காதல் 45

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

அத்தியாயம் : 45

காதலது கண்ணில் கண்டேன்

      ஒரு ஆண் அழுகிறான் என்றால் அவனின் மனம் அவனுக்கு விருப்பம் உள்ளவர்கள் இடத்தில் மட்டுமே தன் கண்ணீரை வெளிப்படுத்தும்...அது போல விக்ரம் தன் மனதில் உள்ளதை எல்லாம் அவளிடத்தில் கொட்டி விட்டான்...கொட்டியதும் அவனின் பாரம் நீங்க உறங்கி விட்டான்...

அவளுக்கும் இது எல்லாம் முன்னமே தெரியும் என்பதால் அவளுக்கு பாதிப்பை தரவில்லை என்றாலும் அவன் அவளுடைய விக்ரம் வேதனை கொள்வதை அவளால் சகித்து கொள்ள முடியவில்லை...அதிலும் அவன் வாயால் அவன் கூறிய வேதனையை அவளால் சகித்து கொள்ள முடியவில்லை...

அவளுக்குள் அதிலும் ஒரு மகிழ்ச்சி...அவன் மனதில் தன்னை வைத்ததால் தானே என்னிடம் எல்லாத்தையும் கூறினான் என்று...இப்பொழுதும் மதுவுக்கு சந்தேகமே இவரை பார்த்ததும் தனக்கு ஏன் பிடித்தது அவர் என்னை விரட்டியும் நான் அவர் பின்னால் சுற்றி சுற்றி வந்தனே எனக்காக பிறந்ததனால் தான் கடவுள் உங்களை என்னிடமே சேர்த்து விட்டார் ...யார் இல்லை என்றாலும் நான் இருக்கிறேன் உங்களுக்கு என நினைத்து தன் மீது தலையை வைத்து படுத்து இருக்கும் அவனை கண்டு தன் கையை தூக்கி அவனின் தலை கோதிக்கொண்டே இருந்தவள் அவளுக்கும் உறக்கம் வர அவனின் தலையை மெல்ல மாற்றி கீழே படுக்க வைத்தாள்...அதன் பின் அவன் அருகில் படுத்து கொண்டாள்...

இந்த உண்மை எல்லாம் முன்பே தெரிந்த மதுவுக்கு விக்ரமை நினைத்து வருத்தமே வந்தது அல்லாமல் அவனை மற்றவர்கள் போல ஒதுக்க வேண்டும் என அவள் நினைக்க வில்லை...அவளுக்கு அவன் மேல் இரக்கமும் காதலுமே சுரந்தது...உனக்கு நான் இருக்கிறேன் என மடி சாய்த்து கொள்ள வேண்டும் என்றே தோன்றியது...அதன் படி அவனின் கடந்த காலத்தை எண்ணி கொண்டு இருக்காமல் அவனோடு வாழ்ந்து வந்தாள்... அதனால் அவன் கூறும் போது பெரிய பாதிப்பை அவளுக்கு கொடுக்க வில்லை... அவனின் வேதனை மட்டுமே அவளுக்கு வருத்தத்தை அளித்தது...அதை மாற்ற வேண்டும் என்று முடிவும் செய்து கொண்டாள்...

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் அப்படியே எப்போதும் அவனை கட்டி கொண்டாள் என தெரியாது...அவனுக்கு நான் இருக்கிறேன் என்பது போன்றதொரு ஒரு அணைப்பு அவளிடம் இருந்து இருக்க அவனும் என்னை முழுவதுமாக ஏற்று கொள் என்பது போல இருந்தது அவனுடைய அணைப்பும்....

இருவரும் அணைத்து கொண்டே உறங்கி போனர்....மாலை கழிந்து இரவு ஆகி கொண்டு இருந்தது...அந்த நிலவு கூட இவர்களை எழுப்ப மனம் வராமல் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது..அப்போது எழுந்த விக்ரம் தன்னை அணைத்து படுத்து இருக்கும் தன்னவளின் முகத்தை பார்த்தான்...

