காதல் 43
அத்தியாயம் : 43
காதலது கண்ணில் கண்டேன்
லண்டனில் MS படிப்பை படித்து கொண்டு இருக்கும் போதே அங்கே அவனின் நண்பர்கள் எல்லாம் கூட்டு சேர்ந்து சிறு சிறு ப்ரொஜெக்ட்கள் செய்து வந்தனர்...அதில் கிடைக்கும் லாபத்தை அவர்களின் செலவுக்கு பயன்படுத்தி வந்தனர்...
அவனின் படிப்பு முடித்ததும் ஒரு அமெரிக்க நிறுவனம் அவனை இரு கரம் கூப்பி அவனை அவர்களுடைய நிறுவனத்தில் பணி புரிய எடுத்து கொண்டனர்...
பணியில் சேர்ந்த இரு மாதத்தில் வாசுதேவனை இங்கே கூட்டி வந்து விட்டான்...வாசுதேவனுக்கு பெருமை தாங்க வில்லை தன் மகன் இப்படி உயர்ந்து நிற்கிறானே என்று...
அப்போது தான் அவனுடைய நிறுவனத்தில் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டாள் அஞ்சலி....அவள் முகத்தில் எழுதி ஒட்ட வைத்து இருக்கும் தான் இந்தியன் என்றும் அதிலும் தமிழ் நாடு தான் என்னுடைய இடம் என்று ஆம் நம்மூர் பெருமையை அமெரிக்காவில் பரப்பவே அங்கே வாழ்ந்து கொண்டு இருப்பவள் போல அவள் வாழ்ந்து கொண்டு இருந்தாள்...
நம் நாட்டு பெண்கள் பொட்டு வைக்கவே இந்த காலத்தில் மறுக்க அவள் அமெரிக்காவில் பொட்டு வைக்காமல் அவள் முகத்தை காணவே முடியாது...அதிலும் சில நேரங்களில் ஒரு மெல்லிய சந்தன கீற்றையும் காணலாம்...இவள் என்ன இங்கே வந்து இருந்து கொண்டு இப்படி வித்தியாசமாக இருக்கிறாளே என்று அனைவரின் கண்களும் அவளையே மொய்க்கும்...அவளை விக்ரம் அறிந்தாலும் அவன் கண்டு கொள்ளவில்லை...
ஆம் அப்படி பட்டவள் அஞ்சலி தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து படிப்பை முடித்த அஞ்சலி இரண்டு வருடம் பெங்களூர் இல் பணிபுரிய அவளுக்கு அடித்த ஜாக்பாட் தான் இந்த வேலை...எல்லோருக்கும் அமெரிக்காவில் பணி புரிவது கனவாக இருக்க இவளுக்கோ தலை எழுத்து போலத்தான் சுற்றி கொண்டு இருந்தாள்..
இங்கே இருப்பதை விட அவளுக்கு இந்திய நாடும் அங்கே வாழும் மனிதர்களும் அவளின் வீடும் குடும்பமும் அவள் வளர்த்தும் நாய்க்குட்டி என அவளுக்கு என்று ஒரு உலகம் உண்டு....எதற்கெடுத்தாலும் பயந்த சுபாவத்தை கொண்டுள்ள அஞ்சலிக்கு இந்த கம்பனியில் சேர்ந்தது முதல் நேரமே சரி இல்லை எனலாம்...
சதா எந்நேரமும் ஏதாவது தவறு செய்து அவனிடம் வாங்கி கட்டி கொள்வாள்...அவனிடம் இருந்து அழைப்பு வந்தாலே அவளுக்கு பீதியை கிளப்பும்...
ஒரு நாள் இது போல அஞ்சலி யாருக்கோ அனுப்ப வேண்டிய மெயில் ஐ மாற்றி அனுப்ப அது பெரிய ஒரு பிரச்சனை ஆகி விட்டது...
அதன் காரணமாக அந்த பகுதியை நிர்வகித்து கொள்ளும் விக்ரமை மேலதிகாரிகள் எல்லாம் கேள்வி கேட்க விக்ரம் கடுப்பின் உச்சிக்கே சென்று இருந்தான்...அவளை எல்லாம் யார் வேலையில் சேர சொன்னது ஒரு வேலையை செய்ய துப்பில்லை என்று எல்லாம் நினைத்து அவளை அழைக்க, பிரச்சனையை அரசல் புரசலாக கேட்டு அறிந்து வைத்து இருந்தவள் விக்ரமை நினைத்து பயந்து நடுங்கி கொண்டே செல்ல அங்கே விக்ரமின் முகத்தை கண்டதும் அவளுக்கு ஆங்கிலம் எல்லாம் மறந்து விட்டது..."திட்டிடாதீங்க சார் , ப்ளீஸ் சார் "...என தமிழில் உளறி கொட்டி கொண்டே கண்களில் நீர் விழ நின்றவளை கண்டவன் அவளின் கீழ் விழுந்தான்...அதிலும் அவளின் மென்மையான குரலும் அவளின் முகமும், சாந்தமான அவளின் நளினமும் என விக்ரம் விழுந்து விட்டான்...
