காதல் 48

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

அத்தியாயம் : 48

காதலது கண்ணில் கண்டேன்

இன்று விக்ரமின் வாழ்க்கையில் அடுத்த கட்டம் ஆம் இதுவரை அடுத்தவரிடத்தில் வேலை செய்து கொண்டு இருந்தவன் இன்று முதல் முதலாளி ஆகிறான்...

MV கிரேஷன்ஸ் என்பது தான் விக்ரமின் கம்பெனி ஆம் M மதுவே  தான் V அவனின் தந்தையை மனதில் நினைத்து தான் வைத்தது ஆனால் V என்பதில் விக்ரமின் பெயரும் கலந்து இருப்பதால் அனைவருக்கும் இந்த பெயர் பிடித்து போயிற்று...

தொடக்கவிழாவில் கலந்து கொண்ட வெங்கி குடும்பம் , வாசுதேவனின் குடும்பம் மட்டுமே அவனுக்கு நண்பர்கள் என யாரும் இல்லாததால் குடும்ப உறுப்பினர்கள் தான் இருந்தனர்...வாசுதேவனை வைத்து அவனின் கம்பெனி யின் திறப்பு விழாவை ரிப்பன் வெட்ட வைத்து விட்டான்...அவர் பட்ட கஷ்டம் எல்லாம் கண்டு வளர்ந்த மகன் விக்ரம் என்பதால் ஒரு நாளும் அதை மறக்க மாட்டான்..... தன் தந்தையை முன் நிறுத்தி தான் அவனது அனைத்து காரியங்களும் தொடங்கும்..இப்போதும் அதே போல தான் புதிதாக அவன் மனைவியும் இணைந்து இருக்கிறாள்...

மதுவுக்கு மகிழ்ச்சி தாள வில்லை...அவளோ அங்கேயும் இங்கேயும் சுற்றிக்கொண்டு இருந்தாள்...சிறு கம்பெனி தான் இரு அறைகளை உள்ளடக்கியது தான் இருந்தாலும் அவர்களின் சொந்தம் அல்லவா ...அவளுக்கு தன் கணவனை பற்றி தெரியும் இன்று அவன் இரு அறைகள் கொண்டு தொடங்கி இருந்தாலும் நாளை 20 வது அடுக்கு கட்டிடங்களை கட்டுவான் ...அதில் அவனது சாம்ராஜ்யத்தை தொடங்குவான் அவன் முன்னேறி காட்டுவான் என அவளுக்கு அந்த உறுதி எப்போதும் உண்டு...

ஒரு வழியாக மதுவின் இரண்டாம் வருட கல்லூரி படிப்பு நிறைவடைந்து விட்டது... மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறாள்....அவள் வீட்டில் இருந்து படிக்கிறேன் என்று கூறி பார்க்க
விக்ரமோ மறுத்து விட்டான்..."நீ வீட்டில் இருந்து கொண்டு என்ன படிப்பாய் என எல்லோருக்கும் தெரியும் காலேஜ் போகும் வழியை பார் "...என கண்டிப்போடு கூற அவளோ எப்போதும் போல தலை ஆட்ட தான் அவளால் முடிந்தது...ஆம் அவனின் ஒரு சில கண்டிப்புக்கு அவள் தானாக தலை ஆட்டி விடுவாள்...

அதன் படி அவளின் மூன்றாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை தொடங்கியது அவள் இது நாள் வரை படித்த கல்லூரியிலே..

விக்ரமும் அவன் ஒருவன் தான் இப்போது சில ப்ரொஜெக்ட்கள் செய்து கொண்டு இருக்கிறான்...ஆனால் அவனுக்கு பல கனெக்ஷன்கள் இருப்பதாலும் அதை வேகமாக முடித்து கொடுப்பதால் நிறைய கஸ்டமர்கள் அவனுக்கு வந்த வண்ணம் இருந்தனர்...அவன் வாழ்க்கையில் பிஸி ஆகிவிட்டான் விக்ரம்..அவனால் மதுவோடு சரியாக பேச கூட முடியாத அளவுக்கு அவனின் வேலை பளு அவனை தாக்கியது...கடுமையாக உழைத்து கொண்டு இருக்கிறான்...வாழ்க்கையில் முன்னேறும் முயற்சியில் இறங்கி இருக்கிறான்...முன்னேறி விடுவான்...