அந்த நிலவின் ஒளியில் அவள் முகம் பிரகாசமாக தெரிய தான் அவளை கஷ்டப்படித்தி விட்டோமா ...இவளும் தன்னை ஏதாவது தவறாக நினைத்து விடுவாளா என்ற தாழ்வு மனப்பான்மை அவனுள் எழ அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை...

மெல்ல அவளை விட்டு எழுந்தான்...அவளோ தன்னருகே அவன் இல்லை என்பதை உணர்ந்ததும் வேகமாக எழுந்தவள் , "என்ன சார் "..என்று பதட்டத்துடன் கேக்க

அவனோ, " உனக்கு என்னோட இருக்க கஷ்டமா இருந்தா நீ உன்னோட வீட்டுக்கு போய்டு "...என்று கூற

அவளுக்கு புரிந்து போனது அவன் தன்னை நினைத்து தான் கூறுகிறான் இவனை இப்படியே விட்டால் ஆகாது என்பதை உணர்ந்த மது கண்களில் குறும்பை தேக்கி அவன் கண்களை பார்த்து , "அங்கே போய் நான் என்ன பண்ண போறேன் "...என்று கேக்க

அவனோ , "இல்லை உன்கிட்ட என்னை பத்தி நான் முழுசா சொல்லிட்டேன் எல்லோரையும் மாதிரி உனக்கும் போகனும்னா"... என்று தயங்கி கொண்டே வேறு எங்கோ பார்த்து கூற

மெல்ல அவன் அருகே வந்த மது அவனை நெருங்கி நின்று , "உங்களை விட்டுட்டு போக நான் வேற யாரோ இல்லை நான் உங்க பொண்டாட்டி ...அதுனால இனி இதை பேசி என்னை துரத்தி விடலாம் னு நினைக்காதீங்க "...என்று கூற அவனோ அவளையே பார்த்து கொண்டு இருந்தான்...

அப்போதும் அவன் நிமிராமல் இருக்க அவன் அருகே நெருங்கி வந்து அவனின் தலையோ குனிந்த வாக்கில் நிற்க அவனின் அருகே நெருங்கி அவன் முகத்தை காண தானும் அவன் அளவிற்கு கீழே குனிந்து மெல்ல நிமிர்ந்து பார்க்க அவனும் அவளையே தான் பார்த்தான் சட்டென்று என்ன நினைத்தாளோ மது மெல்ல அவன் கன்னத்தில் தன் இதழ்களை பதித்து விட்டாள்...

அவனோ நிமிர்ந்து அவளை உறுத்து பார்க்க முயற்சி செய்ய அவளோ , "அப்படி பார்க்காதே நான் செத்து விடுவேன் உன்மேல் அவ்வளவு காதலை சுமந்து நிற்கிறேன் உனக்கு தெரியவில்லை யா...எவளோ ஒருத்தி சென்று விட்டாள் என்றும் எவளோ ஒருத்தி தாய் என கூற தகுதி கூட இல்லாத ஒருத்தி உன்னை ஒதுக்கி விட்டு சென்று விட்டாள் என்று அவர்கள் நினைவில் உன்னை ஏன் சுயம் எரித்து கொண்டு நிற்கிறாய்... உன் வாழ்வை ஏன் கெடுத்து கொண்டு நிற்கிறாய்  நான் உன் கண்களுக்கு தெரிய வில்லையா... நித்தம் நின் ஒரு சிறு கண் அசைவுக்காக காத்து இருக்கும் என்னை உன் கண்கள் காணவில்லையா"....என்பது போல கண்களில் காதலை தேக்கி அவனை பார்க்க அவனும் அந்நேரம் அவளின் காதலின் மொழி அறிந்து இருக்க அவனும் இமைக்காமல் பார்க்க பின் அவளே தொடர்ந்தாள்...

