காதல் 49
அத்தியாயம் : 49
காதலது கண்ணில் கண்டேன்
கேரளா மாநிலம் - ஆலப்புழா
விக்ரமின் ஆடி கார் சீறி பாய்ந்து கொண்டு இருந்தது கேரளாவை நோக்கி... நெடு நீண்ட தூர பயணம் கிட்டத்தட்ட ஒரு 5 மணி நேர யாத்திரை இடையிடையே இளைப்பாறி கொண்டே வண்டியை செலுத்தி கொண்டு இருந்தான் விக்ரம்...
அவனோ இளையராஜா மெலடி பாட்டுகள் கேட்டு கொண்டு வர இடையே அவள் AR. ரஹ்மான் இசைக்கு தாவி கொண்டே வெளியே மழை பெய்து கொண்டு இருக்க அதை பார்த்து கொண்டே மறுபடியும் கேட்டாள்... அவனிடம் பதில் இல்லை...
எங்கே செல்கிறோம் என்று மட்டும் அவன் கூறவில்லை... மதுவோ வண்டியில் ஏறியது முதல் விடாமல் அவனிடம் கேட்டு கொண்டு தான் இருக்கிறாள் எங்கே செல்கிறோம் என்று அவனும் சளைக்காமல் எனக்கு தெரியாது அங்கே போய் தெரிந்து கொள் என்று கூறி விட்டான்...
அவர்களின் கார் தமிழ்நாடு எல்லையில் இருந்து கேரள எல்லைக்குள் நுழைந்தது...அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் சென்ற இடம் குமரகம் அழகிய இடம் சுற்றிலும் ஆறு அதில் சில படகுகள் மட்டுமே மிதந்து கொண்டு இருக்க எங்கே பார்த்தாலும் பசுமை சூழ பார்ப்பதற்கே கண்கவர் காட்சி கவர்ந்து இழுத்தது...பார்ப்பதற்கு ஒரு தீவு போல காட்சி அளித்தது....
மதுவோ அவன் ஏன் இங்கு அழைத்து வந்து இருக்கிறான் என அவளுக்கு புரிந்ததது அவளின் ஆசையை நிறைவேற்ற தான் அழைத்து வந்து இருக்கிறான் என்று....
படகில் ஏறுவது வரை அவர்கள் இருவரும் ஏதும் பேசவில்லை அந்த எழில் அவளை மயக்க அவனோ அவளின் ஒரோ அசைவையும் கண்டு கொண்டு இருந்தான்...அவளோ அந்த எழிலை ரசித்து மயங்கி கொண்டு இருக்க அதில் வேறு மெல்லிய இசை காதை குளிர்விக்க இதை விட சொர்க்கம் வேறு ஏதும் இல்லை என அவள் மயங்கி நிற்கும் வேளையில் விக்ரம் அவள் கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிருக்கு பதில் அழகிய ஒரு பொன் தாலி மின்னியது...தீடிரென அவள் கழுத்தில் அவன் கை பட அவள் குனிந்து பார்க்கும் போது அவன் அணிவித்து கொண்டு இருந்தான் சிரித்த முகத்துடன் முகத்தில் மென்மையையும் கண்களில் காதலையும் தேக்கி ...
ஒரு வருடத்திற்கு முன் இதே நாள் அவர்களின் நிலைமை தலைகீழாக இருந்தது அதை இப்போது நினைத்து பார்த்தால் இருவருக்கும் இந்த நாளை நினைக்க கூட கூடாது..ஆனால் அவர்கள் வாழ்வில் ஏதேதோ நிகழ்வுகள் நிகழ்ந்து இப்போது நல்ல ஒரு ஆதர்ச தம்பதிகளாக இருக்கின்றனர்...