மதுவோ அவனுக்கு வேண்டி காத்து இருந்து காத்து இருந்து உறங்கி போவாள்...அவனுக்கு அவள் அமர்ந்த வாக்கில் உறங்கி போய் இருப்பதை கண்டதும் அவனுக்கு விளங்கி விடும் அவனுக்கு வேண்டி தான் காத்து இருந்து உறங்கி போய் இருக்கிறாள் என்று...

ஆம் அவனின் அலுவலகம் தொடக்க நிலையில் இருப்பதாலும் அவன் மட்டுமே எல்லா பணிகளை மேற்கொள்வதாலும் அவனால் அவளிடம் கவனம் செலுத்த முடிவது இல்லை...இரவு லேட்டாக வரும் விக்ரம் காலை நேரமாக சென்று விடுகிறான்...முதலில் ஆரம்பத்தில் ஒரு வாரம் அவளை கொண்டு போய் விட்டு கொண்டு இருந்தவனால் அதன் பின்பு முடிவது இல்லை...

மதுவுக்கு விக்ரமை மிஸ் செய்வதால் அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை...எப்போதும் அவளுக்கு அவனின் ஏக்கம் தான்...பாடம் நடத்தினாலும் அவள் கவனிப்பது இல்லை..பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒரு நாள் மாலை நேரே அவனின் அலுவலகம் சென்று விட்டாள்...அங்கே சென்றதும் தான் புரிந்தது அவனின் வேலை பளு அது எல்லாம் புரிந்தாலும் அவளுக்கு அவனின் பிரிவை தாங்கி கொள்ள முடியாததால் அவள் அவனை பார்த்து முறைத்து கொண்டு இருந்தாள்...

விக்ரம் அவள் வந்தது முதல் தன்னை முறைத்து கொண்டு இருப்பதை அறிந்தாலும் அவன் வேலையை பார்த்து கொண்டு இருக்க கடுப்பானவள் அவனை பார்த்து முறைத்து , "நான் உங்க கிட்ட பேசனும்"... என்றாள்...

விக்ரமின் அவளின் முகத்தை பார்த்து, "பேசு "..என்றான்...

அவளோ அவன் முகத்தை பார்த்ததும் தான் பேச வந்ததை மறந்து அவனை பார்த்து கொண்டு இருக்க அவனோ சிரித்தான்...

அவனின் சிரிப்பு அவளுக்கு கடுப்பை கொடுக்க ,"சிரிக்காதீங்க சார் ...நான் என்னோட புருஷனை தேடி வந்து இருக்கேன் சார்...உங்கனால கண்டு பிடிச்சு கொடுக்க முடியுமா சார் "...என்க..

அவளின் வார்த்தைக்கு வார்த்தை சார் என அழைக்கும் போதே அவனுக்கு புரிந்து போனது அவள் எதனால் வந்து இருக்கிறாள் என அவளின் வாக்குகளின் மூலம் வெளி வர விக்ரமோ அவளிடம் விளையாடி பார்க்கும் பொருட்டு ,"இது போலீஸ் ஸ்டேஷன் இல்ல...இங்கே வந்து கம்பலைன்ட் பண்ணிட்டு இருக்கீங்க...உங்க புருஷன் உங்க கிட்ட தான் இருக்காங்க போங்க போய் தேடுங்க மிசஸ் விக்ரம் "..என்று கூறி அவள் அருகில் எழுந்து வர அவளோ வந்தவனை கட்டி பிடித்து கொண்டாள்...

அவளின் அணைப்பு கூறியது அவளின் ஏக்கத்தையும் அவளின் பிரிவையும்...அவனோ , "என்ன டி அதான் நான் இருக்கேன் ல "..என்று கூற...

அவளோ பதிலே சொல்லாமல் அவனை அணைத்து கொண்டு நின்றாள்..."நம்ம வேலை நாம தான் டி செய்யனும் நாம முன்னேற வேணாமா "..என்று கேட்க அவளுக்கு ,"ஹ்ம்ம் "...தவிர வேறு ஒன்றும் கூறவில்லை...அவனும் கொஞ்சம் நேரம் சமாதானம் செய்ய சமாதானம் அடைந்தாள்...

