காதல் 46
அத்தியாயம் : 46
அவளோ இதை எதிர்பார்க்கவில்லை... இன்றே அவன் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவான் என்று அவள் நினைக்கவில்லை.... அதிலும் முதல் முறையாக அவன் காதலை வெளிப்படுத்த அதை கேட்ட அவள் செவியும் அவள் முகமும் வெக்கத்தில் சிவந்தது...கண்கள் மட்டும் சந்தோஷத்தில் பனித்தது...
சந்தோஷத்தில் வரும் கண்ணீரோடு நிற்பவளை பார்த்து தன் கைகளால் அவள் முகத்தை மென்மையாக வருடி துடைத்தான்....
அவளோ வார்த்தைகள் தடுமாறி கொண்டே இருக்க அவனோ அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி தூக்கினான்...அவளோ , "சார் விடுங்க சார்"... என கூச்சத்தில் நெளிந்து கொண்டே கூற அவனோ டக்கென்று அவளை இறக்கி விட்டான்...
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை... நான் கூச்சத்தில் தான் இறக்கி விட சொன்னேன் இவரு என்ன டக்குன்னு இறக்கி விட்டுட்டாரு... என் உள்மனம் கேள்வி கேட்க நீ இறக்கி விடு ..நீ சொன்ன அது தான் ...அவரு இறக்கி விட்டுட்டாரு..."ஏன் மது உன் வாயை வெச்சிட்டு சும்மா இருக்க வேண்டியது தானே "..என்று புலம்பி கொண்டே வெளியே சென்றாள்... அவனோ அவளை கண்டு சிரித்து கொண்டே சென்றான்...
மதியம் தூங்க சென்றவர்கள் இன்னும் வரவில்லையே என அவர்கள் அறையையும் டிவி யையும் பார்த்து கொண்டு இருந்த வாசுதேவன் அருகில் வந்து அமர்ந்தாள் மது...
"என்ன அங்கிள் எப்போ பாரு நியூஸ் சேனலை வெச்சு பார்த்துட்டு இருக்கீங்க...சீரியல் எல்லாம் பார்க்க மாட்டீங்களா"... என தொடங்கும் போதே விக்ரமும் வெளியே வந்தான்...
பின் தன் தந்தையின் மறுபுறம் வந்து அமர்ந்து அவரின் கையை பிடித்து கொண்டே ஒரு சிறு புன்னகையோடு அமர்ந்து இருந்தான் விக்ரம்...அவருக்கு ஏதோ மகன் சங்கடத்தில் இருந்தான் இப்போது அவன் சரி ஆகிவிட்டான் என புரிந்ததும் மேற்கொண்டு கேள்வி கேக்காமல் அவரும் அவனுடைய தொழில் தொடங்குவதை பற்றி விசாரித்தார்...
அவனும் தான் என்ன எல்லாம் செய்ய போகிறேன் என்பதை தெளிவாக அவரிடம் கூறவும் அவருக்கும் விருப்பமே தன் மகன் எப்போதும் எந்த விஷயத்தில் இறங்கினாலும் அதில் முழு மூச்சோடு இறங்குவான் என்பதை அறிந்த அவரும் இந்த துறையிலும் அவன் வெற்றி பெறுவான் என மகனை பற்றி பெருமிதமாக நினைத்தார்....
அடுத்து சிறிது வெங்கி இங்கே வந்து பேசி கொண்டு இருக்க அப்படியே எல்லோரும் விக்ரமின் வீட்டிற்கு வந்தனர் அப்போது மது வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல் இப்போதும் அவள் தந்தையிடம் மரியாதை கலந்த பயமே இருக்க அவர் முன்னே தன் வாலை சுருட்டி வைத்து கொண்டு பெண்கள் அனைவரும் கூடி இருக்கும் சமயம் கோல்ட்டிடம் , "ஏன் கோல்ட் சும்மா வந்து இருக்க.. தின்னுட்டு சும்மா தானே இருக்க பேத்தி வீட்டுக்கு வரும் போது ஏதாவது கொண்டு வரனும் னு தெரியாது சும்மா கையை ஆட்டிட்டே வந்துடுவியா "...என்று கேட்க
கோல்டோ இதற்கு எல்லாம் அசுருவாறா "நான் வெறும் கையை ஆட்டிட்டு தான் வந்தே ...நீ வேணும் னா எங்களுக்கு இப்போ பொங்கி போடேன் "...இரவு உணவை எங்களுக்கு தயார் செய் என தனது மைக் சௌண்டில் கூற மதுவோ சும்மா இருந்து இருக்கலாம் இப்போ பாரு இந்த கிழவி எல்லார் முன்னாடியும் கத்தி என் மானத்தை வாங்குது என்று அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்...
