காதல் 44
அத்தியாயம் : 44
அஞ்சலிக்கும் அவரை பிடித்து போக இனி அடுத்த கட்ட இலக்கு அஞ்சலியின் குடும்பம் தான் ...அஞ்சலி அங்கே தான் பயம் தொடங்கியது எங்கே வேண்டாம் என்று கூறி விடுவார்களோ என்று... விக்ரம் ஒரு பிரின்ட்டிடம் கூறுவது போல அவனது காதலை அவன் தந்தையிடம் கூற அது போல தன்னால் கூற முடியுமோ என்ற பயம்...
விக்கிரமோ உனக்கு என்ன வேணும் அவர்களின் சம்மதம் தானே நான் இருக்கும் போது உனக்கு என்ன கவலை நான் பார்த்து கொள்கிறேன் என்று அவளுக்கு அவன் தைரியம் சொல்லி இருந்தான்...
அதே போல அவளுக்காக அவனும் அவன் தந்தையும் கும்பகோணம் சென்றனர்... அங்கே அஞ்சலியின் தந்தையிடம் தான் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நேர்மையாக கேட்டான்...
அவருக்கும் அவனின் குணம் பிடித்தும் இருந்தது...வீட்டில் கலந்து ஆலோசித்து விட்டு கூறுவதாக கூறினர்...பெண்ணை கொடுப்பவர் விசாரிக்காமல் திருமணம் செய்து கொடுக்க மாற்றார்களே...
விசாரித்ததில் விக்ரமின் தாயின் செயல்பாடு தெரியவர அவர்களின் மகளுக்கு அவனை திருமணம் செய்து கொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை
..அஞ்சலியின் மனதை கரைக்க அவளும் மாறினாள்... வருட காதலை நொடி பொழுதில் மறந்தாள்...அவளின் குடும்பம் இறுதியில் கூறுவதே வேதவாக்கு என நிரூபித்து விட்டாள்..
ஆனால் என்ன நடந்தது என்று விக்ரமுக்கு தெரியாது...லீவை நீட்ட போவது ஆக மெயில் மட்டும் செய்து விட்டாள்... அவன் அழைத்தால் அழைப்பு எடுக்கவில்லை...அவனும் குடும்பத்தை கண்ட சந்தோசமாக இருக்கும் என அவளுக்காக காத்து இருந்தான்...
அடுத்த இரண்டு வாரத்தில் அஞ்சலி அவளின் fb பக்கத்தில் ஒருவனுடன் சிரித்து கொண்டு போஸ் செய்து கொண்டே மேரீட் என ஸ்டேட்டஸ் வைத்து இருப்பதை கண்டதும் தான் விகரமுக்கு தெரிய வந்தது...
அவளுக்கு திருமணம் நடந்து விட்டதா என அவன் அப்போது தான் அறிந்தான்...அதிலும் விக்ரம் அவளை காதலிக்கும் போது கூட அவளின் தவறாக ஒரு பார்வை பார்க்க வில்லை...திருமணம் நடக்கட்டும் பார்த்து கொள்ளலாம் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள போகிறவள் ஆகிற்றே அவளை இப்போது தீண்டி என் காதலை நான் கொச்சை படுத்த விரும்பவில்லை...என்று அவனுக்கே வேலி இட்டு அவளை உயிராக நேசித்தான்... ஆனால் அந்த நேசிப்பு இன்று பொய்யாக போனதே..
அவனுக்கு ஒன்றும் மட்டும் விளங்கவில்லை... காதலிக்கும் போது அவள் அவளுடைய தந்தையிடம் அனுமதி வாங்கவில்லை ...திருமணம் என்று வந்ததும் அனுமதி வேண்டும் என்று அவள் கூற அதை அவன் அவரிடம் கேட்டும் அவர் ஆலோசித்து கூறுவதாக கூறினார்களே... இது தான் அவர்களின் ஆலோசனையா...
ஏதேனும் பிரச்சனை உண்டு எனில் அவனிடம் அதை தெரிய படுத்த வேணாமா ...தீடிரென அவளுக்கு கல்யாணம் என் அருகில் அமர வேண்டியவள் வேறு ஒருவன் அருகில் அமர்ந்து கொண்டு இருக்கிறாளே அதிலும் சிரித்து கொண்டு பார்த்தால் அவள் மகிழ்ச்சியாக இருப்பது போல தான் இருக்கிறது...
எதற்கும் என்ன நடந்தது என தெளிவு படுத்தி விடலாம் என நினைத்து அவளுக்கு அழைக்க அவள் போன் எடுக்கப்பட வில்லை..தொடர்ந்து அடித்து கொண்டு தான் இருந்தது...நேரே அவன் தந்தைக்கு அழைத்தான்...அந்த மனிதர் எடுத்து விட்டார் அந்த அளவிற்கு ஆவது மரியாதை தெரிந்தவர்...
