காதல் 42
அத்தியாயம் : 42
அந்நேரம் தான் அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு வடநாட்டுக்காரன் பார்க்க சினிமா நடிகனை போல இருக்கும் ஒருவன் குடி பெயர்ந்தான்...அவனை அந்த ஏரியாவில் வசிக்கும் அனைத்து பெண்களும் திரும்பி நோக்க அவனும் நிறைய பணம் வைத்து இருப்பான் போல ...வித விதமான உடைகள் கார் என பளபளத்து கொண்டு இருந்தான்...
ஒரு நாள் கிரிஜாவும் அவனும் எதேச்சையாக சந்தித்து கொள்ள அதன் பின்னர் தினமும் சொல்லி வைத்து சந்திக்க தொடங்கினர்...தான் ஏங்கிய வாழ்க்கை அவனிடம் இருப்பதை உணர்ந்தார் கிரிஜா...அவர் அறியாமல் முதலில் மனதை பறிகொடுக்க ஆறு வருடம் அவனும் கிரிஜாவும் பழகி வந்தனர்...மகனையும் வாசுதேவனையும் முட்டாள் ஆக்கி கொண்டு...ஒரு சிறு விடயம் கூட சிக்காமல் வளர்ந்து வந்தது அவர்கள் தம்மில் உள்ள உறவு...
விக்ரம் பன்னிரண்டாவது படித்து முடித்து ரிசல்ட் கிடைக்க காத்து கொண்டு இருக்கும் சமயம் மகன் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டானே என்று போதம் கூட இல்லாமல் யாரை பற்றியும் இன்றும் கவலை படாமல் தன் இஷ்டம் மட்டுமே தனக்கு முக்கியம் ஊரார் இந்த சமூகம் இதை பற்றி எல்லாம் கவலை படாமல் இத்தனை நாள் இந்த குடும்பத்தில் வாழ்ந்தோம் என்ற அறிவு கூட இல்லாமல் ஒரு லெட்டர் எழுதி தான் பெற்ற மகனின் கையிலே கொடுத்து , "உன் தந்தையிடம் கொடுத்து விடு "...என்று கூறி தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து விட்டு கிளம்பி விட்டார்...
அவனும் வளர்ந்த பிறகு தாயிடம் இருந்து சிறிது விலகி இருப்பதால் அவனும் எப்போதும் ஏதாவது பிரின்ட்ஸ் கூட அந்த கோவிலுக்கு செல்கிறேன் இங்கே செல்கிறேன் என செல்வது போல ஒரு பயணம் என கருதி அவனும் அந்த கடிதத்தை வாங்கி வைக்க மாலை ஆனது பாவம் வீட்டில் உணவு இல்லை என்பதை விட சமைக்க வில்லை என்றே சொல்லலாம்...பசியோடு வாடி போய் இருந்த விக்ரமின் கண்களில் காலை தன் தாய் கொடுத்த கடிதம் கண்ணில் பட அதை எடுத்து படித்தான்...
"நான் போகிறேன் என் வாழ்க்கையை தேடி.. எனக்கான புதிய உறவு கிடைத்து இருக்கிறது...புதிய உறவு என்பதை விட உங்களுக்கு எல்லாம் தெரிந்த நபர் எதிர் வீட்டில் இருப்பவர்...என்னால் இந்த வாழ்க்கை வாழ முடியாது...போதும் இது நாள் வரை நான் வாழ்ந்த வாழ்க்கை..இனியும் என்னால் இதில் கிடந்து என் வாழ்க்கையை கெடுத்து கொள்ள முடியாது...உங்களோடு நான் வாழ்ந்த வாழ்க்கை என்பதை விட நரகம் என்றே கூறலாம்...இதில் இருந்து விடுபட ஆசைப்படுகிறேன் என்னை தேடி வந்து இப்போது கிடைத்து இருக்கும் என் சொர்க்கத்தை கெடுத்து விடாதீர்கள்...உங்களுக்கும் உங்கள் மகன் தேவை இல்லை என்றால் நீங்கள் வளர்ந்த இடத்தில் கொண்டு போய் சேர்த்து விடுங்கள் "...என்று எழுதி இருந்தது..