எல்லோரும் பிரிந்து வாசுதேவனும் உறங்க சென்று விட்டார்...இவளும் உறங்க செல்வதற்கு முன் அடுக்களைக்குள் தண்ணீர் குடிக்க செல்லலாம் என நினைத்து அவள் சென்றாள்... அவள் பின்னால் பூனை போல வந்த விக்ரம் அவள் பின்னால் நெருங்கி நின்றான்...
அவன் வந்து தன் பின்னால் நெருங்கி நிற்கவும் குடிக்க வந்த தண்ணீர் கூட முழுமையாக குடிக்காமல் அவளின் ஆடையில் கொட்ட அவனோ அவளின் பதட்டத்தை உணர்ந்து அவளின் முடியை அளந்து கொண்டே அவளின் முதுகில் ஒரு ஒற்றை முத்தத்தை தர அவனின் அருகாமையில் அவள் கரைந்து கொண்டு இருக்க அவளின் ஆடை வேறு நனைந்து உடலோடு ஒட்டி இருக்க அதில் வேறு இவன் அவளின் முதுகில் அவன் முத்தத்தை பதிக்க அவள் கரைந்து உருகி அவனிடம் இருந்து விலக பார்க்க அவனோ விடாமல் பின்னால் இருந்து கொண்டே முன்புறம் அவளை அணைத்தான்....அவளால் விடுபட முடியவில்லை... அவனின் கை அவளின் நனைந்த ஆடைக்குள் செல்ல , அவனின் மூச்சு காற்று வேறு அவனின் செவியை தீண்டி கொண்டே , "இன்னிக்கு பால் எடுக்கலையா".. என்று கேட்க
அவளோ இவன் என்ன சொல்கிறான் என ஒரு நொடி புரியவில்லை மீண்டும் அவன் அவளிடம் , "இன்னிக்கு பால் எடுக்கலையா "...என்று கேட்க அவளுக்கு அப்போது தான் புரிந்தது அவன் என்ன கூற வருகிறான் என்று ஆம் அன்றைய தினத்தை முன்னிட்டு அவன் கேட்டான்...அவனின் பேச்சை கேட்டு அவளோ வெக்கத்தில் சிவந்தாள்...
அதிலும் அவனின் கை அவளின் ஆடைக்குள் சும்மா இருக்காமல் அவளின் வயிற்றை வருடி கொண்டே இருக்க அவளால் உருகி வழியாமல் இருக்க முடியவில்லை...பதில் சொன்னால் தான் விடுவேன் என்பது போல அவள் வருடி கொண்டே இருந்தான்...
அவளோ தட்டு தடுமாறி உருகி கொண்டே, "அது வந்து என்னை விடுங்க சார் ப்ளீஸ்"... என்க அவள் கூறியதும் சடுதியில் அவன் விட்டுவிட்டான்...
மேற்கொண்டு அவளிடம் நிற்காமல் அவன் அறைக்கு சென்று விட்டான்...அவளோ தான் ஏதேனும் தவறாக கூறியதால் தானோ விக்ரம் சென்று விட்டான்...தான் ஒன்றும் கூறவில்லை யே என உருகி வழிந்த அவளின் உடல் நொடி பொழுதில் அவனின் விலகளில் என்னவென்று புரியாமல் டென்ஷனை தத்து எடுத்து கொண்டது...
அப்போதும் அவன் கேட்ட பாலை எடுத்துட்டு போலாமா என அவளின் மனது கேள்வி கேட்க பால் ஆஹ் அங்கே எதுக்கு இப்படி பொசுக்குன்னு இப்படி என்னை விட்டுட்டு போனார்னு தெரியாம இருக்கேன் நீ வேற என்று தன் மனசாட்சியின் ஆசைக்கு ஒரு குட்டு கொடுத்து இவருக்கு எப்போவும் என் மேல கோவப்பட தான் தெரியும் எப்போவாச்சும் பாசமா பேசுறா ரா இவரை என்ன செய்கிறேன் பார் என்று அவனை ஒரு வழி செய்யும் முடிவோடு அவர்கள் அறையை அடைந்து கதவை அடைத்தாள்..