போனை எடுத்ததும் அவன் தான் என்பதை அறிந்து கொண்டு , "தம்பி உன் குடும்பத்தை பற்றி விசாரித்தோம் எங்களால் இதை எல்லாம் ஒப்பு கொள்ள முடியவில்லை... அதனால் எங்கள் மகளுக்கு நாங்கள் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டோம்"... என்று கூற அவனுக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை..அவர் எதை பற்றி கூறுகிறார் என்று தான் அவனுக்கு தெரியுமே..."எனக்கு உங்கள் மகளிடம் பேச வேண்டும் "...என்று கூற அவரோ, "அவள் திருமணம் ஆன பெண்".. என்று தயங்க "ஒரு வாழ்த்து கூறி கொள்கிறேன் ..போனிலே உங்கள் மகளை நான் கடத்தி விட மாட்டேன் "..என்று நக்கல் குரலில் கூறினான் விக்ரம்.....
அவர் மறுக்க அவனும் போனை வைக்க வில்லை...அடுத்த ஒரு நிமிட நிசப்தத்திற்கு பிறகு அவள் உரையாடினாள்...
"ஹலோ விக்கி "...அதே தேன் குரல் அவனுக்கு இப்போது அவளின் குரல் கசந்தது...அவளோ என்னிடமே கூறி இருக்கலாமே...என்று கூற
அவளோ தயங்கி, " இல்லை விக்கி ..என்னோட அப்பா உன்னோட பேமிலி ஐ பத்தி சொன்னாரு அதான்"... என்று கூற
அவனோ , "பேமிலி யை பத்தி விசாரிச்சிட்டு காதலிக்கிறேன் னு சொல்லி இருக்கலாமே "...என்று அவளிடம் கேட்டு போனை வைத்து விட்டான்...
எங்கே போனாலும் அவனின் குடும்பம் அவனின் பின்னணி அவனுக்கு பைத்தியம் பெற்றவள் அவளின் சுகம் கருதி சென்றாள் என்றால் இவளோ காதல் என்ற பெயரில் ஏமாற்றி விட்டு சென்றாள்...
என் அருகில் என் கையை பிடித்து கொண்டு நின்றவளுக்கு வேறு ஒருவனின் கை பிடித்து சிரித்து கொண்டு நிற்கும் போது உறுத்தவே இல்லை போல...இதுவும் ஒரு வகை ஏமாற்று வேலை தானே... எல்லா பெண்களும் இப்படித்தான் போல என கருதி இனி என் வாழ்க்கையில் பெண் என்பவள் இல்லை என அவன் முடிவு எடுத்து விட்டான்...
அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பது அவனின் வாதம் அவனை சொல்லி குற்றம் இல்லை..அவன் கண்ட பெண்கள் அனைவரும் அவனை விட்டு என்பதை விட ஏமாற்றி சென்றதால் அவன் வாழ்வில் இனி பெண் என்பவள் கிடையாது என்று முடிவு செய்து விட்டான்...
அவன் தந்தை எந்த அறிவுரை கூறியும் கேட்கவில்லை... இனியும் அமெரிக்காவில் இருந்தால் அவளின் நியாபகம் வந்து போகும் என கருதி அவனின் வேலையை விட்டான்...
அங்கே வேலை செய்யும் போது சம்பாதித்த பணத்தில் இந்தியாவில் காரும், வீடும் , பிளாட் என வாங்கி இட்டு இருந்தான்...அதற்கும் காரணம் உண்டு பணம் இல்லை என்று தானே என்னை பெற்றவள் போனாள் அதை நான் உருவாக்கி ஆக வேண்டும் என வெறி கொண்டு சேர்த்தது தான் இது எல்லாம்..
அங்கே விட்டு கிடைத்த பணத்தை கொண்டு கோயம்புத்தூரில் ஒரு வீடு கட்டி முடித்து அங்கே வந்து செட்டில் ஆகி விட்டான்...
ஆனால் மீண்டும் அவனுக்கு அந்த வேலையில் தொடர விருப்பம் இல்லை அதனால் பணியை விட்டு அதற்கு நேர் எதிரான பணியில் சேர்ந்தான்...ஆசிரியர் பணி... அவனின் ப்ரொபைல் ஐ கண்ட அந்த தாளாளர் யும் அவனை பணியில் அமர்த்தி கொண்டார்...
ஆனால் இப்போது அந்த வேலையையும் அவன் விட்டு வெளியேறி விட்டான் ...இதுவும் ஒருவகை தன்னை மறைத்து வாழ்வது தான் எங்கே மீண்டும் தான் அவமானப்பட்டு விடுவோமோ என்று நினைத்து தான் அவன் ஓடுவது ஆனால் அவமானம் அவன் வாழ்வில் உன்னை விட மாட்டேன் என்பது போல தொடர்கின்றதே...
அவன் கூறுவதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தவள் அவனின் முதுகை வருடி கொடுத்து அவனை ஆறுதல் படுத்தினாள்...அவளின் ஆறுதல் அவனுக்கு தேவை பட்டதோ என்னவோ அவனும் அவளோடு ஒன்றி எப்போதும் போல் அல்லாமல் அவளின் வயிற்றை கட்டி பிடித்து கொண்டே உறங்கி போனான்...
தன் மனதில் உள்ள பாரம் கரைந்ததின் பலன் அவன் உறக்கத்தை தழுவினான்...ஆனால் மதுவுக்கு உறங்க முடியவில்லை... பாவம் அவன் வாழ்க்கையில் பட்ட அவமானங்களை எண்ணி அவளை ஆறுதல் படுத்த யாரும் இல்லாமல் அழுது கரைந்தாள்...
என் கண்கள் உனை தேடும்....