அவள் கழுத்தில் அந்த இயற்கையை சாட்சியாக வைத்து இரண்டாம் முறை மனதில் சந்தோஷத்தோடு அதை அணிவித்து அவளிடம் , "இந்த இடம் பிடிச்சு இருக்கா "....என்று கேட்க
அவளோ அவனை கட்டி பிடித்து அதை விட உன் இதயம் தான் எனக்கு பிடித்து இருக்கிறது...என்ன தவம் செய்தேன் என் கண்கள் உனை கண்டது என அவள் மனதில் நினைத்து கொண்டே அவனை கட்டி கொண்டு இருந்தாள்...
அவளின் அணைப்பை போல அவனும் அவளை அணைத்து இருவரும் காதல் மொழி உறவாடினர் அதை கண்ட அந்த நதிக்கரை அல்லாது அந்த படகும் நானியது....
அவர்களின் அழகிய ஹனிமூன்னும் அங்கே அந்த எழில் கொஞ்சும் இடத்தில் தான் அவர்களின் லீலைகளும் அரங்கேறின...இருவரும் எல்லை மறந்து இன்பம் கண்டனர் என்றே கூறலாம்...
இரண்டு நாட்கள் படகிலே மிதந்து விட்டு ஒரு வித கனவோடு இருவரும் வீட்டை அடைந்தனர்...
நாட்கள் செல்ல மதுவின் படிப்பும் தொடர்ந்தது...அவள் விடுமுறை கழிந்து கல்லூரிக்கு செல்ல தொடங்கி விட்டாள்... அவளுக்கு எப்போது தான் ஆறு மாதம் ஆகுமோ என்று இருந்தது...விக்ரமும் தனது தொழிலை சற்று விரிவு படுத்தி இருந்தான்...அவன் நிறுவனம் இப்போது வெளியூர் களில் கால் பதித்து இருந்தது...
அப்படி இருக்க ஒரு நாள் விக்ரம் நேரமாக வீட்டிற்கு வந்தான்...அவன் முகத்தில் சந்தோசத்தின் சாயல்...
அவனுக்கு தொழில் விஷயமாக துபாய் செல்ல வேண்டும் என்றும் அவன் வர ஒரு மாதம் ஆகும் என்று கூறினான்...அவளோ அழ துவங்க அவனும் அவளை சமாதானம் செய்து விட்டும் கூடவே திட்டவும் செய்தான் இது போல தான் செல்லும் சமயங்களில் எல்லாம் அழ கூடாது என்றும் கூறினான்...கூடுதல் சமாதானம் செய்ய நின்றால் நானே அவளை என் கையோடு அழைத்து சென்று விடுவேன் என்று கருதிய விக்ரம் அவளை மனதே இல்லாமல் விட்டு சென்றான்...
மதுவோ அவன் நினைவால் வாடி போய் இருந்தாள்.... ஆனால் அதை வெளியே காட்டாமல் எப்போதும் இருப்பது போல சுற்றி கொண்டு இருந்தாள்...அவன் இல்லா இரவு ஏன் தான் வருகிறது என அவளை வாட்ட அவன் நினைவால் தடுமாறி கொண்டு தான் இருந்தாள்....
தினமும் அவன் உரையாடினாலும் அவளுக்கு பத்தாது...அவன் எப்போதும் அழைத்தாலும் அவள் கேக்கும் ஒரே கேள்வி , "எப்போ வருவிங்க"
.. என்று தான் ...
விக்ரமுக்கும் அவளை காணாமல் வேதனையை அளித்தாலும் தொழில் விஷயம் என்பதால் இது போல இனி பல இடங்களில் அவன் செல்ல வேண்டி இருப்பதாலும் அவள் இதை பழகி கொள்ளத்தான் வேண்டும் என்பது விக்ரமின் வாதம்...அதே போல தான் அவனையும் பழக்கி கொண்டான்..