கடுகடு முகத்தோடு வந்த மதுவின் கண்களுக்கு விக்ரம் அகப்படவில்லை... குளியல் அறையில் ஓசை கேட்டது...விக்ரம் அறையில் வேறு ac இட்டு வைத்து இருக்க அந்த ac யின் குளுமை மெல்ல அவளின் புசு புசு கோபத்தை சிறிது மட்டுப்படுத்தியது...நனைந்த உடையை மாற்றினாள்...
பின் மெல்ல படுக்கையில் படுத்து கொண்டாள்...வெளியே வந்த விக்ரம் பீம் பாய் போல வந்து அவளை பார்த்து கொண்டே உடையை எல்லாம் மாற்ற அவனை கண்டு கொண்டு இருந்த அவளுக்கு அவனின் பொறுமை கோபத்தை கொடுக்க தலை வாரி கொண்டு இருந்தவனை பார்த்து மனதுக்குள் தூங்க போறதுக்கு எதுக்கு தலை வாரனும் என்று நினைத்து இவரை இனியும் விட மாட்டேன் என கருதி வேகமாக எழுந்தவள் அவனின் பின்னால் வந்து கையை பிசைந்து கொண்டு இருந்தாள்...
அவனோ அவளை கண்டு கொண்டே தான் தலையை வாரி கொண்டு இருக்க ..."உங்க மனசில என்ன தான் நெனைச்சுட்டு இருக்கீங்க".. என்று கேட்க
அவனோ அவளை கண்ணாடியில் ஊடே கண்டு , "என்னென்னவோ நெனைச்சுட்டு இருக்கேன் ...இப்போ உன்னை தான் நெனைச்சுட்டு இருக்கேன் "...என்று கூறினான்..
அவனின் பதில் அவளுக்கு சிறிது ஆட்டத்தை கொடுத்தாலும் , சிறிதும் கூட அவளின் கோபத்தை மட்டுப்படுத்தியாலும் அவளோ விடாமல் முகத்தை சுருக்கி கொண்டு , "பார்த்தா அப்படி தெரில"... என்றாள்...
அவனோ திரும்பி நின்று பார்த்தா, " எப்படி தெரியுது".. என்று கேட்க
அவள் என்னவென்று சொல்லுவாள் என்னை அணைத்து கொண்டு இருந்துவிட்டு தீடிரென ஏன் என்னை விட்டு விலகினாய் என்றா கேள்வி கேட்க முடியும்..
அவனை பார்த்து முறைத்து கொண்டே இருக்க அவளின் கோபமும் அவளின் முட்டை கண்ணும் அவனின் தாபத்திற்கு தூபம் போட
மெல்ல அவன் அருகில் வர அவள் ஒரு எட்டு பின்னோக்கி சென்றாள்...இத்தனை நேரம் முறைத்து கொண்டு இருந்தவள் இப்போது பின்னோக்கி நடக்கவும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது...அவனின் இதழ்கள் விரிவதை பார்த்து இவளுக்கு மேலும் கோபம் மூண்டது...
அவனோ அவளை கோபம் கொள்ள கூட விடாமல் முன்னேறி வர அடுத்த அடி வைத்தால் கட்டிலில் விழ வேண்டியது தான் என்று இருக்கும் வேளையில் தான் அவனின் இந்த சிரிப்பு... அவளின் கடுப்பை கிளப்ப , "சிரிக்காதீங்க சா..."...என்று கூறி முடிக்கவில்லை இரு நொடிகளில் என்ன நடந்தது என்று மதுவுக்கு தெரியவில்லை...
மது கீழே படுத்து இருக்க விக்ரம் அவளின் மேலே படுத்து இருந்தான் ஒரு கையால் அவளின் இடையையும் மறு கையால் அவளின் வாயையும் பொத்தி இருந்தான்...
அவளோ திமிறி கொண்டு இருக்க ..ஒரு கையால் பொத்தி கொண்டே அவளின் இடையை வருடிய படி , "என்ன டி எப்போ பாரு சார் சார் னு சொல்லிட்டு இருக்க "...என்று கேட்க
அவளோ , "ஹ்ம்ம் ஹ்ம்ம் "...என என்னவோ கூற முயற்சி செய்து கொண்டு இருந்தாள்...அவனோ மெல்ல அவனின் ஒரு கையை மாற்ற அவளோ, " வேற என்ன சொல்றது "...என்று கடுப்போடு கேட்டாள்...ஆம் அவன் இப்படி அருகே வருவான் தீடிரென விலகி விடுவான் என்ற கோபம் அவளுக்கு..