அவன் ஒருவனே எல்லா வேலைகளை செய்வதால் அலுவலகம் தொடங்கி இரு மாதத்தில் இருவரை வேலைக்கு வைத்து விட்டான் விக்ரம்...இரு கல்லூரி மாணவர்களை பகுதி நேர வேலைக்கும் வைத்து விட்டான்...அவளுக்கு வேண்டி தான் அவள் அவனை மிஸ் செய்வதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை...

ஆனால் அவர்கள் அறியவில்லை... இப்படி அருகில் இருந்து கொண்டே காண முடியவில்லை அருகில் இருக்க முடியவில்லை என புலம்பும் மது அவனை விட்டு எப்படி பல மாதங்கள் பிரிந்து இருக்க போகிறாள் என அறியவில்லை... அவளின் வாட்டத்தை உணர்ந்து அதற்கு வழி செய்த விக்ரம் தனது அன்பு மனைவிக்கு வேண்டி அந்த பிரிவுக்கு ஏதாவது வழி வகுப்பானா இல்லை இருவரும் பிரிவில் வாடுவார்களா...

அன்றைய இரவு எப்போதும் புலம்பும் மது அமைதியாக இருக்க அவனோ அவளை சீண்டி கொண்டே இருந்தான்..."என்னாச்சு டி ...அமைதியா இருக்க "...என்று கேட்க

"ஒன்னும் இல்லை மாமா"... என்று முனக

"ஹ்ம்ம் சொல்லு டி "...என்று கூற

"சொன்னா திட்ட கூடாது"... என்றாள் அவளுக்கும் பயம் எங்கே சொன்னால் அவன் திட்டி விடுவானோ என்று

அவனோ அவளின் வெண்டை பிஞ்சு விரலை வருடிக் கொண்டே ,"சொல்லு டி"... என்று அவன் ஊந்த, " என்னோட பிரின்ட் அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு அவ ப்ரெக்ராண்ட் ஆஹ் இருக்கா"... என்று அவள் கூற

அவனோ என்ன சொல்ல வருகிறாள் என்று அவனுக்கு புரிப்பட  இருந்தாலும் அவளிடம்," அதுக்கு"... என்றான்...

"இல்லை நமக்கு".. என்று கேட்க

"அது எல்லாம் வரும் போது வரும் நீ படிக்கற வேலையை மட்டும் பாரு".... என்றான்...அவன் தான் படிக்கும் சமயத்தில் வேணாம் என தள்ளி போட்டு இருக்கிறான்...

அவளோ அவனை பார்த்து கோபம் வந்து கொஞ்சம் அவனை விட்டு தள்ளி படுக்க போக அவனோ அவளை தள்ளி படுக்க விடாமல் அவனின் கையில் அவளை படுக்க வைத்து அவளை சமாதானம் செய்யும் பொருட்டு , "நமக்கு என்ன டி கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் டி கொஞ்சம் நமக்காக மட்டும் இந்த வாழ்க்கை வேணும் டி...கொஞ்ச நாள் மட்டும் ...குழந்தை வந்தா நாம வாழ முடியாது னு சொல்லல ...ஆனால் எனக்கு என்னோட பொண்டாட்டி கூட கொஞ்ச நாள் நீயும் நானும் மட்டும் வாழணும் ...அதுக்கான சமயம் தான் இது "...என்று அவன் கூற அவள் மேற்கொண்டு எதுவும் கேக்க வில்லை...

இப்படியே நாட்கள் செல்ல விக்ரம் கம்பெனி தொடங்கி ஆறு மாதம் ஆகி விட்டது...மதுவின் மூன்றாம் ஆண்டின் முதல் செமஸ்டர் முடிய போகிறது அவளுக்கு இன்னும் இரண்டு நாளில் அவளின் பரிக்ஷை முடிந்து லீவ் தொடங்க போகிறது...