அவன் சென்றது ஒரு கருத்து கூட்டமைப்பு விழாவிற்காக விழா ஒரு வாரம் மட்டுமே ஆனால் அவனுக்கு அங்கே தொழில் ரீதியாக சிலரை சந்திக்க வேண்டி இருந்ததால் தான் இந்த ஒரு மாதம் பயணம்...இப்போது அவன் கம்பெனி வளர்ந்து வரும் பட்டியலில் இருந்தது....அந்த கருத்து கூட்டமைப்பில் அவனுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட அங்கே இரு ஜோடி கண்கள் அவனை வெறித்தது...விக்கி என வாய்க்குள் முனகியது...
ஆம் வேறு யாரும் அல்ல அவள் தான் அஞ்சலி விக்ரமின் முன்னாள் காதலி என்ற பெயருக்கு சொந்தக்காரி... ஆனால் விக்ரம் அவளை பார்க்கவில்லை... அஞ்சலி இப்போது துபாயில் தான் பணி புரிகிறாள்...விரைவில் சென்னை ப்ரான்ச் க்கு மாற்றல் ஆக இருக்கிறாள்...ஒரு குழந்தை கூட உண்டு..ஆனால் அவள் வாழ்க்கை தான் சரி இல்லை...மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாள்...
அவள் கணவன் அவளின் பணத்தை இழக்க விரும்பாத காரணத்தினால் அவளுக்கு ஒய்வு என்பது கிடையாது...மாசமானது முதல் குழந்தை பிறக்கும் 10 தினங்கள் முன் வரை அவள் பணி புரிந்தாள்... குழந்தை பெற்ற பிறகும் குழந்தையையும் அவளின் தேகத்தை கூட கவனிக்க விடாமல் அங்கேயும் இங்கேயும் பறந்து கொண்டு இருக்கிறாள்...
அவள் ஏதேனும் கூற வந்தால், " எனக்கா நீ சம்பாதிக்கிற நம்ம பேமிலி க்கு வேண்டி தான்...நானும் தான் சம்பாதிக்கிறேன் உன்னை மாதிரி நானும் வேலையை விடறேன் னு சொல்லட்டுமா"... என்று அவள் ஏதேனும் உடல் நிலையை பற்றி கூறி வேலையை விடுவது பற்றி கூறினால் அவள் கணவனின் பதில் இதுவாக இருக்கும்...
அஞ்சலியின் வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போல ...ஆம் அவள் கணவனுக்கு எதற்கும் சமயம் கிடையாது காதல் என்றால் பிதற்றல், " யூஸ்லெஸ் மாதிரி பேசாதே "...என்று கூறி அவன் வெளிநாடு வெளிநாடாக நண்பர்களுடன் கூத்தடித்து வருகிறான்... அவளுக்கு எல்லாம் தெரிந்தாலும் குழந்தைக்கு க்கு வேண்டி பொறுமையாக செல்கிறாள்....அவளுக்கு எல்லாம் வெறுத்து போய் தான் இருக்கிறாள்...
இப்போது விக்ரமை கண்டதும் அவனின் காதல் நியாபகம் வர ...அவன் அவளை காதலித்தது எல்லாம் நியாபகம் வர...அவளின் ஏக்கம் அதிகம் ஆனது...அவன் மேடையில் நிற்கும் போது அவனை திருமணம் செய்து இருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்து இருக்குமா என்று அவள் நினைக்காமல் இல்லை....அதற்குள் விக்ரம் மேடையில் இருந்து இறங்கி வர அஞ்சலியோ மனதுக்குள் இப்போவும் அப்படியே தான் இருக்கிறான் என்று நினைத்து கொண்டு இருந்தாள் அவனிடம் இரு நிமிடமாவது பேசி அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்து அவனுக்கு வேண்டி காத்து கொண்டு இருக்கிறாள்...அவள் விழிகள் அவனிடம் இருந்து மாறவில்லை....