அதை படித்த விக்ரமுக்கு ஒன்றும் விளங்கவில்லை...கடைசி வரி மட்டும் தெளிவாக விளங்கியது உங்களுக்கு அவன் தேவை இல்லை என்றால் அனாதை இல்லத்தில் சேர்த்து விடும் படி எழுதி இருக்க அப்போ என் மீது பாசமே இல்லையா...என்னை பெற்ற அன்னைக்கே என் மீது விருப்பம் இல்லையா அவன் ஒன்றும் அறியா சிறு பிள்ளை அல்லவே..17 வயது கடந்த விக்ரமுக்கு அதில் எழுதி இருப்பது புரியாமல் இருக்க முடியாதே அவனுக்கு தெளிவாக புரிந்தது...தன் தாய் என்பவள் அவள் சுகத்துக்காக என்னை விட்டு விட்டு வெளியே சென்று விட்டாள் என்று...அதை கீழே வைத்து கதறி அழ தொடங்கினான்...என்னாலே இதை தாங்கி கொள்ள முடியவில்லை என்றால் அவன் தந்தையை நினைத்து மேலும் விக்ரமின் மனம் வெதும்பியது...
நாம் தான் அவருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்...இனி நான் மட்டுமே என் தந்தைக்கு போனால் போகட்டும்...இனி என் வாழ்க்கையில் அம்மா என்ற உறவே இல்லை...இனி என் வாழ்க்கையில் அவர் முகத்தில் நான் விழிக்க கூடாது என்று நினைத்து கொண்டான்..அதன் பின் அவனே இனி அழ கூடாது என இறுகி அமர்ந்து இருந்தான்...அவனின் மென்மையான முகம் வேதனையை மறைக்க அவமானத்தை மறக்க கடுமையை தத்து எடுத்து கொண்டது... அப்படியே அமர்ந்து இருந்தான் எங்கோ வெறித்தப்படி...
வாசுதேவன் கூடுதல் பணிகளை எல்லாம் செய்து விட்டு தன் மகன் பசியோடு இருப்பானே அவள் ஏதாவது செய்து இருப்பாளா இல்லையோ எப்போதும் போல் சும்மா அமர்ந்து இருப்பாளோ என்று எல்லாம் ஆலோசித்து விட்டு எதற்கும் மகனுக்கு உணவு வாங்கி செல்லலாம் என அந்த பாசமிகு தந்தை உணவு வாங்கி கொண்டு செல்ல அங்கே மகன் கையில் கடிதத்தை வெறித்து கொண்டே அமர்ந்து இருந்தான் விக்ரம்...
தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை அழுது இருப்பான் போல வீடு முழுவதும் இருட்டாக இருக்க வாசுதேவன் நுழைந்து லைட்டை இட்டதும் அங்கே ஒரு மூலையில் விக்ரம் அமர்ந்து இருப்பதை கண்ட அவர் என்னாச்சோ என்று பதறி, "விக்ரம்...தம்பி...என்னாச்சு பா "..என்று அன்போடு கேக்க அவனிடம் பதில் இல்லை கீழே கிடந்த பேப்பரை படித்து பார்த்த வாசுதேவன் அதிர்ந்தார்...
அவர் என்ன மாதிரியாக உணர்கிறார் என்றே அவருக்கு தெரியவில்லை...ஆம் அவளால் துரத்தி காதலிக்க பட்டவர்...காதலின் மொழி எப்படி இருக்கும் என புரிய வைத்தவள்...தனக்கு என்று கிடைத்த முதல் உறவு...அவள் வீட்டை விட்டு எனக்காக வரும் போது பெருமையாக நினைத்தேனே கடவுள் எனக்காக அளித்த வரம் அவள் என்று...ஆனால் இன்று அது மண்ணோடு மண்ணாகி போனதே...கேவலம் அவள் நினைத்த வாழ்க்கையை அளிக்க முடியாத என்னிடம் வாழ விருப்பம் இல்லை என்று கூறி விட்டாளே...