அவளோ அவனை மொய்த்து கொண்டு இருக்கிறாள் பத்து நாட்கள் விடுமுறை அதில் எங்கேயாவது செல்லலாமா என்று அவனை நச்சரித்து கொண்டே இருக்கிறாள்...அவனோ அவளிடம் வேலை இருக்கிறது ...பார்க்கலாம் என்று தட்டி கழித்து கொண்டே இருக்கிறான் இருந்தும் அவளுக்கு வேண்டி அவளது ஆசையை நிறைவேற்ற பிளானும் செய்து விட்டான் விக்ரம் அவள் அறியாமல் ...அவளுக்கு சப்ரைஸ் கொடுக்க காத்து இருக்கிறான்...அவர்களின் முதல் திருமண விழாவை கொண்டாடும் பொருட்டு...

அவள் மனதிலும் அவர்கள் இருவரின் திருமண தினத்தை பொருட்டு தான் எங்கேயாவது போகலாமா என்று கேக்கிறாள்...ஆனால் அவர்களின் திருமணம் நடந்த விதம் தெரியும் விதம் ஆனதால் அவளால் அதை கூற முடியவில்லை... அதற்கு பதிலாக தான் லீவ் என்று கூறி கொண்டு இருக்கிறாள்...

மதுவோ இவன் ஒன்றும் கூறாமல் வேலையை கூறியே தட்டி கழிப்பதை பார்த்து அவனிடம் வேண்டும் என்றே , "சார்"... என கூறி எல்லாம் வெறுப்பேற்றி பார்த்தாள்... விக்ரம் அல்லவா அவனிடம் அந்த வேலை எல்லாம் நடக்க வில்லை....அவன் முகத்தில் இருந்து அவளுக்கு ஒன்றும் படிக்க முடியவில்லை...

மது ஒரு ஆள் விடாமல் புலம்பி தள்ளி கொண்டு இருந்தாள்...அதன் படி அவள் வீட்டுக்குள் வந்து அவள் அம்மாவிடம் புலம்பி கொண்டு இருந்தாள்...அவரோ தலையை மட்டும் ஆட்டி கொண்டு இருந்தார்...கோல்ட் சும்மா இருக்காமல், "உனக்கு என்ன டி நீ சொல்லுவ ...தம்பிக்கு வேலை இருக்கு ல".. என்று இழுத்து கொண்டு கூற

"கிழவி வாயை மூட போறியா இல்லையா..உன்கிட்ட நான் பேசல நான் என் அம்மா கிட்ட பேசுறேன் "...என்று கூற

"நீ பேசு டி ..யார் வேணாம் சொன்னா...அதுக்கு ஏன் புலம்புற...அந்த தம்பி பாவம்...உன்னையும் கட்டிட்டு கஷ்டப்படுது "...என்று அவளை மேலும் சூடாக்கி விட்டே கோல்ட் எழுந்து போனார்...

அவளின் தம்பி தங்கையோ, " நாங்க மட்டும் போகல ல நீயும் போகாத "...என்று கூறி அவர்களும் அவர்கள் பங்கிற்கு அவளை வெறுப்பேற்றி விட்டு சென்றனர்...அன்று இரவும் விக்ரம் தாமதமாக வந்து படுத்ததும் உறங்கி விட்டான்... அவளிடம் ஒரு வாக்கும் பேசாமல் அவளோ அவனையே ஏக்கத்தோடு பார்த்து கொண்டே உறங்கி போனாள்... காலை எழும் போது அவனை காணவில்லை...

மதுவோ எப்போதும் போல் எழுந்து குளித்து முடித்து தலையை உலர்த்தி கொண்டு இருக்கும் போது விக்ரம் வந்தான்...

அவனை கண்டும் காணாமல் மது மனதுக்குள் ஏதாவது பைலை மறந்து வைச்சு இருப்பாரு என்று அவனை கண்டு கொள்ளாமல் இருக்க அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து பின்னால் இருந்து அவளை அணைத்தவன் அவளின் முடியை வாசம் பிடித்து கொண்டே அவளுக்கு குறுகுறுப்பு செய்ய அவளோ, " போங்க மாமா" ...என்று சலித்து கொண்டாள்...

விக்ரமோ , "எங்கே டி போக சொல்ற...நீ இல்லாமல் நான் எங்கே போறது.
.உன்னை கூட்டிட்டு போகலாம் னு தான் இருக்கேன் ஆனா நீ தான் வர மாட்டேங்குற "...என்று அவன் கூறினான்..

மதுவோ அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் தயார் ஆகி அவன் கண் முன் வந்து நின்றாள்...

என் கண்கள் உனை தேடும்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top