காதல் 41

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 483
Thread starter  

அத்தியாயம் : 41

காதலது கண்ணில் கண்டேன்

    சிக்னலில் நான் கண்டது அவர் தானா என ஒன்றிற்கு இரு முறை பார்வை இட்டான் விக்ரம் ஆம் அவரே தான் அவனை பெற்றவள்...விக்ரமின் அதிகாரத்தில் அதற்கு கூட தகுதி இல்லாத ஒரு பெண்மணி...அவர் வாசுதேவனின் மனைவியாக இருந்தார்...ஆம் இப்போதும் மனைவி தான் யாரோ ஒரு வீட்டில் யாரோ ஒருவரின் மனைவியாக இருக்கிறார் கிரிஜா..

அவரை கண்டதும் விக்ரமின் கைகள் முறுக்கேறி கண்கள் சிவந்து என் வாழ்கையில் யாரை காண கூடாது என்று நினைத்தேனோ அவர் என் கண் முன்னால்...அந்த பக்கமாக பார்வை இட்டு கொண்டு இருந்த அவரும் மெல்ல விக்ரம் இருக்கும் பக்கம் திரும்ப அவரை மேலும் காண பிடிக்காமல் வண்டியை முறுக்கிய விக்ரம் எப்படி மதுவின் கல்லூரி வரை வண்டியை செலுத்தினான் என்றே தெரியவில்லை....

கடைசி தேர்வு என்பதால் அவள் வர தாமதமாகி இருக்க அவனோ கல்லூரி வாயிலின் முன்னே வண்டியின் ஹாண்டில்பாரில் தலை வைத்து படுத்து விட்டான்... தூரத்திலேயே அவனை கண்ட மது என்ன இவரு இப்படி படுத்து இருக்காரு உடம்பு நலம் இல்லையோ என்னவோ என்று எல்லாம் நினைத்து ஓடி வந்து அவன் தோளை தொட்டாள்... "சார்".. என்க அவளின் விழி அவனுக்கு அந்த சமயம் தேவைப்பட்டதோ என்னவோ விலுக்கென நிமிர்ந்தவன் கண்கள் கலங்கி இருந்தது...

"என்னாச்சு சார்"... என கேக்கும் போது தான் அவன் கண்களுக்கு அவனின் அவள் தெரிந்தாள்... அவனின் முகத்தை வைத்தே," வாங்க சார் வீட்டுக்கு போய் பேசலாம்"... என்று கூற

எப்படி வீட்டுக்கு வந்தனர் மட்டும் இருவரும் அறியர்... மதுவின் மனது முழுவதும் என்னாச்சு இவருக்கு ஏன் இப்படி இருக்காரு என்றே நினைத்து கொண்டு வந்தாள்... வீட்டுக்கு வந்ததும் வாசுதேவன் மகனின் முகத்தை பார்த்து, "என்னாச்சு பா... முகம் இப்படி இருக்கு தலை வலியா "...என்று கேட்க , "ஆமாம்".. என்பது போல தலையை ஆட்டி விட்டு அவன் அறைக்குள் சென்றான்...அவன் செல்வதையே பார்த்து கொண்டு இருந்த வாசுதேவன் மதுவிடம் கண்களாலேயே என்ன என கேட்க இவளும் தெரியவில்லை என கூறி அவன் பின்னாலே அவளும் சென்றாள் மது...

அங்கே யாரும் இல்லாத சிறு குழந்தை போல கை கால்களை சுருக்கி கொண்டு படுத்து கிடந்தான் விக்ரம் அவனை கண்டதும் அவளுக்கு என்னவென்று தெரியாமலே கண்கள் கலங்கின...எப்போதும் விறைப்பாக இருக்கும் அவன் இப்போது ஒரு சிறு குழந்தை போல அவளுக்கு காட்சி அளித்தான்..அவனை கட்டி பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என் உயிரே என சொல்ல துடித்த மனதின் பொருமலை செய்கையால் செய்தாள்...

ஆம் மெல்ல படுக்கையில் படுத்து கிடந்த அவனின் அருகில் அவள் அமர்ந்து அவனை தொட அவனோ வேகமாக அவள் மடியில் தலை வைத்து படுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து அவன் கைகளால் அவள் வயிற்றை சுற்றி கொண்டான்...அவள் வயிற்றை நெருக்கி இருந்தான்...காமம் இல்லா அணைப்பு ஆறுதல் தேடும் குழந்தை போல என்னோடு நீயாவது இரு என்று கூறுவது போல இருந்தது அவனின் அணைப்பு...

