காதல் 47
அத்தியாயம் : 47
காதலது கண்ணில் கண்டேன்
ஒரு அழகிய கூடல் முடிந்து உறக்கம் தொலைத்து விடியும் வேளையில் கண் அயர்ந்த விக்ரம் மற்றும் மது நல்ல ஒரு உறக்கத்தில் ஆழ்ந்தனர்...முதலில் கண் விழித்து பார்த்த மது , உறக்கத்தில் தன்னை விட்டு நீங்கி படுத்து இருக்கும் விக்ரம் அருகில் சென்று அவன் மார்பில் தலை வைத்து படுக்க அவன் கண் திறவாமலே அவன் கைகள் அவளை அணைத்தது...அவளோ அவன் மார்பில் கோலம் போட்டு கொண்டு இருக்க அவனோ அந்த சுகத்தில் அடுத்த கட்ட கூடலுக்கு அச்சாரம் இட்டான்..அவளும் அவனின் தேவையை உணர்ந்து அவனோடு இயன்றினாள்...
நாட்கள் மெல்ல நகர காதலின் அடுத்த கட்டத்திற்கு சென்ற அவர்கள் வாழ்க்கையிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றனர்...காதலின் மொழி அறிந்த இருவரும் கூடலின் மொழியும் அறிய தொடங்கினர்..ஆம் இதோடு அவர்கள் சேர்ந்து வாழ தொடங்கி இன்றோடு இரு வாரங்கள் கழிந்து விட்டன....
என்ன தான் விக்ரம் அவள் மேல் காதல் கொண்டாலும் பல நேரங்களில் அவள் அவனிடம் திட்டு தான் வாங்குவாள்... அதும் செல்ல திட்டு...விக்ரம் காதலை சொல்லி விட்டான் என்பதற்காக எந்நேரமும் அவள் பின்னால் சுற்றி வழிந்து கொண்டு இருக்க மாட்டான்...அவன் எப்போதும் எப்படி இருப்பானோ அப்படி தான் இருப்பான்...மதுவும் அவனிடம் எப்படி இருப்பாளோ அப்படி தான் இருப்பாள்....மதுவுக்கும் அது தான் விருப்பம் ....அவளுக்கு அவனை வெறுப்பேற்றி அதில் அவள் இன்பம் காணுவாள்... அவனோ அவளின் குறும்புத்தனம் அறிந்தாலும் அவள் எல்லை மீறும் சமயங்களில் அவனிடம் திட்டும் கிடைக்கும்...
ஒரு நாள் இதுபோல வாசுதேவனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று அவரின் வைத்த செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறேன் என்று செடியின் மீதும் அவள் மீதும் அங்கே சும்மா நின்று கொண்டு இருந்த வாசுதேவன் மீது அடித்து விட அவரோ உன்னோடு விளையாட நான் இல்லை என்பது போல அவர் ஓடி விட்டார்...அப்போது தான் தயார் ஆகி வந்த விக்ரம் மீதும் தண்ணீர் அடித்து விட்டாள்...
அதும் விக்ரம் கடந்த இரு வாரங்களாக அவளிடம் மென்மையாகவே இருக்க , மதுவோ ஏதோ ஒரு சந்தோஷத்தில் அவன் மீதும் அடித்து விட்டாள்... வெளியே செல்ல தொடங்கிய அவனின் சட்டையை நனைத்ததால் அவனின் மென்மை மாறி கடுமையை தத்து எடுக்க அவளோ அவனை கண்டுகொள்ளாமல் அப்போதும் விளையாடி கொண்டு இருந்தாள்...
நேரே அவள் அருகில் வந்தவன் அவள் கையில் இருக்கும் பைப்பை பிடுங்கி எறிந்து அவளை ஒரு பார்வை பார்க்க அவளுக்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் வெளியே அதை காட்டாமல் அமைதியாக இருந்தாள்...அவள் நின்று கொண்டு இருந்த இடம் மண்ணும் அழுக்கும் எல்லாம் நிறைந்து அந்த இடத்தையே அலங்கோலம் ஆக்கி இருந்தது...அவனோ அந்த இடத்தையும் முழுதாக ஒரு பார்வை இட்டான்...
அவனோ, " நான் வரும் போது இந்த இடம் கிளீன் ஆஹ் இருக்கணும் "..என்று அவள் கண்களை பார்த்து கடுமையோடு கூற சரி என்று தலை ஆட்டினாள் வேகமாக அவன் சட்டையும் அவிழ்த்து அவள் கையில் கொடுத்து விட்டு, ' இதையும் வாஷ் பண்ணு "...என்று போய் விட்டான்...