அன்றைய கருத்து கூட்டமைப்பு கழிந்து எல்லோரும் பிரியும் சமயத்தில் , "விக்கி"... என்று அழைக்க விக்ரம் கேட்டது போலவே இல்லாமல் , திரும்பி கூட பார்க்காமல் யார் கூடவோ பேசி கொண்டு இருந்தான்...ஒரு வேளை அவனுக்கு கேக்க வில்லையோ என்று நினைத்த அஞ்சலி விக்ரமின் தோளை தொட்டு, "விக்கி"... என்று அழைக்க திரும்பிய விக்ரம் அவளிடம், "சொல்லுங்க யார் வேணும் "...என்றான்..
அவளோ அதிர்ந்து, " விக்கி உனக்கு என்னை நியாபகம் இல்லையா நான் அஞ்சலி உன்னோட "...என்று தொடங்கும் முன்
"என்னோட நேம் விக்ரம் வாசுதேவன் விக்கி இல்லை சொல்லுங்க ..உங்களுக்கு என்ன வேணும் "...என்று தெளிவாக முறைக்கவோ எரிக்கவோ இல்லமால் கூலாக மூன்றாம் மனிதனிடத்தில் எப்படி பேசுவோமோ அது போல அது போல விக்ரம் பேச அதிர்ந்த அஞ்சலி ..."விக்கி நான் அஞ்சலி என்னை மறந்துட்டியா"... என்று தமிழில் கேட்க
அவனோ ,"சாரி ...நீங்க வேற யாரையோ தேடுறீங்க போல ...நீங்க தேடுற ஆள் நான் கிடையாது...எனி வே பை "..என்று கூறி கிளம்பி விட்டான்...
அஞ்சலிக்கு அப்படியே முகத்தில் அடித்தது போல இருந்தது அதிலும் அவனின் அந்நிய பார்வை அவளை உள்ளுக்குள் ஒரு ஆட்டு ஆட்டியது என்றே கூற வேண்டும்...அதும் அவளை யார் என்றே தெரியாதது போல அவன் பேசியது அவளுக்குள் மிகுந்த வேதனையை கொடுக்க நீ அவனிடம் செய்ததும் அது தானே ஆனால் அவன் உன்னிடம் கோபம் கூட காட்டவில்லையே...சிரித்த முகத்துடன் அவள் அவன் பேசியது வேறு அவளுக்கு வேறு ஒரு மனநிலையை கொடுத்தது... இனி பேசி பயன் இல்லை...வேதனைப்பட்டும் பயன் இல்லை என எல்லாம் கலந்த ஒரு உணர்வில் அவள் கண்கள் ஒரு நல்ல வாழ்க்கையை இழந்து விட்டுமோ என்று ஏங்கியது.. தூரத்தில் அவன் செல்வதையே கண்டு கொண்டு இருந்தாள்...
விக்ரமோ மேடையிலே அவளை கண்டு விட்டான்... ஆம் அவ்வளவு எளிதில் மறக்க கூடிய முகமா அது...அவன் வாழ்க்கையை அவளிடம் கொடுக்க நினைத்து இருந்தானே... ஆனால் இப்போது அப்படி நினைக்க கூட தோன்ற வில்லை...மது அவன் வாழ்வில் நுழையா விட்டால் அவன் ஒரு அரை பைத்தியம் ஆகி இருப்பான் என்றே விக்ரம் நினைத்தான்...அவள் அவனை விட்டு சென்றதும் நல்லது தான் என்று அவன் நினைக்க தொடங்கி விட்டான்.. இல்லை என்றால் அவன் வாழ்க்கையின் சொர்க்கத்தை இழந்து இருப்பானே...ஆனால் அஞ்சலிக்கு இதை விட பெரிய தண்டனை கொடுக்க முடியாது...அதை கொடுத்து விட்டான் விக்ரம் ....அவளுக்கும் வாழ்நாள் முழுவதும் இதை நினைத்து பார்த்து துன்பப்பட்டு கொண்டு இருப்பதே அவளின் நிலைமை...