அதிலும் அவனா என்னை காணும் போது எல்லாம் அவனுக்கு உறுத்தவே இல்லையா இல்லை அவளுக்கு தான் உறுத்த வில்லையா ...உறுத்தாமல் தானே இந்த வேலையை நீ செய்தாய் என்று மனதை தேற்ற முடிந்த அவரால் அந்த கடைசி வரி உங்களால் அவனை வளர்க்க முடியவில்லை என்றால் என்ற வார்த்தை என்னை என்ன டி உன்னை போல நினைத்து விட்டாயா என் மகனுக்கு நான் இருக்கிறேன்...தாய்க்கு தாயாய் தந்தைக்கு தந்தையாய் நான் இருக்கிறேன்...என் மகனுக்கு அவனின் தந்தை நான் உயிரோடு இருக்கும் போது நான் எதுக்கு டி அவனை விட வேண்டும் என்று நினைத்து நான் இருப்பேன் என் மகனுக்காக என்று உறுதி எடுத்து கொண்டார்...
அந்த உறுதியை இது வரை நிலை நாடினார் வாசுதேவன் தந்தைக்கு மனது கஷ்டப்படும் என்று நினைத்து விக்ரம் மனதை தேற்ற மகனுக்கு வேண்டி வாசுதேவன் மனதை தேற்றினார்...
ஆனால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்களை மறக்க அனுமதிக்க வில்லை...ஒரு தாய் இப்படிப்பட்டவள் என்றால் அவளின் மகனுக்கு என்ன எல்லாம் நடக்குமோ அது எல்லாம் விக்ரமுக்கும் நடந்தது...அதிலும் சிறு குழந்தை என்றாலும் அதற்கு தான் எதற்காக இந்த தண்டனை கொள்கிறோம் என்று புரியாமல் தண்டனையை அனுபவிக்கும் ஆனால் விக்ரமோ வளர்ந்து பருவ வயதை எட்டி இருக்கும் இந்த சமயத்தில் எல்லோரும் பேச்சாலும் சொல்லாலும் அவனை வதைக்க அதில் இருந்து வெளியேற முடியாமல் தடுமாறினான்...
அவனோடு பழகி வந்த அவனின் நண்பர்கள், தோழிகள் என அனைவரும் அவனை விட்டு விலகி இருந்தனர்...வீட்டிக்குள்ளே யே அடைந்து கிடந்தான் விக்ரம் யாரோடும் பேசாமல்...இதை எல்லாம் கவனித்து வந்த வாசுதேவன் அவனுக்கு வேண்டி மாற்றல் எழுதி கொடுத்தார்...அவரின் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ என்னவோ வாசுதேவனுக்கு மானேஜர் பதவி கிடைத்தது...வேறு நகரத்துக்கு சென்றனர் அங்கே கல்லூரியில் சேர்க்கப்பட்டான் விக்ரம்...
அதன் பிறகு தான் அவன் முகத்தில் ஒரு தெளிவு வந்தது ....தந்தையின் போதனையும் அவரின் வழிகாட்டுதலின் படி அவன் நல்ல முறையில் என்ஜினீயரிங் தேர்ச்சி பெற்றான்...நல்ல மதிப்பெண் எடுத்ததால் அவனுக்கு காலர்ஷிப் இல் லண்டனில் படிக்க அவன் தேர்வு ஆனான்....வெளிநாட்டு வாழ்க்கையில் இன்னொரு புயல் அவன் வாழ்வை கடக்க போகிறது என்று தெரியாமல் லண்டன் செல்ல ஆயத்தம் ஆனான் ...
என் கண்கள் உனை தேடும்...