அவனின் கண்ணீர் அவளின் உடலை நனைத்து அவள் மேனியை தீண்டியது...ஆம் விக்ரம் அழுகிறான்...அவளின் உடலும் மனமும் அதை உணர, " ஏன் சார் என்ன னு சொல்லுங்க "...அவளும் அழுது கொண்டே கேக்க ,"அவங்களை பார்த்தேன் "..என்று கூறினான்...

"யாரு சார்"... என்று மதுவும் கேக்க,

அவங்க என்னவென்று சொல்வான் அவன் நாவில் இருந்து அவரை அம்மா என்ற விழி வராதே ...அவரை அவனின் தந்தை உடனும் இணைத்து பார்க்க முடியவில்லை.... கிரிஜா என்று கூற அவளுக்கு புரிந்து போனது யார் அது என்று..இவர்கள் திருமணம் நடந்த அன்றே விக்ரமை பற்றியும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் அவளிடம் தெளிவு படுத்தி இருந்தார் வாசுதேவன்...

யாரிடமும் அவருக்கு இதை பற்றி பேச விரும்பவில்லை என்றாலும் தன் வீட்டில் மருமகள் என்ற பெயரில் ஒரு பெண் வாழ வரும் போது அவள் எல்லாம் அறிந்து வைத்து இருக்க வேண்டும் என முன்பே எல்லாம் கூறி இருந்தார்...அவனின் கஷ்ட காலத்தை அறிந்த அவளோ அவரிடம் தான் என் உயிர் இருக்கும் அவரை விட்டு பிரிய மாட்டேன் என்ற வாக்கும் அவருக்கு கொடுத்து இருந்தாள் மது...அதனால் மது அறிந்தாலும் அவன் வாயால் கூறட்டும் என விட்டு விட்டாள்... அவனின் மனதில் உள்ள பாரம் இப்படியாவது இறங்கட்டுமே என அவள் நினைத்தாள்... அவனும் தன் மனதின் பாரத்தை தன்னவளிடம் இறக்க முடிவு செய்து விட்டான்...அவனும் ஒரு வித கசந்த கரகரப்பான குரலில் கூற ஆரம்பித்தான்...

வாசுதேவன் ஒரு அப்பாவி , யாருக்கும் ஒரு தீங்கும் மனதளவில் கூட தீங்கு நினைக்காதவர்... ஆனால் அவருக்கு மட்டும் எங்கு இருந்து தான் வருமோ ...ஆம் பிறப்பிலேயே அனாதை என்ற பட்டத்தை சுமந்து கொண்டு அனாதை இல்லம் என்ற பெயரில் இயங்கும் ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தார்...

படிப்பில் ஆர்வம் நிறைந்த அவர் எல்லாத்திலும் முதல் இடம் அதே போல அன்பு பாசம் கருணையிலும் முதல் இடம் வகித்த அவர் கல்லூரி இறுதி ஆண்டில் காதலில் முதல் ஆளாக விழுந்தார் என்பதை விட விழ வைக்கப்பட்டார் என்றே கூற வேண்டும்...

ஆம் கிரிஜா அவர் படித்த கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி இவரை கண்டதும் அவரின் அழகை கண்டு காதலில் விழ ஒளிவு மறைவு இன்றி நேரிடையாக அவரிடமே வந்து கிரிஜாவின் காதலை கூறினார்...

வாசுதேவனோ அவரின் காதலை நிகாரித்து அவரின் வாழ்க்கை சூழ்நிலையை எல்லாம் கூற அதை எல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு அவரை தன்னை காதலிக்க வைத்து விட்டார்..

ஆம் அது தான் கிரிஜாவின் குணம் தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அதை எப்படியாவது அடைந்து தீருவார் யாரை பற்றியும் அவருக்கு கவலை இல்லை...தன் எண்ணம் மற்றுமே அவருக்கு என்று தான் வீட்டை எதிர்த்து வாசுதேவனை திருமணம் செய்து கொண்டார்...

அவர்களின் காதலா இல்லை கிரிஜாவின் காம வெறியை தீர்த்து கொள்ள மகன் பிறந்தானா என தெரியவில்லை... ஆனால் வாசுதேவனை பொறுத்தவரை உயிருக்கு உயிராக காதலித்த மனைவியின் மணிவயிற்றில் ஒரு முத்து தான் விக்ரம்...தன் பெயர் சொல்ல தனக்கு என்று உறவாக இந்த பூமி தனில் அவரித்த அவரின் செல்ல குழந்தை...

வாசுதேவன் அப்போது தான் படித்து முடித்து மும்பையில் பேங்கில் கிளார்க் ஆக பணி புரிந்து கொண்டு இருந்த சமயம் தான் கல்யாணம், மனைவி, மகன் என அவரால் நிமிரவே முடியாமல்
பணத்தேவை அவருக்கு ஏற்பட்டது...