அவள் விக்ரமை கண்டது முதல் சார் என்று தான் அழைக்கிறாள் இப்போது வரை...அவனோ," ஏன் டி ஆசையா கிட்ட வந்தா அப்போ தான் சார் னு சொல்ற அதை கேட்டா உன் பக்கத்துல வர தோணுமா "...என்று எரிச்சலோடு கூற அவனின் மனம் தெளிவாக மதுக்கு புரிந்தது...
ஆம் விக்ரமுக்கு அது தான் பிரச்சினை அவன் அவள் அருகில் வர துடிக்கும் சமயத்தில் இவள் சார் என்று கூறும் போது என்னமோ ஒரு உறுத்தல் இவள் அவனின் மாணவியும், இவள் அவளின் ஆசிரியரும் ஆனதால் வந்த உறுத்தல் போல...
அதனால் தான் அவன் அவளை நெருங்கும் சமயம் இவள் வேறு சார் என்கையில் அவன் விலகி விடுகிறான்... மதுவோ அவனின் மனதை புரிந்து கொண்டு என்ன கூறலாம் என ஆலோசித்து தன் தந்தையை தன் தாய் கூறுவது நினைவு வர உடனே, " மாமா"... என்க அவனுக்கு எங்கோ வானத்தில் பறப்பது போல இருந்தது...
ஆம் என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர் ஆண்களுக்கு பெண்களின் மாமா, அத்தான் விளி ஒரு வித கிக் உணர்வை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை அது நிதர்சனம்...
அவள் மாமா என்று அழைத்ததும் அவளின் செவ்விதழ் அவனின் உள்ளே...ஆம் அந்த ஒற்றை விளி அவனை மாற்றி விட்டது... இனியும் எனக்கு பொறுமை இல்லை பெண்ணே என்பது போல அவளின் இதழோடு இதழ் பொறுத்தினான்...
அன்று அவளின் உதடு பட்டதில் துடைத்த விக்ரம் இன்று அவளின் இதழை விடாமல் முத்து எடுத்து கொண்டு இருந்தான்...ஆம் ஆழ்ந்த இதழ் ஒற்றல் அவளின் உயிர் வரை தீண்டியது...
அவனின் கை அவளின் ஆடைக்குள் சென்று அவளின் வனப்புகளை தீண்ட மதுவோ உருகி வழிய தொடங்கி விட்டாள்... ஆம் அவனின் தீண்டல் அவளை உருக்கி அவனோடு கலக்க துடித்தது... அவனும் அவளை தன்னவள் ஆக்கும் முயற்சியில் இறங்கி விட்டான்...அவனும் அவனின் இத்தனை நாள் காத்து வந்த பிரம்மச்சரியத்தை விட்டு சம்சாரியாக முடிவு செய்து விட்டான்..
தன்னவளின் மேனி எனும் அழகை முழுமையாக காண ஆவல் எழ சடுதியில் அதை செய்து விட்டான்...அவளும் கண்களை இறுக மூடி கொண்டாள்.....இப்போது அவர்கள் இருவரும் உடலோடு உடல் உரச காமத்தீ கொழுந்து விட்டு எரிய பற்றி எரிய தொடங்கிய மோகத்தீயில் சுகமாக குளிர் காய தொடங்கினர் மதுவும் விக்ரமும்...
ஆரம்பத்தில் துடித்தவள் பின் சுகித்து பின் பெண்மைக்குரிய பயம் ஆட்கொள்ள அவளின் பதட்டத்தையும் அவளின் பயத்தையும் போக்கி அவளை பூவை போல மென்மையாக கையாண்டான் விக்ரம்...அவளும் அவனோடு ஒன்றி போனாள்...
ஒரு வழியாக பற்றி எறிந்த மோகத்தீ அணைந்து இருவரும் அணைத்து கொண்டு படுத்து இருந்தனர்...இத்தனை நாள் காத்து கொண்டு இருந்த அவர்களின் வாழ்வின் அடுத்த கட்டம் இனிமையாக தொடங்கியது... இந்த நாள் அவர்களின் வாழ்வின் பலவிதமான நிகழ்வை பிரதிபலித்தாலும் இந்த நாளின் முடிவு அவர்களின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைத்தது...
என் கண்கள் உனை தேடும்...