" உங்களை தான் எனக்கு பிடிக்கும் உங்களை மட்டும் தான் எனக்கு பிடிக்கும்...ஏன் உங்களை பிடிச்சு இருக்கு அப்படின்னு எனக்கு தெரில ..ஏன் நான் இதை எல்லாம் செய்யுறேன் னு தெரில...ஆனால் எப்போ நீங்க என் மனசில வந்தீங்க னு எனக்கு தெரில  ஆனால் நீங்க மட்டும் தான் எனக்கு வேணும் னு எனக்கு தோணுது.... நான் உங்களை எல்லாம் மறக்க சொல்லல என்னையும் நினைச்சு பாருங்க னு தான் சொல்றேன்"... என்று அவள் அவனின் கண்களை பார்த்து ஏக்கத்துடன் கூற அவன் கண்கள் தெளிவு ஏற்பட்டது...

உன் ஒற்றை விழி

பார்வையும்

உன் ஒற்றை

முத்தமும்

என்னை முழுமையாக

உன்னிடம்

சரணடைய வைக்குதடி

என் காதலே...

ஆம் என்னை வேண்டாம் என்று கூறுவர்களிடம் நான் ஏன் அவர்களை நினைத்து என் வாழ்வை கெடுத்து கொள்ள வேண்டும்...எனக்காக என்னவள் என்னை மட்டுமே நேசிக்க பிறந்தவளிடத்தில் என்னை முழுதாக ஒப்படைக்க போகிறேன்... என் காதலை அவளிடம் கூற போகிறேன் என அவள் கண்களை பார்த்தே மனதில் உரையாடி கொண்டு இருக்க தான் கூறியது எதற்கும் பதில் கூறாமல் தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்கும் விக்ரமிடம் என்ன சொல்ல இனி அவன் தான் எல்லாம் சொல்ல வேண்டும் என்பது போல அவள் நகர பார்க்க அவளால் நகர முடிய வில்லை...

ஆம் ஒரு அடி அவனை விட்டு நீங்கியவளை நகர விடாமல் கை பிடித்து இழுக்க அவன் மேலேயே விழுந்தான்...பின் மெல்ல அவளை தன்னோடு சேர்த்து கட்டி பிடித்து  , "எங்கே டி போற "...என்று கேட்டு தன்னோடு சேர்த்து சிறை செய்தான்...

தன்னை சிறை செய்து கொண்டே கேள்வி கேட்டவனை பார்த்து அவளுக்கு விலக தோன்ற வில்லை... ஆனால் அவனின் நெருக்கம் அவளை கொல்ல , "இருட்டிடுச்சு போகனும் "...என்றாள்...

"இருட்டினா எங்கே போகனும் "...என்று அவள் கேள்வியே திருப்பி படிக்க , "இல்லை போகனும் "...என்று மறுபடியும் தன் குரலை உள்ளே இழுத்த படியே கூற

அவனுக்கு அந்த அறையின் இருட்டும் திறக்க பட்ட  ஜன்னல் வழியே உள்ளே எட்டி பார்க்கும் அந்த மதிக்கு போட்டியாக தன்னவளின் எழில் அவனை வாட்ட இதற்கு மேலும் எனக்கு பொறுமை இல்லையடி என் கண்ணே என்பது போல அவளை தன்னோடு மேலும் இறுக்கி....அவள் முகத்தில் வழிந்தோடும் அவளது முடிக்கற்றையை ஒதுக்கி விட்டு அவள் காதில் குனிந்து முதல் முறையாக தன் காதலை வெளிப்படுத்தினான் விக்ரம்..."எங்கே டி போறே என் பொண்டாட்டி ..போறது தான் போறே... இதையும் கேட்டுட்டு போ"... என்று கூறி செவியோடு செவி முட்டி அவனது மூச்சு காற்று அவளின் செவி மடலை தீண்ட அவளின் செவியும் சிவப்பாக மாற அவனின் உதடுகள் உரச , "ஐ லவ் யூ"... என்று கூறினான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top