முதலில் காதலில் எல்லாம் இனிக்கும் ...தண்ணீரை கூட குடித்து விட்டு வாழ்ந்து விடுவேன்...நீங்கள் என்னோடு இருந்தால் போதும் ...என்று கூறி வீட்டை விட்டு எதிர்த்து வந்த கிரிஜா விற்கு அந்த வாழ்க்கை சலிப்பு தட்ட தொடங்கியது...வாழ தண்ணீர் மட்டும் போதாது ...காதலிக்க அவரின் அழகு மட்டும் போதாது...ஏதாவது வாங்க பணம் என்ற ஒன்று வேண்டும் என அவர் புரிந்து கொண்டார்...

ஆம் வாசுதேவன் மட்டுமே படித்து முடித்து இருக்க கிரிஜா படிப்பை கூட முடிக்கவில்லை.... வீட்டில் வாசுதேவனின் சிறு வருமானம் மட்டுமே இருக்க அதை வைத்து சிக்கனமாக இருந்தால் மூன்று பேர் மூன்று வேளை உணவு உண்டு இருக்க முடியும் ஆனால் கிரிஜாவிற்கு போதவில்லை...

காதல் வாழ்க்கையை சினிமாவில் வரும் வாழ்க்கை போல தித்திப்பானது என எண்ணி இருக்கும் கிரிஜாவிற்கு மத்திய உயர் தர குடும்பத்தில் பிறந்த அவர் கேட்ட அனைத்தும் வாங்கி கொடுத்து அவர் பெற்றோர் பழக்கி இருக்க அது வாசுதேவனிடம் அது எல்லாம் நடக்கவில்லை... குழந்தை என்று ஒன்று ஆனாலும் அவர் வீட்டில் யாரும் அவரை தீண்டி கூட பார்க்கவில்லை... அதனால் கிரிஜாவின் வீட்டிற்கு கூட அவரால் செல்ல முடியாது...

மெல்ல மெல்ல அவரின் காதல் மறைய தொடங்கியது...காலங்கள் உருண்டு ஓடியது...விக்ரம் வளர்ந்து ஆறாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான்...படிப்பில் சுட்டி...தந்தையின் மேல் உள்ள கோபத்தை மகனின் மீது காட்ட தொடங்கினார் தாய் இருந்தும் தாயின் பாசத்தை உணராத என்பதை விட உணரப்படாத குழந்தை தான் விக்ரம் அவன் வழிய சென்றாலும் அவனை கண்டு கொள்ளமாட்டார் கிரிஜா ...

வாசுதேவனிடம் ஏதாவது ஒரு பொருள் கிரிஜா வேண்டும் என கேட்டு அவரால் வாங்கி கொடுக்க முடியவில்லை என்றால் அந்த கோபம் முழுவதும் விக்ரம் மீது திரும்பும் அவன் என்ன செய்தாலும் அடி விழும் குழந்தை விக்ரமுக்கு இது புரியவில்லை என்றாலும் வாசுதேவனுக்கு தெளிவாக புரியும்...அதனால் தன்னால் மகனின் உடல் நோக வேண்டாம் என கருதி கிரிஜாவிற்கு வாங்கி கொடுத்து விடுவார்...கிரிஜாவும் தன் தேவையை தீர்த்து கொள்ளும் ஒரு துருப்பு சீட்டாக தான் மகனை வைத்து கொள்வாரே தவிர வேறு ஒன்றும் இருக்காது ...

விக்ரம் பிறந்ததால் தன் அழகு போய் விட்டது என்றும் அவன் மீது கோபம் வர வேறு ஒரு காரணம் இருந்தது... அவனின் பிறப்பு சமயத்தில் யாரும் துணைக்கில்லாமல் எல்லாம் தானே செய்ததும் குழந்தை வேறு பசியால் அழுது கொண்டே இருக்க அவரால் உறங்க கூட முடியாமல் போக அது எல்லாம் சேர்ந்து ஒரு சோர்வை கொடுக்க எல்லாம் சேர்ந்து விக்ரம் மீது வந்து விழுந்தது...

அவர் வாசுதேவன் பின்னால் சுற்றி விட்டு தன்னை எதற்காக திருமணம் செய்து கொண்டாய் என்று கேள்வி வேறு வாசுதேவனை பார்த்து கேக்க அவர் பாவம் மனிதன் நொந்து தான் போவார்...மகன் கண்டு விட கூடாது அவனின் பிஞ்சு மனதில் கசப்பு வர கூடாது என்பதற்காக மூடி மறைத்து வந்தார்...ஒரு நாள் கிரிஜாவே உடைப்பார் என்று தெரியாமல் காதல் கொண்ட மனது மனைவியை யாசித்தது ...ஆனால் அதை எல்லாம் கிரிஜா கண்டு கொள்ளவில்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top