி பேசி விட்டாள்... அவர்கள் இருவரும் செவி சாய்க்கவில்லை...

வாசுதேவன் கிரிஜா என்ற பெயரை கூட அவர் கேக்க விரும்பவில்லை... இறுதியில் மதுவின் தொல்லை தாங்க முடியாமல் ,"உனக்கு வேணும்னா நீ போய் பார்த்துட்டு வா எங்களை இதுக்குள்ள  இழுக்காதே"... என்று கூறி விட்டனர்...அதுவரை போதும் என்று நினைத்த அவளும் வாரம் ஒரு முறை அவரை கண்டு வருவாள்...அவருக்கு தேவைப்பட்டதை  வாங்கி கொடுக்கவும் கூறி இருக்கிறான் விக்ரம்...

கிரிஜாவிற்கு இந்த நிலைமை வேண்டும் தான்... அவர்கள் இருவரின் பாரா முகம் தான் தண்டனை... நம்மில் சிலர் இது போல ஆசைக்காகவும் சில நொடி சலபத்திற்காகவும் ஆசைப்பட்டு வெளியே சென்று விடுகின்றனர்...ஆனால் திரும்பி வரும் போது அவர்களை அவர்கள் குடும்பத்தார் ஒதுக்கி இது போல இல்லங்களில் உள்ளதை நாமே நம் கண்கூட கண்டு இருப்போம் அதில் ஒருத்தி தான் இந்த கிரிஜா...வாசுதேவன் கிரிஜாவின் மீது உள்ள கோபம் சற்றும் குறையாத காரணத்தினால் ஒதுங்கி விட்டார்...

விக்ரமுக்கு அனுபவ அறிவு கற்று தந்த பாடத்தில் அவரும் மனிதர் தானே அவர் ஏதோ தவறு செய்து விட்டார் ...அவர் மீது கோபம் எல்லாம் இல்லை...அவரை மன்னிக்க எனக்கு மனம் இல்லை...அதனால் ஒதுங்கி இருக்கிறேன்...இதுவே பழையது போல கோபம் உள்ள விக்ரம் எனில் மதுவை கூட காண சம்மதித்து இருக்க மாட்டான்...ஆனால் இப்போது அப்படி இல்லை...அவனுக்கு அவர் மீது பாசமும் இல்லை வெறுப்பும் இல்லை...அவன் மாறி விட்டான் என்பதற்கு அஞ்சலி விஷயமும் கிரிஜாவை அவன் இப்போது நடத்தும் விதமே சான்று....மதுவுக்கும் அவர் மீது கோபம் இல்லாமல் இல்லை ஒருவர் வழி தவறி விட்டார்...அவரை ஒதுக்க வேண்டாமே என்ன இருந்தாலும் விக்ரம் அவர் வயிற்றில் பிறந்தவன் தானே என்ற கரிசனத்தோடு அவள் சென்று வருகிறாள்....

ஒரு நாள் அவள் செல்லும் போது விக்ரமின் தாய் கிரிஜாவுக்கு உடல் நிலை சரி இல்லை என ஹாஸ்பிடல் கொண்டு போய் கொண்டு இருந்தனர்...அதை கண்ட மதுவோ அவளும் அவர்களுடன் சென்றாள்... அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு இதயத்தில் கோளாறு என்றும் அவர் சில காலமே உயிருடன் இருப்பார் என்றும் கூற எப்போதும் மதுவை பார்க்கும் போதும் என்னையும் உன்னோடு அழைத்து செல்லும் படி கெஞ்சுவார்...அவர் செய்த தவறை உணர்ந்து திருந்தி விட்டேன் என்று எப்போதும் அழுவார்...அவளோ தட்டி கழித்து கொண்டே இருப்பாள்...மருத்துவர் வேறு இப்படி கூற என்ன செய்யலாம் என யோசித்து எதற்கும் விக்ரமிடம் பேசுவதற்கு முன்பு வாசுதேவனிடம் இதை பற்றி பேசலாம் என்று நினைத்து இதோ இப்போது அவர் முன்பு அமர்ந்து இருக்கிறாள்...அவரிடம் எல்லா விஷயத்தையும் கூறி விட்டாள்...