ஆம் விக்ரம் அவளிடம் காதலில் விழுந்தான்...அழுகையில் அவளின் நுனி மூக்கு சிவந்து முகம் எல்லாம் சிவந்து பாவமாக நின்றவளை ஏனோ அவனுக்கு அனைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என தோன்றியது...
யார் அழுதாலும் இப்படி தான் நீ ஆர தழுவ வேண்டும் என நினைப்பாயா என்று அவனின் மனசாட்சி அரிக்க எல்லோரையும் கட்டி தழுவ எனக்கு தெரியாது... ஆனாலும் இவளின் மேல் எனக்கு தோன்றுகிறது...இவளை வாழ் நாள் முழுவதும் அவளுடன் வாழ வேண்டும் என தோன்றுகிறது என நினைத்து கொண்டே இருந்தவன் அழுத்தக்காரன் ஆகிற்றே அதிலும் எல்லோராலும் வாக்குகளால் குட்டு பட்டு கொண்டே இருந்தவன் அவனால் மனதில் தோன்றுவதை அவளிடம் சொல்ல தயக்கம் வேண்டாம் உள்ளேயே இருக்கட்டும் என்று நினைத்து அவளிடம் வார்னிங் மட்டும் செய்து அனுப்பினான்...
அவள் செய்த தவறால் ஏற்பட்ட பின் விளைவுகளை அவனே ஏற்று கொண்டான்...இதை எல்லாம் அறிந்த அவளும் அவன் மேல் சிறு இளக்கம் அவளுக்கு வந்தது...ஆனால் இருவரும் உள்ளே உணர்ந்து இருந்தாலும் வெளியே தயக்கம் அவனுக்கும் பயம் அவளும் பயம் ஆனால் இருவரின் பயமும் வேறு வேறு....
ஆனால் ஒரு வழியாக விக்ரம் தைரியத்தை வரவழைத்து கொண்டான்... அவளிடம் எனக்கு தோன்றி இருக்கும் காதலை அவளிடம் கூறுவது என்று அதற்காக அவன் காத்து இருக்க அதுவரை பார்வை பரிமாற்றங்களும் வெட்கங்கள் , சின்ன சிரிப்புகள் என எல்லாம் கடந்து போக ஒரு நாள் விடுமுறை தினத்தில் அங்கே இருக்கும் கோவிலில் அவள் பிராத்தனை செய்து கொண்டு இருந்தாள்..."கடவுளே எப்படியாவது அவர்கிட்ட என் காதலை சொல்ல வை இல்லைனா அவரை என்கிட்ட சொல்ல வை...ஏன் இப்படி பண்ற நீ "..என்று அவள் தெய்வத்திடம் மான்றாடி கொண்டு இருக்க தெய்வம் செவி சாய்த்தாரோ என்னவோ விக்ரமும் அந்த கோவிலுக்கு வந்தவன் அவளிடத்தில் அவனுடைய காதலை கூறி விட்டான்...
அவளும் அதை எதிர் பார்த்து காத்து இருந்தவள் தானே உடனே செவி சாய்த்து விட்டாள்... அதன் பின்னர் அந்த அமெரிக்காவில் ஒரு இடம் விடாமல் சுற்றி திரிந்தனர்...இருவரும் காதலை அவ்வளவு அழகாக கொண்டு சென்றனர்...விக்ரமின் கடந்த வாழ்க்கையை பற்றி அஞ்சலியிடம் விக்ரம் எதுவும் கூறவில்லை... சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது அவனது வாதம்...
தங்கள் காதலை அடுத்த கட்ட கொண்டு போக ஆசைப்பட்டனர்..அதன் படி வாசுதேவனிடம் தங்கள் காதலை சொல்ல அவருக்கும் சந்தோஷமே...தன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது...அதை வைத்து மகனது வாழ்க்கை கெட்டு விட கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் வாசுதேவன்... அதனால் மகனது காதல் விஷயம் கேட்டதும் அவருக்கு சந்தோசம் தாளவில்லை...