அங்கே மதுவோ அவன் இல்லாமல் ஊனும் இல்லாமல் உறக்கமும் இல்லாமல் ஆள் பாதி ஆகி விட்டாள்... வாசுதேவன் கூறி பார்க்க அவளோ , "சாப்பிடறேன் அங்கிள் "..என்று கூறி விட்டு மறுத்து விடுவாள்...அவளால் உண்ண முடியவில்லை அது தான் சத்தியம் அவன் இல்லை வேதனை அளித்தாலும் அவளால் கடந்த சில நாட்களாக சரியாக உண்ண முடியவில்லை... அவள் உடலில் என்னவோ மாற்றம் இருப்பது போல அவள் உணர்ந்தாள்...அவளால் அதை பிரித்து அறிய முடிய வில்லை...அது தான் உண்மை இது அறியாத அவள் குடும்பத்தார் அவளை கடிய தொடங்கி விட்டனர்...ஒரு நாள் அழகு மயில் வந்து திட்ட தொடங்கி விட்டார்..."ஏன் டி மனுசன் வேலைக்கு தானே போய் இருக்காங்க ...இதுக்கு போய் என்னமோ நடந்த மாதிரி இருக்க ...இன்னும் இரண்டு நாளில் வந்துடுவாங்க...இதுக்கு இவ்ளோ பெரிய அக்கப்போறா "...என்று பொரிய தொடங்கி விட்டார்...
கோல்ட் , "அந்த தம்பி வந்து எங்களை கேள்வி கேட்கணும் அதுக்கு தானே நீ இப்படி பண்ற...நான் எல்லாம் உன்னை தாங்கிட்டு இருக்க மாட்டேன் ...சாப்பிட்டா சாப்பிடு இல்லாட்டி போ எங்களுக்கு என்ன வந்தது ...இதா பாரு அந்த தம்பி வந்து கேக்கும் அதுக்கும் நீ தான் பதில் சொல்லணும் பார்த்துக்கோ "...என்று அவரும் அவர் பங்குக்கு கத்த தொடங்கினார்...
மதுவின் குடும்பத்துக்கு அவளின் நிலை புரிந்தது தான் ...ஆனால் தொழில் என்று வந்து விட்டால் இதை எல்லாம் பார்த்து கொண்டு இருக்க முடியுமா என்பது தான் அவர்களின் கேள்வி....பாவம் அவளும் 20 வயது பெண் தானே அவள் பழகி கொள்வாள் என அவர்கள் நினைத்து கொண்டு இருந்தனர்...
வெங்கியோ மகளை ஒரு பார்வை முறைத்தப்படி அமர்ந்து இருந்தார்...வாசுதேவன் முன்னால் அவரால் எதுவும் பேச முடியவில்லை... அதனால் அமைதியாக அவளை பார்த்து கொண்டு இருந்தார்...
அவர் திட்டுவதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தவள் தீடிரென மயங்கி விழ வாசுதேவன், வெங்கி, கோல்ட் எல்லோரும் பதறினர்...வெங்கி ஓடி வந்து அவளை பரிசோதிக்க அவரின் மகள் தாய்மை அடைந்து இருக்கிறாள் என அறிந்தார்.....அனைவருக்கும் சந்தோசம் தாளவில்லை இப்போதே விக்ரமுக்கு தெரியப்படுத்த எண்ணி அவனுக்கு அழைத்து கொண்டு இருக்கின்றனர்...
அவர்கள் இந்த விஷயத்தை அறிந்ததும் விக்ரமுக்கு தெரிய படுத்த அழைத்தனர்...ஆனால் அவனுக்கு லைன் கிடைக்கவே இல்லை...எங்கே இவன் இவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க பிலைட்டில் அல்லவா அமர்ந்து இருக்கிறான் விக்ரம்...
என் கண்கள் உனை தேடும்....