அவளோ அப்பாடா தப்பிச்சேன் என்று நினைத்து ஓடி விட்டாள்..அதன் பின் அந்த இடத்தை அவள் சுத்தம் செய்து முடிப்பதற்குள் மதியம் ஆகி விட்டது...வாசுதேவனோ கோல்ட்டிடம் நடந்த விஷயத்தை கூற அவரோ , "நல்லா செய்யட்டும் கழுதை சும்மா தின்னுட்டு தானே கிடக்குறா "...என்று அன்று அவள் கூறிய டயலாக்கை இன்று அவர் அடிக்க முதலிலே இடுப்பு வழியில் அவள் செய்து கொண்டு இருக்க அதிலும் விக்ரமின் கடுமையான முகம் வேறு அவளுக்கு கடுப்பை கொடுக்க எல்லாம் சேர்ந்து மது கோல்ட் யிடம் காய்ந்து விழுந்தாள்... அவரோ சிரித்து கொண்டு இருந்தார் அவரின் கண்கள் மட்டும் பனித்தன...
விக்ரம் அவள் மீது சில சமயம் கோபம் கொண்டாலும் அதே சமயம் அவள் மேல் அவனுக்கு இருக்கும் அளவு கடந்த அன்பை உணர்த்தி கொண்டே இருப்பான்...எங்கே சென்றாலும் அவளுக்கு வேண்டி ஏதாவது ஒன்று வாங்கி வருவான்...அவளும் அதை மகிழ்ச்சியோடு வாங்குவதை பார்க்கும் போது வாசுதேவன் மகிழ்ந்து தான் போவார்...அவன் மனது அவளின் தேவையை நிறைவேற்றி கொடுக்கவே தான் உயிர் பிறந்து இந்த பூமியில் அவதரித்தது போல அவன் அவளின் தேவையை நிறைவேற்றுவான்...
தினமும் இரவு ஊடல் கழிந்தால் அவளின் புலம்பலை கேக்க வேண்டும் விக்ரம் ஆம் அவன் இன்று ஒரு ஆசையை கூறுவாள் நாளை வேறு ஒரு ஆசையை கூறுவாள்...அதை எல்லாம் அவன் பொறுமையாக கேக்க வேண்டும்... இல்லையேல் உறங்கும் அவனை எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு , "சார்".. என்று அழைப்பாள்... அவனுக்கு அவளும் அவனும் கூடி இருக்கும் சமயம் அவளின் இந்த விளி பிடிக்காதே அப்போது அவனின் முறைப்பை பார்க்கவே அவள் அப்படி செய்வாள்...
அவளோ சொல்லவே வேண்டாம் எல்லா பெண்களும் உரிமை உள்ள இடத்தில் தான் அவர்களின் குறும்பை காட்டுவர்...அதுபோல மது மட்டும் என்ன விதிவிலக்கா...அவன் என்ன தான் திட்டினாலும் அவள் கண்டு கொள்வதில்லை...
சதா ஏது நேரமும் விக்ரமுக்கு எந்த டிசைன் இல் தொல்லை தரலாம் என அவள் அவன் பின்னாலே சுற்றி கொண்டு இருப்பாள்...அதிலும் அவன் வாயால் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியதை கேட்டதும் அவள் வேலையை சொல்லி மாளாது...காலை வேகமாக எழுபவனை விடாமல் கட்டி பிடித்து கொண்டு உறங்குவாள் அவனோ , "விடு டி"... என்றாலும், " கொஞ்சம் நேரம் மாமா"... அந்த மாமா விளி கேட்டால் போதும் அவன் அப்படியே சொக்கி தான் போவான்...
அவனுக்கு வேலைகள் நிறைய இருந்தது அவனுடைய கம்பெனி சிறிதாக ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் தொடக்க விழா இவளின் கல்லூரி தொடங்கும் முன் நடத்த திட்டம் இட்டு இருந்தான் விக்ரம்....ஆனால் இவள் விட்டால் தானே...