அவரோ நல்ல மனிதர் ஒரு காலத்தில் அவளுடன் வாழ்ந்து இருக்கிறார்...காதலித்து இருக்கிறார்...அதிலும் என்ன தான் இருந்தாலும் அவரின் அருமை மகனை இந்த பூமிக்கு கொடுத்தவர் என்ற கருணையின் அடிப்படையில் கிரிஜாவை உள்ளே வர அனுமதி அளித்தார்...

இதை கேட்ட விக்ரம் இது சரி வராது உடைந்த கண்ணாடி மறுபடியும் ஒட்டாது மது ...என்று எல்லாம் அவன் கூறி மறுத்தான் ஆனால் அவர் இன்றோ நாளையோ மரணத்தை தழுவ போகிறவர் என்ற செய்தி அவனையும் உலுக்கியது என்றே கூறலாம்...அதன் படி வாசுதேவனும் கூற கிரிஜா வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார்...வாசுதேவன் எதிலும் தலையிடவில்லை...விக்ரமின் தந்தையாக எனக்கு என்ன உரிமைகள் உண்டோ அதே உரிமை அவளுக்கும் உண்டு என அந்த இடத்தில் கிரிஜாவை வைத்து விட்டார்...

விக்ரமோ என்ன தான் இருந்தாலும் என்னை பெற்றவள் அவள் மரணப்படும் வரையிலாவது அவள் இப்படி இருக்கட்டும் என்று விட்டு விட்டான்.... குழந்தைகள் ரூம் கிரிஜாவிற்கு ஒதுக்க பட்டது...அவரும் தன் நிலை கருதி குழந்தைகளின் ஆயா போல தான் தன்னை நினைத்து அந்த எல்லையில் நின்று கொண்டார்...வாசுதேவன் கண் முன் கிரிஜா வந்தாலும் அவரின் உடல் நிலையை கருதியும் செத்த பாம்பை அடித்து பிரயோசனம் இல்லை என்றும் ஒதுங்கி விடுவார்...அதுமட்டுமின்றி தவறு செய்தவனுக்கு மன்னிப்பை தவிர கொடிய தண்டனை கொடுக்க முடியாது அதை கொடுத்து விட்டார் வாசுதேவன்...ஆம் இவருக்கு போய் நான் துரோகம் செய்து விட்டேனே என்று மனம் குமையும் அந்த தண்டனையை அளித்து விட்டார் வாசுதேவன்...விக்ரம் அவரிடம் தேவை இல்லாமல் வைத்து கொள்வதில்லை...ஆனால் மனைவி மூலம் அவரின் உடல்நிலையை கண்காணித்து தான் வருகிறான்...

மது தான் இப்போது வரை சமாளித்து வருகிறாள்...அவளும் குடும்பத்து அரசி ஆகி விட்டாளே... அழகாக குடும்பத்தை கையாண்டு வருகிறாள்...யாருக்கும் எந்த வேதனையும் சொல்லலாலும் செயலாலும் வந்து விட கூடாது என்று அழகாக கையாண்டு வருகிறாள்...

மது மற்றும் விக்ரம் ஒரு தெளிந்த நீரோடை போல சென்று கொண்டு இருக்கிறது...அவர்களின் மகிழ்ச்சிக்கு குறைவு இல்லை...அதேபோல சிறு சிறு செல்ல சண்டைகளுக்கும் குறைவு இல்லை...இரட்டை குழந்தைகளோடு அவர்கள் இருவரின் வாழ்வு மகிழ்ச்சியின் கூடாரமாக மாறியது...எத்தனையோ இன்னல்கள் ஒருவரின் வாழ்வில் வந்தாலும் ஒருவர் விட்டுக்கொடுத்தும் மற்றவர் அதை ஏற்றும் சென்றால் தான் வாழ்க்கை இனிக்கும்....அவர்களின் வாழ்வில் மேலும் பூந்தோட்டமாக மாற அவர்கள் மேலும் முன்னேற வேண்டும் என நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்...நன்றி...
..

**சுபம்**



   
Quote
(@jeunifer)
Active Member
Joined: 2 months ago
Messages: 6
 

Super story sis ❤️❤️❤️❤️❤️. Romba azhaga eluthiriga 💐💐💐💐💐



   
ReplyQuote
udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

@jeunifer thank you dear



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top