அதனால் நொந்து போன விக்ரம் அவளுடைய இந்த விடுமுறையை ஏதாவது பயன் உள்ளது படி என்று விக்ரம் கூறி கொண்டு இருக்க மதுவோ மனதுக்குள் இதுக்கு தான் ரொம்ப படிச்சவன கல்யாணம் பண்ண கூடாது னு சொல்றது எப்போ பாரு படி படி னு சொல்றது... காலேஜ் ல இருந்தாலும் படி னு சொல்றது இல்லைனாலும் படி னு சொல்றது என்று புலம்பி கொண்டு செல்ல," என்ன டி புலம்புற "..என்று கேட்டான் விக்ரம்
"ஒன்னும் இல்லையே ஒன்னுமே இல்லையே "...என்று அவள் கையை விரித்து கொண்டு வலிய ஒரு சிரிப்பை சிரித்து கொண்டே கூற விக்ரம் அவளின் முகத்தையும் அதில் நிறைந்து இருந்து சிறு துளி கோபத்தையும் குறும்பு தனத்தையும் கண்டு சிரித்தவன் , "இங்கே வா "...என்று அவளை அழைத்தான்...அருகே வந்து அமர்ந்தவளின் தோளில் கை இட்டு , "என்ன டி வேணும் "..என்று மென்மையாக கேக்க அவளோ அவனின் குரலில் கரைந்து , "வெளியே போலாமா மாமா"... என்று கேட்க அவனோ "சரி "...என்று கூறினான்....அவளுக்கும் போர் அடிக்கிறது அது தான் அவள் குறும்பு செய்கிறாள் என்பதை அவன் உணர்ந்ததால் தான் அவன் அவளை ஏதேனும் ஒரு வேலையை செய்ய சொல்கிறான் ஆனால் அவளோ முழு நேரமும் அவனை தொல்லை செய்வதால் தான் சில சமயம் வாங்கி கட்டி கொள்கிறாள்...
அதன் படி பைக்கில் இருவரும் ஏறி அமர இவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய பறந்தனர்...அவளோ ,"ஸ்பீட்டா போங்க, ஸ்பீடா போங்க "...என்று கூற அவனும் பறந்தான்...பைக் பறந்து பறந்து நெடுஞ்சாலையில் சென்றது....அவளுக்கு அது புது வித உணர்வை அளித்தது...அவளின் மகிழ்ச்சியை வார்த்தையால் வடிக்க இயலாது..அவளின் மகிழ்ச்சியை உணர்ந்த அவனும் அவளின் விருப்பத்தை நிறைவேற்றினான்...
அவள் கனவுகள் சிறிது அதில் அவள் குடும்பமும் விக்ரமும் முதலிடம் ..அது கழிந்து அவளுக்கு நீண்ட பயணம், மழை, மலை முகில், இயற்கை ,அவளின் நடனம் , ஒரு நாள் இரவு படகில் பயணம், அவள் பயணிக்கும் பஸ், அவளின் வகுப்பறை, அவள் வீட்டு மொட்டை மாடி, அவளின் நாய்க்குட்டி, அவள் வீட்டு டிவி ,குறும்பு என அவளின் வட்டம் சிறிது அதை விட்டு மதுவுக்கு ஒன்றும் தெரியாது...இதே அவளுக்கு வாழ்க்கையில் விக்ரமை போல இந்த அளவுக்கு முன்னேற வேண்டும் என்றோ இல்லை என்றால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எல்லாம் அவளுக்கு கிடையாது...அவள் வட்டத்தில் அவளுக்கு பிடித்த ஆட்களோடு அவள் இருப்பதே அவளுக்கு பிடித்தம் அதை அவள் செய்கிறாள்...
அவளின் தேவையை ஒவ்வொன்றாய் அவனிடம் அவள் அவர்களுக்கே உண்டான சமயத்தில் கூறுவாள் அதை அவன் நிறைவேற்றி வைப்பான் அதும் அவள் எதிர்பார்க்காத சமயத்தில்.....விக்ரம் ஒரு சாதாரண மனிதன் அவனால் மலையை பிளக்கவோ, அந்த வானத்தை தொட்டு காட்டவோ முடியாது அவனால் செய்ய முடிந்த விஷயத்தை கூறினால் அவன் செய்வான்...
நேற்று இரவு அவள் உளறி கொட்டிய விஷயம் தான் இந்த நெடு தூர பயணம்...காலையிலே அவன் முடிவு செய்து விட்டான் அவளை வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்று...ஆனால் அவர்கள் இருவரும் எதிர் பார்க்காத போது அவளின் இரண்டாவது ஆசையான மழையில் ஒரு பயணம்
தீடிரென இவர்கள் வண்டியில் போக மழையும் இருட்டும் போட்டி போட இவள் நடுங்கி கொண்டே , "சீக்கிரம் போங்க ஸ்பீட் "....என அவளால் கூற முடிய வில்லை... வாய் தந்தி அடிக்க தொடங்கியது...
அவளோ அவனோடு ஒண்டி அவன் முதுகுகோடு ஒன்றி அவனை இறுக்கமாக அணைத்து கட்டி இருக்க அவளின் நடுக்கமும் அவனுக்கு அவள் நிலையை உணர்த்த விக்ரம் அவளிடம் , "வீட்டுக்கு போலாமா என்று கேட்க வேண்டாம் "....என்று கூறினாள்...
இவர்கள் இருவரை நனைக்க வைக்க வந்த தன் பேய் மாரியை வேறு எங்கோ கொட்டி கொள்ளலாம் இவர்கள் இருவருக்கு தேவை இது தானே என்பது போல அவர்கள் இருவரை நனைத்து விட்டு செல்ல மது அவனின் இடுப்பை கட்டி பிடித்தபடி அமர்ந்து இருந்தாள்...
இருவரின் நனைந்த இரு உடல்களும் உரசிக்கொள்ள பற்றி எரிய தொடங்கிய அவர்களின் ஹார்மோன்கள் கிளர்த்து எழ அவனோ முடியாமல் வண்டியை நிறுத்தினான்...தீடிரென வண்டி நிறுத்த அவன் மீதே மோதினாள் மது...அவளின் வனப்பு அவன் மீது மோத அவனோ வேகமாக இறங்கி விட்டான்...அவளும் இறங்கி மார்பில் கைகளை கட்டி கொண்டே நடுங்கி கொண்டு நிற்க...யாரும் இல்லா தனிமை இருவருக்கும் சாதகமாக இருக்க அவளை வேகமாக தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான் விக்ரம்...
அவளின் நடுக்கத்துக்கு அவனின் அணைப்பு தேவை என்பதால் அவளை , "வா".. என அழைக்க அவளும் வேகமாக அவனுடன் ஒன்றி போக அவளை இழுத்து அணைத்தான்... யாரும் இல்லா ஒரு இடத்தில் ஒரு பைக்கும் அவளும் அவனும் மட்டுமே இருக்க சிலு சிலு காற்றும் அவர்கள் இருவரின் மேனியை தழுவ கட்டி அணைத்து நிற்கும் இருவரின் உடல்களும் அவர்களின் தேவையை உணர்த்த அதன் அச்சாரமாய் விக்ரம் அவளின் நடுக்கத்தை குறைக்கும் பொருட்டும் நடுங்கும் அவளின் செவ்விதழை அவன் இதழோடு இணைத்து விட்டான்....அந்த அழகிய சமயத்தில் அது தேவையாக இருந்தது இருவருக்கும்...
ஆழ்ந்த இதழ் ஒற்றல் இருவரும் அதில் மூழ்கி இருக்க அவர்களின் மோன நிலையை கலைக்க வேண்டும் என்றே தூரத்தில் ஒரு வண்டியின் ஹார்னர் ஒலி எழுப்பி கொண்டே இருக்க இருவரும் அவர்கள் இருவரின் நிலை அறிந்தும் சூழ்நிலை அறிந்தும் பிரிந்தனர்..
விக்ரமும் அதன் பின் நேரே வண்டியை வீட்டிற்கு விட்டான்...இனியும் அவன் தொடர வேண்டியது உள்ளதே...அவளின் காதலால் அவனை சிறிது சிறிதாக மாற்றி கொண்டு இருக்கிறாள் மதுரயாழினி ...ஆம் அவனுக்கு எழும் கட்டுகடங்கா கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு இருக்கிறாள் மது அவன் அறியாமல்...அவனை எப்போதும் இலகுவாக இருக்க முயற்சித்து வருகிறாள்...அதன் படி அவர்கள் இது நாள் வரை காத்து கொண்டு இருந்த அவனின் அலுவலகம் அடுத்த வாரத்தில் தொடங்க இருக்கிறான்...அதற்காக மும்முரமாக அவன் பணியாற்றி வருகிறான் விக்ரம் அவளும் அவனின் ஆர்வத்தை கண்டு அவனுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறாள்...
அவர்களின் வாழ்க்கை இளமையும் குறும்பும் ஒரு சேர பயணித்து கொண்டு இருந்தது...
என் கண்கள் உனை தேடும்....
